Python-3.4.3/C2/Getting-started-with-IPython/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:58, 4 January 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 எல்லோருக்கும் வணக்கம். Getting started with IPython குறித்த இந்த டுடோரியலுக்கு வருக
00:07 இந்த டுடோரியலின் முடிவில், உங்களால் பின்வருவனவற்றை செய்ய இயலும்: IPython interpreterஐ செயல்படுத்துவது,
00:13 IPython interpreterல் இருந்து வெளியில் வருவது,
00:16 IPython session historyஐ பார்ப்பது,
00:20 IPythonனின் உள் tab-completionஐ பயன்படுத்துவது,
00:23 IPythonல் documentation ஐ பார்ப்பது,
00:26 முழுமையற்ற அல்லது தவறான commandகளை நிறுத்துவது.
00:30 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system,
00:37 Python 3.5.2, IPython 5.1.0
00:44 IPythonஎன்றால் என்ன? IPython மேம்படுத்தப்பட்ட ஊடாடும் Python interpreter ஆகும்.
00:50 இது tab-completion போன்ற அம்சங்களையும், உதவிக்கான எளிதான அணுகலையும் வழங்குகிறது.
00:56 முதலில் IPython interpreterஐ எவ்வாறு தொடங்குவது என்று பார்ப்போம்.
01:00 முதலில் keyboard ல், Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும்.
01:07 promptல் ipython3 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்
01:13 IPythonநிறுவப்படவில்லை எனில், Instruction sheetஐ பார்க்கவும்
01:18 IPython நிறுவப்பட்டுவிட்டால், terminalலில், ipython command செயல்படுத்தப்பட்டு, IPython interpreter load செய்யப்படுகிறது
01:25 நிறுவப்பட்ட Python மற்றும் IPython பதிப்புகள் terminalலில் காட்டப்படுகின்றன
01:32 சில கூடுதல் பயனுள்ள தகவல்கள் 'IPython னால் அச்சிடப்படுகின்றன.
01:37 இதற்குப் பிறகு, i n bracket 1 உடன் கூடிய prompt ஒன்று நமக்கு கிடைக்கிறது:
01:42 இப்போது, IPython interpreterல் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றிப் பார்ப்போம். Ctrl+D keyகளை அழுத்தவும்
01:48 நாம் உண்மையில் வெளியேற விரும்புகிறோமா என்பதை உறுதிப்படுத்த ஒரு prompt தோன்றும்.
01:53 yesக்கு y என டைப் செய்து, IPythonஐ விட்டு வெளியே வரவும்
01:57 சதுர அடைப்புக்குறிக்குள் 'y கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும். எனவே அது முன்னிருப்பானது.
02:02 நாம் Enterஐ அழுத்தியும் வெளியே வரலாம்
02:05 இல்லையெனில், நீங்கள் IPythonல் இருந்து வெளியே வர விரும்பவில்லை எனில், no க்கு n என டைப் செய்யவும்
02:10 நாம் y என டைப் செய்வோம். நாம் IPython interpreterல் இருந்து வெளியே வந்துவிட்டோம் மற்றும் terminal promptல் உள்ளோம்
02:16 மீண்டும் தொடங்குவோம். terminal லில் ipython3 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்
02:23 இப்போது, interpreter ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வோம். எளிமையான செயல்பாட்டுடன் தொடங்குவோம் - addition.
02:30 IPython prompt ல் 1 plus 2 என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்
02:36 python commandஐ செயல்படுத்த நாம் Enterஐ அழுத்துகிறோம். ஒவ்வொரு commandஐயும் டைப் செய்த பிறகு, அவ்வாறு செய்யவும்
02:43 IPython, output ஐ 3 என சரியாக காட்டுகிறது
02:47 Output, Out சதுர அடைப்புக்குறி 1 குறிப்புடன் காட்டப்படுவதைக் கவனிக்கவும்.
02:54 பின்வரும் மேலும் சில களை இப்போது முயற்சிப்போம்- 5 minus 3, 7 multiplied by 4.
03:03 ஒவ்வொரு முறை நாம் Enterஐ அழுத்தும் போது, IPython console window.வில் நாம் output ஐ காண்கிறோம்
03:10 இப்போது, IPythonல் முந்தைய commandகளுக்கு எப்படி செல்வது என்று பார்ப்போம்
03:15 உதாரணத்திற்கு, print open parenthesis 1 plus 2 close parenthesis. என்பதை execute செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்
03:23 முழு commandஐயும் டைப் செய்வதற்கு பதிலாக, நாம் முன்பு டைப் செய்த 1 plus 2 commandஐ நினைவு கூர்வோம்
03:30 1 plus 2 commandக்கு திரும்பச் செல்ல up arrow key ஐ பயன்படுத்தவும்
03:35 இப்போது, வரியின் தொடக்கத்திற்கு செல்ல, left-arrow key ஐ பயன்படுத்தவும்
03:40 print, திறந்த அடைப்புக்குறி மூடல் அடைப்புக்குறி, என்பதை keyboardல் டைப் செய்யவும்
03:49 நாம் commandprint (1 plus 2). வுக்கு மாற்றிவிட்டோம். இப்போது Enterஐ அழுத்தவும்
03:53 interpreter , முடிவை, 3 என print செய்கிறது. ஆனால் இம்முறை, Out சதுர அடைப்புக்குறிகள் காட்டப்படவில்லை என்பதைக் கவனியுங்கள்.
04:03 இப்போது, print 10 multiplied by 2. ஐ செயல்படுத்துவோம். முந்தைய command print (1 plus 2)க்கு செல்ல, நாம் ஐ பயன்படுத்துகிறோம்
04:14 இப்போது, 1 plus 2 க்கு பதிலாக 10 multiplied by 2 ஐ வைத்து, பின் Enterஐ அழுத்தவும்
04:21 எந்த programming language ஐ போலவே, பெருக்கல் குறிக்கு asterisk பயன்படுத்தப்படுகிறது.
04:27 consoleலில் outputஐ கவனிக்கவும்
04:30 இப்போது, tab-completion என்றால் என்ன என்பதை பார்ப்போம். ஒரு உதாரணத்தைக் எடுத்துக் கொள்வோம்.
04:35 உதாரணத்திற்கு நாம் function "print"ஐ பயன்படுத்தவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
04:39 இதற்கு, நாம் promptல் pri என டைப் செய்து, tab keyஐ அழுத்துகிறோம்
04:45 நீங்கள் consoleலில் பார்க்கிறபடி, IPython command priprintஆக தானாக நிறைவு செய்திருப்பதை நீங்கள் காணலாம்
04:52 IPythonனின் இந்த அம்சம் tab-completion எனப்படுகிறது
04:56 tab completionக்கான இன்னும் சில சாத்தியங்களைப் பார்ப்போம். p என டைப் செய்து, பின் tab ஐ அழுத்தவும்
05:05 இந்த வழக்கில், IPython commandஐ நிறைவு செய்யாதிருப்பதை நாம் காணலாம்
05:09 இது ஏனெனில், ஒன்றுக்கு மேற்பட்ட commandகள் p உடன் தொடங்குகின்றன.
05:14 எனவே, இது p இன் சாத்தியமான tab-completionகள் அனைத்தையும் பட்டியலிடுகிறது.
05:20 இப்போது ஒரு பயிற்சியை செய்ய முயற்சிப்போம்
05:23 வீடியோவை இடைநிறுத்தி, சிக்கலைத் தீர்த்து, வீடியோவை மீண்டும் தொடங்கவும். "ab"உடன் தொடங்கும் commandகளை கண்டுபிடிக்கவும்
05:31 "ab"உடன் தொடங்கும் commandகளை பட்டியலிடவும்
05:35 ab a b s abs என தானாக நிறைவு செய்கிறது
05:40 a உடன் தொடங்கும் அனைத்து commandகளின் பட்டியலை a tab' காட்டுகிறது.
05:46 இப்போது, function abs எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
05:51 இதைக் கண்டறிய IPython இன் help அம்சத்தைப் பயன்படுத்துவோம்.
05:55 functionனின் documentationஐ பார்க்க, functionனின் பெயரைத் தொடர்ந்து கேள்விக்குறியைத் டைப் செய்யவும்.
06:03 IPython interpreter , functionக்கான documentationஐ காண்பிக்கும்.
06:08 காட்டப்படும் தகவலில் இருந்து, abs ஒரு எண்ணை input ஆக ஏற்றுக்கொண்டு அதன் absolute value வை வழங்குகிறது என்று அது கூறுகிறது
06:16 சில உதாரணங்களைப் பார்ப்போம். consoleலில் டைப் செய்க: a b s minus 19, பின் a b s 19.
06:29 இரண்டு வழக்குகளுக்கும் எதிர்பார்த்தபடி 19 கிடைக்கிறது.
06:33 இப்போது அதை decimal எண்களுக்கு முயற்சிப்போம். a b s minus 10.5ஐ முயற்சிப்போம்
06:42 10.5 நமக்கு முடிவாக கிடைக்கிறது
06:46 வீடியோவை இங்கே இடைநிறுத்தவும். பின்வரும் பயிற்சியை முயற்சித்து பின், வீடியோவை மீண்டும் தொடங்கவும்.
06:52 round documentation ஐ எடுத்து , அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கவும்.
06:57 விடைக்கு consoleக்கு மாறவும். round கேள்விக்குறியை டைப் செய்து, நீங்கள் function roundனின் documentation ஐ பார்க்கலாம்
07:06 இங்கே , function 'round' ஒரு எண்ணை கொடுக்கப்பட்ட துல்லியத்திற்குச் round செய்கிறது.
07:12 ndigits , round functionக்கான துல்லிய மதிப்பு ஆகும். ndigits சுற்றி கூடுதல் சதுர அடைப்புக்குறிகள் உள்ளன என்பதை கவனிக்கவும்.
07:21 இதன் பொருள், ndigits optional ஆகும் மற்றும் 0 முன்னிருப்பான மதிப்பு ஆகும்
07:27 Optional parameter கள், Python documentation ல், சதுர அடைப்புக்குறிக்குள் காட்டப்படுகின்றன
07:33 வீடியோவை இங்கே இடைநிறுத்தவும். பின்வரும் பயிற்சியை முயற்சித்து, பின் வீடியோவை மீண்டும் தொடங்கவும்.
07:38 பின்வருவானவற்றின் ஐ சரிபார்க்கவும்: round 2.48, round 2.48 comma 1, round 2.484, round 2.484 comma 2
07:52 நமக்கு பின்வருபவை கிடைக்கின்றன: round 2.48 is equal to 2.0,
07:57 round 2.48 comma 1 is 2.5,
08:02 round 2.484 is 2.0,
08:06 round 2.484 comma 2 is 2.48 . இவை நாம் எதிர்பார்த்தவையே
08:13 consoleலில் டைப் செய்யும் போது ஏற்படும் தட்டச்சுப் பிழைகளை எவ்வாறு சரிசெய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
08:20 வேண்டுமென்றே தட்டச்சுப் பிழையைச் செய்வோம். டைப் செய்க: round open parenthesis 2.484, அடைப்புக்குறியை மூடாமல், பின் Enterஐ அழுத்தவும்
08:32 புள்ளிகளுடன் கூடிய ஒரு promptஐ பெறுகிறோம். இந்த prompt, IPythonனின் தொடர்ச்சியான prompt ஆகும்
08:40 முந்தைய வரி முழுமையடையாதபோது இது தோன்றுகிறது.
08:44 இப்போது commandஐ மூடும் அடைப்புக்குறியுடன் நிறைவு செய்து, பின் Enter ஐ அழுத்தவும். நமக்கு எதிர்பார்த்த output, அதாவது 2 கிடைக்கிறது
08:54 தவறான command ஐ டைப் செய்து, தொடர்ச்சியான prompt உடன் முடித்தால் என்ன நடக்கும் ?
09:00 அத்தகைய வழக்கில், commandஐ நிறுத்த Ctrl+C key களை அழுத்தி, IPython promptக்கு திரும்ப வரலாம்
09:09 roundஎண்களை மட்டுமே input ஆக எடுத்துக்கொள்கிறது. டைப் செய்க: round(1a
09:15 அடைப்புக்குறிகளை மூடாமல், Enter. ஐ அழுத்தவும்
09:19 alpha-numeric மதிப்பு, '1 a'ஐ inputஆக நாம் கொடுத்துள்ளோம். செயல்படுத்துதலை நிறுத்த, Ctrl+Cஐ அழுத்தவும்
09:28 வீடியோவை இங்கே இடைநிறுத்தவும். பின்வரும் பயிற்சியை முயற்சித்து பின் வீடியோவை மீண்டும் தொடங்கவும்.
09:34 டைப் செய்க: round 2.484, அடைப்புக்குறிகளை மூடாமல், பின் Enterஐ அழுத்தவும்
09:41 பின், Ctrl+Cஐ பயன்படுத்தி commandஐ canel செய்யவும். round 2.484 comma 2 commandஐ டைப் செய்யவும்
09:51 உங்கள் console லில் காட்டப்படுகின்ற output பார்ப்பதற்கு இவ்வாறு இருக்கவேண்டும்
10:01 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
10:04 இந்த டுடோரியலில் நாம் கற்றது: terminalலில் ipythonஐ டைப் செய்து, IPython interpreter ஐ செயல்படுத்துவது
10:13 Ctrl+Dஐ பயன்படுத்தி, IPython interpreter ல் இருந்து வெளியே வருவது
10:17 arrow keyகளை பயன்படுத்தி, IPython session historyஐ பார்ப்பது
10:23 வேகமாக வேலை செய்வதற்கு, tab-completionஐ பயன்படுத்துவது
10:27 question markஐ பயன்படுத்தி, functionகளின் documentation ஐ பார்ப்பது
10:32 நாம் ஒரு பிழையை செய்யும் போது, Ctrl+Cஐ பயன்படுத்தி களை நிறுத்துவது
10:37 நீங்கள் தீர்க்க சில சுய மதிப்பீட்டு கேள்விகள் உள்ளன.
10:41 IPython is a programming language similar to Python. True அல்லது False
10:46 IPythonல் இருந்து வெளியே வர எந்த key combination ஐ பயன்படுத்தவேண்டும். Ctrl + C, Ctrl + D, Alt + C, Alt + D
10:55 documentation ஐ காட்ட, IPythonல் commandன் இறுதியில் எந்த character பயன்படுத்தப்படுகிறது? under score, question mark, exclamation mark, ampersand
11:07 விடைகள்- False. IPython ஒரு புதிய programming language அல்ல. இது ஒரு மேம்படுத்தப்பட்ட ஊடாடும் Python interpreter ஆகும்.
11:17 நாம் IPython interpreterல் இருந்து வெளியில் வர, Ctrl + Dஐ பயன்படுத்துகிறோம்
11:21 documentation ஐ காட்ட commandன் இறுதியில், நாம் question mark (?) ஐ பயன்படுத்துகிறோம்
11:28 இந்த வீடியோ Spoken Tutorial திட்டத்தைச் சுருக்கமாகக் கூறுகிறது. உங்களிடம் தரமான அலைவரிசை இல்லையென்றால், அதை தரவிறக்கி பார்க்கலாம்.
11:37 நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
11:42 இந்த Spoken Tutorial?லில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? உங்களின் கேள்விக்கான நிமிடம் மற்றும் வினாடியைத் தேர்ந்தெடுக்கவும்.
11:48 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் FOSSEE குழுவில் இருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். இந்த தளத்தை பார்க்கவும்
11:56 உங்களுக்கு Pythonல் பொது/தொழில்நுட்ப கேள்விகள் ஏதேனும் உள்ளதா?
11:59 FOSSEE forumல் உங்கள் கேள்வியை முன் வைக்கவும்.
12:04 FOSSEEகுழு பிரபலமான புத்தகங்களின் பல தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டுகளின் codingஐ ஒருங்கிணைக்கிறது.
12:10 இதை செய்பவர்களுக்கு நாங்கள் கௌரவத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறோம். மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
12:17 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
12:23 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree