Python-3.4.3/C2/Additional-features-of-IPython/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:43, 5 January 2022 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 எல்லோருக்கும் வணக்கம். Additional Features of IPython குறித்த spoken tutorial நல்வரவு
00:07 இந்த டுடோரியலின் முடிவில், உங்களால் பின்வருவனவற்றை செய்ய இயலும்: IPython historyஐ மீட்டெடுப்பது,
00:14 historyன் ஒரு பகுதியை பார்ப்பது,
00:17 historyன் ஒரு பகுதியை ஒரு fileலில் save செய்வது,
00:21 IPythonனின் உள் இருந்து ஒரு scriptஐ run செய்வது
00:25 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04 operating system,
00:32 Python 3.4.3, IPython 5.1.0
00:38 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு பின்வருவனவற்றை செய்ய தெரிந்து இருக்கவேண்டும்: plot களை interactiveஆக பயன்படுத்துவது, ஒரு plotஐ embellish செய்வது.
00:48 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள, முன்நிபந்தனை Python டுடோரியல்களை பார்க்கவும்
00:54 இப்போது, Ctrl+Alt+T key களை ஒன்றாக அழுத்தி, Terminal ஐ திறப்போம்.
01:01 இப்போது, ipython3 என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
01:07 'pylab' packageஐ initialise செய்வோம். percentage pylab என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்
01:14 Plottingஐ தொடங்க, டைப் செய்க: x is equal to linspace அடைப்புக்குறிக்குள் minus 2pi comma 2pi comma 100 , பின் Enter.ஐ அழுத்தவும்.
01:31 அடுத்து, டைப் செய்க: plot அடைப்புக்குறிக்குள் x comma xsin(x) , பின் Enter.ஐ அழுத்தவும்.
01:42 "xsin is not defined".எனக் கூறுகின்ற ஒரு errorஐ நாம் பெறுகிறோம். இது ஏனெனில், xsin(x) என்பது x பெருக்கல் sin(x) ஆகும்
01:54 இங்கு, பெருக்கல் குறி இல்லை. அதனால் இப்போது டைப் செய்க: plot அடைப்புக்குறிக்குள் x comma x multiplied by sin(x), பின் Enter.ஐ அழுத்தவும்.
02:13 அடுத்து, x மற்றும் y axisகளுக்கு, title மற்றும் labelகளை சேர்ப்போம்
02:19 டைப் செய்க: xlabel அடைப்புக்குறிக்குள், inverted commas உள், dollar குறியின் உள், x பின் Enter.ஐ அழுத்தவும்.
02:31 ylabel அடைப்புக்குறிக்குள், inverted commas உள், dollar குறியின் உள், f(x) .
02:43 title அடைப்புக்குறிக்குள், inverted commas உள், dollar குறியின் உள், x and xsin(x).
02:57 Label செய்யப்பட்ட plotஐ இப்போது நாம் காணலாம்
03:01 டைப் செய்யப்பட்ட commandகளின் historyஐ, percentage history command மூலம் மீட்டெடுக்கலாம்
03:07 டைப் செய்க: percentage history, பின் Enter.ஐ அழுத்தவும்.
03:13 percentage history ஒரு command ஆகும் மற்றும் அது மிக சமீபத்திய commandஆக காட்டப்படுகிறது
03:20 நாம் terminalலில் செயல்படுத்திய அனைத்தும், historyஆக சேமிக்கப்படுகிறது
03:25 ஐந்தாவது command என்னவாக இருந்திருக்கும் என்பதை நாம் காண விரும்பினால், percentage history command க்கு 5ஐ argumentஆக கொடுக்கவும்
03:33 டைப் செய்க: percentage history space 5 , பின் Enter.ஐ அழுத்தவும். நாம் டைப் செய்த ஐந்தாவது commandஐ இது காட்டுகிறது
03:43 இப்போது, வீடியோவை இங்கே இடைநிறுத்தி, பின்வரும் பயிற்சியை முயற்சிக்கவும், பின் வீடியோவை மீண்டும் தொடங்கவும்.
03:49 5 மற்றும் 10 க்கு இடையில் உள்ள சமீபத்திய commandகளை எவ்வாறு பட்டியலிடுவது என்பதைக் கண்டறியவும்.
03:55 terminalக்கு திரும்பவும்
03:58 தீர்வை பார்ப்போம்
04:00 clf()என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும். டைப் செய்க: percentage history question mark
04:08 percentage history command ன் தகவலைப் படிக்கவும்.
04:13 percentage history hyphen n 4 hyphen 6, 4 முதல் 6 வரையுள்ள களை காட்டுவதை நாம் காணலாம்
04:24 இங்கு hyphen n என்பது optional argument ஆகும். இது வரி எண்களை அச்சிடுகிறது. documentationல் இருந்து வெளியேற q என டைப் செய்யவும்
04:37 இப்போது, டைப் செய்க: percentage history space 5 hyphen 10, பின் Enter.ஐ அழுத்தவும்.
04:46 historysave செய்ய, நாம் percentage save command ஐ பயன்படுத்துகிறோம்
04:51 அதை செய்வதற்கு முன், முதலில் historyஐ பார்த்து, நமக்கு தேவையான code வரிகளை அடையாளம் காண்போம்
04:58 டைப் செய்க: percentage history, பின் Enter.ஐ அழுத்தவும்.
05:03 இரண்டாவது command, linspace ஆகும். ஆனால், மூன்றாவது command, நமக்கு errorஐ கொடுத்த ஒரு command ஆகும்
05:10 அதனால், அது நமக்கு தேவையில்லை
05:13 நான்காவது முதல் ஏழாவது வரையிலான commandகள் தேவை.
05:16 எனவே, நமது programக்கு இரண்டாவது command மற்றும் நான்காவது முதல் ஏழாவது commandகள் தேவை.
05:22 அதை, தற்போதைய working directoryல் save செய்வோம். அதனால், இவ்வாறு இருக்கும்- percentage save space plot underscore script.py space 2 space 4 hyphen 7, பின் Enter.ஐ அழுத்தவும்.
05:47 percentage save commandன் முதல் argument, commadகள் சேமிக்கப்படும் fileன் பெயராகும்.
05:56 இரண்டாவது argument சேமிக்கப்படும் commandகளின் எண்களை கொடுக்கிறது. அவை இடைவெளிகளால் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
06:04 இப்போது, plot underscore script.pyஐ திறந்து, உள்ளடக்கத்தை பார்ப்போம்
06:13 Fileஐ ஒரு python script.ஆக எவ்வாறு run செய்வது என்று கற்றுக்கொள்வோம். இதைச் செய்ய, நாம் percentage run commandஐ பயன்படுத்துகிறோம்
06:22 டைப் செய்க: percentage run space hyphen i space plot underscore script.py, பின் Enter.ஐ அழுத்தவும்.
06:38 இங்கு, text editorல் எழுதப்பட்டுள்ள codehyphen i parameter run செய்கிறது. Code, தற்போதைய ipython அமர்வினுள் run செய்யப்படுகிறது
06:50 இது ipython அமர்வில் interactiveஆக வரையறுக்கப்பட்ட variableகளை பயன்படுத்துகிறது.
06:56 Script runஆகிறது, ஆனால் plotஐ நம்மால் காணமுடியவில்லை
07:01 இது ஏனெனில், நாம் scriptஐ run செய்யும் போது, நாம் interactive modeல் இல்லை
07:07 Plotஐ காண, terminalலில் டைப் செய்க: show(), பின் Enter.ஐ அழுத்தவும்.
07:15 வீடியோவை இங்கே இடைநிறுத்தி, பின்வரும் பயிற்சியை முயற்சி செய்து மீண்டும் தொடரவும்.
07:21 function show() ஐ கொண்டுள்ள ஒரு scriptஐ உருவாக்க, percentage history மற்றும் percentage saveஐ பயன்படுத்தவும்
07:30 plotஐ உருவாக்கி, மற்றும் அதை காட்ட, scriptRun செய்யவும்
07:35 தீர்வை இப்போது பார்ப்போம். முதலில், percentage history hyphen n command ஐ பயன்படுத்தி, historyஐ பார்ப்போம்
07:44 டைப் செய்க: percentage history space hyphen n, பின் Enter.ஐ அழுத்தவும்.
07:54 plot window வை clear செய்வோம். டைப் செய்க: clf(), பின் Enter.ஐ அழுத்தவும்.
08:01 command percentage saveஐ பயன்படுத்தி, scriptஐ சேமிப்போம்
08:07 நமக்கு 2, பின்னர் 4 முதல் 7 மற்றும் 16 வரிகள் தேவை.
08:20 டைப் செய்க: percentage save space show underscore included.py space 2 space 4 hyphen 7 space 16, பின் Enter.ஐ அழுத்தவும்.
08:41 Scriptஐ run செய்ய டைப் செய்க: percentage run space hyphen i space show underscore included.py, பின் Enter.ஐ அழுத்தவும்.
08:57 நாம் விருப்பப்பட்ட plot கிடைக்கிறது
09:01 முந்தைய commandற்கு செல்லவும். Commandல் ‘hyphen i’க்கு பதிலாக percentage run space show included.pyஐ வைத்து, அதை மாற்றவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
09:16 name 'linspace' is not definedஎனக் கூறுகின்ற ஒரு NameErrorஐ அது கிளப்புகிறது என்பதை நாம் காண்கிறோம். இது ஏனெனில், நாம் scriptஐ interactiveஆக run செய்யவில்லை
09:30 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது: percentage history commandஐ பயன்படுத்தி, historyஐ மீட்டெடுப்பது,
09:41 percentage history commandக்கு ஒரு argumentஐ pass செய்வதன் மூலம், historyன் ஒரு பகுதியை மட்டுமே பார்ப்பது
09:48 percentage save commandஐ பயன்படுத்தி, தேவையான code வரிகளை, தேவையான வரிசையில் சேமிப்பது
09:55 ஒரு சேமிக்கப்பட்ட scriptஐ run செய்வதற்கு, 'percentage run space hyphen i' command ஐ பயன்படுத்துவது
10:04 இங்கே சில சுய மதிப்பீடு கேள்விகள் உள்ளன.
10:08 Command வரிகள் 2 3 4 5 7 9 10 மற்றும் 11ஐ எப்படி சேமிப்பீர்கள்?
10:17 percentage save filename 2-5 7 9 hyphen 11
10:25 percentage save filename 2 hyphen 11
10:30 percentage save filename, percentage save 2 hyphen 5 7 9 10 and 11
10:40 Scriptஐ run செய்வதற்கான command என்ன? Percentage execute the script name
10:46 percentage run hyphen i script name , percentage run script name
10:53 percentage execute hyphen i script name
10:58 விடைகள்- Commandகள் 2 3 4 5 7 9 10 மற்றும் 11ஐ சேமிப்பதற்கு, நாம் பின்வரும் commandஐ கொடுக்கிறோம் percentage save filename 2 hyphen 5 space 7 space 9 hyphen 11.
11:18 Script ஐ run செய்ய, percentage run space hyphen i space scriptnameஐ நாம் பயன்படுத்துகிறோம்
11:27 இந்த மன்றத்தில் உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை முன்வைக்கவும்.
11:32 இந்த மன்றத்தில் Python பற்றிய பொதுவான கேள்விகளை முன்வைக்கவும்
11:37 FOSSEEகுழு TBC projectஐ ஒருங்கிணைக்கிறது
11:41 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்
11:52 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ப்ரியா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree