Moodle-Learning-Management-System/C2/Question-bank-in-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:30, 17 May 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle.லில், Question bank குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Moodle.லில், Question bank ,
00:12 questionகளின் Categoryக்கள் மற்றும் question bankகுக்கு எப்படி கேள்விகளை சேர்ப்பது.
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04,
00:26 XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP,
00:34 Moodle 3.3 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:44 எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
00:52 உங்கள் site administrator, உங்களை ஒரு teacher.ஆக பதிவு செய்துள்ளதாகவும், குறைந்தபட்சம் ஒரு course ஐ உங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது.
01:03 மற்றும் தங்களுக்குரியcourseக்கு ஏதேனும்course materialஐ , நீங்கள் upload செய்திருப்பதாகவும் அது அனுமானித்து கொள்கிறது.
01:09 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கானMoodle டுடோரியல்களை பார்க்கவும்.
01:16 Browserக்கு மாறி, ஒரு teacherஆக, உங்கள் moodle site.இனுள் login செய்யவும்.
01:24 இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள எல்லா textஐயும் கொண்ட ஒரு text fileஐ , Code files இணைப்பில் நான் கொடுத்துள்ளேன். “Mytextfile.txt”என்று பெயரிடப்பட்ட fileஐ தரவிறக்கி, அதை உங்கள் கணினியில் திறக்கவும்.
01:40 இடது navigation menu.வில் உள்ள, Calculus course ஐ க்ளிக் செய்யவும்.
01:45 Question bankகுகளை கற்பதிலிருந்து தொடங்குவோம்.
01:49 Question bank என்பது, பெரும்பாலாக தலைப்புகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்ட கேள்விகளின் ஒரு சேகரிப்பாகும்.
01:55 Question bankல் உள்ள கேள்விகளை, பல quizகளில் மீண்டும் பயன்படுத்தலாம்.
02:01 ஒவ்வொரு கல்வியாண்டு அல்லது வெவ்வேறு batchகளுக்கு, வெவ்வேறு quizகளை உருவாக்க இது உதவுகிறது.
02:09 Browserக்கு திரும்பவும்.
02:11 மேல் வலது பக்கத்தில் உள்ள gear icon ஐ முதலில் க்ளிக் செய்து, பின் இறுதியில் உள்ள More… இணைப்பை க்ளிக் செய்யவும்.
02:18 நாம் Course Administration பக்கத்திற்கு கொண்டு வரப்படுகிறோம்.
02:22 கீழே scroll செய்து, Question bank என்று பெயரிடப்பட்ட பிரிவை கண்டுபிடிக்கவும்.
02:27 இந்த பிரிவில் உள்ள Categories இணைப்பை க்ளிக் செய்யவும்.
02:30 Add category பிரிவை பார்க்கவும்.
02:34 Parent category dropdownஐ க்ளிக் செய்யவும்.
02:37 இங்கு Top என்பது, இந்த courseக்கான உயர் நிலை வகையாகும்.
02:42 முன்னிருப்பாக தேந்தெடுக்கப்படவில்லையெனில், Default for Calculus, ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:49 Name fieldல் டைப் செய்க: Basic Calculus.
02:54 பின், பக்கத்தின் கீழுள்ள, Add Category பட்டனை க்ளிக் செய்யவும். இவ்வாறு, மேலும் categoryக்களை நாம் சேர்க்கலாம்.
03:04 இங்கு நான் செய்துள்ளது போல், Calculus course,க்கு categoryக்களின் ஒரு hierarchy ஐ உருவாக்கவும்.
03:11 Questions tabஐ க்ளிக் செய்து, கேள்விகளை உருவாக்குகின்ற பக்கத்திற்கு செல்லவும்.
03:17 கீழுள்ள, Create a new question பட்டனை க்ளிக் செய்யவும்.
03:22 ஒரு pop-up window திறக்கிறது.
03:25 நீங்கள் சேர்க்க விரும்புகின்ற கேள்வியின் typeஐ தேர்ந்தெடுக்கவும்.
03:29 question typeன் விரிவான விளக்கம், வலது பக்கத்தில் தெரிகிறது.
03:35 நான் Multiple choiceஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:39 Pop-upன் கீழ் உள்ள, Add பட்டனை க்ளிக் செய்யவும்.
03:43 இப்போது, நீங்கள் கேள்வியை சேர்க்க விரும்புகின்ற categoryஐ தேர்ந்தெடுக்கவும். நான் Evolutes.ஐ தேர்வு செய்கிறேன்.
03:51 Question name fieldல் டைப் செய்க: MCQ with single correct answer.
03:57 Question text பகுதியில் பின்வரும் கேள்வியை டைப் செய்யவும். Mytextfile.txt fileலிலிருந்து நீங்கள் textஐ , copy மற்றும் paste செய்யலாம்.
04:07 Default Mark, 1க்கு set செய்யப்படுகிறது மற்றும் அதை நான்1 ஆகவே வைக்கிறேன்.
04:12 அடுத்த தேர்வு, General feedback. அவன்/அவள், quizஐ சமர்ப்பித்த பிறகு, இங்குள்ளtext மாணவருக்கு காட்டப்படுகிறது.
04:23 கேள்விக்கான விரிவான தீர்வை காட்டவும் இதை பயன்படுத்தலாம். இங்கு நான் செய்துள்ளது போல், textஐ டைப் செய்க அல்லது copy-paste செய்க.
04:34 இப்போது, One or multiple answers dropdownஐ க்ளிக் செய்யவும்.
04:39 இங்கு 2 தேர்வுகளை நாம் காண்கிறோம்- Multiple answers allowed, One answer only
04:46 இரண்டு தேர்வுகளும் எப்படி வேலை செய்யும் என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
04:49 முதலில், One answer only.ஐ நான் தேர்வு செய்கிறேன்.
04:53 முன்னிருப்பாக, Shuffle the choices checkbox check செய்யப்படுகிறது. ஒவ்வொரு quiz attemptற்கும், கேள்வியினுள் உள்ள பதிலின் தேர்வுகளை மாற்றியமைக்க இது உறுதிப்படுத்துகின்றது.
05:06 Answers பிரிவை பார்க்க, கீழே scroll செய்யவும்.
05:10 இங்குள்ள ஒவ்வொரு தேர்வும், ஒரு grade மற்றும் feedbackவுடன் தொடர்புள்ளது என்பதை கவனிக்கவும்.
05:17 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Choice 1 என டைப் செய்யவும்.
05:20 இப்போது, இந்த கேள்விக்கு, Choice 1 சரியான பதிலாகும்.
05:25 அதனால், நான் Gradeல் 100%ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
05:30 Grade dropdownல், ஒவ்வொரு choiceற்கும், பகுதி மதிப்பெண்கள் அல்லது எதிர்மறை மதிப்பெண்களையும் நாம் பிரித்தளிக்கலாம்.
05:38 Moodleலில் நீங்கள் மேலும் கைதேர்ந்த பின்னர், இவைகளை பின்னர் நீங்கள் ஆராயலாம்.
05:43 இந்த பதிலை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கான feedbackஐ , Feedback textபகுதியில் எழுதலாம். நான்“Correct” என டைப் செய்கிறேன்.
05:53 இங்கு நான் செய்துள்ளது போல், மீதமுள்ள choiceகள் மற்றும் gradeகளை பூர்த்தி செய்யவும்.
06:01 இப்போது, கீழே scroll செய்து, Multiple Tries பிரிவை விரிவாக்க, அதை க்ளிக் செய்யவும்.
06:08 Penalty for each incorrect try field , முன்னிருப்பாக 33.33% க்கு set செய்யப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
06:18 இதன் பொருள், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மாணவர் தண்டிக்கப்படுவார் என்பதாகும்.
06:24 நீங்கள் அதை அப்படியே விட்டுவிடலாம் அல்லது இங்கு காட்டப்பட்டுள்ள வேறு சதவிகித தேர்வுகளுக்கு அதை மாற்றிக்கொள்ளலாம்.
06:31 தவறான பதில்களுக்கு எனது மாணவர்களை தண்டிக்க எனக்கு விருப்பமில்லாததால், நான் 0%, ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
06:39 பின், கீழே scroll செய்து, பக்கத்தின் கீழ் உள்ள Save changes பட்டனை க்ளிக் செய்யவும்.
06:46 நமது கேள்வி, Question Bankக்கு சேர்க்கப்பட்டுவிட்டதை நாம் காணலாம்.
06:51 கேள்வியின், கேள்வி தலைப்புக்கு அடுத்து, 4 iconகள் இருப்பதை கவனிக்கவும்.
06:57 இவை, கேள்வியைedit, duplicate, preview மற்றும்delete செய்வதற்காகும்.
07:06 quizல் கேள்வி எப்படி தோன்றும் என்பதை காண, Preview iconஐ க்ளிக் செய்யவும்.
07:13 தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் அதன் தேர்வுகள், ஒரு pop-up windowவில் தோன்றுகின்றன.
07:19 Fill in correct responses பட்டனை க்ளிக் செய்யவும். கேள்விகள், தேர்வுகள் மற்றும் சரியான பதிலை ஒப்பிட்டு பார்ப்பதற்கு இது உதவுகிறது.
07:29 Submit and finish பட்டனை க்ளிக் செய்யவும்.
07:32 கேள்விக்கு பதிலளித்த பிறகு மாணவர் பார்க்கப்போகின்ற feedbackஐ , இது காட்டும்.
07:38 நீங்கள் ஒரு புதிய கேள்வியை சேர்க்கும்போதெல்லாம், சரிபார்க்க அதை மீண்டும் பார்க்கவும்.
07:44 இந்த pop-up window வை மூட, Close preview பட்டனை க்ளிக் செய்யவும்.
07:49 ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான பதிலை கொண்ட ஒரு MCQஐ இப்போது நாம் உருவாக்குவோம்.
07:54 முந்தைய படிகளை பின்பற்றி, நான் மற்றொரு MCQஐ உருவாக்கியுள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்யவும்.
08:01 One or multiple answers dropdownல், இம்முறை நான் Multiple answers allowed.ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
08:10 கட்டப்பட்டுள்ளபடி, choices 1 மற்றும் 2, மற்றும் அவற்றின் உரிய gradeகளை enter செய்யவும். இங்கு நான், இரண்டிற்கும் 50% gradeஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.
08:20 ஒரு சரியான பதிலை மட்டும் mark செய்கின்ற மாணவர்க்கு 0.5 markகுகள் கிடைக்கின்றன.
08:26 இரண்டு சரியான பதில்களையும் mark செய்கின்ற மாணவர்க்கு 1 mark கிடைக்கிறது.
08:32 கட்டப்பட்டுள்ளபடி, choices 3 மற்றும் 4, மற்றும் அவற்றின் உரிய gradeகளை enter செய்யவும்.
08:38 மேலும், Penalty for each incorrect try fieldஐ நான் 0%ஆக வைக்கிறேன்.
08:44 பின், கீழே scroll செய்து, Save changes பட்டனை க்ளிக் செய்யவும்.
08:49 அடுத்து ஒரு Short answer கேள்வியை சேர்ப்போம்.
08:53 ஒரு கேள்விக்கு பதிலாக, மாணவர் ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடரை டைப் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
09:00 Create a new question பட்டனை க்ளிக் செய்து, Short answer தேர்வை டபுள்-க்ளிக் செய்யவும்.
09:08 காட்டப்பட்டுள்ளபடி கேள்வியை உருவாக்கவும்.
09:11 Case sensitivity dropdownல், No, case is unimportant.ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:18 இந்த கேள்விக்கான சரியான பதில், “same logarithmic spiral” ஆகும்.
09:24 மாணவரின் பதில், “same spiral” அல்லது “same logarithmic spiral”ஆக இருந்தால், அவருக்கு முழு மதிப்பெண்களை கொடுக்க நான் தயாராக உள்ளேன்.
09:35 ஆனால் மாணவர், “logarithmic spiral”ஐ பதிலாக எழுதினால், நான் பாதி மதிப்பெண்ணை கொடுப்பேன்.
09:43 பதில்களின் பிரிவுக்கு, கீழே scroll செய்யவும்.
09:46 கட்டப்பட்டுள்ளபடி, Answer 1 மற்றும் 2, மற்றும் அவற்றின் உரிய gradeகளை பூர்த்தி செய்யவும்.
09:52 Answer 1 textல் உள்ள asterixஐ கவனிக்கவும். எந்த characterஐயும் பொறுத்த, Asterix ஐ ஒரு wildcardஆக பயன்படுத்தலாம்.
10:02 உதாரணத்திற்கு: The evolute of a logarithmic spiral is the same logarithmic spiral. என்று ஒரு மாணவர் எழுதுகிறார். இந்த பதிலுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
10:15 கட்டப்பட்டுள்ளபடி, Answer 3 மற்றும் அதற்குரிய gradeஐ பூர்த்தி செய்யவும்.
10:20 பதிலின் textக்கு முன் எந்த asterixஉம் இல்லை என்பதை கவனிக்கவும்.
10:24 உதாரணத்திற்கு: The evolute of a logarithmic spiral is not the same logarithmic spiral. என்று ஒரு மாணவர் எழுதுகிறார். இந்த பதிலுக்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கப்பட மாட்டாது.
10:37 கட்டப்பட்டுள்ளபடி, Answer 4 மற்றும் அதற்குரிய gradeஐ பூர்த்தி செய்யவும்.
10:43 இந்த பதிலுக்கு, 50% மதிப்பெண்களை மட்டுமே நான் வழங்கியுள்ளேன் என்பதை கவனிக்கவும்.
10:48 Feedback text பகுதியில், டைப் செய்க: “You need to specify that it’s the same spiral and not any spiral.”
10:57 இந்த விளக்கம் மாணவருக்கு, feedbackஆக காட்டப்படும்.
11:02 மீண்டும், Penalty for each incorrect try fieldஐ நான் 0%ஆக வைக்கிறேன்.
11:09 பின், கீழே scroll செய்து, Save changes பட்டனை க்ளிக் செய்யவும்.
11:14 இப்போது, ஒரு Numerical கேள்வியை சேர்ப்போம்.
11:18 Create a new question பட்டனை க்ளிக் செய்து, பின் Numerical தேர்வை டபுள்-க்ளிக் செய்யவும்.
11:26 காட்டப்பட்டுள்ளபடி, கேள்வியை உருவாக்கவும்.
11:29 இந்த கேள்விக்கான பதில், 5mm ஆகும். எனினும், மாணவரின் பதில், 4.5mm மற்றும் 5.5mm க்கு இடையே எதுவாக இருந்தாலும், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
11:41 இங்குள்ள error margin 0.5 ஆகும்.
11:45 Answers பிரிவுக்கு, கீழே scroll செய்யவும்.
11:48 காட்டப்பட்டுள்ளபடி, Answers, Error மற்றும் gradeகளை enter செய்யவும்.
11:53 Unit handling பிரிவை விரிவாக்கவும். Unit handling dropdownல், 3 தேர்வுகள் உள்ளன.
12:00 நான், The unit must be given, and will be graded என்ற தேர்வை தேர்ந்தெடுக்கிறேன்.
12:07 Unit penalty field, முன்னிருப்பாக 0.1ஐ காட்டுகிறது. நான் அதை, 0.5 ஆக்குகிறேன்.
12:16 அதனால், unitஐ குறிப்பிடாமல் பதிலை எழுதினால், மாணவருக்கு பாதி மதிப்பெண்கள் கிடைக்கும்.
12:23 Units are input using dropdownல், the text input elementஐ நான் தேர்ந்தெடுக்கிறேன்.
12:31 இதன் பொருள், பதிலுடன் மாணவர், unitஐயும் சேர்த்து டைப் செய்யவேண்டும்.
12:37 Units பிரிவை விரிவாக்கவும்.
12:40 Unitஐ mmஆக எழுதவும் மற்றும் multiplier, 1 ஆகும். இதன் பொருள், பதிலுக்கான தேர்வுகள் mmல் உள்ளன.
12:50 மீண்டும், Penalty for each incorrect try fieldஐ 0%ஆக நான் வைக்கிறேன்.
12:57 பின், கீழே scroll செய்து, Save changes பட்டனை க்ளிக் செய்யவும்.
13:02 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
13:08 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Moodle.லில், Question bank
13:14 questionகளின் Categoryக்கள் மற்றும் question bankகுக்கு எப்படி கேள்விகளை சேர்ப்பது.
13:22 உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி: Question bankல் மேலும் கேள்விகளை சேர்க்கவும்.
13:28 விவரங்களுக்கு, இந்த டுடோரியலின்Assignment இணைப்பை பார்க்கவும்.
13:34 இந்த டுடோரியலை இடைநிறுத்தி, முடித்தவுடன் பின் தொடரவும்.
13:38 இந்த question bankல் நாம் 10 கேள்விகளை கொண்டிருக்கவேண்டும். அதில், 6 Evolutesல் உள்ளன மற்றும் 4 Involutes subcategory.ல் உள்ளன.
13:51 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
14:00 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
14:10 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
14:14 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
14:27 இந்த ஸ்கிரிப்ட், நான்ஸி மற்றும் ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree