QGIS/C2/Importing-Spreadsheets/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 QGISல் spreadsheet களை import செய்வது குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது-
00:10 ஒரு Point Layerஐ உருவாக்குவதற்கு CSV format ல் spreadsheetகளை import செய்வது
00:16 Point Layerஐ ஒரு Polyline Layerக்கு மாற்றுவது மற்றும்
00:20 QGISல் WMS (Web Map Service) layer ஐ load செய்வது
00:25 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04,
00:32 QGIS பதிப்பு 2.18
00:36 மற்றும் ஒரு வேலை செய்கின்ற இணைய இணைப்பு
00:39 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, மற்றும் QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:47 இல்லையெனில் அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்
00:52 GIS data, table அல்லது spreadsheet format ல் கிடைக்கும்
00:59 spreadsheet வடிவத்தில் இருக்கின்ற dataவை, QGISக்கு import செய்யலாம்
01:05 X மற்றும் Y coordinateகளை கொண்ட 2 columnகளை Data file கொண்டிருக்கவேண்டும்
01:12 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, playerன் கீழ் உள்ள , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள, folderஐ நீங்கள் தரவிறக்க வேண்டும்
01:21 தரவிறக்கப்பட்ட zip file லில் உள்ளவற்றை extract செய்யவும்
01:25 extract செய்யப்பட்ட folderல், Places.txt மற்றும் Places.csv fileகளை கண்டுபிடிக்கவும்
01:33 நான் ஏற்கனவே code fileஐ தரவிறக்கி, அதை Desktopல் ஒரு folderல் சேமித்துள்ளேன்
01:41 அதில் உள்ளவற்றை பார்க்க, நான் Code filesஐ டபுள்-க்ளிக் செய்கிறேன்
01:46 இங்கு நீங்கள், Places.csv மற்றும் Places.txt. என்ற 2 fileகளை பார்க்கலாம்
01:54 Places.csv fileஐ டபுள்-க்ளிக் செய்யவும்
02:02 CSV format ல் ஒரு spreadsheet திறக்கிறது
02:06 latitude மற்றும் longitude dataவை கொண்ட நகரங்களின் பெயர்களை அது கொண்டிருக்கிறது
02:14 CSV fileஐ மூடவும்
02:17 Places.txt fileஐ டபுள்-க்ளிக் செய்து திறக்கவும்
02:22 இங்கேயும், latitude மற்றும் longitude dataவை கொண்ட நகரங்களின் பெயர்கள் இருக்கின்றன
02:32 Text fileஐ மூடவும்
02:35 Code-files folderஐ மூடி, QGIS interface ஐ திறக்கவும்
02:41 menu bar ல் உள்ள Layer menu வை க்ளிக் செய்யவும்
02:45 drop-down பட்டியலில் இருந்து, Add layerஐ தேர்ந்தெடுக்கவும்
02:49 sub-menu வில் இருந்து, Add Delimited Text Layer ஐ தேர்ந்தெடுக்கவும்
02:54 ஒரு dialog-box திறக்கிறது
02:57 File Name text boxக்கு அடுத்துள்ள, Browse பட்டனை க்ளிக் செய்யவும்
03:02 ஒரு dialog-box திறக்கிறது
03:05 நீங்கள் முன்பு தரவிறக்கி, சேமித்த csv file க்கு செல்லவும்
03:11 Open பட்டனை க்ளிக் செய்யவும்
03:14 create a layer dialog-box ல், File Name text box ல், file path இப்போது தெரிகிறது
03:21 File format பிரிவில், முன்னிருப்பாக CSV தேர்வு தேர்ந்தெடுக்கப்படுகிறது
03:28 இல்லையெனில், அதை தேர்ந்தெடுக்க, CSV ரேடியோ பட்டனை க்ளிக் செய்யவும்
03:33 .txt fileஐ பயன்படுத்தும் போது, Custom Delimiters தேர்வை தேர்ந்தெடுக்கவும்
03:39 Geometry definition பிரிவும், Latitude மற்றும் Longitude data வால் தானாகவே நிரப்பப்பட்டிருக்கும்
03:47 X-coordinate, longitude என்பதையும் Y-coordinate, latitude என்பதையும் கவனிக்கவும்
03:55 Longitude ஒரு புள்ளியின் கிழக்கு-மேற்கு நிலையை குறிப்பிடுகிறது.
04:01 மற்றும் Latitude ஒரு புள்ளியின் வடக்கு-தெற்கு நிலையை குறிப்பிடுகிறது.
04:06 OK பட்டனை க்ளிக் செய்யவும்
04:09 Coordinate Reference System Selector dialog-box திறக்கிறது
04:14 WGS 84 EPSG 4326ஐ தேர்ந்தெடுக்கவும்
04:21 OK பட்டனை க்ளிக் செய்யவும்
04:24 data import செய்யப்பட்டு, QGIS canvasல் காட்டப்படுகிறது
04:30 இந்தியாவின் வரைபடம் புள்ளிகளுடன் திறக்கிறது.
04:34 இந்த புள்ளிகள் CSV file லில் பட்டியலிடப்பட்ட வெவ்வேறு நகரங்களுடன் ஒத்திருக்கும்.
04:40 இந்த புள்ளி அம்சங்களின் பாணியையும் வண்ணத்தையும் மாற்றலாம்.
04:45 இது வரவிருக்கும் டுடோரியல்களில் விரிவாக செயல்விளக்கப்படும்.
04:51 பயிற்சியாக,
04:53 QGISலில் Places.txt file ஐ import செய்யவும்
04:58 Places.txt file, Code files இணைப்பில் இருந்து தரவிறக்கப்பட்ட folderல் உள்ளது
05:06 இப்போது, இந்த Point layer ஐ Polyline layer க்கு மாற்றுவோம்
05:12 இங்கே நாம் அனைத்து நகரங்களையும் ஒரு பாதையினால் இணைப்போம்.
05:17 இந்த பாதை தெற்கு கோடியில் உள்ள நகரத்தை வடக்கு கோடியில் உள்ள நகரத்துடன் இணைக்கிறது.
05:23 இது ஒவ்வொரு நகரத்தின் latitude data வை அடிப்படையாகக் கொண்டது.
05:28 menu bar ல் உள்ள Processing menu வை க்ளிக் செய்யவும்
05:32 drop-down ல் இருந்து Toolboxஐ தேர்ந்தெடுக்கவும்
05:36 Processing Toolbox panel, திரையின் வலது பக்கத்தில் திறக்கிறது
05:41 இது வெவ்வேறு தொகுதிகளில் தொகுக்கப்பட்டுள்ள அனைத்து algorithmகளின் பட்டியலையும் காட்டுகிறது.
05:47 QGIS geoalgorithmஐ, அதற்கு அடுத்ததாக உள்ள கருப்பு முக்கோணத்தைக் க்ளிக் செய்து விரிவாக்கவும்
05:55 காட்டப்படுகின்ற பட்டியலில் இருந்து, Vector creation tools தேர்வை விரிவாக்கவும்
06:01 விரிவாக்கப்பட்ட menuவில் இருந்து, algorithmஐ செயல்படுத்த, Points to path tool ஐ டபுள்-க்ளிக் செய்யவும்
06:08 Points to path dialog-box திறக்கிறது
06:12 Input layerக்கு Placesஐ தேர்ந்தெடுக்கவும்
06:16 Group field drop-downல் இருந்து, type comma C comma 16. ஐ தேர்ந்தெடுக்கவும்
06:23 வடிவ fileலில் உள்ள அனைத்து அம்சங்களுக்கும் நகரங்களின் பெயர்களை இந்த field கொண்டுள்ளது.
06:29 Order field drop-down ல் இருந்து, Latitude comma N comma 19 comma 11 ஐ தேர்ந்தெடுக்கவும்
06:37 பாதை, latitudeன் ஏறும் வரிசையில் செல்லும் என்பதை இது குறிக்கிறது.
06:42 Paths fieldக்கு அடுத்துள்ள பட்டனை க்ளிக் செய்யவும்
06:46 sub-menu வில் இருந்து, Save to file தேர்வை தேர்ந்தெடுக்கவும்
06:51 Save file dialog-box திறக்கிறது
06:55 File ஐ சேமிக்க பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன்
07:02 Fileக்கு Path-1 என பெயரிடவும்
07:06 Save பட்டனை க்ளிக் செய்யவும்
07:09 Fileன் பெயருடன் கூடிய path, Paths field லில் தோன்றுகிறது
07:14 Open output file after running algorithmக்கு ஐ க்ளிக் செய்யவும்
07:19 dialog-box கீழ் வலது மூலையில் உள்ள, Run பட்டனை க்ளிக் செய்யவும்
07:24 Canvasல் வரைபடத்தை கவனிக்கவும்
07:27 நகரங்களுக்கு இடையிலான output path காட்டப்படுகிறது.
07:31 இந்த algorithmஐ வரைபடத்தில் உள்ள எந்த இரண்டு புள்ளிகளையும் ஒரு path மூலம் இணைக்க முடியும்.
07:38 பயிற்சியாக, மேற்கிலிருந்து கிழக்கு வரையுள்ள நகரங்களுக்கு இடையே ஒரு பாதையை உருவாக்கவும்.
07:45 குறிப்பு: Points to path dialog-boxல், Order field drop-down ல், Longitude comma N comma 19 comma 11 தேர்வை பயன்படுத்தவும்
07:57 இப்போது, QGISல் ஒரு WMS layer ஐ சேர்ப்போம்
08:03 WMSஐ பற்றி
08:06 WMSக்கு Web Map Services என்று பொருள்
08:11 WMS என்பது ஊடாடும் மேப்பிங்கிற்கான திறந்த GIS நிலையான விவரக்குறிப்பாகும்.
08:17 இது இணையத்தில் ஒரு serverலிருந்து வரைபடப் படங்களைக் கோருவதை அடிப்படையாகக் கொண்டது.
08:23 இந்த செயல்விளக்கத்திற்கு நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
08:28 ஏதேனும் ஒரு web browserஐ திறக்கவும்
08:31 address bar ல் டைப் செய்க: bhuvan.nrsc.gov.in. Enterஐ அழுத்தவும்
08:41 Bhuvan home பக்கம் திறக்கிறது
08:44 Thematic Services tabஐ க்ளிக் செய்யவும்
08:48 Thematic Servicesபக்கம் ஒரு புதிய windowவில் திறக்கிறது
08:52 இடது panelலில், Search tab ன் கீழ், Select Theme drop-down ன் கீழ், Land Use Land Cover (50K):2005-06 ஐ தேர்வு செய்யவும்
09:06 Select Geography drop-downனின் கீழ், Karnatakaவை தேர்வு செய்யவும்
09:12 Web Services tab ஐ க்ளிக் செய்யவும்
09:15 For QGIS, uDig, ArcGIS and Other Users, Web Map Service (WMS)URLபிரிவின் கீழ்,
09:25 இந்த layerக்கான Layer idஐ கவனிக்கவும். மற்றும் URLஐ முன்னிலைப்படுத்தவும்
09:31 ரைட்-க்ளிக் செய்து, URLஐ copy செய்யவும்
09:36 QGIS interfaceக்கு திரும்பவும். அவற்றை மறைக்க, Layers panelலில், Paths மற்றும் Place layersஐ uncheck செய்யவும்
09:47 menu bar ல் உள்ள Layer menu ஐ க்ளிக் செய்யவும். drop-down ல் இருந்து, Add Layer.ஐ தேர்ந்தெடுக்கவும்
09:55 sub-menu வில் இருந்து, Add WMS/WMTS layer.ஐ தேர்ந்தெடுக்கவும்
10:01 Add Layer dialog-box திறக்கிறது
10:04 Layers tabல், New பட்டனை க்ளிக் செய்யவும்
10:08 Create a new WMS Connection dialog-box திறக்கிறது
10:13 Name fieldல், டைப் செய்க Bhuvan.
10:16 URL fieldல், Bhuvan வலைத்தளத்திலிருந்து copy செய்த URL இணைப்பை paste செய்யவும்
10:23 dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
10:29 Save Connection dialog-boxல், OK பட்டனை க்ளிக் செய்யவும்
10:34 Add Layers dialog-box ல், Connect பட்டனை க்ளிக் செய்யவும்
10:40 id பிரிவில், id 971ஐ தேர்ந்தெடுக்கவும்
10:46 இந்த , Bhuvan வலைத்தளத்திலுள்ள WMS layerன் id layerஐ ஒத்திருக்கும்
10:53 dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள Add பட்டனை க்ளிக் செய்யவும்
10:59 Close பட்டனை க்ளிக் செய்யவும்
11:02 canvasல், கர்நாடகாவிற்கான Land Use Land Cover layer காட்டப்படுகிறது
11:08 இதேபோல் வெவ்வேறு themeகளின் கிடைக்கக்கூடிய எந்த layerஐயும் நாம் load செய்யலாம்
11:15 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது,
11:21 ஒரு Point Layerஐ உருவாக்குவதற்கு CSV format ல் spreadsheetகளை import செய்வது
11:27 Point Layerஐ ஒரு Polyline Layerக்கு மாற்றுவது மற்றும்
11:31 QGISல், Bhuvan வலைத்தளத்திலிருந்து WMS (Web Map Service) layer ஐ load செய்வது
11:47 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
11:45 Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
11:58 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
12:02 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
12:14 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree