Moodle-Learning-Management-System/C2/Forums-and-Assignments-in-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 18:00, 16 May 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle.லில், Forumகள் மற்றும் Assignmentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: வெவ்வேறு வகை forumகள், விவாதத்திற்கு ஒரு forumஐ எப்படி சேர்ப்பது மற்றும் Assignmentகளை எப்படி உருவாக்குவது.
00:21 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04, XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, Moodle 3.3 மற்றும் Firefox web browser.
00:44 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
00:56 உங்கள் site administrator, உங்களை ஒரு teacher.ஆக பதிவு செய்துள்ளதாகவும், குறைந்தபட்சம் ஒரு course ஐ உங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் இந்த டுடோரியல் அனுமானித்து கொள்கிறது.
01:08 மற்றும் தங்களுக்குரியcourseக்கு ஏதேனும்course materialஐ , நீங்கள் upload செய்திருப்பதாகவும் அது அனுமானித்து கொள்கிறது. இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கானMoodle டுடோரியல்களை பார்க்கவும்.
01:22 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் courseற்கு ஒரு மாணவரை நீங்கள் சேர்க்க வேண்டும்.
01:28 ஒரு மாணவரை எவ்வாறு சேர்ப்பது என்பதை தெரிந்துகொள்ள, Users in Moodle டுடோரியலை பார்க்கவும். நான் எனது courseக்கு, Priya Sinha என்ற மாணவரை ஏற்கனவே சேர்த்துவிட்டேன்.
01:40 Browserக்கு மாறி, teacher login.ஐ பயன்படுத்தி, உங்கள் moodle site.இனுள் login செய்யவும்.
01:47 இடது navigation menu.வில் உள்ள, Calculus course ஐ க்ளிக் செய்யவும்.
01:52 சில course material மற்றும் announcements களை நாம் முன்பே சேர்த்துவிட்டோம் என்பதை நினைவுகூறவும்.
01:59 Forumகள் என்ன என்றால் என்பதை புரிந்துகொள்வோம்.
02:03 விவாதங்களுக்கும், கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால், Forumகள் பயன்படுத்தப்படுகின்றன.
02:12 ஆனால், Announcementகள் ஆசிரியர்களால் மட்டும் post செய்யப்படுகின்றன.
02:18 எல்லா உறுப்பினர்களாலும் வழிகாட்டுரைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, teacherகள் இந்த விவாதங்களை மேற்பார்வையிடுகின்றனர்.
02:26 இப்போது, ஒரு forumஐ சேர்க்கக்கற்போம். Moodle pageக்கு மாறவும்.
02:33 மேல் வலது பக்கத்தில் உள்ள gear icon ஐ முதலில் க்ளிக் செய்து, பின் Turn Editing On.ஐ க்ளிக் செய்யவும்.
02:40 common பிரிவின் கீழ் வலது பக்கத்தில் உள்ள Add an activity or resource இணைப்பை க்ளிக் செய்யவும்.
02:47 கீழே scroll செய்து, activity chooserலிலிருந்து Forumஐ தேர்ந்தெடுக்கவும்.
02:53 Activity chooserன் கீழே உள்ள Add button பட்டனை க்ளிக் செய்யவும்.
02:59 Forumக்கான இணைப்பாக, forum name, course pageல் காட்டப்படும்.
03:06 நான், Interesting web resources on evolutes and involutes என டைப் செய்கிறேன்.
03:13 Forumன் நோக்கத்தை மாணவர்களுக்கு விளக்க, Descriptionஐ பயன்படுத்தலாம். இங்கு காட்டப்பட்டுள்ளபடி நான் textஐ enter செய்கிறேன்.
03:23 இந்த text பகுதிக்கு கீழ் உள்ள Display description on course page checkboxஐ க்ளிக் செய்யவும்.
03:30 அடுத்த தேர்வு, Forum type ஆகும். முன்னிருப்பாக, Standard forum for general use தேர்ந்தெடுக்கப்படுகிறது.
03:40 Moodleலில், 5 forum typeகள் உள்ளன: Forumகளின் typeகளை பற்றி படிக்க, drop-down க்கு அடுத்துள்ள Help iconஐ க்ளிக் செய்யவும்.
03:50 உங்கள் தேவைக்கேற்றவாறு, Forum typeஐ நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். நான் Standard forum displayed in a blog-like formatஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:01 கீழே scroll செய்து, பக்கத்தின் கீழுள்ள Save and display பட்டனை க்ளிக் செய்யவும்.
04:09 நாம் ஒரு புதிய பக்கத்திற்கு வருகிறோம். இங்கு, Add a new topic பட்டனை க்ளிக் செய்யவும்.
04:17 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Subject மற்றும்Messageஐ நான் டைப் செய்கிறேன். மீதமுள்ள தேர்வுகள், ஒரு announcement போலவே ஆகும்.
04:29 கீழே scroll செய்து, பக்கத்தின் கீழுள்ள Post to forum பட்டனை க்ளிக் செய்யவும்.
04:36 ஒரு வெற்றிச் செய்தி காட்டப்படுகிறது.
04:39 Postன் ஆசிரியர், அந்த postஐ 30 நிமிடங்களுக்குள் edit செய்யலாம் என்று அந்த செய்தி கூறுவதை கவனிக்கவும். எனினும் இது, non-teacher profileகளுக்கு மட்டுமே பொருந்தும்.
04:54 courseன் படைப்பாளி மற்றும் மதிப்பீட்டாளருமான ஆசிரியர், எந்நேரத்திலும், எந்த postஐயும் edit அல்லது delete செய்யலாம்.
05:03 நான் இப்போது, மாணவர் Priya Sinhaவாக login செய்கிறேன். பின், இந்த forumஐ ஒரு மாணவர் எப்படி காண்கிறார் என்பதை நாம் பார்ப்போம்.
05:15 விவாதங்களை காண, resourceகளின் பட்டியலில், forum பெயரை க்ளிக் செய்யவும்.
05:21 ஒரு மாணவராக, Add a new topic அல்லது Discuss this topicஐ தேர்ந்தெடுக்கலாம். கீழ் வலது பக்கத்தில் உள்ள Discuss this topic இணைப்பை நான் தேர்ந்தெடுக்கிறேன்.
05:35 பின், Reply இணைப்பை க்ளிக் செய்யவும். காட்டப்பட்டுள்ளபடி, நான் ஒரு commentஐ சேர்க்கிறேன்.
05:42 கீழே scroll செய்து, பக்கத்தின் கீழுள்ள Post to forum பட்டனை நான் க்ளிக் செய்கிறேன். Comment , threadன் இறுதியில் சேர்க்கப்பட்டுவிட்டதை நீங்கள் காணலாம்.
05:53 மாணவர்களால்post செய்யப்பட்ட commentஐ காண, நான் மீண்டும் ஆசிரியர் Rebeccaவாக login செய்கிறேன்.
06:01 Forumன் பெயரை க்ளிக் செய்யவும். இந்த தலைப்பிற்கான விவாதத்திற்கு, 1 reply so far என்று இங்கிருப்பதை கவனிக்கவும்.
06:12 கீழ் வலது பக்கத்தில் உள்ள, Discuss this topic இணைப்பை க்ளிக் செய்தால், உண்மையான செய்தியை காணலாம்.
06:21 Split என்று பெயரிடப்பட்ட மற்றொரு தேர்வும் இங்குள்ளது. அந்த பதிலுக்கு ஒரு தனி விவாதம் தேவை என்று ஆசிரியர்க்கு தோன்றினால், அவர் விவாதத்தை பிரிக்கலாம்.
06:34 விவாதத்தை பிரிப்பது, ஒரு புதிய விவாதத்தை உருவாக்குகிறது. புதிய விவாதமும், அதில் பின்னர் வருகின்ற அந்த threadன் postகளும், ஒரு புதிய விவாத threadக்கு நகர்த்தப்படும். நான் அதை அப்படியே விட்டுவிடுகிறேன்.
06:49 Calculus courseக்கு திரும்பச் செல்வோம்.
06:53 அடுத்து, ஒரு assignmentஐ எப்படி உருவாக்குவது என்று கற்போம்.
06:58 Moodle.லில் உள்ள Assignment : ஆன்லைனில் சமர்பிக்கப்படலாம், இதனால் காகிதம் சேமிக்கப்படும்; audio, video, powerpoint presentationகள் போன்ற media fileகளை மாணவர்கள் சேர்க்க இது இயலச்செய்கிறது; blindஆக மாணவர்களைgrade செய்ய தேர்வு செய்யும்போது, நடுநிலையாக இருக்க ஆசிரியர்களுக்கு உதவிபுரிகிறது.
07:20 Browserக்கு திரும்பச் செல்வோம்.
07:23 மேலும் resourceகளை சேர்க்க, Turn editing on.
07:28 Basic Calculus section. ன் கீழ் வலது பக்கத்தில் உள்ள Add an activity or resource இணைப்பை க்ளிக் செய்யவும்.
07:35 ஒரு புதிய assignmentஐ சேர்க்க, பட்டியலிலிருந்து Assignmentஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
07:42 இங்கு காட்டப்பட்டுள்ளபடி, assignmentக்கு ஒரு பெயரை கொடுக்கிறேன்.
07:47 அடுத்து, assignmentஐ விவரமாக விளக்கி, மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டுவன பற்றி குறிப்பிடவும்.
07:55 இது ஒரு எளிய format செய்யப்பட்ட text editor, நீங்கள் tables, images, போன்றவைகளை சேர்க்கலாம்.
08:02 நான் இங்கு டைப் செய்துள்ள textஐ நீங்கள், AssignmentResource.odt fileலிலிருந்து, copy செய்துகொள்ளலாம்.
08:07 அது, இந்த டுடோரியலின்Code files இணைப்பில் உள்ளது.
08:13 Availability பிரிவை காண கீழே scroll செய்யவும்.
08:17 அடுத்து, சமர்ப்பிப்புகளை செய்ய தொடங்கக்கூடிய தேதி மற்றும் நேரத்தை நாம் குறிப்பிடுவோம். Enable boxகள் check செய்யப்பட்டுள்ளனவா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.
08:28 தேதியை தேர்ந்தெடுக்க, நீங்கள் calender iconஐயும் பயன்படுத்தலாம். இதை நான் 25 Nov 2018.க்கு set செய்கிறேன்.
08:39 பின் நான் Due date ஐ , 15 Dec 2018க்கு set செய்கிறேன்.
08:46 Cut-off date மற்றும்Remind me to grade by dateன் அர்த்தத்தை புரிந்துகொள்ள Help iconஐ க்ளிக் செய்யவும்.
08:54 தேவைப்பட்டால் அவற்றை set செய்யவும், இல்லையெனில் disable செய்யவும். நான் அவற்றை disable செய்கிறேன்.
09:02 Always show description checkboxஐ uncheck செய்யவும். இந்த field enable செய்யப்பட்டால், பின் மாணவர்கள், Allow submissions from dateக்கு முன்பே assignmentன் விளக்கத்தை பார்க்கலாம்.
09:17 அடுத்தது, Submission types பிரிவாகும். மாணவர்களை, ஆன்லைனில் textஐ சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டுமா அல்லது fileகளை மட்டும் upload செய்ய அனுமதிக்க வேண்டுமா என்று தீமானிக்கவும்.
09:30 நான், Online text மற்றும் File submissionகள் இரண்டையும் check செய்கிறேன். உங்கள் தேவைக்கேற்றவாறு, ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு தேர்வுகளையும் தேர்ந்தெடுக்கவும்.
09:42 நான் Word limitஐ enable செய்து, இங்கு 1000ஐ enter செய்கிறேன்.
09:48 ஒவ்வொரு மாணவரும் upload செய்யக்கூடிய fileகளின் எண்ணிக்கையையும் நீங்கள் குறிப்பிடலாம். கூடுதலாக, நாங்கள் ஏற்றுக்கொள்ளும் fileன் அதிகபட்ச அளவையும், fileகளின் typeகளையும் நாம் குறிப்பிடலாம்.
10:03 நம்முடையது, adminஆல் set செய்யப்பட்ட fileன் அதிகபட்ச அளவு, அதாவது, 128 MB,ஐ தாண்டிவிடும் என்பதை கவனிக்கவும்.
10:14 Accepted file types.க்கு அடுத்துள்ள Help iconஐ க்ளிக் செய்யவும். இந்த field ஏற்றுக்கொள்கின்ற file types களை பற்றி இங்கு நாம் படிக்கலாம்.
10:26 நான் இங்கு, .pdf,.docx,.doc என டைப் செய்கிறேன்.
10:34 Feedback types மற்றும் Submission settingsன் கீழ் உள்ள, fieldகளை மதிப்பிடவும். உங்கள் தேவைக்கேற்றவாறு, அவற்றை enable அல்லது disable செய்யலாம்.
10:46 காட்டப்பட்டுள்ளபடி, நான் settingகளை தேர்வு செய்துள்ளேன்.
10:50 இப்போது, கீழே scroll செய்து, Grade பிரிவை விரிவாக்க, அதை க்ளிக் செய்யவும்.
10:57 முன்னிருப்பானmaximum grade 100 ஆகும். இதை நாம் அப்படியே விட்டுவிடுவோம்.
11:04 பின், Grade to passஐ நான் 40 என enter செய்கிறேன். Blind markingஐ , Yesக்கு set செய்கிறேன்.
11:13 இது மதிப்பீட்டாளர்களிடமிருந்து மாணவரின் அடையாளத்தை மறைக்கும். அதனால், ஒரு ஆசிரியராக, எந்த மாணவர் எந்த assignmentஐ சமர்ப்பித்துள்ளார் என்று எனக்கு தெரியாது.
11:26 இது gradeஐ கொடுக்கும் போது, நடுநிலையாக இருக்க எனக்கு உதவி புரிகிறது.
11:31 எந்த சமர்ப்பிப்பும் செய்த பின்னர், இந்த assignmentக்கான Blind marking settingஐ மாற்றமுடியாது என்பதை கவனிக்கவும்.
11:40 நீங்களே ஆய்வு செய்துகொள்ள, assignmentக்கான வேறு பல settingகுகள் உள்ளன.
11:46 இப்போது, கீழே scroll செய்து, Save and display பட்டனை க்ளிக் செய்யவும்.
11:52 இங்கு assignment பற்றிய, சில புள்ளிவிவரங்களை நீங்கள் காணலாம். மேலும், View all submissions மற்றும் Gradeக்கான இணைப்பையும் காணலாம்.
12:03 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
12:09 இந்த டுடோரியலில் நாம் கற்றது: வெவ்வேறு வகை forumகள், விவாதத்திற்கு ஒரு forumஐ எப்படி சேர்ப்பது மற்றும் Assignmentகளை எப்படி உருவாக்குவது.
12:20 உங்களுக்கான ஒரு சிறிய பயிற்சி: முன்பு உருவாக்கியforum விவாதிப்புக்கு ஒரு replyஐ சேர்க்கவும். அந்த replyக்கு பிறகு, விவாதிப்பை பிரிக்கவும்.
12:33 ஆன்லைன் text சமர்ப்பிப்புகளை மட்டும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு assignmentஐ உருவாக்கவும். விவரங்களுக்கு, இந்த டுடோரியலின்Assignment இணைப்பை பார்க்கவும்.
12:44 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:52 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
13:02 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
13:06 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
13:20 இந்த ஸ்கிரிப்ட், நான்ஸி மற்றும் ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே.
13:31 கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree