Python-3.4.3/C2/Embellishing-a-plot/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:03, 4 January 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 எல்லோருக்கும் வணக்கம். "Embellishing a Plot" குறித்த டுடோரியலுக்கு வருக
00:06 இந்த டுடோரியலின் முடிவில், நாம் பின்வருவனவற்றை கற்றிருப்போம்: நிறம், வரியின் பாணி, கோட்டின் அகலம் போன்ற plotன் பண்புகளை மாற்றுவது
00:16 embedded LaTeXஉடன் plotற்கு ஒரு தலைப்பை சேர்ப்பது,
00:20 x மற்றும் y axis label செய்வது, plotற்கு annotationகளை சேர்ப்பது,
00:26 axisகளின் limitகளை set செய்து பெறுவது
00:30 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system,
00:37 Python 3.4.3, IPython 5.1.0
00:43 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய- ipython consoleலில், அடிப்படை Python commandகளை, எப்படி run செய்வது மற்றும் Plotகளை interactiveஆக எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து இருக்கவேண்டும்
00:54 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள, முன்நிபந்தனை Python டுடோரியல்களை பார்க்கவும்
00:59 ipython3ஐ தொடங்குவோம். terminal. ஐ திறக்கவும்
01:05 ipython3 என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
01:11 pylab packageஐ initialise செய்வோம்
01:15 percentage pylab என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
01:21 முதலில் ஒரு எளிய plotஐ செய்து, அதை மாற்றத் தொடங்குவோம்
01:26 டைப் செய்க: x = linspace அடைப்புக்குறிக்குள் minus 2 comma 4 comma 20 , பின் Enter.ஐ அழுத்தவும்
01:40 பின் டைப் செய்க: plot, அடைப்புக்குறிக்குள் x comma sin(x) , பின் Enter.ஐ அழுத்தவும்
01:49 இப்போது நாம் plot window வில் sine curve ஐ காணலாம்
01:53 வரியின் முன்னிருப்பான நிறம் மற்றும் தடிமன் pylab ஆல் தீர்மானிக்கப்படுகிறது.
01:59 இப்போது இந்த curveன் parameterகளை மாற்றுவோம்
02:03 இதை செய்ய, plot command க்கு, கூடுதல் argumentகளை நாம் கொடுக்கலாம்
02:09 ipython console. லில், clf() என டைப் செய்து, முதலில் plot window வை clear செய்வோம்
02:16 நீங்கள் ஒரு காலி plot windowவை காணலாம்
02:20 இப்போது ஒரு கூடுதல் color argumentஉடன், அதே sine curve ஐ plot செய்யவும்
02:26 டைப் செய்க: plot, அடைப்புக்குறிக்குள் x comma sin(x) comma inverted commas உள் r , பின் Enter.ஐ அழுத்தவும். இங்கே, argument 'r' சிவப்பு நிறத்திற்கானது.
02:44 plot windowவில், அதே sine curve இப்போது சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
02:50 plot windowவை மூட வேண்டாம், அதை சிறிதாக்கவும்.
02:54 'linewidth' argumentஐ பயன்படுத்தி கோட்டின் தடிமனை நாம் மாற்றலாம்.
03:00 இம்முறை நாம் plot window வில், cosine curve ஐ வரைவோம்.
03:05 டைப் செய்க: plot அடைப்புக்குறிக்குள் x comma cos(x) comma linewidth is equal to 2 , பின் Enter.ஐ அழுத்தவும்
03:18 தடிமன் 2 கொண்ட cosine curve , plot window வில் உருவாக்கப்படுகிறது.
03:24 இப்போது நீல நிறத்தில், linewidth ஐ 3 ஆக கொண்ட, ஒரு sine curve ஐ, நாம் plot செய்ய முயற்சிப்போம்.
03:31 இப்போதிலிருந்து, Ipython consoleலில் நாம் டைப் செய்யும் ஒவ்வொரு commandஐயும் execute செய்ய, Enter keyஐ அழுத்தவும்.
03:39 முதலில் clf() என டைப் செய்து plot plot window வை முதலில் clear செய்வோம்
03:44 நீங்கள் மீண்டும் ஒரு வெற்று plot windowவை பார்ப்பீர்கள்.
03:48 இப்போது டைப் செய்க: plot அடைப்புக்குறிக்குள் x comma sin(x) comma inverted commas உள் b comma linewidth is equal to 3.
04:03 color மற்றும் linewidth ஆகியவற்றின் கலவையானது நமக்கு வேலையை முடித்துக்கொடுக்கும்.
04:08 solid பாணிக்குப் பதிலாக புள்ளியிடப்பட்ட பாணியில் plot ஐ பெற, linestyle.லில், dotஐ வைக்கவும்.
04:16 முதலில், plot window ஐ clear செய்ய, clf() என்று டைப் செய்யவும்.
04:20 டைப் செய்க: plot அடைப்புக்குறிக்குள் x comma sin(x) comma inverted commas உள் dot.
04:32 புள்ளியிடப்பட்ட பாணியில் sine curve கிடைக்கிறது.
04:36 plotன் தகவலைப் பார்ப்போம்.
04:40 டைப் செய்க: plot question mark , பின் Enterஐ அழுத்தவும்
04:47 வீடியோவை இடைநிறுத்தவும். இந்த பயிற்சியை முயற்சிக்கவும், பின்னர் வீடியோவை மீண்டும் தொடரவும்.
04:52 x verses cos(x)இன் curveஐ சிவப்பு dash line மற்றும் 3 linewidthல் plot செய்யவும்.
05:00 தீர்வுக்கு console க்கு மாறுவோம்.
05:04 plot window ஐ clear செய்ய, clf() என்று டைப் செய்யவும்.
05:08 இப்போது டைப் செய்க: plot அடைப்புக்குறிக்குள் x comma cos(x) comma inverted commas உள் r hyphen hyphen comma linewidth equals to 3.
05:25 linewidth argument மற்றும் linestyle ஆகியவற்றின் கலவையைப் நாம் பயன்படுத்துகிறோம்.
05:30 color, style மற்றும் thickness கொண்ட ஒரு குறைந்தபட்ச plotஐ எப்படி உருவாக்குவது என்பது இப்போது எங்களுக்குத் தெரியும்.
05:38 இனி plot ஐ மேலும் எவ்வாறு மாற்றுவது என்று பார்ப்போம்
05:42 function minus x square plus 4x minus 5. க்கு ஒரு plotஉடன் தொடங்குவோம்
05:51 இப்போது டைப் செய்க: plot அடைப்புக்குறிக்குள் x comma minus x multiplied by x plus 4 multiplied by x minus 5 comma inverted commas உள் r comma linewidth is equal to 2.
06:16 இந்த சமன்பாட்டின் curveஐ plot window வில் பார்ப்போம்.
06:21 ஆனால் படத்தில் plotஐ விவரிக்கும் எந்த விவரமும் இல்லை.
06:26 plotக்கு தலைப்பைச் சேர்க்க, title command ஐ பயன்படுத்தவும்.
06:31 அதனால், டைப் செய்க: title அடைப்புக்குறிக்குள் inverted commas Parabolic function minus x square plus 4x minus 5.
06:48 நீங்கள் பார்ப்பது போல், title' command, stringஐ ஒரு argument.ஆக எடுத்துக்கொள்கிறது.
06:54 plot window வில் நாம் titleஐ பார்க்கலாம். ஆனால் அது format செய்யப்படவில்லை மற்றும் அது ஒழுங்குபடுத்தப்படவில்லை
07:03 Fractionகள் மற்றும் complex functionகள் இருந்தால் அது இன்னும் மோசமாக இருக்கும்.
07:09 நேர்த்தியான தோற்றத்திற்கு title LaTeXல் எழுதுவோம்
07:14 LaTeX formatக்கு, stringக்கு முன்னும் பின்னும் ஒரு dollar குறியை வைக்கிறோம்
07:20 டைப் செய்க: title அடைப்புக்குறிக்குள் r inside inverted commas உள் Parabolic function dollar minus x square plus 4x minus 5 dollar.
07:38 இந்த 'r' என்றால், அந்த string, ஒரு raw string ஆக கருதப்பட வேண்டும் என்று பொருள்
07:45 இது அனைத்து escape codeகளையும் புறக்கணிக்கும்.
07:49 title லில் உள்ள polynomial, இப்போது format செய்யப்பட்டிருப்பதை நாம் காணலாம்
07:55 நம்மிடம் title இருந்தாலும், x மற்றும் y axisகளை label செய்யாமல் plot நிறைவடையாது
08:03 அதனால் நாம் x மற்றும் y axisகளை, LaTeX styleலில் label செய்வோம்
08:09 டைப் செய்க: xlabel அடைப்புக்குறிக்குள் r inverted commas உள் dollar x dollar மற்றும் ylabel அடைப்புக்குறிக்குள் r inverted commas உள் dollar y dollar .
08:30 plot இப்போது கிட்டத்தட்ட முடிந்து விட்டது .
08:34 point(2 comma minus 1)local maxima ஆக கருத்தில் கொண்டு புள்ளிகளுக்கு பெயரிடுவோம்.
08:42 ஒரு புள்ளிக்கு பெயரிட, நாம் function annotateஐ பயன்படுத்துகிறோம்
08:46 டைப் செய்க: annotate அடைப்புக்குறிக்குள் inverted commas உள் local maxima comma xy equals to அடைப்புக்குறிக்குள் 2 comma minus 1.
09:03 point 2 comma minus 1 ல் நாம் local maximaவை பார்க்கலாம்
09:09 annotate commandன் முதல் argument புள்ளியின் பெயர் ஆகும்.
09:15 இரண்டாவது argument புள்ளியின் coordinateகளைக் குறிக்கிறது.
09:20 அது இரண்டு எண்களை கொண்ட ஒரு tuple ஆகும். முதலாவது, x coordinate இரண்டாவது y coordinate
09:29 அடுத்து, xlim brackets என டைப் செய்யவும். xlim function தற்போதைய x axis limitகளை வழங்குகிறது.
09:39 அடுத்து, ylim brackets என டைப் செய்யவும். ylim function தற்போதைய y axis limitகளை வழங்குகிறது.
09:49 xlim inside the brackets minus 4 comma 5 என டைப் செய்து, x-axis ன் limitகளை minus 4ல் இருந்து 5வரை செட் செய்யவும்.
10:02 இதேபோல், y-axisன் limitsகளை இதே முறையில் அமைக்கவும்.
10:07 டைப் செய்க: ylim அடைப்புக்குறிக்குள் minus 15 comma 2.
10:19 வீடியோவை இடைநிறுத்தவும். இந்த பயிற்சியை முயற்சிக்கவும், பின்னர் வீடியோவை மீண்டும் செய்யவும்.
10:24 (minus 4 comma 0) point ல் "root" எனப்படுகின்ற annotationஐ செய்யவும்
10:31 முதல் annotationக்கு என்ன நடக்கிறது?
10:35 தீர்வுக்கு Ipython console க்கு மாறவும்
10:39 டைப் செய்க: annotate அடைப்புக்குறிக்குள் inverted commas உள் root comma xy is equal to minus 4 comma 0.
10:53 ஒவ்வொரு annotate command உம் படத்தில் ஒரு புதிய annotation ஐ உருவாக்குகிறது.
10:59 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது: கூடுதல் களை சேர்ப்பதன் மூலம், color, line width, line style போன்ற plotன் attributeகளை மாற்றுவது
11:16 'title command ஐ பயன்படுத்தி ஒரு plotக்கு title ஐ சேர்ப்பது,
11:20 stringக்கு முன்னும் பின்னும் ஒரு $ குறியை சேர்த்து, LaTeX style formattingஐ செயல்படுத்துவது,
11:28 xlabel() மற்றும் ylabel() commandகளை பயன்படுத்தி, x மற்றும் y axis களை label செய்வது,
11:34 annotate() commandஐ பயன்படுத்தி, ஒரு plotக்கு annotationகளை சேர்ப்பது,
11:39 xlim() மற்றும் ylim() command களை பயன்படுத்தி, axis களின் limitகளை பெற்று மற்றும் set செய்வது
11:46 நீங்கள் தீர்க்க சில சுய மதிப்பீட்டு கேள்விகள் உள்ளன.
11:51 கோட்டின் தடிமன் 4 உடன் minus 2pi முதல் 2pi வரை cosine graph ன் ஒரு plotஐ வரையவும்.
12:00 Documentationஐ படித்து, ylabel commandல் உரையின் alignmentஐ மாற்றுவதற்கான வழி உள்ளதா என்பதைக் கண்டறியவும்.
12:09 விடைகள்- கோட்டின் தடிமன் 4 உடன் minus 2pi முதல் 2pi வரை cosine graph ன் ஒரு plotஐ வரைய, linspace மற்றும் plot commandஐ பின்வருமாறு பயன்படுத்துகிறோம்- x equals to linspace inside the brackets minus 2pi comma 2pi.
12:31 plot (x comma cos(x) comma linewidth equals to 4)
12:38 இரண்டாவது கேள்விக்கான விடை: இல்லை. ylabel commandல் உரையின் alignmentஐ மாற்றுவதற்கான விருப்பத் தேர்வு இல்லை
12:48 இந்த Spoken Tutorial?லில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா?
12:51 உங்களின் கேள்விக்கான நிமிடம் மற்றும் வினாடியைத் தேர்ந்தெடுக்கவும்.
12:55 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் FOSSEE குழுவில் இருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். இந்த தளத்தை பார்க்கவும்
13:03 உங்களுக்கு Pythonல் பொது/தொழில்நுட்ப கேள்விகள் ஏதேனும் உள்ளதா?
13:08 FOSSEE forum க்கு சென்று, உங்கள் கேள்வியை முன் வைக்கவும்.
13:12 FOSSEEகுழு பிரபலமான புத்தகங்களின் பல தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டுகளின் codingஐ ஒருங்கிணைக்கிறது.
13:18 இதை செய்பவர்களுக்கு நாங்கள் கௌரவத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறோம். மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
13:27 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
13:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree