LaTeX/C2/Mathematical-Typesetting/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 LaTeXல் Mathematical Typesetting, குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:08 நாம், அதை latex அல்ல, LaTeX என்று உச்சரிக்க வேண்டும் என்பதை நினைவுகொள்க.
00:15 இந்த டுடோரியலில், LaTeXல், mathematical symbolகளை உருவாக்கக் கற்போம்.
00:20 குறிப்பாக, பின்வருவனவற்றை கற்போம்: mathematical modeக்குள் செல்வது மற்றும் வெளிவருவது, spaceகளின் பங்கு மற்றும் அதை உருவாக்குவது, Mathematical symbolகள்,
00:31 இறுதியாக, A M S math package, மற்றும், matrixகளை உருவாக்குவதில், அதன் பயன்பாடு.
00:37 10,000 ரூபாக்கும் குறைவான நமது laptopல், இந்த டுடோரியலை நான் உருவாக்குகிறேன்.
00:43 நான், Ubuntu Linux, TeXworks மற்றும் LaTeXஐ பயன்படுத்துகிறேன்.
00:47 இதற்கான முன்நிபந்தனைகள் பின்வருமாறு- LaTeXன் அடிப்படை ஸ்போகன் டுடோரியல்கள்,
00:53 side-by-side டுடோரியலுக்கு அறிமுகம்.
00:56 எங்கள் வலைத்தளத்தில் இவை அனைத்தும் இருக்கின்றன.
01:00 'maths.tex' fileஐ நான் பயன்படுத்துகிறேன்.
01:04 எங்கள் வலைப்பக்கத்தில், இந்த டுடோரியல் உள்ள இடத்தில், ஒரு code fileஆக இது இருக்கிறது.
01:11 அதே இடத்தில், TeX user group, Indiaன் , இந்த 'pdf' fileஐ காணலாம்.
01:17 நாம் பயிற்சிகளை செய்யும் போது, அதை பயன்படுத்துவோம்.
01:20 ‘TeXworks’ windowக்கு செல்கிறேன்.
01:24 'maths.tex' fileஐ நான் ஏற்கனவே திறந்துவிட்டேன்.
01:27 இந்த fileஐ தரவிறக்கி, என்னுடன் சேர்ந்து பயிற்சி செய்யவும்.
01:32 இந்த fileல் முதலில் உள்ள commandகளை, நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
01:36 இந்த command, paragraph indentஐ நீக்குகிறது.
01:42 இந்த statementன் விளைவை, ஒரு assignment வாயிலாக நாம் கற்போம்.
01:47 கணிதத்தில் பயன்படுத்தப்படும் Greek symbolகளுடன் தொடங்குவோம்.
01:52 LaTeXல், mathematical modeக்குள் செல்ல, நாம் dollar signஐ பயன்படுத்துகிறோம்.
01:57 alphaஉடன் தொடங்குவோம். dollar back slash alpha dollar என்று எழுதுவோம்.
02:06 Compile செய்து, 'pdf'ல், Greek எழுத்து alpha, கிடைக்கிறதா என பார்ப்போம்.
02:15 முதல் dollar, நாம் mathematical modeக்குள் செல்கிறோம் எனக் கூறுகிறது.
02:20 இரண்டாவது dollar, நாம் இந்த modeஐ விட்டு வெளியேறுகிறோம் எனக் கூறுகிறது.
02:24 இப்போதிலிருந்து, நான் வெளிப்படையாக dollar அல்லது back slash எனக் குறிப்பிடமாட்டேன்.
02:30 ஆனால், திரையில் என்ன காண்கிறீர்களோ, அதை அப்படியே செய்ய வேண்டும்.
02:34 இவ்வாறு, beta, gamma மற்றும் delta என்று எழுதுகிறோம். Compile செய்வோம்.
02:50 நான் 'tex' fileஐ சேமிக்கவில்லை, ஏனென்றால், TexWorks, தானாகவே அதை செய்கிறது.
02:56 இவைகளை இப்போது நீக்குவோம்.
03:00 அடுத்து, mathematical expressionகளில், spaceகள் பற்றி காண்போம்.
03:05 alpha a, அதாவது, alpha மற்றும் 'a'ன் பெருக்கலை எப்படி உருவாக்குவது?
03:12 'alpha a'ஐ முயற்சிப்போம்.
03:17 Compile செய்கிறேன்.
03:21 'alpha a' ஒரு undefined control sequence என்று 'LaTeX' புகார் செய்கிறது.
03:27 இந்த command புரியவில்லை என்று அது கூறுகிறது. இதை மூடுகிறேன்.
03:34 ஒவ்வொரு commandக்கு பிறகும், ஒரு space வைப்பதன் மூலம் LaTeX இதை கையாளுகிறது.
03:39 'alpha'க்கு பிறகு, ஒரு spaceஐ வைப்போம்.
03:44 Compilationஐ நிறுத்துவோம். மீண்டும் compile செய்வோம்; இது சிக்கலை தீர்க்கிறது.
03:52 ஒரு commandஐ நிறுத்தப் பயன்படுவதால், 'pdf'ல் space தோன்றாது.
03:57 Outputல், spaceகளை அறிமுகப்படுத்த வேண்டுமெனில், என்ன செய்வது?
04:03 இப்போது செய்வது போல், நாம் LaTeXஇடம் வெளிப்படையாக கூற வேண்டும்.
04:07 LaTeXஇடம், ஒரு புது வரியை தொடங்கக் கேட்போம்.
04:11 alpha backslash space a என்று எழுதுவோம்.
04:17 Compile செய்யவும்.
04:20 இது ஒரு spaceஐ உருவாக்கியுள்ளது.
04:23 உங்களுக்கு மேலும் space வேண்டுமெனில், நாம் இப்போது செய்வது போல், 'quad'ஐ பயன்படுத்தவும்.
04:31 Compile செய்யவும்.
04:34 'quad', ஒரு பெரிய spaceஐ விட்டுள்ளதை நீங்கள் காணலாம்.
04:40 இப்போது நாம் வேறு ஒரு தலைப்புக்கு செல்வோம்.
04:43 கடைசி இரண்டு வரிகளை நீக்குவோம். Compile செய்யவும்.
04:50 Textல் இருந்து mathematical modeக்கு செல்லும் போது, fontக்கு என்ன நடக்கிறது?
04:56 இதைப் புரிந்து கொள்ள, “Product of alpha and a is” என்று எழுதுவோம்.
05:04 Compile செய்யவும்.
05:07 இந்த இரண்டு 'a'க்களின் fontஉம் வெவ்வேறாக இருப்பதை நீங்கள் காணலாம்.
05:14 dollar signகளினுள், இந்த 'a'ஐ எழுதுவதன் மூலம் இந்த சிக்கல் தீர்க்கப்படுகிறது.
05:25 Compile செய்கிறேன்.
05:27 இப்போது, இந்த இரண்டு 'a'க்களின் fontஉம், ஒன்றாக இருக்கின்றன.
05:32 Variableகளின் fontஐ, ஒன்றாக வைத்திறாமல் இருப்பது, ஒரு பொதுவான பிழையாகும்.
05:37 இவைகளை நீக்குவோம்.
05:40 Compile செய்வோம்.
05:43 Minus குறிகளை உருவாக்க, இப்போது ஒரு விதியை பற்றி விவாதிப்போம்.
05:48 minus alphaஐ உருவாக்கி, compile செய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
05:58 Compile செய்வோம்.
06:01 Minus குறி, ஒரு சிறிய dashஆக தோன்றுவதை கவனிக்கவும்.
06:07 Dollar குறியினுள், Minus குறியையும் copy செய்வோம்.
06:15 மீண்டும், Compile செய்வோம்.
06:18 இப்போது, minus குறியில் இருக்கும் வேறுபாட்டை கவனிக்கவும். இரண்டாவதே நமக்கு தேவையானது, இந்த dash அல்ல.
06:27 Dollarகளினுள், Minus குறியை வைக்காமல் இருப்பது, beginnerகள் செய்யும் ஒரு பொதுவான பிழையாகும்.
06:33 இவைகள் அனைத்தையும் நாம் நீக்குவோம்.
06:36 அடுத்து, fractionகளை உருவாக்க பயன்படுத்தபடும், 'frac' commandஐ விளக்குவோம்.
06:43 'frac a b'. Compile செய்வோம்.
06:50 அது, 'a' by 'b'ஐ உருவாக்குகிறது. Command 'frac', ஒரு spaceஉடன் நிறுத்தப்படுகிறது. அது, இரண்டு argumentகளை எடுத்துக் கொள்கிறது.
07:00 முதல் character 'a', முதல் argumentஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது numerator ஆகிறது.
07:07 இரண்டாவது character 'b', இரண்டாவது argumentஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது denominator ஆகிறது.
07:13 'a' மற்றும் 'b'ன் அளவு, தானாகவே குறைவதை கவனிக்கவும்.
07:20 நீளமான characterகள் இருந்தால் என்ன செய்வது?
07:24 'ab' by 'cd'ஐ உருவாக்க வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும்?
07:31 LaTeXல், ஒரு characterக்கு மேல் உள்ள நீளமான argumentகள், braceகளினுள் வைக்கப்படுகின்றன.
07:37 உதாரணத்திற்கு, நாம், இங்கு braceகளை வைப்போம்.
07:41 இதை compile செய்யும் போது, நமக்கு விருப்பமான output கிடைக்கிறது.
07:47 Braceகளினுள் இருக்கும் எல்லா entryகளும், ஒரே argumentஆக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
07:52 இதன் விளைவாக, ஒருவர், எந்த சிக்கலான expressionஐயும், braceகளினுள் வைக்கலாம். இவைகள் அனைத்தையும் நாம் நீக்குவோம்.
08:01 இப்போது, subscriptகள் மற்றும் superscriptகளை காணலாம்.
08:05 x underscore a, x sub aஐ உருவாக்குகிறது.
08:14 'a'ன் அளவு தானாகவே, அதற்கான நிலைக்கு குறைக்கப்படுகிறது.
08:19 'ab'ஐ subscriptஆக வைக்க வேண்டுமெனில், என்ன செய்வது? Braceகளை பயன்படுத்த வேண்டும். நீங்களே முயற்சி செய்யுங்கள்.
08:28 Superscriptகள், caret அல்லது up arrow குறியினால் உருவாக்கப்படுகின்றன.
08:33 உதாரணத்திற்கு, 'x' to the power 3 உருவாக்க வேண்டுமெனில், x up arrow 3 என எழுத வேண்டும்.
08:43 நாம், subscript மற்றும் superscriptகளை, ஒரே நேரத்தில் வைக்கலாம்.
08:48 x sub a superscript bஐ வைப்போம்; Compile செய்வோம்.
08:58 மீண்டும், braceகளை பயன்படுத்தி, சிக்கலான subscriptகள் மற்றும் superscriptகளை, நாம் உருவாக்கலாம். இதை நீக்குகிறேன்.
09:08 அடுத்து, Matrixகளுக்கு செல்வோம்.
09:12 நான் விரும்பும், சில matrix வரையறைகளை, a m s math package கொண்டுள்ளது.
09:19 'Usepackage' commandன் மூலம், அதை சேர்ப்போம்.
09:26 Ampersand, அதாவது, 'and' குறி, coloumnகளை தனியாகப் பிரிக்க பயன்படுகிறது.
09:31 இப்போது, ஒரு matrixஐ உருவாக்குவோம்.
09:34 'begin matrix' 'a' and 'b', 'end matrix' என்று எழுதுவோம். Dollar குறிகளை மறக்காதீர்கள்.
09:44 எதிர்ப்பார்த்தது போல், Matrixஐ compile செய்து பார்க்கவும்.
09:49 இப்போது, இதற்கு, இரண்டாவது row ஐ சேர்க்க , இரண்டு back slashகளை வைக்கிறோம். அதாவது, அடுத்த வரிக்கு செல்ல.
09:59 ஒரு வேளை, நமக்கு, இரண்டாவது rowல், மூன்று entryக்கள், உதாரணத்திற்கு, 'c, d, e' வேண்டுமெனில், compile செய்க., இரண்டாவது row, சேர்க்கப்படுவதை காணவும்.
10:11 ஒரு வேளை, 'begin' மற்றும் 'end'ல், matrixஐ, 'pmatrix'க்கு நாம் மாற்றினால்,
10:17 Compile செய்து, இதைப் பெறவும்.
10:21 நீங்கள் ஆராய்வதற்கான நேரம் வந்து விட்டது. இப்போது, slideகளுக்கு செல்வோம்.
10:28 இந்த டுடோரியலில் நாம் கற்றதை சுருங்கசொல்ல-
10:31 Spaceகளை பயன்படுத்தி, mathematical modeக்குள் நுழைவது, வெளியேறுவது, மற்றும், அவற்றை உருவாக்குவது,
10:37 Fractionகள், subscriptகள், superscriptகள் மற்றும், ஒரு argumentஐ, braceகளினுள் வரையறுப்பது,
10:44 Matrixகளை உருவாக்க, 'amsmath' package ஐ பயன்படுத்துவது.
10:48 சில பயிற்சிகளை தருகிறேன்.
10:51 இந்த பயிற்சி, சிறிய மற்றும் பெரிய spaceகளின் மீதானது. வீடியோவை இடைநிறுத்தி, slideஐ படித்து, பின் பயிற்சியை செய்யவும்.
11:01 இந்த பயிற்சி, braceகளை பயன்படுத்தும், fractionகள் மீதானது .
11:06 இந்த பயிற்சி, subscriptகள் மற்றும் superscriptகள் மீதானது .
11:11 இந்த பயிற்சி மூலமாக, matrixகளை உருவாக்க, மேலும் சில methodகளை நாம் கற்போம்.
11:17 இந்த பயிற்சி, மேலும் சில mathematical symbol களை உருவாக்குவது பற்றியது.
11:21 இது, TUG India LaTeX guideஐ அடிப்படையாக கொண்டதாகும். அந்த documentஐ இப்போது பார்ப்போம்.
11:29 எங்கள் வலைத்தளத்தில் இருந்து, இந்த documentஐ download செய்ய, நான் முன்பே கூறியிருந்தேன்.
11:34 இந்த documentல் கொடுக்கப்பட்டுள்ள சில குறிகளை நீங்கள், அப்படியே எழுத வேண்டும்.
11:39 அடுத்த பயிற்சியில், மேலும் சில குறிகளை நீங்கள் முயற்ச்சிக்க வேண்டும்.
11:43 இந்த பயிற்சி, TUG India documentஐயும் அடிப்படையாக கொண்டது.
11:48 இந்த பயிற்சியில், paragraph indentஐ சோதனை செய்வீர்கள்.
11:53 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
11:56 இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
12:00 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும்.
12:04 நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:11 இந்த Spoken Tutorialலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் இருக்கிறதா? இந்த வலைத்தளத்தை பார்த்து, உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும்.
12:20 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
12:27 இந்த டுடோரியல் மீதான குறிப்பிட்ட கேள்விகளுக்கு, ஸ்போகன் டுடோரியல் forum உள்ளது. அதில், தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை எழுப்பாதீர்கள்.
12:36 இது குழப்பங்களை குறைக்க உதவும். குழப்பங்கள் குறைவதனால், இந்த விவாதங்களை நாம் instructional materialஆக பயன்படுத்தலாம்.
12:44 ஸ்போகன் டுடோரியல்களில் சேர்க்கப்படாத தலைப்புகளுக்கு, இந்த முகவரியில், stack exchangeஐ பார்க்கவும்.
12:50 LaTex மீதான கேள்விகளுக்கு, இது ஒரு சிறந்த இடமாகும்.
12:53 எங்களுடைய செய்முறை வகுப்புகள் மற்றும் சான்றிதழ்கள் மீதும் உங்களுக்கு கேள்விகள் இருக்கலாம். இதற்கு, இந்த மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளவும்.
13:03 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
13:09 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst