Moodle-Learning-Management-System/C2/Overview-of-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 09:02, 6 May 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Moodle பற்றிய கண்ணோட்டம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது: Learning Management Systems ன் கருத்து(சுருக்கமாகLMS ),
00:16 ஒரு LMS ஆக Moodle,
00:19 Moodle ஐ பயன்படுத்தக்கூடியவர்கள் மற்றும் Moodle வலைத்தளங்களின் உதாரணங்கள்.
00:26 மேலும், Moodle ஐ செயல்படுத்துவதற்கு தேவையான software மற்றும் hardware மற்றும்
00:33 Moodle தொடரில் செயல்விளக்ககப்படப்போகின்ற முக்கிய அம்சங்களை நாம் கற்கப்போகிறோம்.
00:39 இந்த டுடோரியலை கற்கப்போகிறவர்களுக்கு ஒரு வலைத்தளத்தை browse செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
00:45 முதலில், Learning Management System அல்லது LMS என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்வோம்.
00:53 எந்த ஒரு eLearning contentஐயும் உருவாக்கி, சமாளித்து மற்றும் கொண்டு சேர்க்க, ஒரு LMS உதவி புரிகிறது.
01:01 உதாரணத்திற்கு: கல்வி படிப்புகள் மற்றும் பயிற்சி திட்டங்கள்.
01:07 மேலும், நமது courseகளை சமாளிக்கவும் அது உதவி புரிகிறது.
01:11 நாம் contentஐ உருவாக்கி மற்றும்edit செய்யலாம், மாணவர்களுக்கு அணுகுதலை வழங்கலாம், அவர்களின் சமர்ப்பிப்புகளை தரவகைக்கலாம்.
01:21 Moodle, ஒரு பதிலளிக்கின்ற, இலவச மற்றும் open source software ஆகும்.
01:27 இது கல்வி நிறுவனங்களால் உலகளவில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான LMSஆகும்.
01:33 அதன் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், நமது dataஐ பாதுகாப்பாக வைக்கின்றன.
01:39 ஆசிரியர்களுக்கும் கற்பவர்களுக்கும், அதிகாரம் கொடுக்கும் சில சக்திவாய்ந்த அம்சங்களை இது கொண்டுள்ளது.
01:47 மேலும் Moodle, விரிவான ஆவணங்களை வழங்குகிறது. இதனால், அதை பயன்படுத்துவது நமக்கு எளிதாகின்றது.
01:54 Moodleஐ பயன்படுத்துகின்ற சமூகம் மற்றும் மன்ற உதவி ஆகியவை மிகவும் விரைவாக செயல்படுகின்றன.
02:00 Moodleலில் கிடைக்கின்ற இலவச pluginகள், அவற்றை மேலும் சிறப்பாம்சம் கொண்டதாக ஆக்குகின்றன .
02:06 Moodleஐ எல்லா கருவிகளிலும் செயல்படுத்துவது எளிதாகும்; course மற்றும் site level.களில் உள்ள செயல்பாடு மற்றும் பங்கு பற்றிய விரிவான அறிக்கைகளை அது கொண்டிருக்கிறது.
02:18 கூட்டு மற்றும் தனிப்பட்ட கற்றலுக்கு இது உதவி புரிகிறது.
02:23 அதற்கு மன்றங்கள், இணைநிலையினரின் மதிப்பீடுகள், குழு மேலாண்மை, கற்றல் பாதைகள் முதலியவற்றைப் பயன்படுத்தலாம்.
02:32 எவர் Moodle LMSஐ பயன்படுத்தலாம் என்பதை நாம் காண்போம்:
02:36 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் போன்ற கல்வி நிறுவனங்கள்.
02:44 ஊழியர் பயிற்சி மற்றும் நோக்குநிலைக்கான வணிகங்கள்.
02:49 மருத்துவமனை மற்றும் சுகாதார பயிற்சி திட்டங்கள்.
02:53 eLearning அடிப்படையிலான எந்த ஒரு நிறுவனம்.
02:57 Moodleஐ பயன்படுத்தி அமைக்கப்பட்ட சில வலைத்தளங்களை காண்போம்.
03:02 இவைபோன்ற கல்லூரிகள்.
03:05 இவை போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள்.
03:09 இது போன்ற பயிற்சி நிறுவனங்கள்.
03:13 இது போன்ற பயிற்சி நிறுவனங்கள்.
03:17 தங்கள் பாடத்தை ஆன்லைனில் வழங்க விரும்புகின்ற தனி ஆசிரியர்கள் மற்றும் இன்னும் பல.
03:24 பின்வரும் URLல் , பயன்பாடு பற்றிய விரிவான புள்ளிவிவரங்களை Moodle கொண்டுள்ளது.
03:30 இங்கு, நீங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பதிவு செய்யப்பட்டMoodle வலைத்தளங்களை பார்க்கலாம்.
03:40 Moodleஐ நிறுவ நமக்கு தேவையானவை: Apache web-server.
03:46 MySQL, MariaDB அல்லதுPostgreSQL மற்றும் PHP போன்ற ஒருdatabase.
03:54 Moodle ஒரு, வளம் உட்கொள்கின்றsoftware ஆகும்.
03:58 Moodleஐ செயல்படுத்த பரிந்துரைக்கப்படுகின்றhardware:
04:02 Disk Space: contentஐ சேமிக்க, Moodle code plusஇடத்திற்கு 200 MB. எனினும், 5GB ஒரு யதார்த்தமான குறைந்தபட்சம் ஆகும்.
04:15 Processor: குறைந்தபட்சம் 1 Gigahertz. ஆனால், 2 Gigahertz dual core அல்லது அதற்கு மேற்பட்டது பரிந்துரைக்கப்படுகிறது.
04:23 Memory: குறைந்தபட்சம் 512MB. ஆனால், 1GB அல்லது அதற்கு மேற்பட்டது பரிந்துரைக்கப்படுகிறது.
04:31 systemல் எதிர்பார்க்கப்படும் சுமையின் அடிப்படையில் இந்த தேவைகள் மாறலாம்.
04:37 உதாரணத்திற்கு: courseகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரே நேர loginகள்.
04:44 இந்த தொடரை உருவாக்கும் போது, Moodle 3.3 அண்மைக்கால நிலையான பதிப்பாக இருந்தது.
04:50 கிடைக்கின்ற அண்மைக்கால நிலையான பதிப்பை கொண்டு வேலை செய்வது எப்போதுமே பரிந்துரைக்கப்படுகிறது.
04:57 Moodle 3.3 க்கு பின்வருபவை தேவையாகும்:
05:01 Apache 2.x (அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு), MariaDB 5.5.30 (அல்லது அதற்கு மேற்பட்ட எந்த ஒரு பதிப்பு) மற்றும்
05:11 PHP 5.4.4 (அல்லது அதற்கு மேற்பட்ட எந்த ஒரு பதிப்பு)
05:17 இந்த தொடருக்கு, நாம் பின்வரும்OS மற்றும் softwareஐ பயன்படுத்தியுள்ளோம்: Ubuntu Linux OS 16.04
05:26 XAMPP 5.6.30 மற்றும் Moodle 3.3 மூலம் பெறப்பட்ட, Apache, MariaDB மற்றும் PHP.
05:36 இந்த தொடர், 2 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது-
05:41 Moodle site administratorகளுக்கு ஒன்று மற்றும் teacherகளுக்கு ஒன்று.
05:48 Moodle site administratorகள் Moodleserverல் நிறுவுவர்.
05:54 கல்வி நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள் படி, course category க்களை உருவாக்கி, courseகளை கையாண்டு, மற்றும் பல courseகளுக்கு user accountகளை சமாளிப்பர்.
06:04 Moodle site administratorக்கான இந்த தொடரில் விவாதிக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களை பற்றிய ஒரு பார்வை இதோ.
06:14 Moodleஐ நிறுவுவதற்கு தயார்ப்படுத்திக் கொள்வது குறித்த டுடோரியல், localhostல் packageகளை எப்படி சரி பார்ப்பது மற்றும் databaseஐ எப்படி அமைப்பது என்பதை விளக்குகிறது.
06:29 Installing Moodle on Local Server டுடோரியல், Moodleஐ எவ்வாறு தரவிறக்கி நிறுவுவது என்பதை விளக்குகிறது.
06:39 Moodleலில் Admin’s dashboard குறித்த டுடோரியல், Admin Dashboard, பல்வேறு blockகள் மற்றும் profile page, மற்றும் preferenceகளை எவ்வாறு edit செய்வது என்பதை விளக்குகிறது.
06:53 Blocks in Admin's Dashboard டுடோரியல்- blockகளை எவ்வாறு சேர்ப்பது மற்றும் நீக்குவது மற்றும்
07:05 Front pageஐ set செய்வது என்பதை விளக்குகிறது.
07:08 அடுத்த டுடோரியல், Categories in Moodleலில், categories & subcategories.ஐ நாம் உருவாக்கக் கற்போம்.
07:19 Courses in Moodle டுடோரியலில், ஒரு course ஐ உருவாக்கி மற்றும் அதை configure செய்யக்கற்போம்.
07:28 Users in Moodle டுடோரியல், பின்வருவனவற்றை புரிந்துகொள்ள நமக்கு உதவி புரியும்- ஒரு userஐ எவ்வாறு சேர்ப்பது,
07:36 ஒரு user’s profileஐ edit செய்வது, மற்றும் userகளை திரளாக upload செய்வது.
07:43 User Roles in Moodle டுடோரியல், userகளுக்கு பல்வேறு பணிகளை எவ்வாறு ஒதுக்கீடு செய்வது என்பதை கற்க நமக்கு உதவி புரியும்.
07:52 உதாரணத்திற்கு: admin role, teacher role மற்றும் student role.
08:00 எதிர்காலத்தில், Moodle site administratorகளுக்கான இந்த தொடரில் மேலும் பல களை பின்னர் நீங்கள் காணலாம்.
08:07 இப்போது ஆசிரியர்களுக்கான டுடோரியல்களுக்கு நாம் செல்வோம்.
08:11 தங்கள் courseக்கான contentஐ upload மற்றும் edit செய்வது ,
08:17 மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு, assignmentகள் மற்றும் quizகளை உருவாக்குவது மற்றும்
08:22 தங்கள் courseக்கு மாணவர்களை பதிவு செய்து மற்றும் அவர்களுடன் தொடர்பு கொள்வது ஆகியவை ஆசிரியர்களின் பொறுப்பாகும்.
08:27 இப்போது, ஆசிரியர்களுக்கான இந்த தொடரில் விவாதிக்கப்பட்ட சில முக்கிய அம்சங்களின் ஒரு பார்வை.
08:34 Moodle டுடோரியலில் உள்ள Teacher’s dashboard , teachers’ dashboard , profile மற்றும் preferenceகளை எவ்வாறு edit செய்வது என்பதை விளக்குகிறது.
08:46 Moodle டுடோரியலில் உள்ள Course Administration , course setting களை எவ்வாறு configure செய்வது
08:53 மற்றும் ஒரு courseல், Activities மற்றும் Resourcesஐ எவ்வாறு சமாளிப்பது என்பதை விளக்குகிறது.
08:59 Moodle டுடோரியலில் உள்ள Formatting course material , முன்னிருப்பான Moodle text editorல் உள்ள பல்வேறு formatting தேர்வுகள்
09:10 மற்றும் கூடுதலான course materialஐ சேர்ப்பது பற்றி விளக்குகிறது.
09:15 Moodle டுடோரியலில் உள்ள Uploading and Editing Resources , ஒரு URL resource மற்றும் ஒரு book resource ஐ எவ்வாறு upload செய்வது மற்றும் அந்த resourceகளை எவ்வாறு edit செய்வது என்பதை விளக்குகிறது.
09:29 இந்த தொடரில் உள்ள அடுத்த டுடோரியல், Moodle.லில் Forums and Assignments .
09:34 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Moodleலில் உள்ள வெவ்வேறு வகை forumகள்.
09:39 கலந்தாய்வுக்கு ஒரு forumஐ எப்படி சேர்ப்பது மற்றும் Assignmentகளை எவ்வாறு உருவாக்குவது.
09:48 Moodle டுடோரியலில் உள்ள Question bank ல், questionகளின் Categoryகளை எப்படி உருவாக்குவது மற்றும் question bankகுக்கு கேள்விகளை எப்படி சேர்ப்பது என்பதை கற்போம்.
09:58 Moodle டுடோரியலில் உள்ள Quiz , ஒரு Quizஐ உருவாக்கவும் மற்றும் Question bankகிலிருந்து கேள்விகளை எடுத்து, Quizக்குள் சேர்க்கவும் கற்பிக்கும்.
10:12 Moodle, லில் உள்ள, Enroll Students and Communicate என்ற பெயரைக் கொண்ட டுடோரியலில், நாம் பின்வருவனவற்றை கற்போம்:
10:25 Coursesகளில் groupகளை அமைப்பது மற்றும் மாணவர்களுக்கு messageகள் மற்றும் noteகளை அனுப்புவது.
10:31 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான மேலும் பல டுடோரியல்கள் இந்த தொடரில் பின்னர் இருக்கும்.
10:37 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: Learning Management Systems ன் கருத்து(சுருக்கமாகLMS ),
10:48 ஒரு LMS ஆக Moodle, Moodle ஐ பயன்படுத்தக்கூடியவர்கள் மற்றும் Moodle வலைத்தளங்களின் உதாரணங்கள்.
10:57 மேலும் நாம் கற்றது: Moodle ஐ செயல்படுத்துவதற்கு தேவையான software மற்றும் hardware மற்றும் Moodle தொடரில் செயல்விளக்ககப்படப்போகின்ற முக்கிய அம்சங்களின் கண்ணோட்டம்.
11:10 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
11:28 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும்.
11:35 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
11:45 ஸ்போகன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்காகும்.
11:51 இதில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம். இது குழப்பத்தை குறைக்க உதவும்.
11:59 குழப்பம் குறைந்தால், இந்த விவாதத்தை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம்.
12:05 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
12:18 இந்த ஸ்கிரிப்ட், நான்ஸி மற்றும் ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree