BOSS-Linux/C2/Basic-Commands/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
0:05 இந்த டுடோரியலில் நாம் சில அடிப்படை கமாண்ட்களை காணலாம்.
0:10 லினக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் பயன்படுத்துகிறேன்.
0:12 லீனக்ஸ் துவக்க பாடங்கள் உங்களுக்கு தெரியும் என கொள்கிறேன்.
0:17 ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது.
0:26 இதில் கமாண்ட் மற்றும் கமாண்ட் இன்டர்ப்ரேடர் என்றால் என்ன என காணலாம்.
0:33 பின் மேன் கமாண்டை பயன்படுத்தி லினக்ஸில் உதவி பெறுவதை காணலாம்.
0:39 முதல் கேள்வி கமாண்ட் என்றால் என்ன?
0:43 லீனக்ஸ் கமாண்ட் கள் சில சொற்கள் அடங்கிய தொடர். அதை உள்ளிட சில செயல்கள் நிகழும்.
0:52 கமாண்ட்கள் அறிதாகவே நான்கு எழுத்துக்களுக்கு மேல் இருக்கும். எல்எஸ், ஹு, பிஎஸ்[ps] போல.
0:59 இவை கீழ் நிலை எழுத்திலேயே இருக்கும். case sensitive ஆனவை. உதாரணம் பார்க்கலாம்.
1:05 அப்ளிகேஷன்ஸ் மெனுவுக்கு போகலாம்.
1:08 ஆக்சசரிஸ் ஐ தேர்ந்தெடுத்து பின் கிடைக்கும் தேர்வுகளில் டெர்மினல் மீது சொடுக்குங்கள்.
1:14 சாளரத்தில் டாலர் குறி ஒன்று பக்கத்தில் கர்சர் கண் சிமிட்டுவதை காணலாம். இங்குதான் கமாண்ட் டைப் செய்ய வேண்டும்.
1:22 ஹு என டைப் செய்து என்டர் செய்க
1:28 லாக் இன் செய்திருக்கும் எல்லாருடைய பெயர்களையும் காணலாம். உண்மையில் இப்போது நாம் லாக் இன் செய்திருக்கும் எல்லார் பெயர்களையும் காண ஒரு கமாண்டை செயலாக்கினோம்.
1:41 சில எழுத்துக்களின் தொடரை எது ஒரு கமாண்ட் ஆக மாற்றி செயலாக்கியது?
1:47 இதுதான் கமாண்ட் இன்டர்ப்ரேடர் என்னும் ஷெல் இன் வேலை.
1:53 நமக்கும் லீனக்ஸுக்கும் நடுவில் ஒரு இடைமுகமாக செயல்படுவதே ஷெல் என்ற அப்ளிகேஷன்.
2:02 இது ஆபரேடிங் சிஸ்டம் நாம் உள்ளிடும் கமாண்டை செயலாக்க உதவுகிறது.
2:07 லீனக்ஸில் பல ஷெல்களை நிறுவி வெவ்வேறு பயனர்கள்... விரும்பிய ஷெல்லை தேர்ந்தெடுத்துக்கொள்ள இயலும்.
2:16 லினக்ஸில் வழக்கமாக நிறுவப்படும் ஸ்டாண்டர்ட் ஷெல்... ஸ்லாஷ் பின்[bin] ச்லாஷ் எஸ்ஹெச் என்பதாகும். இது பாஷ் என சொல்லப்படுகிறது. இது க்னூ கருவிகளில் உள்ள க்னூ பார்ன் அகெய்ன் ஷெல் ஆகும்.
2:29 பார்க்கப்போகும் கமாண்ட்கள் அநேகமாக பாரம்பரியமானவை. அநேகமாக எல்லா லீனக்ஸ் ஷெல்களிலும் சில சிறிய மாறுதல்களுடன் வேலை செய்யும்.
2:38 இருப்பினும் உதாரணங்கள் காட்ட பாஷ் ஷெல்லையே பயன்படுத்துவோம்.
2:44 ஏனெனில் பாஷ் எல்லா யூனிக்ஸ் தளத்துக்கும் எடுத்துச்செல்லக் கூடிய பிரபலமான ஷெல்.
2:52 மற்ற ஷெல்கள் போர்ன் ஷெல்- இதுவே ஒரிஜினல் யூனிக்ஸ் ஷெல்- சி ஷெல், கார்ன் ஷெல்
3:02 நாம் பயன்படுத்துவதை அறிய ….
3:08 டெர்மினலி ல் டைப் செய்க: எகோ ஸ்பேஸ் டாலர், பின் மேல் நிலை எழுத்துக்களில் ஷெல். என்டர் விசையை தட்டுவோம்.
3:21 சாதரணமாக அவுட்புட் ஸ்லாஷ் பின்[bin] ச்லாஷ் பாஷ் என்பது. இது பாஷ் ஷெல் ஆகும்.
3:28 வெவ்வேறு ஷெல்களை இயக்குவதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளன. அவை பின் ஒரு டுடோரியலில் சொல்லப்படும்.
3:36 கமாண்ட்கள் அநேகமாக சி மொழியில் எழுதப்பட்ட அப்ளிகேஷன் கள் அடங்கிய கோப்பு
3:41 இந்த பைல்கள் டிரக்டரிகளில் உள்ளன. கமாண்ட் சேமிக்கப்பட்டுள்ள இடத்தை அறிய டைப் கமாண்ட் ஐ பயன்படுத்தலாம்.
3:48 எழுதுவோம்: டைப் ஸ்பேஸ் பிஎஸ்[ps]. என்டரை தட்டுவோம்.
3:58 பிஎஸ்[ps] என்பது உண்மையில் ஸ்லாஷ் பின்[bin] டிரக்டரியில் உள்ள பைல் என காட்டுகிறது.
4:03 நாம் ஒரு கமாண்டை உள்ளிட்டால் ஷெல் பெயர் பொருத்தம் உள்ள பைல் ஐ ஒரு டிரக்டரி பட்டியலில் தேடுகிறது.
4:12 அது கண்டு பிடிக்கப்பட்டால் பைலுக்கு பொருத்தமான ப்ரொக்ராம் செயலாகிறது. இல்லையானால் கமாண்ட் காணப்படவில்லை என்று பிழை காணப்படுகிறது.
4:21 தேட வேண்டிய டிரக்டரி பட்டியல் பாத்[PATH] வேரியபில் இல் குறிப்பிட்டு இருக்கும்.
4:28 இந்த பட்டியலை பார்க்க டைப் செய்க. எகோ ஸ்பேஸ் டாலர், பின் மேல் எழுத்துக்களில் பாத்[PATH]
4:40 என்டர் விசையை தட்டுவோம்
4:45 கமாண்ட் களை பற்றி பேசும்போது ஒரு முக்கிய விஷயம் நமக்கு தெரிய வேண்டும்.
4:51 லீனக்ஸ் கமாண்ட் களில் இரண்டு வகை; வெளிசார் கமாண்ட், உள்சார் கமாண்ட் .
4:56 தனி பைல்கள்/ ப்ரொக்ராம் ஆக உள்ளவை வெளிசார் கமாண்ட் கள்.
5:00 இப்படித்தான் லினக்ஸில் பல கமாண்ட் கள் இருக்கும். ஆனால் சில கமாண்ட் களின் செயல்பாடு ஷெல்லிலேயே எழுதப்பட்டு இருக்கும். அவை தனி பைல்களாக இராது.
5:12 இவை உள்சார் கமாண்ட் கள்.
5:14 நாம் பின்னால் பார்க்கப்போவது போல எகோ கமாண்ட் உள்சார் கமாண்ட்.
5:18 டெர்மினலுக்கு போய் டைப் செய்யலாம்
5:26 டைப் ஸ்பேஸ் எகோ. என்டரை தட்டுவோம்
5:34 அவுட்புட் echo is a shell builtin.
5:43 பைலின் பெயரை தராமல் கமாண்ட் யின் செயலாக்கம் ஷெல் உள் சார்ந்தது என்கிறது. ஆகவே இது உள் சார் கமாண்ட் .
5:50 புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் கமாண்ட் களில் அமைப்பு.
5:55 கமாண்ட் கள் ஒரு சொல் அல்லது வெள்ளை இடத்தால் பிரிக்கப்பட்ட பல சொற்களாக இருக்கலாம்.
6:02 பல சொற்களாக இருந்தால் முதலில் காண்பதுதான் கமாண்ட். பின்னால் காண்பது ஆர்குமென்ட்.
6:09 ஆர்குமென்ட் என்பது ஆப்ஷன், எக்ஸ்ப்ரெஷன்ஸ் அல்லது பைல் பெயராக இருக்கலாம்.
6:14 குறித்துள்ள ஆப்ஷனை பொறுத்து ஒரு கமாண்ட் பல்வேறு வேலைகளை செய்யக்கூடும்.
6:20 அவை சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு கழித்தல் குறிகளை முன்னொட்டாக கொண்டு இருக்கும். இவை முறையே ஷார்ட் அல்லது லாங் ஆப்ஷன்ஸ் எனப்படும்.
6:28 டெர்மினலுக்கு சென்று கமாண்ட் களை டைப் செய்து அவுட்புட் களை பாருங்கள்.
6:34 டெர்மினலை துடைக்க கிளியர் என டைப் செய்வோம்.
6:37 எல்எஸ் என டைப் செய்து என்டர் செய்வோம்.
6:43 மீண்டும் கிளியர் என டைப் செய்து என்டர் செய்வோம்.
6:49 இப்போது எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் ஏ என டைப் செய்து என்டர் செய்வோம்.
6:58 டெர்மினலை துடைக்க கிளியர் என டைப் செய்வோம்.
7:04 இப்போது எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் ஹைபன் ஆல் என டைப் செய்து என்டர் செய்வோம்.
7:13 கிளியர் என டைப் செய்து துடைப்போம்.
7:18 இப்போது எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் டி[d] என டைப் செய்து என்டர் செய்வோம்.
7:26 இப்போதைக்கு ஆப்ஷன்களால் எப்படி கமாண்டின் நடத்தை மாறுகிறது என கண்டு கொள்வது போதும்.
7:33 லினக்ஸில் பல கமாண்ட் கள் உள்ளன,
7:39 ஒவ்வொன்றுக்கும் பல வேறு ஆப்ஷன்ஸ் உள்ளன.
7:42 பின்னால் காண்போம்- பல கமாண்ட் களை ஒன்றாகவும் சேர்க்கலாம். அது சரி, எப்படி இத்தனை கமாண்ட் களை நினைவில் வைத்துக்கொள்வது?
7:48 அப்படி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதே இல்லை. லினக்ஸில் அருமையான ஆன் லைன் உதவி உள்ளது.
7:55 மேன் கமாண்ட் கணினியில் உள்ள அத்தனை கமாண்ட் களுக்கும் ஆவணத்தை கொடுக்க முடியும்.
8:01 உதாரணமாக எல்எஸ் கமாண்ட் பற்றி அறிய, டெர்மினலுக்கு செல்லலாம்.
8:09 மேன் கமாண்டை எல்எஸ் என்ற ஆர்குமென்ட்டுடன் உள்ளிட வேண்டும். அதாவது டைப் செய்க: மேன் ஸ்பேஸ் எல்எஸ். என்டர் செய்க.
8:23 வெளியேற க்யு விசையை அழுத்த வேண்டும்.
8:29 மேன் என்பது கையேட்டு அழைப்பி. மேன் க்கு தரும் ஒவ்வொரு ஆர்குமென்ட்டும் சாதரணமாக ப்ரோகிராம், அப்ளிகேஷன் அல்லது பங்க்ஷனின் பெயர்.
8:37 ஒவ்வொரு ஆர்குமென்ட்டுடன் தொடர்புள்ள கையேட்டு பக்கமும் கண்டுபிடிக்கப்பட்டு காட்டப்படும்.
8:43 ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டால் கையேட்டில் அந்த பகுதியில் மட்டுமே தேட மேன் பணிக்கப்படும்.
8:49 முன்னிருப்பு என்னவென்றால் ஒரு வரையறுக்கப்பட்ட பார்மேட்டில் எல்லா பகுதிகளுமே தேடப்படும். பக்கம் பல பகுதிகளில் இருந்தாலும் முதல் பக்கம் மட்டுமே காட்டப்படும்.
9:00 மேன் என்ற கமாண்ட் பற்றி மேலும் அறிய மேன் கமாண்டை யே பயன்படுத்தலாம்.
9:07 டெர்மினலுக்கு சென்று மேன் ஸ்பேஸ் மேன் என்று உள்ளிட்டு என்டர் செய்க.
9:16 க்யு ஐ அழுத்தி வெளியே வரலாம்.
9:20 மேன் கமாண்ட் க்கு பல ஆப்ஷன்ஸ் உள்ளன.
9:23 பயனுள்ள சிலதை இங்கே சொல்கிறேன். சில சமயம் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். ஆனால் அதை செய்ய என்ன கமாண்ட் என்று தெரியாது. என்ன செய்வது?
9:35 மேன் ஹைபன் கே என்ற தேர்வை கொண்டு கமாண்ட் களின் பட்டியல் ஒன்றையும் அவற்றின் பயனையும் சுருக்கமாக காட்டும்.
9:44 உதாரணமாக ஒரு அடைவை உருவாக்க நமக்கு சரியான கமாண்ட் தெரியாமல் இருக்கலாம்.
9:50 ஆகவே நாம் டெர்மினலுக்கு போய் மேன் ஸ்பேஸ் ஹைபன் கே ஸ்பேஸ் டிரக்டரிஸ் என டைப் செய்து உள்ளிடுகிறோம்.
10:06 இப்போது நமக்கு தேவையானது இங்கே இருக்கிறதா என்று ஒவ்வொரு கமாண்டை யும் பார்க்கலாம்.
10:11 இதையே apropos என்ற கமாண்டாலும் சாதிக்கலாம்.
10:15 நாம் டெர்மினலுக்கு போய் apropos ஸ்பேஸ் டிரக்டரிஸ் என டைப் செய்து உள்ளிடுகிறோம். வெளியீட்டை பாருங்கள்.
10:29 சில சமயம் நிறைய விவரங்கள் தேவையில்லை. கமாண்ட் வேலையை தெரிந்தால் போதும்.
10:35 அதற்கு வாட் ஈஸ் என்ற கமாண்டை பயன்படுத்தலாம். அல்லது மேன் ஹைபன் எஃப். இரண்டுமே ஒரே வரியில் அந்த கமாண்ட் பற்றி சொல்லும்.
10:45 டெர்மினலை துடைக்க கிளியர் என டைப் செய்வோம்.
10:51 இப்போது வாட் ஈஸ் ஸ்பேஸ் எல்எஸ் என டைப் செய்து உள்ளிடுவோம்.
10:59 சில கமாண்ட் களுக்கு பல ஆப்ஷன்ஸ் இருக்கும். இந்த தேர்வுகளின் பட்டியலை நாம் விரும்பலாம்.
11:07 அப்படியானால் நாம் ஹைபன் தேர்வை பயன்படுத்தலாம்.
11:12 டெர்மினலுக்கு சென்று ப்ராம்ட்டில் எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் ஹைபன் ஹெல்ப் என எழுதி உள்ளிட்டலாம்.
11:23 இந்த கையேட்டு பக்கத்தில் உள்ளனவற்றை காண நாம் ஸ்க்ரால் செய்கிறேன்.
11:38 இந்த டுடோரியலின் பகுதி இவ்வளவே.ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:49 மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
11:54 மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Priyacst