LibreOffice-Installation/C2/LibreOffice-Suite-Installation-on-Windows-OS/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். LibreOffice Suite Installation குறித்த டுட்டோரியல்-க்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில், நாம் Windows OS-யில் எவ்வாறு LibreOffice Suite -ஐ install செய்வது என கற்போம்.
00:13 இந்த tutorial -ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Windows 7, Firefox Web Browser , நீங்கள் எந்த web browser -ஐ வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
00:25 LibreOffice Suite installation பற்றி காண்போம்.
00:30 முதலில்,நான் Firefox Web Browser -ஐ திறக்கிறேன்.
00:34 Address Bar-ல் டைப் செய்க, www.libreoffice.org/download பின் Enter -ஐ அழுத்தவும்.
00:46 உடனடியாக,Download page-க்கு திருப்பிவிடப்படுகிறோம்.
00:50 இங்கே LibreOffice Suite-ஐ download செய்ய Download பட்டனை காணலாம்.
00:55 முன்னிருப்பாக, நம்முடைய OS -கான சமீபத்திய பதிப்பு இங்கு காட்டப்படும்.
01:00 நான் Windows OS-இல் பதிவு செய்வதால், Windows உடைய LibreOffice -ன் சமீபத்திய பதிப்பைக் காட்டுகிறது.
01:10 நம்முடைய OS பதிப்பு-க்கு தகுந்தாற்போல் இந்த software -ஐ download செய்யவும்.
01:15 LibreOffice பதிப்புக்கு OS -ஐ நாம் எவ்வாறு மாற்றலாம்? Download button-க்கு மேலே இருக்கும் Change என்ற link-ன் மீது கிளிக் செய்யவும்.
01:24 நாம் மற்றொரு பக்கத்திற்கு திருப்பிவிடப்பட்டுளோம். உங்களின் தேவைக்கேற்ப, இங்கே வெவ்வேறு OS- க்கான Download தேர்வை பார்க்க முடியும்.
01:34 இங்கே Install செய்வதற்கான LibreOffice Suite-ன் பதிப்பைத் தேர்வு செய்யலாம்.
01:40 நான் Windows -ஐ தேர்வு செய்கிறேன்.
01:43 இதை செய்யும்போது, மறுபடியும் Download பக்கத்திற்கு திருப்பிவிடப்படுகிறோம்.
01:49 நம் தேர்வுக்கேற்றவாறு LibreOffice மற்றும் OS-யின் முன்னிருப்பு பதிப்பு காட்டப்படுகிறது.
01:55 Download பட்டனை க்ளிக் செய்யவும்.
02:00 அவ்வாறு, செய்யும்போது Save As dialog box தோன்றும் .
02:04 Save பட்டனை கிளிக் செய்து download-ஐ தொடங்கவும் . Internetன் வேகத்தைப் பொறுத்து சில நேரம் ஆகலாம்.
02:12 Download முடிந்ததும், Downloads folder-க்கு சென்று LibreOffice setup file -ஐ டபுள் கிளிக் செய்யவும் .
02:21 அவ்வாறு செய்யும் போது, dialog box திறந்து Do you want to run this file? என்று கேட்கும். RUN button-ஐ கிளிக் செய்யவும்.
02:29 இப்போது Installation wizard திறக்கும். கேட்கும் போதெல்லாம் NEXT பட்டனை கிளிக் செய்யவும்.
02:36 இப்போது உங்களுக்கு எந்த installation வேண்டும் என்று கேட்கும் Typical அல்லது Custom . முன்னிருப்பாக, Typical என்று தேர்வு செய்யப்பட்டிருக்கும். அடுத்து NEXT-ஐ கிளிக் செய்யவும்.
02:46 Install' பட்டனை கிளிக் செய்யவும். Installation-ஆக சில நேரம் எடுக்கும்.
02:50 Installation முடிந்ததும், Finish பட்டனை கிளிக் செய்யவும்.
02:56 'LibreOffice சரியாக Install ஆனதா இல்லையா என்பதை இப்போது பார்க்கலாம்.
03:01 Start menu சென்று All programs பின் LibreOffice 4.4 க்கு செல்லவும்
03:08 நீங்கள் LibreOffice Suite-இல் Base, Calc, Draw, Impress, Math மற்றும் Writer போன்ற componentகளை பார்க்கலாம்.
03:17 இது LibreOffice Suite வெற்றிகரமாக உங்கள் Windows கணினியில் Install செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
03:24 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இதை சுருக்கமாக பார்ப்போம்.
03:28 இந்த tutorial-ல் , நாம் Windows OS -யில் Libreoffice Suite -ஐ install செய்ய கற்றோம்.
03:35 பின்வரும் இணைப்பில் உள்ள ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றிய வீடியோவை பார்க்கவும் .
03:40 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகளை நடத்தி இணையவழி தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு சான்றிதழ்களை கொடுக்கிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
03:51 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில் கிடைக்கும்.
04:02 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெதாஜ். குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst