QGIS/C2/Digitizing-Map-Data/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:58, 21 January 2021 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 QGISல் Digitizing Map Data குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Point மற்றும் Polygonவடிவ fileகளை உருவாக்கி மற்றும் digitize செய்வது
00:15 Point மற்றும் Polygon அம்சங்களுக்கு style மற்றும் நிறத்தை மாற்றுவது
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS பதிப்பு 16.04, QGIS பதிப்பு 2.18
00:32 இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, அடிப்படை GIS மற்றும் QGIS interface பற்றி தெரிந்து இருக்கவேண்டும்
00:41 ஒரு வரைபடம், image அல்லது பிற தரவு மூலங்களிலிருந்து coordinateகள் digital formatக்கு மாற்றப்படும் செயல்முறை ஆகும் .
00:52 மாற்றப்பட்ட data, ஒரு புள்ளி, வரி அல்லது ஒரு polygon அம்சமாக GISல் சேமிக்கப்படலாம்
01:00 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Bangalore நகரத்தின் கருப்பொருள் வரைபடத்தை நீங்கள் தரவிறக்க வேண்டும்
01:09 இது Bangalore நகரத்தின் வளர்ச்சியை சித்தரிக்கும் வரைபடமாகும்.
01:15 Code fileகளை தரவிறக்குவதற்கான படிகள்
01:18 Playerக்கு கீழுள்ள Code files, இணைப்பை க்ளிக் செய்து, அதை உங்கள் folderலில் சேமிக்கவும்
01:25 தரவிறக்கப்பட்ட zip file ஐ extract செய்யவும்
01:28 extract செய்யப்பட்ட folderலில் Bangalore.jpg file ஐ கண்டுபிடிக்கவும்
01:34 நான் ஏற்கனவே Code fileஐ தரவிறக்கி, extract செய்து, அதை Desktopல் ஒரு folderலில் சேமித்துள்ளேன்
01:41 Folderஐ திறக்க, அதை டபுள்-க்ளிக் செய்யவும்
01:45 Bangalore.jpg fileஐ ரைட்-க்ளிக் செய்யவும்
01:49 context menu வில் இருந்து, Open with QGIS Desktopஐ தேர்ந்தெடுக்கவும்
01:56 QGIS interface திறக்கிறது
01:59 QGIS Tips dialog-box திறக்கிறது. OK பட்டனை க்ளிக் செய்யவும்
02:06 Coordinate Reference System Selector dialog-box திறக்கிறது.
02:11 Coordinate reference systems of the world தலைப்பின் கீழ், WGS 84ஐ தேர்ந்தெடுக்கவும்
02:19 WGS 84 என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் புவியியல் ஒருங்கிணைப்பு அமைப்பு என்பதை நினைவில் கொள்க.
02:27 dialog-box ன் கீழுள்ள, OK பட்டனை க்ளிக் செய்யவும்
02:32 Bangaloreன் Thematic map, canvasல் காட்டப்படுகிறது
02:38 இப்போது, புதிய வடிவ file layerகளை உருவாக்குவோம்
02:42 menu bar ல் உள்ள Layer menu ஐ க்ளிக் செய்து, Create Layer தேர்வை தேர்ந்தெடுக்கவும்
02:50 sub-menu வில் இருந்து, New Shapefile Layer தேர்வை தேர்ந்தெடுக்கவும்
02:55 New Shapefile Layer window திறக்கிறது
02:59 இங்கு 3 வகையான அம்சங்களுக்கு நீங்கள் தேர்வுகளை காணலாம், Point, Line மற்றும் Polygon.
03:10 முன்னிருப்பாக Point தேர்வு தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதை அப்படியே விடவும்
03:16 CRS , WGS 84.ஆக இருக்கட்டும்
03:21 Windowவின் கீழ் வலது மூலையில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
03:27 Save Layer as.. dialog-box திறக்கிறது
03:31 Fileக்கு Point-1 என பெயரிடுவோம்
03:35 Fileஐ சேமிக்க ஒரு தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்கவும். நான் ஐ தேர்வு செய்கிறேன்
03:42 dialog-box ன் கீழ் வலது மூலையில் உள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்
03:48 இங்கு காட்டியுள்ளபடி, fileகள் Desktopல் சேமிக்கப்படும்
03:53 QGIS interfaceக்கு திரும்பவும்
03:56 File, Layers Panelலில் தானாகவே load செய்யப்படும் என்பதை கவனிக்கவும்
04:02 இந்த வரைபடத்தில், IT துறைகள் நிறுவப்பட்ட இடங்களை நாம் குறிப்போம்.
04;09 பெரிதாக்க நடு mouse பட்டனை scroll செய்யவும்
04:14 IT நிறுவனங்களுக்கு வரைபடத்தின் கீழ்-வலது மூலையில் உள்ள legendஐப் பார்க்கவும்.
04:21 IT நிறுவனங்கள் கொடி சின்னமாக குறிக்கப்படுகின்றன.
04:26 வரைபடத்தில் IT நிறுவனங்களைக் குறிக்கும் புள்ளிகளைக் கண்டறியவும்.
04:32 IT நிறுவனங்களைக் குறிக்கும் இரண்டு புள்ளிகள் உள்ளன.
04:37 வரைபடத்தில் அம்சங்களைத் edit செய்ய அல்லது மாற்ற, Toggle editing toolஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
04:44 Toggle Editing , tool barன் மேல்-இடது மூலையில் இருக்கிறது
04:51 அதை தேர்ந்தெடுக்க, Toggle Editing tool ஐ க்ளிக் செய்யவும்
04:55 tool bar ல் உள்ள Add Feature tool ஐ க்ளிக் செய்யவும்
04:59 ஒரு crosshair icon ஆக cursor இப்போது காட்டப்படுகிறது
05:04 வரைபடத்தில் 'IT' ஸ்தாபன சின்னத்தில் க்ளிக் செய்யவும்
05:08 ஒரு input-box Point-1 Feature Attributes திறக்கிறது
05:14 id text boxல் 1 என டைப் செய்யவும். OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:21 இதேபோல் இரண்டாவது IT ஸ்தாபனத்தை க்ளிக் செய்து அந்த அம்சத்தை 2 ஆக சேமிக்கவும். OK பட்டனை க்ளிக் செய்யவும்
05:31 இப்போது edit செய்வதை நிறுத்த, tool bar ல் உள்ள Toggle Editing tool ஐ மீண்டும் க்ளிக் செய்யவும்
05:38 Stop editing dialog-box திறக்கிறது
05:42 Save பட்டனை க்ளிக் செய்யவும்
05:45 வரைபடத்தில், இரண்டு வண்ணமுடைய புள்ளி அம்சங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை கவனிக்கவும்
05:51 attribute table.ஐ திறந்து, உருவாக்கப்பட்ட இரண்டு அம்சங்களை நாம் check செய்யலாம்
05:56 Layers panelலில் உள்ள, Point-1 layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
06:01 context menu வில் இருந்து, Open Attribute Table தேர்வை தேர்ந்தெடுக்கவும்
06:06 Point-1: Features dialog-box, in id columnல், இரண்டு புள்ளிகள் உருவாக்கப்படுகின்றன
06:13 attribute table dialog-boxஐ மூடவும்
06:17 தெளிவான பார்வைக்கு இந்த புள்ளி அம்சங்களின் style மற்றும் வண்ணத்தை மாற்றலாம்.
06:23 Point-1 layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
06:26 context menu வில் இருந்து, Properties தேர்வை தேர்ந்தெடுக்கவும்
06:31 Layer Properties dialog-box திறக்கிறது
06:35 Color drop downஐ க்ளிக் செய்யவும்
06:38 வண்ண முக்கோணத்தை சுழற்றுவதன் மூலம் வண்ணத்தைத் தேர்வுசெய்க.
06:42 Size text box ன் முடிவில் மேல்நோக்கி அம்பு முக்கோணத்தைக் க்ளிக் செய்து அளவை அதிகரிக்கவும்.
06:50 dialog-box ன் கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
06:54 Point அம்சங்களுக்கான நிறம் மற்றும் அளவு மாற்றத்தைக் கவனியுங்கள்.
07:00 இப்போது Polygon அம்சங்களைக் கொண்ட வடிவக் fileஐ உருவாக்குவோம்.
07:05 menu barல் உள்ள Layer menu ஐ க்ளிக் செய்யவும். Create Layer தேர்வை தேர்ந்தெடுக்கவும்
07:12 sub-menu வில் இருந்து, New Shapefile Layerஐ தேர்ந்தெடுக்கவும்
07:17 New Shape File Layer window திறக்கிறது
07:21 Typeக்கு Polygonஐ தேர்ந்தெடுக்கவும்
07:25 New field Name text box, டைப் செய்க area.
07:31 Type, Text dataவாக இருக்கட்டும்
07:35 Add to fields list பட்டனை க்ளிக் செய்யவும்
07:40 Fields List tableலில், area row சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். OK பட்டனை க்ளிக் செய்யவும்
07:50 Save layer as.. dialog-box திறக்கிறது
07:54 File ன் பெயருக்கு Area-1. என டைப் செய்யவும்
07:58 பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
08:01 நான் Desktopஐ தேர்ந்தெடுக்கிறேன். Save பட்டனை க்ளிக் செய்யவும்
08:07 Area-1 layer , Layers panel.க்கு சேர்க்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்
08:13 Corporation Area மற்றும் Greater Bangalore பகுதியின் எல்லையை குறிப்போம்
08:20 Corporation Area மற்றும் Greater Bangalore பகுதியை கண்டுபிடிக்க, வரைபடத்தில் உள்ள Legendஐ பார்க்கவும்
08:28 tool bar ல் உள்ள Toggle Editing tool ஐ க்ளிக் செய்து toggle editingஐ turn on செய்யவும்
08:35 tool bar ல் உள்ள Add Feature tool ஐ க்ளிக் செய்யவும்
08:39 Cursorஐ வரைபடத்திற்கு கொண்டு வரவும்
08:42 பகுதியைக் குறிக்க, Corporation area எல்லையில் எங்கிலும் க்ளிக் செய்யவும் .
08:48 எல்லையில் க்ளிக் செய்துகொண்டே இருக்கவும்
08:51 line segmentகள் குறுக்கிட்டால் எச்சரிக்கை செய்திகள் canvasன் மேற்புறத்தில் தோன்றக்கூடும். இந்த செய்திகளை புறக்கணிக்கவும்.
09:02 நீங்கள் தவறு செய்தால் மற்றும் குறிக்கும் செயல்முறையை மறுதொடக்கம் செய்ய விரும்பினால், keyboard ல் உள்ள Esc Keyஐ அழுத்தவும்
09:10 நீங்கள் மீண்டும் செயல்முறையைத் தொடங்கலாம்.
09:13 நீங்கள் முழு எல்லையையும் பரப்பும் வரை எல்லையில் க்ளிக் செய்துகொண்டே இருக்கவும் .
09:24 முழு எல்லையையும் நீங்கள் குறித்ததும், polygonஐ முடிக்க ரைட்-க்ளிக் செய்யவும்.
09:30 Area-1- Feature Attributes input box திறக்கிறது
09:36 id text boxல் 1 என டைப் செய்க
09:40 area text boxல் Corporation Area என டைப் செய்யவும்
09:45 OK பட்டனை க்ளிக் செய்யவும்
09:48 வரைபடத்தில் ஒரு புதிய polygon அம்சம் உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்
09:54 இப்போது வரைபடத்தில், Greater Bangalore பகுதியை digitize செய்வோம்
09:59 இங்கு காட்டியுள்ளபடி, Greater Bangalore பகுதியை digitize செய்ய எல்லையை க்ளிக் செய்யவும்
10:12 digitize செய்த பிறகு, polygonஐ முடிக்க ரைட்-க்ளிக் செய்யவும்
10:18 Area-1 Feature Attributes text boxல், id text boxல் டைப் செய்க, 2 மற்றும் area text box ல் டைப் செய்க Greater Bangalore
10:30 OK பட்டனை க்ளிக் செய்யவும்
10:33 edit செய்வதை நிறுத்த, tool bar ல் உள்ள Toggle Editing tool ஐ மீண்டும் க்ளிக் செய்யவும்
10:39 Stop editing dialog boxல் உள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்
10:44 attribute table.ஐ திறக்க, Area-1 layer ஐ ரைட்-க்ளிக் செய்யவும்
10:49 context menu.வில் இருந்து, Open Attribute Table ஐ தேர்ந்தெடுக்கவும்
10:54 id மற்றும் area வகையை வைத்து, 2 அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கலாம் . attribute tableஐ மூடவும்
11:04 இரண்டு polygon அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கலாம்
11:09 Polygon அம்சத்தின் நிறம் மற்றும் styleஐ மாற்ற, Area-1 layerஐ ரைட்-க்ளிக் செய்யவும். Properties தேர்வை தேர்ந்தெடுக்கவும்
11:19 Layer Properties dialog-boxல், இடது panelலில் இருந்து Style தேர்வை தேர்ந்தெடுக்கவும்
11:26 drop down menuவின் மேல் இடது மூலையில் உள்ள, categorizedஐ தேர்ந்தெடுக்கவும்
11:32 column drop down ல் id.ஐ தேர்ந்தெடுக்கவும். Classify பட்டனை க்ளிக் செய்யவும்
11:39 Layer transparency slider ஐ 50 %க்கு நகர்த்தவும்
11:44 dialog-box ன் கீழுள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்
11:49 இப்போது வரைபடத்தில், இரண்டு Polygon featureகளும் வேறுபட்ட நிறத்தில் இருப்பதை நாம் காணலாம்
11:55 அம்சங்களை label செய்வதற்கான விவரங்கள், இந்த தொடரில் பின்வரும் டுடோரியல்களில் விவாதிக்கப்படும்
12:03 சுருங்கச் சொல்ல-
12:05 இந்த டுடோரியலில் நாம் கற்றது, Point மற்றும் Polygonவடிவ fileகளை உருவாக்கி மற்றும் digitize செய்வது
12:13 Point மற்றும் Polygon அம்சங்களுக்கு style மற்றும் நிறத்தை மாற்றுவது
12:18 பயிற்சியாக- Banglaore thematic map (Bangalore.jpg) ல், ஒரு Polyline அம்சத்தை உருவாக்கி, Industrial EstatesDigitize செய்யவும், வரைபடத்தில் உள்ள சாலைகளை Digitize செய்யவும்
12:32 உங்கள் முடிவு பெற்ற பயிற்சி இவ்வாறு இருக்கவேண்டும்
12:37 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்
12:45 Spoken Tutorial Project Team, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
12:57 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்
13:01 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்
13:13 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree