Moodle-Learning-Management-System/C2/Categories-in-Moodle/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 09:49, 9 May 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodleலில் categoryகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Course category, categoryகள் மற்றும் subcategoryகளை எப்படி உருவாக்குவது, categoryகளில் எப்படி வேலைகளை செய்வது.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS 16.04, XAMPP 5.6.30 மூலம் பெறப்பட்ட Apache, MariaDB மற்றும் PHP, Moodle 3.3 மற்றும் Firefox web browser.
00:43 உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:47 எனினும், displayல் சில முன்னுக்கு பின் முரணான நிலைமைகளை உருவாக்குவதனால், Internet Explorerஐ தவிர்க்க வேண்டும்.
00:55 இந்த டுடோரியலை கற்பவர்கள், தங்கள் கணினியில் Moodle 3.3ஐ நிறுவியிருக்க வேண்டும்.
01:02 இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள அதற்கான Moodle டுடோரியல்களை பார்க்கவும்.
01:09 Browserக்கு மாறி, உங்கள் moodle homepageஐ திறக்கவும். XAMPP service செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.
01:18 உங்கள் admin username மற்றும் passwordன் விவரங்களை வைத்து login செய்யவும்.
01:23 இப்போது நாம், Admin’s dashboard.ல் உள்ளோம்.
01:26 இடது பக்கத்தில் உள்ள Site Administrationஐ க்ளிக் செய்யவும்.
01:31 முதலில் Courses tabஐ க்ளிக் செய்து, பின் Manage courses and categoriesஐ க்ளிக் செய்யவும்.
01:38 Course and category management என்ற தலைப்பை கொண்ட ஒரு பக்கத்திற்கு நாம் அனுப்பப்படுவோம். ஒரு course category என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வோம்.
01:50 Course categories , site userகளுக்கு Moodle courseகளை ஏற்பாடு செய்ய உதவிபுரிகிறது.
01:57 ஒரு புதிய Moodle site க்கான, முன்னிருப்பான category, Miscellaneous ஆகும்.
02:03 எந்த புதிய courseஉம், இந்த Miscellaneous categoryக்கு by defaultஆக ஒதுக்கப்படும்.
02:09 எனினும், தங்கள் coursesகளை கண்டுபிடிக்க ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடினமாக இருக்கும்.
02:16 courseகளை கண்டறிவதை எளிதாக்க, அவற்றை category'களினுள் ஒதுக்கவேண்டும்.
02:23 பெரும்பாலான institutionகள், courseகளை campus அல்லது department மூலமாக ஏற்பாடு செய்யும்.
02:30 சிறந்த தெளிவுக்கு, விளக்கமான பெயர்களைக் கொண்டிருப்பது நல்லது.
02:35 நமது courseகளை, departmentகள் வழியாக ஏற்பாடு செய்ய நாம் தொடங்குவோம். உதாரணத்திற்கு, நமது Maths category, எல்லா Math courses.களையும் கொண்டிருக்கும்.
02:47 Moodle siteக்கு திரும்புவோம்.
02:51 முதலில், Course and category management ன் page layoutஐ புரிந்துகொள்வோம்.
02:57 இடது பக்கத்தில், Navigation block இருக்கும். மற்றும் வலது பக்கத்தில், Content பகுதி இருக்கும்.
03:05 content பகுதி, 2 columnகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது: இடது column, course categoriesக்களை காட்டுகிறது. வலது column , தேர்ந்தெடுக்கப்பட்ட categoryன் கீழ் உள்ள எல்லா courseகளையும் காட்டுகிறது.
03:20 முன்னிருப்பாக, அது Miscellaneous categoryன் கீழ் உள்ள courseகளை காட்டிக்கொண்டிருக்கிறது.
03:26 இந்த viewஐ, வலது பக்கத்தில் இருக்கும் menuவிலிருந்து மாற்றலாம்.
03:32 தேர்வுகளை பார்க்க, down arrowஐ க்ளிக் செய்யவும்.
03:36 இப்போது, Course categoriesஐ க்ளிக் செய்யவும். இது, course categoriesக்களை மட்டும் காட்டுகின்ற viewக்கு மாற்றுகிறது.
03:45 மீண்டும் arrowஐ க்ளிக் செய்து, courseகளை மட்டுமே காண viewஐ மாற்றுவோம். Coursesஐ க்ளிக் செய்யவும்.
03:54 இப்போது, ஒரு புதிய dropdown box தோன்றியிருப்பதை கவனிக்கவும். இது category dropdown ஆகும்.
04:02 இங்கு நாம், courseகளை காட்ட விரும்புகின்ற categoryஐ தேர்ந்தெடுக்கலாம். தற்போது, அது Miscellaneous category.ஐ மட்டுமே கொண்டிருக்கிறது.
04:13 Viewஐ மீண்டும், Course categories and coursesக்கு மாற்றுவோம்.
04:19 இப்போது, ஒரு categoryஐ சேர்க்க, Create new category இணைப்பை க்ளிக் செய்வோம்.
04:26 Parent category dropdown boxஐ க்ளிக் செய்து, Topஐ தேர்ந்தெடுக்கவும். Category nameல், Mathematicsஐ டைப் செய்யவும்.
04:36 Category ID number , ஒரு கட்டாயமற்ற field ஆகும். இது, ஆஃப்லைன் courseகளை கொண்ட courseஐ, admin userகள் அடையாளம் காண்பதற்காகும்.
04:47 உங்கள் கல்லூரி, categoriesக்கு IDஐ பயன்படுத்துகிறது என்றால், அந்த category IDஐ இங்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த field , மற்ற Moodle userகளுக்கு புலனாகாது.
04:58 இப்போதைக்கு, Category IDஐ நான் காலியாக விடுகிறேன்.
05:03 Description textboxல், “All mathematics courses will be listed under this category.” என நான் டைப் செய்கிறேன்.
05:12 பின், Create category பட்டனை க்ளிக் செய்யவும்.
05:17 இப்போது, நாம் Course categories and courses viewல் இருக்கின்றோம்.
05:22 இங்கு நாம், 2 categoryகளை காணலாம்: Miscellaneous and Mathematics.
05:29 இந்த categoryகளை மேலும் ஒழுங்குபடுத்துவோம். தனித்தனி, 1st year Maths courses மற்றும் 2nd year Maths coursesஐ வைத்துக்கொள்வோம்.
05:40 இதற்கு, Mathematics categoryயினுள், 1st Year Maths என்ற ஒரு subcategory ஐ நாம் உருவாக்குவோம்.
05:49 பட்டியலிடப்பட்டுள்ள categoryகளுக்கு மேலுள்ள Create new category இணைப்பை க்ளிக் செய்யவும்.
05:56 ஒரு subcategoryஐ உருவாக்குவது, ஒரு categoryஐ உருவாக்குவது போலாகும்.
06:02 Top ஐ, parent categoryஆக தேர்ந்தெடுக்க வேண்டாம்.
06:06 மாறாக, இந்த subcategory இருக்க வேண்டிய category ஐ தேர்ந்தெடுக்கவும்.
06:12 அதனால், இங்கு category name.ல் நாம், 1st Year Maths என டைப் செய்வோம்.
06:18 அதற்குப் பிறகு, ஒரு Descriptionஐ டைப் செய்து, பின் Create category பட்டனை க்ளிக் செய்வோம்.
06:26 இடது பக்கத்தில் உள்ள categoryக்கள், ஒரு மர வடிவ formatல் பட்டியலிடப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
06:32 subcategoryக்களை கொண்ட ஒரு category, அதனை விரிவாக்க மற்றும் சுருக்க ஒரு toggle iconஐ கொண்டிருக்கிறது.
06:41 categoryன் வலது பக்கத்தில் இருக்கின்ற 3 iconகளை கவனிக்கவும்.
06:46 அவைகளை காண, அவற்றின் மீது வட்டமிடவும்.
06:50 கண் போன்று இருப்பது, categoryஐ மறைப்பதற்காகும்.
06:53 குறுக்கே வெட்டப்பட்ட கண், ஒரு மறைக்கப்பட்ட categoryஐ குறிக்கிறது.
07:00 அம்புக்குறி, category ஐ மேலும் கீழும் நகர்த்துவதற்காகும். கீழ் அம்புக்குறியினால் காட்டப்பட்டுள்ள ஒரு settings gear icon, ஒரு menu ஆகும்.
07:12 Miscellaneous category.க்கு, settings gear iconஐ க்ளிக் செய்யவும். categoryக்கு தொடர்புள்ள, Edit, Create new subcategory, Delete போன்ற தேர்வுகளை அது கொண்டிருக்கிறது.
07:28 இந்த menuஐ மூட, பக்கத்தில் எங்கிலும் க்ளிக் செய்யவும்.
07:32 சிறந்த பார்வைக்கு, இடது பக்கத்தில் உள்ள navigation menuவை சுருக்குகிறேன்.
07:39 அடுத்து, Mathematics category. க்கு settings gear iconஐ க்ளிக் செய்யவும்.
07:45 subcategoryக்களின் வகைப்படுத்துதலுக்கு தொடர்புடைய 4 கூடுதல் submenuக்கள் இங்குள்ளன என்பதை கவனிக்கவும்.
07:54 subcategoryக்களைக் கொண்ட எல்லா categoryகளும், இந்த menu itemகளை கொண்டிருக்கும்.
08:01 அந்த categoryல் உள்ள courseகளின் எண்ணிக்கையை, gear iconனின் வலது பக்கத்தில் உள்ள எண் குறிக்கிறது.
08:09 categoryக்களின் பட்டியலின் கீழ், வகைப்படுத்துகின்ற தேர்வுகள் உள்ளன.
08:14 இறுதியில், ஒரு subcategory.ன் parent categoryஐ மாற்றுவதற்கான தேர்வு உள்ளது.
08:21 இந்த தேர்வை பயன்படுத்த, நீங்கள் நகர்த்த விரும்புகின்ற subcategoryக்கு அடுத்துள்ள checkboxஐ நீங்கள் check செய்யவேண்டும்.
08:29 பின், புதிய parent categoryஐ தேர்ந்தெடுத்து Moveஐ க்ளிக் செய்யவும். இந்த தேர்வை, இப்போது நாம் பயன்படுத்த வேண்டாம்.
08:38 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
08:44 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Course category, categoryகள் மற்றும் subcategoryகளை எப்படி உருவாக்குவது, categoryகளில் எப்படி வேலைகளை செய்வது.
08:57 உங்களுக்கான ஒரு பயிற்சி: Mathematicsன் கீழ், 2nd Year Maths என்ற ஒரு புதிய subcategory ஐ உருவாக்கவும். category Miscellaneous.ஐ நீக்கவும்.
09:10 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
09:19 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
09:29 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
09:34 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
09:48 இந்த ஸ்கிரிப்ட், ப்ரியங்காவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஸ்போகன் டுடோரியல் குழுவுடன், நான்ஸி வர்க்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree