ExpEYES/C2/Panel-connections-and-software-interface/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம்.Panel இணைப்புகள் மற்றும் Software interface குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Panelன் பலவகையானterminalகள், உபரி பாகங்களின் தொகுப்பு மற்றும் Software interface.
00:17 மேலும், பின்வருவனவற்றை செய்து காட்ட கற்போம்: Ohm's விதி, Series இணைப்பில் effective resistance, Parallel இணைப்பில் effective, resistance மற்றும் நமது சோதனைகளின், circuit diagramகள்.
00:33 இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.04
00:43 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface பற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:55 ExpEYES Junior deviceன் அடிப்படை பயன்களை தெரிந்து கொள்வோம்.
01:00 இக்கருவியை பயன்படுத்தி, பின்வரும் பாடங்களில் சோதனைகளை செய்யலாம். உயர்நிலை, இளங்கலை, மின் மற்றும் மின்னணு பொறியியல்.
01:12 மின்சாரம், ஒலி, காந்தவியல், ஒளி, இருமுனையம், வானொலி மற்றும் பல துறைகளில், இதைப் பயன்படுத்தலாம்.
01:23 Panelன் மேலிருக்கும் terminalகளில் இருந்து தொடங்குவோம்.Panelலில் நான்கு ground (GND) terminalகள் உள்ளன. இந்த terminalகளில், voltage, zero volt(0 V) ஆகும்.
01:35 வேறு input terminalகளில் அளவிடப்படும் voltageக்கு, ground(GND) terminalகள் ஆதாரமாகும்.
01:42 Input terminalகளான, A1 மற்றும் A2 ஆல், -5Vல் இருந்து +5V வரை voltageஐ அளவிட முடியும்.
01:51 இடப்பக்கம் இருக்கும், IN1 மற்றும் IN2 terminalகளால், 0Vல் இருந்து 5V வரை voltageஐ அளவிட முடியும்.
01:59 மேலும், capacitanceஐ, 5000 pF(pico farads) வரை, மிகத் துல்லியமாக, IN1 அளவிடும்.
02:07 PVS என்பது Programmable voltage source ஆகும். குறைந்தபட்ச stepஆக,1.25 mV (milli volts)உடன், 0-5 Volts rangeல், voltageகளை அது கொடுக்கும். மேலும், 5 mA (milli amps) வரை, அதனால் கொடுக்க முடியும்.
02:25 சுமார் 4 volts amplitudeஉடன், கிட்டத்தட்ட 150 Hz நிலையான frequencyஐ SINE கொடுக்கும்.
02:33 Connective sensor உறுப்புகளான, photo-transistors, Light Dependent Resistors, Thermistors போன்றவற்றிற்கு, SEN, முக்கியமாக பயன்படுகிறது.
02:45 அது, 5 voltsஉடன் இணைக்கப்பட்டிருக்கும், உட்புற 5.1K resistorஉடன் வரும் ஒரு voltageஐ அளவிடும் terminal ஆகும்.
02:52 0.7 Hertz முதல் 100 Kilo Hertz வரை உள்ள frequencyஉடன், “0” முதல் “5V” வரைஉள்ள Square wavesஐ, SQR1 மற்றும் SQR2 terminalகள் உருவாக்கும்.
03:05 Software controlன் கீழ், OD1, digital outputஆக, 0V அல்லது 5Vஐ உருவாக்கும்.
03:13 வெளிப்புற sound sourceல் இருந்து, MIC, soundஐ பெறும்.
03:18 CCS என்றால்Constant Current Source என்று பொருள்.
03:22 Voltage 4 voltsக்கு கீழ் இருக்க வேண்டுமாதலால், அது, 3 kΩ(kilo ohms) load resistorஉடன், 1 mA(milli Amp) currentஐ கொடுக்கும்.
03:31 வெளிப்புற voltageகளை பெருக்க, Inverting amplifier பயன்படுத்தப்படுகிறது. வெளிப்புற condenser அல்லது mic outputகளை பெருக்கவும், இதைப் பயன்படுத்தலாம்.
03:42 இந்தக் கருவியுடன், சில உபரி பாகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
03:47 உபரி பாகங்கள் பட்டியலில் இவை இருக்கும்: இரண்டு Piezo Electric Discகள், இரண்டு 3000 சுற்றுகள் உள்ள coilகள், DC Motor
03:56 Screwdriver, நான்கு நிலைகாந்தங்களின் ஒரு தொகுப்பு, wireகளுடன் கூடிய நான்கு crocodile clip கள், Transistor
04:05 இரண்டு silicon diodeகள், LDR & Thermistor, Capacitorகள்
04:12 நான்கு 5mm LEDகள், நான்கு wireகள், Resistorகள்.
04:19 இது,ExpEYES Juniorன், ஒரு,graphical user interface (GUI) ஆகும். GUI, Plot window என்று அழைக்கப்படும்.
04:28 Plot windowவின், இடது பக்கத்தில், input terminalகள் உள்ளன: அவை A1, A2, IN1, IN2, SEN, SQ1 மற்றும் SQ2.
04:40 Waveformஐ சரி செய்ய, ATR, WHI மற்றும் வேறு trigger sourceகள் பயன்படுத்தப்படுகின்றன.
04:48 பின்வரும் டுடோரியல்களில், ATR, WHI மற்றும் வேறு trigger sourceகளைப் பற்றி கற்போம்.
04:56 CH1, CH2, CH3, CH4 என்பன, sliderகளுடன் கூடிய plotting channelகள் ஆகும்.
05:04 வலது புறத்தில் இருக்கும்,Channel sliderகள், Plot Windowவில், waveformஐ நகர்த்த பயன்படுத்தப்படுகின்றன.
05:11 A1ஐ க்ளிக் செய்து, CH1க்கு இழுக்கவும். கீழே உள்ள பெட்டியில், இணைப்பின் விவரங்களை காணலாம்.
05:21 A2ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். முன் போல், இணைப்பின் விவரங்களை காணலாம்.
05:29 Channel CH2ஐ, FITக்கு இழுக்கவும். A2வின், voltage மற்றும் frequencyஐ அது காட்டும்.
05:38 Channel CH2ஐ, NMLக்கு இழுக்கவும். FIT காட்டியதை, அது நீக்கிவிடும்.
05:44 msec/div(milli second per division) என்பது, time axisஐ குறிக்கும்.
05:51 Volt/div என்பது, volt axisஐ குறிக்கும்.
05:56 Trig level என்பது, ஒருtrigger கட்டுப்பாட்டு சாதனம் ஆகும்.
06:00 CH2ஐ க்ளிக் செய்து, DELக்கு இழுக்கவும். அது, CH2ஐ நீக்கிவிடும்.
06:07 CH1ஐ க்ளிக் செய்து, DELக்கு இழுக்கவும்.CH1ன் காட்சியை அது disable செய்துவிடும்.
06:15 Waveன், Fourier spectrumஐ, FTR, உருவாக்கும்.
06:20 Setting Squarewavesன் கீழ், நிறைய input மற்றும் check boxகள் உள்ளன.
06:26 இந்த input boxல், waveன் frequencyஐ, Hertzல் மாற்றலாம்.
06:33 Phase difference- dphiஐ, percentage(%)க்கு மாற்ற, இதை செய்ய வேண்டும்.
06:38 Set PVS= input boxல், 0ல் இருந்து, 5Vக்குள், நாம் விரும்புகிற voltage மதிப்பை எழுதலாம். மதிப்பை பொருத்த, Enterஐ அழுத்தவும்.
06:52 SQR1, SQR2 மற்றும் BOTH check boxகள், frequencyஐ செயல்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. Sliderஐ பயன்படுத்தி, frequencyஐ மாற்றலாம்.
07:04 OD1 மற்றும் CCSஐ கட்டுப்படுத்த, Set State check boxகள் , பயன்படுத்தப்படுகின்றன.
07:11 Capacitanceஐ அளக்க, Measure C on IN1 பட்டன் பயன்படுத்தப்படுகிறது.
07:16 Resistanceஐ அளக்க, Measure R on SEN பட்டன் பயன்படுத்தப்படுகிறது.
07:21 பட்டன்களின் கீழ், Python codeஐ டைப் செய்ய, ஒரு command window உள்ளது. பின்வரும் டுடோரியல்களில், Python code பற்றி கற்போம்.
07:31 Traceகளை, ".txt" fileகளாக, சேமிக்க, Save Traces to பட்டன் பயன்படுத்தப்படுகிறது.
07:37 பின்வரும் டுடோரியல்களில், LOOP check box, SCAN மற்றும் XMG பட்டன்கள் பற்றி கற்போம்.
07:45 EXPERIMENTS பட்டன், சோதனைகளின் பட்டியலைக் காட்டும். Windowவை மூடQuit பட்டன் பயன்படுத்தப்படுகிறது.
07:53 இப்போது, இந்தக்கருவி மற்றும் அதன் interfaceஐ பயன்படுத்தி, Ohm's விதியை செய்து காட்டுகிறேன்.
07:59 இந்த சோதனையில், ஒரு, resistorல் உள்ள, voltageன் சார்பு நிலையைக் காட்டி, Ohm's விதியை சரி பார்ப்போம்.
08:09 இக்கருவி, கணிணியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
08:12 இந்த சோதனையில், 2.2 KΩ (kilo ohms) resistance வழியாக, PVS, IN1உடன் இணைக்கப்படுகிறது. 1KΩ (kilo ohms) வழியாக, IN1, ground (GND)உடன் இணைக்கப்படுகிறது.
08:25 இணைப்பின், circuit diagram இது தான்.
08:30 Software interface ஐ திறக்கவும்.
08:32 Plot windowல், voltageஐ அளவிட, IN1 ஐ க்ளிக் செய்யவும்.
08:37 PVS=1 Voltக்கு, அதற்குரிய, IN1 மதிப்பு, 0.309 Volt ஆகும். PVS=2Vக்கு, IN1 மதிப்பு, 0.619V ஆகும். PVS=3Vக்கு, IN1 மதிப்பு, 0.928V ஆகும்.
09:01 பயிற்சியாக- 0ல் இருந்து 5 voltகளுக்குள், PVSன் மதிப்புகளை மாற்றி, அதற்குரிய, IN1 மதிப்புகளை சரி பார்க்கவும்.
09:10 Series இணைப்பில், effective resistanceஐ சரி பார்க்க, ஒரு சோதனையை செய்வோம்.
09:16 இந்த சோதனையில், series இணைப்பில், resistorகள் இருக்கும் போது வரும் voltageஐ காட்டுவோம்.
09:23 இந்த சோதனையில்- IN1, CCSஉடன் இணைக்கப்பட்டுள்ளது, resistor வழியாக, CCS, groundஉடன் இணைக்கப்பட்டுள்ளது,
09:33 Plot windowவில், CCS check box ஐ தேர்ந்தெடுக்கவும். Voltageஐ காட்ட, IN1ஐ க்ளிக் செய்யவும்.
09:42 இணைப்பின், circuit diagram இது தான்.
09:45 CCS மற்றும் GNDக்கு, 1 KΩ (kilo ohms) resistor இணைக்கப்பட்டால், அளவிடப்படும் voltage, 0.979V ஆகும்.
09:54 அதே போல், 560 Ω(ohms) resistanceக்கு, அளவிடப்படும் voltage, 0.543V ஆகும்.
10:02 1 KΩ (kilo ohms) மற்றும் 560Ω(ohms) resistanceகளின், series இணைப்பில், அளவிடப்படும் voltage, 1.524V' ஆகும்.
10:14 Parallel இணைப்பில், effective resistanceஐ சரி பார்க்க, ஒரு சோதனையை செய்வோம்.
10:21 இந்த சோதனையில், parallel இணைப்பில், resistorகள் இருக்கும் போது வரும் voltageஐ காட்டுவோம்.
10:28 இந்த சோதனையில்- IN1, CCSஉடன் இணைக்கப்பட்டுள்ளது, resistor வழியாக, CCS, groundஉடன் இணைக்கப்பட்டுள்ளது.
10:38 இணைப்பின், circuit diagram இது தான்.
10:40 Plot windowவில், CCS check box ஐ தேர்ந்தெடுக்கவும். Voltageஐ காட்ட, IN1ஐ க்ளிக் செய்யவும்.
10:49 இந்த சோதனை, முதலில், 1000Ω(ohms) resistorஐ வைத்தும், பிறகு, parallel இணைப்பில், இரண்டு 1000 Ω(ohms) resistorகள் வைத்தும், செய்யப்படுகிறது.
11:01 Parallel இணைப்பில், 1000 Ω(ohms) resistanceக்கு, circuit diagram இது தான்.
11:11 Parallel இணைப்பில், இரண்டு1000 Ω(ohms) resistanceகளுக்கு, circuit diagram இது தான். IN1 ன், அளவிடப்பட்ட மதிப்பு, 0.474V ஆகும்.
11:25 மீண்டும் இந்த சோதனை, முதலில், 2.2K Ω(kilo ohms) resistorஐ வைத்தும், பிறகு, parallel இணைப்பில், இரண்டு 2.2 KΩ(kilo ohms) resistorகள் வைத்தும், செய்யப்படுகிறது.
11:38 2.2K Ω(kilo ohms), resistanceக்கு, இதுவே circuit diagram ஆகும். IN1 ன், அளவிடப்பட்ட மதிப்பு, 2.132V ஆகும்.
11:48 Parallel இணைப்பில், இரண்டு2.2KΩ(kilo ohms) resistanceகளுக்கு, circuit diagram இது தான்.IN1 ன், அளவிடப்பட்ட மதிப்பு, 1.063V ஆகும்.
12:03 சுருங்கசொல்ல,
12:05 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Panelன் பலவகையானterminalகள், உபரி பாகங்களின் தொகுப்பு மற்றும் Software interface.
12:14 மேலும் நாம் செய்து காட்ட கற்றது: Ohm's விதி, Series ல் effective resistance, Parallel ல் effective resistance மற்றும் மேலுள்ள சோதனைகளின், circuit diagramகள்
12:29 பயிற்சியாக- Series மற்றும் parallel resistorகளின் இணைப்பை பயன்படுத்தி, effective resistanceஐ அளவிடவும்.
12:37 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
12:47 ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
12:55 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது
13:02 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst