Linux-AWK/C2/Variables-and-Operators-in-awk/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:15, 1 July 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 awk commandல், variableகள் மற்றும் operatorகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: - User defined variableகள்
00:12 Operatorகள், BEGIN மற்றும்END statementகள்
00:17 இதை, சில உதாரணங்கள் மூலமாக நாம் செய்வோம்.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04ஐ பயன்படுத்துகிறேன்.
00:26 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, முந்தையLinux டுடோரியல்களை இந்த வலைத்தளத்தில் நீங்கள் படித்திருக்க வேண்டும்.
00:33 C அல்லது C++ போன்ற பொதுவான programming languageகளில் பயன்படுத்தப்படுகின்ற basic operatorகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
00:41 இல்லையெனில், எங்கள் வலைத்தளத்தில் உள்ள அதற்கான டுடோரியல்களை படிக்கவும்.
00:47 ஒரு filter மற்றும் ஒரு programming languageன் சக்தியைawk ஒருங்கிணைக்கிறது.
00:52 அதனால், அது variableகள், constantகள், operatorகள், போன்றவற்றை ஆதரிக்கிறது.
00:58 awk ல் உள்ள variableஐ பற்றி பார்ப்போம்.
01:02 ஒரு variable , ஒரு மதிப்பை மேற்கொள் காட்டுகின்ற ஒரு identifier ஆகும்.
01:07 Awk , user-defined variableகள் மற்றும்built-in variableகளை ஆதரிக்கின்றது.
01:12 இந்த டுடோரியலில், user-defined variableகளைப் பற்றி நாம் கற்போம்.
01:17 User-defined variableகளுக்கு, variableஐ declare செய்யத்தேவையில்லை.
01:22 Variableகளை வெளிப்படையாக initialize செய்யவேண்டாம்.
01:26 Awk , தானாகவே அவற்றை பூஜ்யம் அல்லது null stringகுக்கு initialize செய்கிறது.
01:32 ஒரு variable , ஒரு எழுத்துடன் தொடங்கி, எழுத்துகள், digitகள் மற்றும் underscoreகளுடன் தொடரவேண்டும். Variableகள் case-sensitive ஆகும்.
01:43 அதனால், capital “S”உடன் கூடிய salary யும், சிறிய "s"உடன் கூடிய salary யும் இரண்டு வேறுபட்ட variableகள் ஆகும்.
01:50 இப்போது, சில உதாரணங்களை பார்ப்போம்.
01:53 CTRL + ALT மற்றும் T keyகளை அழுத்தி, terminal ஐ திறக்கவும்.
01:58 Terminalலில் டைப் செய்க: awk space opening single quote opening curly brace small x equal to 1 semicolon capital X equal to within double quotes capital A semicolon small a equal to within double quotes awk semicolon small b equal to within double quotes tutorial.. Enter.ஐ அழுத்தவும்.
02:25 type print x. Enterஐ அழுத்தவும்.
02:29 print capital X . Enterஐ அழுத்தவும்.
02:34 print a . Enterஐ அழுத்தவும்.
02:37 print b . Enterஐ அழுத்தவும்.
02:40 print a space b . Enterஐ அழுத்தவும்.
02:44 print small x space b . Enterஐ அழுத்தவும்.
02:49 print small x plus capital X closing curly brace closing single quote. Enterஐ அழுத்தவும்.
02:57 நாம் ஒரு file பெயரை கொடுக்காததனால், standard inputல் இருந்து awk க்கு சில input தேவைப்படும்.
03:03 அதனால், நாம் எந்த எழுத்தையும் டைப் செய்யலாம். உதாரணத்திற்கு, a . பின், Enterஐ அழுத்தவும்.
03:10 இந்த உதாரணம், சில விஷயங்களை காட்டுகிறது. Variableகளை, ஒரு எண்ணுடன் initialize செய்யலாம்.
03:18 மேலும், அதன் மதிப்பை, ஒரு ஒற்றை character அல்லது ஒரு string.கினால் initialize செய்யலாம்.
03:23 மதிப்பு, ஒரு character அல்லது ஒரு stringஆக இருந்தால், variable , double quoteகளினுள் உள்ள மதிப்புடன் initialize செய்யப்படுகிறது.
03:31 நாம், variableகளின் மதிப்பை காணலாம்.
03:35 சிறிய x மற்றும் capital X இரண்டும் வெவ்வேறு variableகளாக கருதப்படுவதை கவனிக்கவும்.
03:41 இது, variableகள் case sensitive. என நிரூபிக்கின்றன.
03:45 மேலும், இரண்டு stringகளை எப்படி concatenate செய்யலாம் என்பதை இது காட்டுகிறது.
03:50 இங்கு, variableகள் சிறிய a மற்றும் சிறிய b , concatenate செய்யப்பட்டுள்ளன.
03:55 அதனால், string concatenation operator ஒரு space ஆகும்.
04:00 இவ்வாறே, ஒரு எண்ணாகிய சிறிய x, மற்றும் string bஐ நாம் concatenate செய்யும் போது, x தானாகவே ஒரு stringஆக மாற்றப்படுகிறது. மற்றும், concatenate செய்யப்பட்ட output , 1tutorial. ஆகிறது.
04:13 String தானாகவே ஏன் மாறுகிறது?
04:16 அது ஏனெனில், இங்கு, அதாவது x மற்றும் bக்கு இடையே, awk ஒரு string concatenation operator space ஐ கண்டுபிடிக்கிறது.
04:25 இப்போது, சிறிய x plus capital Xன் outputஐ காணவும். இங்கு, arithmetic operator plus. ஐ நாம் கொண்டுள்ளோம்.
04:33 அதனால் X, பூஜ்யம் எண்ணிற்கு தானாகவே மாற்றப்படுகிறது. மற்றும் கூட்டுதலின் output , 1 எண் ஆகிறது.
04:42 இதுவரை, நாம் சில operatorகளை பார்த்துள்ளோம்.
04:49 Expressionகளில், பல்வேறு operatorகளை பயன்படுத்தலாம்.
04:53 காணொளியை இங்கு இடைநிறுத்தி, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எல்லா operatorகளையும் பார்க்கவும்.
04:58 இந்த அடிப்படை operatorகள், உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நான் அனுமானித்து கொள்கிறேன்.
05:02 இல்லையெனில், C and C++ தொடரில் உள்ள operatorகள் குறித்த டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
05:09 இந்த அனைத்து operatorகளின் பணியை நான் விவரமாக விளக்கப்போவதில்லை.
05:14 இதில் விதிவிலக்காக இருப்பது, உங்களுக்கு புதிதாக இருக்கக்கூடியstring matching operator, ஆகும். இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.
05:23 awkdemo.txt என்று பெயரிடப்பட்ட ஒரு file , Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உங்கள் கணினியில் தரவிறக்கிக் கொள்ளவும்.
05:31 Terminalலுக்கு திரும்பவும். Ctrl மற்றும் D keyகளைப் பயன்படுத்தி, முந்தைய செயல்முறையை முடிப்போம்.
05:38 நான் terminalஐ clear செய்கிறேன்.
05:41 இப்போது, cd commandஐ பயன்படுத்தி, நீங்கள் awkdemo.txt fileஐ சேமித்த folderக்கு செல்லவும்.
05:48 இந்த fileஐ இப்போது பார்ப்போம்.
05:52 உதாரணத்திற்கு, தேர்ச்சி பெற்ற, ஆனால் 80க்கு கீழ் மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை நாம் கண்டுபிடிக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
05:58 இங்கு நாம், இரண்டு வெவ்வேறு fieldகளை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.
06:02 அச்சூழ்நிலைகளில், நாம் awk's relational operatorகளை பயன்படுத்தலாம்.
06:07 இந்த operatorகள், stringகள் மற்றும் numberகள் இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்.
06:12 அதனால், terminalலில் டைப் செய்க: awk space hyphen capital F within double quotes vertical bar space Within single quotes dollar 5 equal to equal to within double quotes Pass space ampersand ampersand space dollar 4 less than 80 space within curly braces print space plus plus x coma dollar 2 coma dollar 4 coma dollar 5 space awkdemo.txt. பின், Enterஐ அழுத்தவும்.
06:54 இந்த command, பல விஷயங்களை காட்டுகிறது. ஒன்று, நாம் ஒரு string ஐ ஐந்தாவது fieldஉடன் ஒப்பிடுகிறோம்.
07:01 இரண்டாவது, நாம் நான்காவது fieldஐ மட்டும் ஒரு எண்ணுடன் ஒப்பிடுகிறோம்.
07:06 மூன்றாவது, ampersand operator.ஐ பயன்படுத்தி, இரண்டு அல்லது மூன்று ஒப்பீடுகளை சேர்க்க இயலுகிறோம்.
07:13 குறிப்பிட்ட எண்கள் அல்லது stringகளுக்கு பதிலாக, regular expressionகளையும் ஒப்பிடலாம்.
07:19 நாம் slideல் கண்டது போல், இந்த நோக்கத்திற்கு, நாம் tilde மற்றும் exclamation tilde operatorகளை கொண்டுள்ளோம்.
07:27 இப்போது நமக்கு, தேர்ச்சி பெற்ற கணிப்பொறி அறிவியல் மாணவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
07:32 கணினிகள், சிறிய மற்றும் capital C இரண்டையும் கொண்டிருக்கலாம் என்பதனால், நாம் ஒரு regular expression.ஐ பயன்படுத்துவோம்.
07:40 நாம் டைப் செய்வது: awk space hyphen capital F within double quotes pipe symbol space within single quote dollar 5 equal to equal to within double quotes Pass ampersand ampersand space dollar 3 tilde slash within square brackets small c capital C computers slash space within curly braces print space plus plus small x comma dollar 2 comma dollar 3 coma dollar 5 space awkdemo.txt. பின், Enterஐ அழுத்தவும்.
08:24 நாம் ஒப்பீட்டை மறுக்க விரும்பினால், exclamation tilde operatorஐ பயன்படுத்தி செய்யலாம்.
08:30 இப்போது நமக்கு, தேர்ச்சி பெற்ற கணினி மாணவர்கள் அல்லாத அனைவரின் ஒரு பட்டியல் வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
08:35 முந்தைய commandஐ பெற, மேலே up arrowவை பயன்படுத்தவும்.
08:39 dollar 3க்கு பக்கத்தில், exclamation symbol ஐ சேர்த்து, பின் Enter.ஐ அழுத்தவும்.
08:47 அடுத்து, அதே fileலில் உள்ள காலி வரிகளின் எண்ணிக்கையை எண்ணுவோம்.
08:52 Fileஐ திறந்து, எத்தனை காலி வரிகள் இருக்கின்றன என்று சரிபார்க்கவும். அது, 3 காலி வரிகளை கொண்டிருக்கிறது.
09:00 இப்போது, awkஐ பயன்படுத்தி, காலி வரிகளின் எண்ணிக்கையை எண்ண, டைப் செய்க: awk space within single quote within front slash caret symbol dollar space within curly braces x equal to x plus 1 semicolon space print x space awkdemo.txt . பின் Enter.ஐ அழுத்தவும்.
09:26 இறுதி பதிலாக நாம், 3ஐ பெற்றிருக்கிறோம்.
09:30 Caret குறியீடு, வரியின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது மற்றும் dollar, வரியின் முடிவை குறிப்பிடுகிறது.
09:37 அதனால், ஒரு காலியான வரி, regular expression caret-dollar.லினால் குறிப்பிடப்படுகிறது.
09:43 நாம் xன் மதிப்பை initialize செய்யவில்லை என்பதை கவனிக்கவும். Awk , x ஐ , முதல் மதிப்பான பூஜ்யத்திற்கு initialize செய்த்துள்ளது.
09:51 இந்த command, காலி வரிகளின் எண்ணிக்கையை நமக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இது ஏனெனில், ஒவ்வொரு முறை ஒரு காலி வரி கண்டுபிடிக்கப்படும் போது, x ஒன்று அதிகரிக்கப்பட்டு, பின் print செய்யப்படும்.
10:02 நமது கடைசி commandல், காலி வரிகளின் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற எண்ணிக்கையை நாம் பார்த்தோம். ஆனால் நமக்கு, காலி வரிகளின் மொத்த எண்ணிக்கையை மற்றும் print செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
10:12 அதனால், முழு fileஐயும் கடந்தவுடன், x ஐ ஒரு முறை மட்டும் நாம் print செய்யவேண்டும்.
10:19 Outputன் அர்த்தத்தை கூறுகின்ற ஒரு தலைப்பையும் நாம் கொடுக்கவேண்டும்.
10:25 இம்மாதிரி தேவைகளின் போது, awk , BEGIN மற்றும் END பிரிவுகளை கொடுக்கிறது.
10:30 BEGIN பிரிவு, process செய்வதற்கு முன் தேவையான செயல்முறைகளைக் கொண்டிருக்கிறது.
10:34 Main input loop செயல்படுத்தப்படும் முன், இந்தப் பிரிவு செயல்படுத்தப்படுகிறது.
10:40 process செய்யப்பட்ட பின் தேவையான செயல்முறைகளை, இந்த END பிரிவு கொண்டிருக்கிறது.
10:45 Main input loop நிறுத்தப்பட்ட பிறகு இந்தப் பிரிவு செயல்படுத்தப்படுகிறது. BEGIN மற்றும் END செயல்முறைகள் கட்டாயமற்றதாகும்.
10:55 இதைச் செய்யக்கற்போம். Terminalலில் டைப் செய்க: awk space opening single quote BEGIN incaps within curly brace print space within double quotes The number of empty lines in awkdemo are . பின் Enter.ஐ அழுத்தவும்.
11:14 within front slash caret symbol dollar symbol space within curly braces x equal to x plus 1 . பின் Enter.ஐ அழுத்தவும்.
11:26 end space within curly braces print space x close single quote space awkdemo.txt. பின் Enter.ஐ அழுத்தவும்.
11:39 நாம் விரும்பிய output நமக்கு கிடைக்கவில்லை. நமது output , 3 ஆக இருக்கவேண்டும். ஏனெனில், நமது fileலில் 3 காலி வரிகள் உள்ளன.
11:48 என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நாம் end ஐ , upper case END. ஆக எழுதி இருக்கவேண்டும்.
11:54 அதனால், நாம் commandஐ மாற்றுவோம்.
11:57 முந்தைய செயல்படுத்தப்பட்ட commandஐ terminalலில் பெற, up arrow keyஐ அழுத்தவும்.
12:03 இப்போது, lower case end ஐ upper case END. க்கு மாற்றவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
12:11 இப்போது, காலி வரிகளின் மொத்த எண்ணிக்கை, outputல் காட்டப்படுகிறது.
12:16 அடுத்து, awkdemo.txt fileலில் நாம் கண்டுபிடித்த எல்லா மாணவர்களின் சராசரி வருமானத்தை கண்டுபிடிப்போம்.
12:24 அதைப் பெற, terminalலில் காட்டப்பட்டுள்ளபடி, commandஐ டைப் செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும். பின், நாம் விரும்பிய output கிடைக்கிறது.
12:35 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல,
12:40 இந்த டுடோரியல் நாம் கற்றது: awkல் User defined variableகள்
12:45 Operatorகள், BEGIN மற்றும்END statementகள்
12:49 பயிற்சியாக, கடைசி fieldன் மதிப்பு 5000க்கு மேல் இருக்கும் மற்றும் மின்துறையைச் சார்ந்த மாணவரின் ஒவ்வொரு வரியையும் print செய்யவும்.
13:00 Outputல் “Average marks” என்ற தலைப்புடன், எல்லா மாணவர்களின் சராசரி மதிப்பெண்களை print செய்யவும்.
13:07 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
13:14 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு மற்றும் nbsp குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
13:23 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
13:27 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும்.
13:32 உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார்.
13:42 ஸ்போகன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்காகும்.
13:47 இதில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம்.
13:51 இது குழப்பத்தை குறைக்க உதவும். குழப்பம் குறைந்தால், இந்த விவாதத்தை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம்.
13:59 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
14:10 இந்த ஸ்கிரிப்ட், அந்தராவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து பிரவீன். கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree