Moodle-Learning-Management-System/C2/Plugins-in-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 19:57, 6 January 2020 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodleலில் pluginகளை நிறுவுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Pluginகள் மற்றும் Moodleலில் pluginகளை எப்படி நிறுவுவது
00:15 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04,
00:23 XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP,
00:31 Moodle 3.3
00:33 Firefox web browser மற்றும் வேலை செய்கின்ற Internet இணைப்பு
00:40 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:44 எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
00:52 இந்த டுடோரியலை கற்பவர்கள், தங்கள் Moodle வலைத்தளத்தில் சில courseகள் மற்றும் userகளை கொண்டிருக்கவேண்டும்
00:59 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கான Moodle டுடோரியல்களை பார்க்கவும்.
01:06 Pluginகள் என்றால் என்ன? ஏற்கனவே உள்ள ஒரு softwareக்கு, பிரத்யேக அம்சங்களை சேர்க்கும் add-on toolகள், ஆகும்
01:15 ஆசிரியர்கள் மற்றும் தள நிர்வாகிகளுக்கு, Moodle, பல பயனுள்ள pluginகளை கொண்டிருக்கிறது
01:22 இவை, plugins directoryல் உள்ளன
01:26 Browserஐ திறந்து, டைப் செய்க: https://moodle.org/plugins
01:36 Purpose மற்றும் Plugin Typeஐ பொறுத்து, இந்த பக்கம் filterகளை கொண்டிருக்கிறது
01:41 தனிப்பட்ட தேடுதலுக்கு ஒரு search boxஉம் உள்ளது
01:46 மேல் வலது மூலையில் சில எண்கள் கட்டப்படுகின்றன. அதன் கீழுள்ள உரை, அவை என்ன என்பதை குறிக்கின்றன
01:53 இந்த டுடோரியலில், attendance plugin.ஐ நாம் நிறுவக்கற்போம்
01:59 Search boxல், attendance என டைப் செய்து, Search பட்டனை க்ளிக் செய்யவும்
02:05 இந்த keywordஐ , தங்கள் தலைப்பில் அல்லது விளக்கத்தில், பல pluginகள் கொண்டிருப்பதை நாம் காணலாம்
02:13 Attendance pluginஐ க்ளிக் செய்யவும். “A plugin that allows an attendance log to be kept.” என்று அதன் விளக்கம் கூறுகிறது
02:22 நான் குறிப்பிட்ட அதே pluginல் நீங்கள் க்ளிக் செய்துள்ளீர்கள் என்பதை சரிபார்க்க, புதிய பக்கத்தில் உள்ள தலைப்பை சரி பார்க்கவும்
02:30 அதன் தலைப்பு, Activities colon Attendance ஆக இருக்க வேண்டும்
02:36 இந்த plugin, ஒரு ஆசிரியர், Moodleலில் ஒரு attendance logஐ வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது
02:42 எந்த ஒரு புதிய pluginஐயும் நிறுவுவதற்கு முன், நீங்கள் பயன்படுத்துகின்றMoodle பதிப்பு, அதை ஏற்றுக்கொள்ளுமா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்
02:50 அதை சரிபார்க்க, அது ஆதரிக்கின்ற பதிப்புகளை காண, Versions இணைப்பை க்ளிக் செய்யவும்
02:56 நமது பதிப்பான Moodle 3.3க்கு, அது கிடைக்கிறதா என்பதை காண, கீழே scroll செய்யவும்
03:03 Description இணைப்பிற்கு திரும்பச் செல்லவும்
03:06 Plugin உங்கள் நோக்கத்தை பூர்த்தி செய்கிறதா என்பதை புரிந்துகொள்ள, விளக்கத்தை படிக்கவும்
03:12 அது pluginஐ பயன்படுத்துவதற்கான முன்நிபந்தனைகளையும், மற்றும் பயன்பாட்டு வழிமுறைகள் ஏதேனும் இருந்தால், அவற்றையும் கூறுகிறது
03:20 இது பல வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், இதற்கு பல ரசிகர்கள் இருப்பதையும் நாம் காணலாம்
03:27 Plugin பயனுள்ளது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதானது என்பதை இது உறுதிப்படுத்துகிறது
03:33 கீழே scroll செய்து, இந்த plugin தொடர்பான, மற்றவர்கள் கேட்டுள்ள கேள்விகளை காண நீங்கள் விரும்பலாம்
03:40 நீங்கள் pluginஐ பயன்படுத்த சமாதானமாகிவிட்டீர்கள் எனில், Versions இணைப்பிற்கு திரும்பச் செல்லவும்
03:46 Download பட்டனை கிளிக் செய்யவும்
03:49 உங்கள் கணினியில் fileஐ சேமிக்கவும். நான் எனது கணினியில் ஏற்கனவே சேமித்துவிட்டேன்.
03:55 ஒரு புதிய tabஐ திறந்து, உங்கள் Moodle வலைத்தளத்தில், site administratorஆக login செய்யவும்
04:02 XAMPP service செயல்பட்டுக்கொண்டிருக்க உறுதிபடுத்திக்கொள்ளவும்
04:06 நாம் இப்போது admin dashboardல் உள்ளோம்
04:09 இடது பக்கத்தில் Site Administrationஐ க்ளிக் செய்யவும்
04:13 பின், Plugins tabஐயும், அதன் பின், Install plugins இணைப்பையும் க்ளிக் செய்யவும்
04:20 ஒரு pluginஐ நிறுவ, 2 வழிகள் உள்ளன- ஒன்று, Moodle plugins directory மூலம்; மற்றொன்று, ஒரு zip upload மூலம்
04:29 நாம், இரண்டாவது வழிமுறையை மட்டும் பார்ப்போம்
04:33 முதல் வழிமுறைக்கு, moodle.orgல் நமக்கு ஒரு account தேவை. அதனால் நாம் அதை தவிர்க்கிறோம்
04:41 Zip packageக்கு அடுத்துள்ள, Choose a file பட்டனை க்ளிக் செய்யவும்
04:46 ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், இடது பக்கத்தில் உள்ள Upload a file இணைப்பை க்ளிக் செய்யவும்
04:52 Browse பட்டனை க்ளிக் செய்து, plugin fileஐ நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்திற்கு வரவும்
04:59 நாம் ஏற்கனவே தரவிறக்கிய, zip fileஐ தேர்ந்தெடுக்கவும்
05:03 பின், இந்த windowவின் கீழுள்ள Upload this file பட்டனை க்ளிக் செய்யவும்
05:08 இப்போது கீழுள்ள, Install plugin from the ZIP file பட்டனை க்ளிக் செய்யவும்
05:14 இந்த பக்கத்தில் நீங்கள் ஒரு பிழையை காணலாம்
05:18 Validating mod_attendance ... Error என்று அந்த error message கூறுகிறது
05:24 Cancel இணைப்பை க்ளிக் செய்யவும்
05:27 இந்த directory க்கு write permissionஐ கொடுப்பதற்கு, இது ஒரு குறிகாட்டி ஆகும்
05:33 Control + Alt + T keyகளை அழுத்தி, terminalஐ திறக்கவும்
05:39 டைப் செய்க: sudo space chmod space 777 space slash opt slash lampp slash htdocs slash moodle slash mod slash
05:56 தூண்டப்பட்டால், administrative passwordஐ enter செய்து, பின் Enterஐ அழுத்தவும்
06:02 Browserக்கு திரும்பச் சென்று, இந்த செய்முறையை மீண்டும் செய்வோம்
06:09 இம்முறை, validation successful message ஐ நாம் பெறுகிறோம். Continue பட்டனை க்ளிக் செய்யவும்
06:17 மேலுள்ள திரையை நீங்கள் பெற்றால் மட்டுமே, இந்த கூடுதல் படி தேவைப்படுகிறது என்பதை கவனிக்கவும்
06:25 இப்போதுplugin தரவிறக்கப்பட்டு, Moodleன் இந்த பதிப்பிற்குvalidate செய்யப்பட்டுவிட்டது
06:31 அடுத்து, Plugins check என்ற தலைப்பை கொண்ட ஒரு பக்கத்தை நாம் பெறுவோம்
06:36 To be installed. எனக்கூறுகின்ற, பச்சை நிறத்தில் உள்ள status தகவலை கவனிக்கவும்
06:43 Upgrade Moodle database now பட்டனை க்ளிக் செய்யவும்
06:47 இந்த செயல், சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாம். Browser windowவை மூட அல்லது refresh செய்யவேண்டாம்
06:53 Sucess messageஐ நீங்கள் பார்த்தவுடன், Continue பட்டனை க்ளிக் செய்யவும்
06:58 நாம் இப்போதுNew settings பக்கத்தில் உள்ளோம்
07:02 settingsல் எவற்றையேனும் மாற்ற, அதை முழுவதுமாக படிக்கவும். நான் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை
07:10 சரி பார்த்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Save Changes பட்டனை க்ளிக் செய்யவும்
07:16 சில எச்சரிக்கை messageகளை நீங்கள் காணலாம். அவற்றை இப்போதைக்கு புறக்கணிக்கவும்
07:21 Plugin வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டதை பார்க்க, இடது panelலில் உள்ள Site Administration ஐ க்ளிக் செய்யவும்
07:29 பின், Plugins tabஐயும், அதன் பின் Plugins overviewஐயும் க்ளிக் செய்யவும்
07:36 இது, எல்லா pluginகளையும் கொண்ட பட்டியலை உங்களுக்கு காட்டும்
07:40 முன்னிருப்பாக நிறுவப்பட்ட அனைத்தும், உங்களால் நிறுவப்பட்டவையாகும்
07:46 எனது தளத்தில், இந்த எண்ணிக்கையிலான pluginகள் நிறுவப்பட்டுள்ளன என்று காட்டுகிறது
07:51 கூடுதலாக நிறுவப்பட்ட pluginகளை காண, tableக்கு மேலே உள்ள Additional plugins இணைப்பை க்ளிக் செய்யவும்
07:59 Settingsகுக்கு சென்று, இந்த பக்கத்திலிருந்து pluginuninstall செய்வதற்கான இணைப்புகள் இங்குள்ளன
08:05 Teacherகள் மற்றும் administratorகள், தங்கள் courseகளுக்கு இப்போது attendanceஐ உருவாக்கிக்கொள்ளலாம்
08:11 மீண்டும், இடது panelலில் உள்ள Site administrationஐ க்ளிக் செய்யவும்
08:16 பின், Courses மற்றும் Manage Courses and categoriesஐ க்ளிக் செய்யவும்
08:21 இடது பக்கத்தில் உள்ள Course categoryல், 1st year Mathsஐ க்ளிக் செய்யவும்
08:26 வலது பக்கத்தில் உள்ள Calculus courseஐ க்ளிக் செய்யவும்
08:30 Calculus courseன் விளக்கப்பிரிவுக்கு, கீழே scroll செய்து, Calculus courseஐ பார்க்க View tabஐ க்ளிக் செய்யவும்
08:40 மேல் வலது பக்கத்தில் உள்ள gear iconஐ க்ளிக் செய்து, பின் Turn editing onஐ க்ளிக் செய்யவும்
08:47 தலைப்புகளுக்கு முன், பகுதியின் கீழ் வலது பக்கத்தில் உள்ள Add an activity or resourceஐ க்ளிக் செய்யவும்
08:54 ஒரு வருகை பதிவேட்டை உருவாக்க, Attendance செயல்பாட்டை டபுள்-க்ளிக் செய்யவும்
09:00 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, பெயர் மற்றும் விளக்கத்தை enter செய்யவும்
09:04 Grade பிரிவை விரிவாக்கவும்
09:07 வருகை பதிவேட்டிற்கு பயன்படுத்தப்படுகின்ற தரப்படுத்துதலின் வகையை இந்த dropdown தீர்மானிக்கிறது
09:12 பாடத்தின் gradeக்கு வருகை பங்களிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஒரு அதிகபட்ச குறிப்பு மதிப்பை set செய்யவும். முன்னிருப்பான மதிப்பு 100 ஆகும்.
09:21 நான் Gradeக்கு Noneஐ தேர்ந்தெடுக்கிறேன்
09:24 மற்ற தேர்வுகள் முன்னிருப்பானதாகவே இருக்கட்டும்
09:27 கீழே scroll செய்து, Save and display பட்டனை க்ளிக் செய்யவும்
09:31 நாம் இப்போது ஒரு புதிய பக்கத்தில் உள்ளோம்
09:34 இங்குள்ள, Status set tabஐ க்ளிக் செய்யவும்
09:38 attendanceக்கு 4 முன்னிருப்பான நிலைகள் உள்ளன: Present , Late , Excused , Absent
09:47 உங்கள் தேவைக்கேற்றவாறு, அவற்றை நீக்கலாம் அல்லது மேலும் சிலவற்றை நீங்கள் சேர்க்கலாம்
09:53 நீங்கள் அவற்றை வேறுவிதமாக அழைக்க விரும்பினால், அந்த நிலைகளின் பெயர்களையும் நீங்கள் மாற்றலாம்
09:59 நான் Excused நிலையை நீக்குகிறேன். ஏனெனில் அதனை நான் என் வகுப்பில் பயன்படுத்துவதில்லை
10:07 ஒரு உறுதிப்பாட்டுmessage box தோன்றுகிறது. Continue பட்டனை க்ளிக் செய்யவும்
10:13 இப்போது, Add session tabஐ க்ளிக் செய்யவும்
10:16 நீங்கள் சேர்க்க விரும்புகின்ற முதல் அமர்வின் தேதியை தேர்ந்தெடுக்கவும். இதை நான் 4 ஜூன் 2019 என வைக்கிறேன்
10:24 அமர்வின் தொடக்க மற்றும் முடிகின்ற நேரத்தை தேர்ந்தெடுக்கவும்
10:27 நேரத்தின் fieldகள் ஒரு 24-நேர கடிகாரத்தை பயன்படுத்துவதை கவனிக்கவும். அதனால் மதியம் 3:15ல் இருந்து 4:05 வரையுள்ள ஒரு வகுப்பு, 15:15ல் இருந்து வரை16:05 என்று எழுதப்பட வேண்டும்
10:43 இந்த அமர்விற்கு ஒரு குறுகிய Descriptionஐ டைப் செய்யவும்
10:46 Description field ஐ நீங்கள் காலியாக விட்டால், முன்னிருப்பான விளக்கம் “Regular class session”. என்று இருக்கும்
10:54 அதை விரிவாக்க, Multiple sessionsஐ க்ளிக் செய்யவும்
10:59 உங்கள் வகுப்பு, முறையான இடைவேளைகளில் சந்தித்தால், நீங்கள் ஓரே நேரத்தில் பல அமர்வுகளை உருவாக்கலாம்
11:06 Repeat the session above as follows checkboxஐ க்ளிக் செய்யவும்
11:11 வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் உங்கள் வகுப்பு சந்தித்துக்கொண்டால், வாரத்தின் அந்த நாட்களை தேர்ந்தெடுக்கவும். எனது வகுப்பிற்கு நான் Mondayஐ தேர்ந்தெடுக்கிறேன்
11:20 அடுத்த தேர்வு, Repeat every dropdown. வகுப்பு ஒவ்வொரு வாரமும் சந்தித்தால், 1ஐ தேர்ந்தெடுக்கவும்
11:28 முதல் அமர்வின் தேதியிலிருந்து வகுப்பு, 2 வாரத்திற்கு ஒரு முறை சந்தித்துக்கொண்டால், 2ஐ தேர்ந்தெடுக்கவும் மேலும் அவ்வாறே
11:35 நான் இதை 1 ஆக வைக்கிறேன்
11:38 இதன் பொருள், எனது வகுப்பு ஒவ்வொரு திங்கட்கிழமையும், 50 நிமிடங்களுக்கு, மதியம் 3:15க்கு சந்திக்கிறது என்பதாகும்
11:45 Repeat until என்பது இறுதி அமர்வின் தேதி ஆகும்
11:49 நான் இதை30th March 2020., என வைக்கிறேன்
11:54 அடுத்து, Student recording பிரிவை விரிவாக்க அதை க்ளிக் செய்யவும்
12:00 தங்களின் வருகையை மாணவர்களே பதிவு செய்ய நீங்கள் விரும்பினால், இந்த பிரிவின் fieldகளை பூர்த்தி செய்யவும்
12:07 நான் இந்த பிரிவை தவிர்க்கிறேன்
12:09 கீழே scroll செய்து, பக்கத்தின் கீழுள்ள Add பட்டனை க்ளிக் செய்யவும்
12:15 43 sessions were successfully generated. எனக்கூறுகின்ற ஒரு உறுதிப்பாட்டு message தோன்றுகிறது
12:22 நான் தேர்ந்தெடுத்ததல்லாது வேறு ஏதேனும் தேதிகளை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், அமர்வுகளில் ஒரு வேறுபட்ட எண்ணிக்கையை நீங்கள் காணலாம்
12:28 ஒவ்வொரு அமர்விற்கும் அடுத்ததாக இருக்கும் iconகளை பார்க்கவும்
12:32 ஆசிரியர், attendanceஐ எடுக்கவும், அமர்வை edit செய்யவும் அல்லது நீக்கவும் அவை அனுமதிக்கிறது
12:39 நீங்கள் எடுக்க விரும்புகின்ற வாரத்திற்கான Take attendance iconஐ க்ளிக் செய்யவும்
12:46 இந்த courseற்கு பதிவு செய்துள்ள எல்லா மாணவர்களின் ஒரு பட்டியலை நீங்கள் காணலாம் மற்றும் நீங்கள் அவர்களின் attendanceஐ குறிக்கலாம்
12:53 P, L மற்றும்A என்பன நாம் settingsல் முன்பு தேர்ந்தெடுத்த நிலைகளாகும்
12:59 எல்லா userகளுக்கும் statusஐ 'Present'க்கு set செய்ய, 'P'க்கு கீழே உள்ள ரேடியோ பட்டனை க்ளிக் செய்யவும் மற்றும் வராதவர்களுக்கு மட்டும் 'A' என குறிக்கவும்
13:10 நீங்கள் வருகையை குறித்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Save attendance பட்டனை க்ளிக் செய்யவும்
13:18 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
13:24 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Pluginகள் மற்றும் Moodleலில் pluginகளை எப்படி நிறுவுவது
13:32 உங்களுக்கான ஒரு பயிற்சி:
13:35 Projectes TAC Deptஆல் பராமரிக்கப்படுகின்ற ஒரு plugin Font familyஐ தேடவும்
13:42 அந்த pluginஐ , அதன் முன்னிருப்பான settingகளுடன் நிறுவவும்
13:46 plugin நிறுவப்பட்டுவிட்டதா என்பதை Plugins overview பிரிவிலிருந்து சரி பார்க்கவும்
13:52 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
14:00 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
14:10 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
14:14 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
14:27 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree