BASH/C2/Nested-and-multilevel-if-elsif-statements/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 BASH ல் Nested மற்றும் multilevel if statement குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:09 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:12 Nested if-else மற்றும்
00:14 Multilevel if-else statement
00:17 சில உதாரணங்களைப் பயன்படுத்தி இதை செய்வோம்.
00:22 இந்த டுடோரியலைத் தொடர, உங்களுக்கு Linux இயங்குதளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும்
00:28 அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்
00:35 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது
00:38 Ubuntu Linux 12.04 மற்றும்
00:42 GNU Bash பதிப்பு 4.1.10
00:46 பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது.
00:52 Nested if-else statement ன் செயல்பாட்டை புரிந்துகொள்வோம்
00:57 இங்கே, condition1 உண்மையானால், பின் condition 2 மதிப்பிடப்படும்.
01:04 condition2 உண்மையானால், பின் statement 1 இயக்கப்படும்.
01:10 அதாவது, conditionகள் 1 மற்றும் 2 உண்மையானால் மட்டுமே, statement 1 இயக்கப்படும்.
01:19 condition1 பொய்யெனில், பின் statement 3 இயக்கப்படும்.
01:25 condition 2 பொய்யெனில், பின் statement 2 இயக்கப்படும்.
01:31 ஒரு உதாரணத்தைக் காண்போம்.
01:33 file nestedifelse.sh ல் code ஐ எழுதி வைத்துள்ளேன்
01:38 அதை திறக்கிறேன்.
01:40 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:43 இது shebang வரி.
01:45 variable NAME மதிப்பு anushaக்கு assign செய்யப்பட்டுள்ளது
01:50 variable PASSWORD மதிப்பு abc123 க்கு assign செய்யப்பட்டுள்ளது
01:56 standard input ல் இருந்து ஒரு வரி data ஐ read command read செய்கிறது
02:02 - (hyphen) p flag prompt ஐ காட்டுகிறது.
02:05 - (hyphen) p க்கு அடுத்த string, “Enter name: ” டெர்மினலில் காட்டப்படும்.
02:11 பயனரால் கொடுக்கப்படும் உரையை அதாவது பயனர் உள்ளீட்டை variable myname சேமிக்கிறது.
02:18 முதல் if statement இரு variableகள் myname மற்றும் NAME ஐ ஒப்பிடுகிறது
02:24 அதாவது பயனர் உள்ளீடு மற்றும் variable Name ல் சேமிக்கப்பட்ட மதிப்பு anusha.
02:31 இரு மதிப்புகளும் பொருந்தினால், பின் இந்த if statement ல் உள்ள மீதி code மதிப்பிடப்படும்.
02:38 read command ஆனது கொடுக்கப்பட்ட password ஐ read செய்து variable mypassword ல் சேமிக்கும்.
02:46 இங்கே, silent mode க்காக - (hyphen) s flag
02:49 அதாவது பயனரால் உள்ளிடப்பட்ட உரை டெர்மினலில் காட்டப்படமாட்டாது
02:56 இங்கே மற்றொரு தொகுதி if-else statementகளை கொண்டுள்ளோம்.
02:59 முதல் if னுள் இந்த if-else statementகள் உள்ளன.
03:05 variableகள் mypassword மற்றும் PASSWORD ஐ இரண்டாம் if statement ஒப்பிடுகிறது
03:12 if condition 'உண்மையாகும்' போது அதாவது passwordகள் பொருந்தும் போது டெர்மினலில் “Welcome” செய்தியை echo காட்டுகிறது
03:21 backslash escapeகளின் interpretation ஐ -e செயல்படுத்துகிறது
03:27 \n புது வரிக்காக; அதாவது string Welcome” புது வரியில் அச்சடிக்கப்படும்.
03:35 'if condition 'உண்மையில்லை எனும் போது else condition இயக்கப்படும்;
03:42 அதாவது. passwordகள் பொருந்தாத போது, else condition இயக்கப்படும்.
03:48 இங்கு, echo காட்டுவது “Wrong password”
03:53 உள்புற if-else statementfi முடிக்கிறது
03:57 நம் முதல் if-else statementக்கு வருவோம்
04:01 myname மற்றும் NAME ன் மதிப்புகள் பொருந்தவில்லை எனில், இந்த else statement இயக்கப்படும்.
04:09 இது டெர்னிலில் “Wrong Name” என செய்தியை echo செய்யும்
04:14 வெளிப்புற if-else statementfi முடிக்கிறது
04:18 இப்போது ctrl+alt மற்றும் t விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறப்போம்.
04:27 file ஐ executable ஆக மாற்றுவோம்.
04:29 டைப் செய்க: chmod space plus x space nestedifelse.sh
04:38 டைப் செய்க dot slash nestedifelse.sh
04:43 டெர்மினலில் ப்ரோகிராம் இயக்கப்படும் போது அது இரு conditionகள் Name மற்றும் Password ஐ மதிப்பிடுகிறது
04:52 இங்கே, Enter Name என prompt காட்டுகிறது
04:55 டைப் செய்வோம் anusha.
04:57 இந்த condition உண்மையென்பதால், அடுத்த if condition மதிப்பிடப்படுகிறது.
05:02 இப்போது prompt Password என்கிறது
05:05 password க்கு டைப் செய்வது abc123
05:10 variable PASSWORD ன் மதிப்புடன் password பொருந்துகிறது
05:15 எனவே prompt Welcome செய்தியைக் காட்டுகிறது
05:19 இப்போது மீண்டும் script ஐ இயக்குவோம்.
05:21 மேல் அம்பு விசையை அழுத்துக.
05:24 dot slash nestedifelse.sh க்கு செல்க
05:29 Enter ஐ அழுத்துக.
05:31 இம்முறை அதே name க்கு வேறு password ஐ கொடுப்போம்.
05:37 எனவே name ஆக anusha password ஆக 123.
05:44 name மதிப்புகள் பொருந்தலாம் ஆனால் password மதிப்புகள் பொருந்தவில்லை.
05:49 எனவே செய்தி Wrong password காட்டப்படுகிறது.
05:53 முதல் if statement னுள் உள்ள nested else statement இயக்கப்பட்டது என்பதை இது நிரூபிக்கிறது.
06:01 இந்த script ஐ மீண்டும் ஒருமுறை இயக்குவோம்.
06:04 இம்முறை name ஐ swati என கொடுப்போம்
06:08 Wrong name” என்ற செய்தி காட்டப்படுகிறது.
06:12 ஏனெனில் name swati நாம் முன்னர் declare செய்த மதிப்பு anusha உடன் பொருந்தவில்லை
06:19 கட்டுப்பாடு முதல் if statement க்கு வந்து else statementஐ இயக்குகிறது.
06:25 இது அச்சடிக்கும் செய்தி Wrong name.
06:29 இப்போது multilevel if-else statement ஐ காண்போம்
06:34 condition1 உண்மையெனில், statement1 இயக்கப்படுகிறது.
06:40 condition1 பொய்யெனில், condition 2 மதிப்பிடப்படுகிறது.
06:46 condition2 உண்மையெனில், statement 2 இயக்கப்படுகிறது.
06:52 condition 2 பொய்யெனில், condition N மதிப்பிடப்படுகிறது.
06:58 condition N உண்மையெனில், statement N இயக்கப்படுகிறது.
07:03 Condition N பொய்யெனில், statement X இயக்கப்படும்.
07:10 ஒரு உதாரணத்தைக் காண்போம்.
07:14 என்னிடமுள்ள உதாரணத்தை திறக்கிறேன். நம் file பெயர் multilevel hyphen ifelse dot sh என்பதைக் காண்க.
07:23 அந்த code ஐ காண்போம்.
07:25 இது shebang வரி.
07:27 இயக்கத்தின் போது பயனரால் கொடுக்கப்படும் உள்ளீட்டு வார்த்தையை சேமிக்கும் ஒரு variable mystring .
07:34 உள்ளீட்டு string nullஆ என if condition சோதிக்கிறது
07:39 string ன் நீளம் பூஜ்ஜியமா என - (hyphen) z சோதிக்கிறது
07:44 டெர்மினலில் man test என டைப் செய்து string comparison ஐ ஆய்ந்தறியவும்.
07:51 எதுவும் உள்ளிடப்படவில்லை எனில் இந்த echo statement அச்சடிக்கப்படும்.
07:56 உள்ளீட்டு string ஆனது raj ஐ கொண்டுள்ளதா என முதல் elif condition சோதிக்கிறது
08:03 ஆம் எனில், இந்த echo statement அச்சடிக்கப்படும்.
08:08 ஏதேனும் வார்த்தையில் raj உள்ளதா என இந்த wildcard character ஆல் உறுதிப்படுத்தி கண்டுபிடுக்கப்படும்.
08:15 உள்ளீட்டு string ல் jit எனும் வார்த்தை உள்ளதா என அடுத்த elif condition சோதிக்கிறது
08:22 ஆம் எனில், இந்த echo statement அச்சடிக்கப்படும்.
08:27 மேற்சொன்ன அனைத்து conditionகளும் தோற்கும் போது இந்த else condition இயக்கப்பட்டு
08:33 செய்தி Sorry! Input does not contain either 'raj' or jit காட்டப்படும்
08:41 multilevel if-else statement ன் முடிவை fi காட்டுகிறது
08:46 இப்போது program ஐ இயக்குவோம்.
08:48 நம் டெர்மினலுக்கு வருவோம்'
08:51 டைப் செய்க: chmod space plus x space multilevel hyphen ifelse dot sh
09:00 டைப் செய்க dot slash multilevel hyphen ifelse dot sh
09:06 உள்ளீடு கேட்கப்படுகிறது.
09:09 வெவ்வேறு உள்ளீடுகளைக் கொடுத்து ஒவ்வொரு முறையும் நடப்பதைக் காண்போம்.
09:14 முதலில் எதையும் உள்ளிடாமல் Enter ஐ அழுத்துகிறேன்.
09:19 Nothing was Entered செய்தி காட்டப்படுகிறது.
09:22 கட்டுப்பாடு multilevel if-else statement ஐ விட்டு வருகிறது
09:28 prompt ஐ துடைக்கிறேன்.
09:30 மற்றொரு உள்ளீட்டுடன் script ஐ இயக்க முயற்சிப்போம்.
09:34 மேல் அம்பு விசையை அழுத்துக.
09:36 dot slash multilevel hyphen ifelse dot sh க்கு செல்க.
09:41 Enter ஐ அழுத்துக.
09:43 காட்டப்படுவது "Enter a Word".
09:45 abhijit என டைப் செய்கிறேன்
09:48 காட்டப்படும் வெளியீடு “abhijit contains word jit”.
09:53 கட்டுப்பாடு மூன்றாவது condition க்கு சென்றது என்பதை இது காட்டுகிறது.
09:59 முதல் இரு conditionகள் பொருந்தவில்லை.
10:03 இந்த செயல்முறை அனைத்து conditionகளுக்கும் பொருந்துகிறது
10:07 வெவ்வேறு உள்ளீடுகளுடன் ப்ரோகிராமை இயக்க முயற்சித்து வெளியீடுகளைச் சோதிக்கவும்.
10:13 சுருங்கசொல்ல.
10:15 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
10:18 Name மற்றும் Password ஐ மதிப்பீடு செய்வதுடன் Nested If-else:
10:23 Multilevel if-else: String comparison ப்ரோகிராம்.
10:28 பயிற்சியாக, ஒரு எண்
10:34 3 ஐ விட அதிகமாகும் போது, 3 ஐ விட குறைவாகும் போது,
10:37 அல்லது 3 க்கு சமமாகும் போது,
10:39 அல்லது பயனர் உள்ளீடு காலியாக உள்ள போது வெவ்வேறு செய்திகளை வெளியீடாக தரும் ஒரு ப்ரோகிராம் எழுதுக
10:42 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10:45 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
10:48 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
10:53 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:58 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
11:02 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:09 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:13 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:20 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
11:26 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst