Linux/C2/Working-with-Linux-Process/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:56, 2 September 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 லீனக்ஸ் ப்ராசஸ்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
0:05 நான் உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன்.
0:09 லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் துவக்க பாடங்களும் கமாண்ட் கள் குறித்த அடிப்படை அறிவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
0:16 ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது. http://spoken-tutorial.org/
0:28 இங்கு எல்லா கமாண்ட் களும் case sensitive எனவும், அவற்றை சார்ந்து வேலை செய்யும் என நினைவில் கொள்க. இதில் குறிப்பாக சொன்னால் ஒழிய எல்லாம் கீழ் நிலை எழுத்துக்களே
0:38 ப்ராசஸை புரிந்து கொள்ள ஒரு சிறு விளக்கம் தருகிறேன்.
0:42 லீனக்ஸ் இல் இயங்கும் எல்லாமே ஒரு ப்ராசஸ்.
0:46 நம் கமாண்ட்களை ஏற்று இயக்கும் ஷெல் ஒரு ப்ராசஸ்.
0:51 டெர்மினல் இல் டைப் செய்யும் கமாண்ட்கள் இயங்கும்போது ப்ராசஸ்கள் ஆகின்றன.
0:56 இந்த டுடோரியலை விடியோவில் பார்கிறீர்களே இது ஒரு ப்ராசஸ்.
1:00 ஸ்போக்கன் டுடோரியல் வலைத்தளத்தை திறந்த ப்ரௌசர் ஒரு ப்ராசஸ்.
1:05 இயங்கும் ஷெல் ஸ்கிரிப்டுகள் ப்ராசஸ்கள்.
1:11 ஆக ப்ராசஸ் என்பது இயங்கும் அல்லது ஓடும் ஒரு ப்ரோக்ராம் என வரையறுக்கலாம்.
1:17 ப்ராசஸ்கள் நம்மை போலவே, பிறக்கும், இறக்கும். அவற்றுக்கு தாய் உண்டு, குழந்தைகள் உண்டு!
1:28 முதலில் ஷெல் ப்ராசஸை கற்றுக்கொள்ளலாம்.
1:31 கணினினுள் நுழைந்த உடனேயே லீனக்ஸ் கெர்னல்... ஷெல் ப்ராசஸ் ஐ துவக்குகிறது.
1:36 லீனக்ஸ் கெர்னல் என்பது லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டமின் உள்கரு.
1:43 லீனக்ஸ் ஐ இயக்கும் மிக முக்கிய தொகுதிகள் இதில் இருக்கின்றன. ஷெல் மற்ற எல்லா பயனர் கமாண்ட் ப்ராசஸ்களையும் உருவாக்குகிறது.
1:53 ஒரு டெர்மினல் ஐ திறக்கலாம்.
1:57 டெர்மினல் இல் காணும் டாலர் குறி கமாண்ட் ப்ராம்ப்ட் ஆகும்.
2:03 இது ஷெல் ப்ராசஸ் இன் வேலை ஆகும்.
2:07 கமாண்ட் ஐ டைப் செய்யலாம். உதாரணமாக “டேட்[date]”. என்டர் செய்க
2:13 இதை செய்த உடனேயே ஷெல் ப்ராசஸ் டேட் என்ற ப்ராசஸ் ஐ துவக்குகிறது.
2:18 ஷெல் ப்ராசஸ் டேட் ப்ராசஸ் ஐ உருவாக்கியதால் ஷெல் ப்ராசஸ் டேட் ப்ராசஸின் தாய் எனலாம். டேட் ப்ராசஸ் ஷெல் ப்ராசஸ் இன் சேய் எனலாம்.
2:30 டேட் ப்ராசஸ்... தேதியையும் நேரத்தையும் காட்டிய பின் இறந்துவிடும்.
2:40 ஷெல் இன்னொரு ஷெல் ப்ராசஸ் ஐ கூட உருவாக்கலாம். இப்படி ப்ராசஸ் ஒன்றை உருவாக்குவதை ஸ்பானிங் எ ப்ராசஸ் என்பர்.
2:50 இன்னொரு ஷெல் ப்ராசஸ் ஐ ஸ்பான் செய்ய டெர்மினல் க்கு போய் "எஸ்ஹெச்" என டைப் செய்து என்டர் செய்க.
3:00 டெர்மினலில் ஒரு புதிய ப்ராம்ப்ட் தோன்றுவதை காணலாம். ஒரிஜினல் ஷெல், அதை ஷெல் 1 எனலாம் - ஒரு சேய் ஷெல் அல்லது சப் ஷெல் ஐ பிரசவித்தது. இதை ஷெல் 2 எனலாம்
3:13 கமாண்ட் ஐ புதிய கமாண்ட் ப்ராம்ப்ட் இல் உள்ளிடலாம். இதில் எல்எஸ் கமாண்டை இயக்கலாம்.
3:20 டைப் செய்க: “எல்எஸ்”. என்டர் செய்க. பைல்கள் டிரக்டரிகள் லிஸ்ட் ஐ பார்க்கலாம்.
3:32 இப்போது ஒரு புதிய எல்எஸ் என்ற ப்ராசஸ் உருவாக்கப்பட்டது.
3:35 இங்கு, ஷெல் 2 எல்எஸ் இன் தாய், ஷெல் 1 எல்எஸ் இன் பாட்டி. எல்எஸ் ஷெல் 2 இன் சேய், ஷெல் 2 என்பதே ஷெல்1 இன் சேய்.
3:56 ஷெல் 2 ஐ கொல்ல, புதிய ப்ராம்ப்ட் இல் “எக்சிட்” என டைப் செய்து என்டர் செய்க.
4:04 ஷெல் 2 இறந்து போகும். நாம் முந்தைய கமாண்ட் ப்ராம்ப்ட் இல் இருப்போம்.
4:12 நமக்கும் ப்ராசஸ்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை சொல்ல, நமக்கு சில குணங்கள் - அட்ரிப்யூட்ஸ் - இருக்கும். இந்த அட்ரிப்யூட்ஸ் நம் பெயரோ, தாய் தந்தை பெயரோ, பிறந்த தேதியோ, பான் அட்டை எண்ணோ ஏதாகிலும் இருக்கலாம்.
4:26 அதே போல ப்ராசஸ்களுக்கும் அட்ரிப்யூட்ஸ் உண்டு. அது பிஐடி[PID](அதாவது ப்ராசஸ் ID), பிபிஐடி[PPID](பேரன்ட் ப்ராசஸ் ஐடி), துவக்கிய நேரம் - இவை போல
4:38 இம்மாதிரியான அட்ரிப்யூட்ஸ் முக்கால்வாசி கெர்னல் ஆல் ஒரு ப்ராசஸ் டேபிள் என்பதில் பராமரிக்கப்படும்.
4:43 ஒவ்வொரு ப்ராசஸ் க்கும் ஒரு தனித்துவமான முழு எண்ணால் அடையாளம் காணப்படும். பிஐடி[PID]. இது ப்ராசஸ் பிறக்கும்போது கெர்னல் ஆல் தரப்படும்.
4:51 புதிய ப்ராசஸ் ஐ- அதை P1 எனலாம்- ஸ்பான் செய்த தாயின் பிஐடி[PID]யானது, P1 ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] எனப்படும்.
5:00 நடப்பு ஷெல் இன் பிஐடி[PID] ஐ அறிய “எகோ ஸ்பேஸ் டாலர் டாலர்” பின் என்டர் செய்க.
5:11 ஒரு எண் காட்டப்படும். இதுவே நடப்பு ஷெல்லின் பிஐடி[PID].
5:23 ப்ராசஸ்கள் பற்றி பேசும்போது அடிக்கடி பயன்படுத்தக் கூடிய கமாண்ட் பிஎஸ்.
5:29 பிஎஸ் அல்லது ப்ராசஸ் ஸ்டேடஸ் கணினியில் இயங்கும் எல்லா ப்ராசஸ்களையும் காட்டும்.
5:34 இந்த கமாண்ட் ஐ ஆப்ஷன்கள் ஏதுமின்றி இயக்கும்போது என்ன நடக்கிறது....
5:40 டைப் செய்க: “பிஎஸ்” பின் என்டர் செய்க.
5:47 இவ்வாறு ப்ரோக்ராமை இயக்கும் பயனர் துவக்கிய எல்லா இயங்கும் ப்ராசஸ்களின் பட்டியலையும் காணலாம்.
5:54 ப்ராசஸ் களின் பெயரை சிஎம்டி[CMD] -ல் காணலாம்.
5:58 இதைத்தவிர பிஐடி[PID], டிடிஒய்[TTY] அல்லது ப்ராசஸ் இயங்கும் கன்சோல், நேரம் அதாவது...
6:06 ப்ராசஸ் எடுத்துகொள்ளும் நேரம், ப்ராசஸ் துவங்கியதிலிருந்து எடுத்துக்கொண்டுள்ள நேரம் ஆகியவற்றை காணலாம்.
6:12 என் கணினியில் இரண்டு ப்ராசஸ்களை காட்டுகிறது.
6:16 ஒன்று பாஷ், நாம் பயன்படுத்தும் ஷெல் ப்ராசஸ். இரண்டாவது இயங்கிக்கொண்டு இருக்கும் பிஎஸ் ப்ராசஸேதான்.
6:25 முக்கிய விஷயம் எகோ ஸ்பேஸ் டாலர் டாலர் கமாண்ட் காட்டும் ஷெல் ப்ராசஸ் இன் பிஐடி[PID] ஐ தான் இதுவும் காட்டுகிறது.
6:35 சப் ஷெல் ஒன்றை ஸ்பான் செய்தால் நடப்பதை பார்க்கலாம். “எஸ்ஹெச்” என டைப் செய்து என்டர் செய்க.
6:42 புதிய வரியில் துவங்கும் புதிய ப்ராம்ப்ட் இல் “பிஎஸ்” என டைப் செய்து என்டர் செய்க.
6:51 பட்டியலில் 3 ப்ராசஸ்களை பார்க்கலாம்.எஸ்ஹெச் என்ற ப்ராசஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
6:57 இங்கு மீண்டும் பாஷ் ப்ராசஸ் இன் பிஐடி[PID] முன்னே கண்டதே.
7:05 பிஎஸ் பல ஆப்ஷன் களுடன் வருகிறது. முதல் ஆப்ஷன்... லிஸ்ட் செய்யப்பட்ட ப்ராசஸ்களுக்கு அதிக அட்ரிப்யூட்ஸ் களை காட்டுகிறது.
7:13 டைப் செய்க: “பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் எப்[f]”. என்டர் செய்க. முன் போலவே இதுவும் மூன்று ப்ராசஸ்களை லிஸ்ட் செய்கிறது.
7:28 பாஷ், எஸ்ஹெச் மற்றும் பிஎஸ் மைனஸ் எப்[f]
7:31 ஒரே வித்தியாசம் என்னவென்றால் இன்னும் அதிக அட்ரிப்யூட்ஸ் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன.
7:36 யூஐடி[UID]... ப்ராசஸ் ஐ துவக்கிய பயனர் பெயர் மற்றும் ப்ராசஸ் ஐ உருவக்கிய தாய் பிபிஐடி[PPID] ஐயும் காட்டுகிறது.
7:47 உதாரணமாக பாஷ் ப்ராசஸ் எஸ்ஹெச் ப்ராசஸ் இன் தாய். ஆகவே பாஷ் இன் பிஐடி[PID] எஸ்ஹெச் ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] யேதான்.
8:00 அதே போல எஸ்ஹெச் ப்ராசஸ்... பிஎஸ் ப்ராசஸ் இன் தாய் என்பதால், எஸ்ஹெச் ப்ராசஸ் இன் பிஐடி[PID]... பிஎஸ் மைனஸ் எஃப் ப்ராசஸ் இன் பிபிஐடி[PPID] யேதான்.
8:17 சி[C] என்பது ப்ராசஸர் பயன்பாடு. நடப்பில் இது முழு எண்ணில் குறிக்கப்பட்ட ப்ராசஸின் வாழ்நாளில் ப்ராசஸரின் சத விகித பயன்பாடு.
8:26 பயன்பாடு உதாசீனம் செய்யும் அளவில் இருந்தால் 0 எனக்காட்டப்படும்.
8:32 எஸ்டைம் பீல்ட், ப்ராசஸ் துவங்கிய நேரத்தை காட்டுகிறது. மீதி அனைத்தையும் பிஎஸ் ஐ பார்க்கும் போதே பார்த்தோம்.
8:42 ப்ராசஸ்கள் இரண்டு வகையாகும். முதலாவது பயனர்களால் துவக்கப்படும் யூசர் ப்ராசஸ்கள்.
8:49 உதாரணமாக 'பிஎஸ்'. டெர்மினலில் இயக்கும் முக்காலே முன்று வீசம் கமாண்ட் களும் இந்த வகைதான்.
8:54 இரண்டாவது கணினியே துவக்கிய சிஸ்டம் ப்ராசஸ்கள். கணினி துவக்கப்படும் போது பயனர் லாக் இன் செய்யும் போது இவை துவக்கப்படுகின்றன.
9:05 சிஸ்டம் ப்ராசஸ்க்கு நல்ல உதாரணம் பாஷ்.
9:09 சில சமயம் நாம் எல்லா சிஸ்டம் ப்ராசஸ்கள் மற்றும் யூசர் ப்ராசஸ்களையும் காண விரும்பலாம்
9:17 அப்போது மைனஸ் இ[e] அல்லது மைனஸ் மேலெழுத்து ஏ[A] ஆப்ஷன் ஐ பயன்படுத்துவோம்.
9:23 டைப் செய்க:“பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் இ[e]” என்டர் செய்க
9:32 ப்ராசஸ்களின் பெரிய லிஸ்ட் ஐ காணலாம்.
9:35 வெளியீட்டை பல பக்கங்களில் காண டைப் செய்க:
9:40 “பிஎஸ் ஸ்பேஸ் மைனஸ் இ ஸ்பேஸ் செங்குத்துகோடு ஸ்பேஸ் மோர்”. என்டர் செய்க
9:52 மோர் மூலம் ஒரு சாளரத்தில் எத்தனை காட்ட முடியுமோ அவைமட்டும் காட்டப்படுகிறது.
9:58 என்டரை அழுத்த ப்ராசஸ்கள் லிஸ்ட் இல் ஸ்க்ரால் செய்து அடுத்ததை காண்போம்.
10:03 ப்ராசஸ்கள் லிஸ்ட் இல் முதலில் காணும் ப்ராசஸ் சுவாரசியமானது. இது இனிட் ப்ராசஸ்.
10:09 இதிலிருந்துதான் எல்லா ப்ராசஸ்களும் ஸ்பான் ஆகின்றன.
10:12 இதன் பிஐடி[PID] 1.
10:16 ப்ராம்ப்ட் க்கு திரும்பி வர க்யூ[q] ஐ அழுத்தவும்.
10:24 இதில் ப்ராசஸ், ஷெல் ப்ராசஸ், ப்ராசஸ் ஸ்பானிங், ப்ராசஸ் அட்ரிப்யூட்ஸ் ப்ராசஸ்களின் பல் வேறு வகைகள் மற்றும்
10:37 பிஎஸ் கமாண்ட் இன் பயனையும் கண்டோம். இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கிறது
10:45 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:55 மேற்கொண்டு விவரங்களுக்கு இந்த இணைப்பை பாருங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
11:07 மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Pravin1389, Priyacst