Digital-India/C2/Use-SBI-pay-app/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். SBI Pay appஐ பயன்படுத்துவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது- எவ்வாறு பணம் அனுப்புவது மற்றும்
00:12 SBI Pay app மூலம் நம் அனைத்து பரிவர்த்தனைகளையும் எவ்வாறு கண்காணிப்பது
00:18 இந்த இணையத்தளத்தில் உள்ள முன் டுடோரியலில் SBI Pay app ல் எவ்வாறு பதிவு செய்வது என கற்றோம்
00:27 அந்த டுடோரியலை பின்பற்றி உங்கள் phoneல் SBI Pay appஐ நிறுவியுள்ளீர்களா என்பதை உறுதிபடுத்தவும்
00:35 அதை நிறுவியபின், நிரந்தர பதிவிற்கான அனைத்து செயல்முறையையும் முடித்துள்ளீர்களா என்பதையும் உறுதிப்படுத்தவும்
00:41 அதாவது SBI Pay appன் password மற்றும் MPIN
00:47 இப்போது, SBI Pay appஐ எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்
00:52 உங்கள் Android smartphone ல் இங்கு காட்டப்படுவது போல SBI Pay என தேடவும்
00:59 இங்கு செய்து காட்டுவது போல இந்தiconஐ தேர்ந்தெடுத்து இந்த appஐ திறக்கலாம்
01:05 பதிவு செய்யும் போது நீங்கள் உருவாக்கிய password ஐ இங்கு கொடுக்கவும்
01:11 பின் Submit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
01:15 இந்த app, main menu ஆன அடுத்த திரைக்கு உங்களை கொண்டு செல்லும்
01:21 இப்போது SBI Pay app மூலம் பணத்தை எவ்வாறு அனுப்பது என கற்போம்.
01:27 Pay தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
01:30 appல் இந்த பக்கத்திற்கு வருவீர்கள்.
01:33 இங்கு நீங்கள் எந்த வங்கி கணக்கில் இருந்து செலுத்த விரும்புகிறீர்களோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
01:39 நீங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள வங்கி கணக்கு இங்கு பட்டியலில் காட்டப்படும்
01:44 அந்த கணக்கை தேர்ந்தெடுக்கவும்
01:47 பின் Payee’s Virtual Addressல் தேவையானவற்றை கொடுக்கவும்.
01:53 குறிப்பு- நீங்கள் பணம் அனுப்பும் நபர் அவரின் phone ல் ஏற்கனவே SBI Payக்காக பதிவு செய்திருக்க வேண்டும்
01:59 உடனே இந்த app தகவல்களை பரிசோதிக்கிறது.
02:03 தானாகவே அந்த நபரின் பெயரையும் காட்டுகிறது.
02:07 Remarks fieldல் உங்களுக்கு தேவையான தகவலை எழுதலாம். அது எதிர்கால குறிப்பாக பயன்படும்
02:14 பின் Transaction Amount fieldல் தொகையை கொடுக்கவும். பிறகு Pay buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
02:22 MPINஐ கொடுக்க சொல்லி இந்த app கேட்கிறது.
02:26 இங்கு MPIN ஐ கொடுக்கவும்.
02:30 பின், Submit Buttonஐ தேர்ந்தெடுக்கவும்
02:32 buffering குறி தெரிந்தால் சற்று காத்திருக்கவும்.
02:36 இப்போது, திரையில் வெற்றி செய்தியை பெறுவீர்கள்.
02:41 உங்கள் வங்கியில் இருந்து பரிவர்த்தனை தகவலுடன் ஒரு SMSஐயும் பெறுவீர்கள்.
02:48 உங்கள் பரிவர்த்தனை முடிந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது.
02:52 பணம் பெறுபவரும் நீங்கள் அனுப்பிய பணத்தை பெற்றிருப்பார்.
02:56 இவ்வாறு SBI Pay app மூலம் நீங்கள் பணத்தை அனுப்பலாம்.
03:01 main menuக்கு திரும்ப வருவோம்
03:04 உங்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க Main menuல் My UPI Transactions தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
03:13 இதுதான் நீங்கள் இப்போது செய்த பரிவர்த்தனை.
03:18 அதேபோல, பணம் பெற்றவரும் அவரின் வங்கியிலிருந்து இதுபோன்ற ஒரு SMSஐ பெறுவார்.
03:25 பணம் பெற்றவரும் Main menuல் My UPI Transactions தேர்வை பயன்படுத்தி அதை சோதிக்கலாம்.
03:33 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
03:39 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது - பணம் அனுப்புதல் மற்றும் SBI Pay appமூலம் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணித்தல்
03:50 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு பல்வேறு தகவல் மற்றும் பொது விழிப்புணர்வு தலைப்புகளில் ஆடியோ வீடியோ டுடோரியல்களை உருவாக்குகிறது. செய்முறை வகுப்புகளும் நடத்துகிறது.
04:03 அனைத்து தலைப்புகளையும் கொண்ட பட்டியலைக் காண http://spoken-tutorial.orgக்கு செல்லவும்
04:11 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் செய்யவும்.
04:21 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Nancyvarkey, Priyacst