ExpEYES/C2/Conductivity-of-ionic-solutions/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Ionic கரைசல்களின் conductivity குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Conductivityஐ அளவிடுவது மற்றும் Ionic கரைசல்களின் resistanceஐ கணக்கிடுவது
00:15 இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0 மற்றும் Ubuntu Linux OS பதிப்பு 14.04
00:23 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, ExpEYES Junior interface பற்றி தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:35 முதலில், ஒரு கரைசலின், Conductivityஐ வரையறுப்போம்.
00:38 ஒரு கரைசலின், Conductivity என்பது, மின்சாரத்தை கடத்தக்கூடிய அதன் திறமையின் அளவுகோலாகும்.
00:44 நீரின் Conductivity, அதனுள்ளே கரைந்திருக்கும் ionகளின் அளவுக்கு, நேர் தொடர்புடையதாகும்.
00:51 இப்போது, குழாய்நீரின் Conductivityஐ செய்து காட்டுகிறேன்.
00:56 Circuit இணைப்புகளை விளக்குகிறேன். A1, SINEக்கு இணைக்கப்பட்டிருக்கிறது.
01:02 SINE மற்றும் A2ன் wireகள், குழாய் நீர் அடங்கிய ஒரு குவளையில், அமிழ்தப்படுகின்றன.
01:08 A2 மற்றும் GNDக்கு இடையே, ஒரு 10K resistor இணைக்கப்படுகிறது. இதுவே, circuit diagram.
01:16 Plot windowவில் முடிவைக் காண்போம்.
01:20 Plot windowவில், A1ஐ க்ளிக் செய்து, channel CH1க்கு இழுக்கவும். A1 , CH1க்கு ஒதுக்கப்படுகிறது.
01:28 A2ஐ க்ளிக் செய்து, channel CH2க்கு இழுக்கவும். A2 , CH2க்கு ஒதுக்கப்படுகிறது.
01:35 'Waveகளை சரி செய்ய, msec/div sliderஐ நகர்த்தவும். இரண்டு sine waveகள் உருவாக்கப்படுகின்றன.
01:43 Black trace ஆனது அசல் sine wave ஆகும். Red trace, குழாய் நீரின் conductivity ஆகும்.
01:50 CH1ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். CH2ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும்.
01:56 Windowவின் வலது பக்கத்தில், voltage மற்றும் frequencyன் மதிப்புகளை கவனிக்கவும். Input voltageஉடன் ஒப்பிடும் போது, குழாய் நீரின் voltage, மிகவும் குறைவாக இருப்பதை கவனிக்கவும்.
02:08 Voltageகள், மற்றும் degreeயில்Phase differenceஐ காண, CH1ஐ ரைட் க்ளிக் செய்யவும்.
02:15 இப்போது, copper sulphate கரைசலின், Conductivityஐ அளவிடுவோம். கரைசலை செய்ய, 100ml நீரில், ஒரு கரண்டி copper sulphate கரைக்கப்படுகிறது.
02:27 அதே இணைப்பில், SINE மற்றும் A2ன் wireகள், copper sulphate கரைசலில் அமிழ்தப்படுகின்றன.
02:34 Plot windowவில், conductivity curveஐ காணலாம்.
02:38 Red trace, copper sulphate கரைசலின் conductivity ஆகும்.
02:42 கரைசலில், copper மற்றும் sulphate ionகள் இருப்பதனால், conductivity அதிகமாக இருக்கும்.
02:48 வலது பக்கத்தில், voltage மற்றும் frequencyன் மதிப்புகளை கவனிக்கவும்.
02:52 Voltageகள், மற்றும் Phase difference மதிப்புகளை காண, CH1ஐ ரைட் க்ளிக் செய்யவும்.
02:59 இப்போது, நீர்த்த sulphuric acid கரைசலின், Conductivityஐ அளவிடுவோம். நீர்த்த Sulphuric acidன் சில துளிகள் நீருடன் கலக்கப்படுகிறது.
03:09 Sulphuric acid கரைசலில், wireகள் அமிழ்தப்படுகின்றன. Plot windowவில் முடிவைக் காண்போம்.
03:17 Black மற்றும் red traceகள் ஒன்றுக்கொன்று, பொருந்தி இருப்பதை கவனிக்கவும்.
03:23 நீர்த்த sulphuric acidன் சில துளிகளை சேர்த்ததால், குழாய் நீரின் conductivity அதிகமாகி இருக்கிறது.
03:30 வலது பக்கத்தில், voltage மற்றும் frequencyன் மதிப்புகளை கவனிக்கவும்.
03:34 Voltageகள், மற்றும் degreeயில் Phase differenceஐ காண, CH1ஐ ரைட் க்ளிக் செய்யவும்.
03:41 நீர்த்த Potassium hydroxide கரைசலின், Conductivityஐ அளவிடுவோம். நீர்த்த Potassium hydroxide கரைசலின் சில துளிகள் குழாய் நீருடன் கலக்கப்படுகிறது.
03:52 Black மற்றும் red traceகள் ஒன்றுக்கொன்று, பொருந்தி இருப்பதை காணலாம்.
03:58 நீர்த்த Potassium hydroxide கரைசலின் சில துளிகளை சேர்த்ததால், குழாய் நீரின் conductivity அதிகமாகி இருப்பதை கவனிக்கவும்.
04:05 Windowவின் வலது பக்கத்தில், voltage மற்றும் frequency மதிப்புகளை கவனிக்கவும்.
04:11 Voltageகள், மற்றும் degreeல் Phase differenceஐ காண, CH1ஐ ரைட் க்ளிக் செய்யவும்.
04:18 Voltage மதிப்புகளை பயன்படுத்தி, ionic கரைசல்களின் resistanceஐ கணக்கிட்டு, முடிவுகளை பட்டியலிட்டு உள்ளோம்.
04:27 குழாய் நீரின் resistanceன் மதிப்பு, 7.7 KOhm (kilo ohm) ஆகும். Copper sulphate' கரைசலின் resistanceன் மதிப்பு, 1.2 Kohm ஆகும்.
04:38 Sulphuric acid கரைசல், 0.17 Kohm, மற்றும், potassium hydroxide கரைசல், 0.14 KOhm. Ionic அளவு அதிகமாக்கும் போது, resistanceன் மதிப்புகள் குறைவதை கவனிக்கவும்.
04:55 சுருங்கசொல்ல,
04:57 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Conductivityஐ அளவிடுவது மற்றும் Ionic கரைசல்களின் resistanceஐ கணக்கிடுவது
05:06 பயிற்சியாக, Sodium hydroxide, acetic acid மற்றும் sodium chloride கரைசல்களை பயன்படுத்தி, Conductivityஐ அளவிட்டு, ionic கரைசல்களின் resistanceஐ கணக்கிடவும்.
05:18 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
05:26 ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
05:32 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது
05:39 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst