Linux-AWK/C2/More-on-Single-Dimensional-Array-in-awk/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 09:50, 5 July 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search


Time
Narration
00:01 Awkல், Single dimensional array பற்றி மேலும் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- fileஉடன் awk array ஐ பயன்படுத்துவது
00:13 ஒரு arrayன் elementகளை ஸ்கேன் செய்வது
00:16 Delete statement
00:18 ARGV array மற்றும்ENVIRON array
00:22 இதை சில உதாரணங்கள் மூலம் நாம் செய்வோம்.
00:25 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04 Operating System மற்றும் gedit text editor 3.20.1ஐ பயன்படுத்துகிறேன்.
00:37 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:41 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, எங்கள் வலைத்தளத்தில் உள்ள, array பற்றிய முந்தையawk டுடோரியலை நீங்கள் படித்திருக்க வேண்டும்.
00:48 C அல்லதுC++ போன்ற ஏதேனும் ஒரு programming languageன் அடிப்படை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்.
00:55 இல்லையெனில், எங்கள் வலைத்தளத்தில் உள்ள அதற்கான டுடோரியல்களை படிக்கவும்.
01:00 இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள fileகள், இந்த டுடோரியல் பக்கத்தில் உள்ள Code Files இணைப்பில் உள்ளது. அவற்றை தரவிறக்கி, extract செய்துகொள்ளவும்.
01:10 முன்பு, நாம் awk arrayக்களின் சில அம்சங்களை பார்த்தோம்.
01:14 இப்போது, ஒரு fileஉடன் awk arrayஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
01:19 நாம் முன்பு பயன்படுத்திய, awkdemo.txt என்ற அதே fileஐ பயன்படுத்துவோம்.
01:25 இங்கு, முதல் field , roll number மற்றும் ஆறாவது field , மாணவரின் உதவித்தொகை ஆகும்.
01:32 முதலில், எல்லா மாணவர்களுக்குமான HRA ஐ கணக்கிடுவோம்.
01:36 இங்கு HRA , உதவித்தொகையின் 30 சதவிகிதம் ஆகும்.
01:41 நான் ஏற்கனவே codeஐ எழுதி, அதை calculate_hra.awk என சேமித்துள்ளேன். இப்போது, அந்த fileஐ பார்ப்போம்.
01:51 BEGIN sectionனுள், field separator , Pipe symbolஉடன் initialize செய்யப்படுகிறது.
01:57 பின், action section ல் நாம் array elementகளை initialize செய்கிறோம்.
02:02 ஒரு input fileன் ஒவ்வொரு வரிக்கும், இந்த section , ஒருமுறை செயல்படுத்தப்படும்.
02:08 நான் HRAஐ ஒரு array variableஆகவும், dollar one indexஆகவும் declare செய்துள்ளேன்.
02:14 இங்கு, dollar 1 , முதல் field , அதாவது ரோல் நம்பரை குறிக்கிறது. மற்றும் மதிப்புக்கு, dollar 6ஐ பூஜ்யம் புள்ளி 3 இனால் பெருக்கவும். இங்கு, dollar six என்பது உதவித்தொகையின் மதிப்பாகும்.
02:27 அதனால், index roll numberல் உள்ள array HRA, அதற்குரியHRA தொகையை ஒரு மதிப்பாக கொண்டிருக்கும்.
02:35 இந்த arrayன் எல்லா elementகளையும் எப்படி ஸ்கேன் செய்வது?
02:39 for loopன் இந்த மாறுநிலையை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
02:43 arrayல் உள்ள ஒவ்வொரு indexற்கும், இந்தloop, statementகளை ஒருமுறை செயல்படுத்துகிறது.
02:48 Variable var க்கு, index ன் மதிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக set செய்யப்படும்.
02:53 Code, END sectionஇனுள் எழுதப்படுகிறது.
02:57 Input fileன் எல்லா வரிகளையும்awk process செய்த பிறகு, இந்த section செயல்படுத்தப்படும்.
03:04 Variable i க்கு, ஒவ்வொரு indexன் மதிப்பு அல்லதுroll number ஒன்றன் பின் ஒன்று initialize செய்யப்படும்.
03:10 for loopன் ஒவ்வொரு iterationலும், ஒரு குறிப்பிட்ட roll numberக்கான HRA print செய்யப்படும்.
03:16 Terminalக்கு திரும்பி, fileஐ செயல்படுத்தவும். CTRL, ALT மற்றும் T keyகளை அழுத்தி, terminalஐ திறக்கவும்.
03:24 cd commandஐ பயன்படுத்தி, நீங்கள் தரவிறக்கி, extract செய்த Code Fileகளை வைத்துள்ள folderக்கு செல்லவும்.
03:31 இப்போது டைப் செய்க: awk space hyphen சிறியf space calculate_hra.awk space awkdemo.txt . Enter.ஐ அழுத்தவும்.
03:45 Output , எல்லா மாணவர்களுக்குமானroll number மற்றும் HRAஐ காட்டுகிறது.
03:50 Roll S02ஐ கொண்ட மாணவருக்கான recordஐ நான் நீக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
03:56 அதனால், index S02.ல் உள்ள array elementஐ நாம் நீக்கவேண்டும்.
04:01 calculate_hra.awk codeஐ பயன்படுத்தி நான் இதை செய்கிறேன்.
04:06 for loopக்கு முன் Enterஐ அழுத்தி, பின்வரும் codeஐ டைப் செய்யவும்: delete space hra சதுர அடைப்புக்குறிகளினுள் இரட்டை மேற்கோள்களினுள் S02
04:19 Fileஐ சேமித்து, terminal.க்கு மாறவும்.
04:23 Terminalஐ clear செய்கிறேன்.
04:26 முன்பு செயல்படுத்தப்பட்டcommandஐ பெற, Up arrow key ஐ அழுத்தவும். Enterஐ அழுத்தவும்.
04:33 Roll number S02ஐ கொண்ட மாணவருக்கானrecord, outputல் print செய்யப்படவில்லை.
04:39 அதனால், delete commandஐ பயன்படுத்தி, எந்த array element ஐயும் நீக்கலாம்.
04:44 Indexஉடன், arrayன் பெயரை நீங்கள் குறிப்பிடவேண்டும்.
04:48 ஒரு arrayஐ நான் நீக்க விரும்பினால், என்ன செய்யவேண்டும்? delete statementல், array ன் பெயரை மட்டும் குறிப்பிடுவதன் மூலம் இதை செய்யலாம்.
04:56 இதை முயற்சிக்க, codeக்கு மாறுவோம்.
04:59 delete statement.ல் இருந்து, மேற்கோள்கள் மற்றும் சதுர அடைப்புக்குறிகளுடன், index S02 ஐ நீக்கவும்.
05:07 Fileஐ சேமித்து, terminal.க்கு மாறவும்.
05:10 Terminalஐ clear செய்யவும். முன்பு செயல்படுத்தப்பட்டcommandஐ பெற, Up arrow key ஐ அழுத்தவும். இப்போது, Enterஐ அழுத்தவும்.
05:19 நாம் எந்த outputஐயும் பெறவில்லை என்பதை நீங்கள் காணலாம். முழு arrayயும் நீக்கப்பட்டுவிட்டது.
05:25 awk built-in variables குறித்த ஒரு முந்தைய டுடோரியலில், ARGC என்பது command line argumentகளின் எண்ணிக்கையை உணர்த்துகிறது என்று நாம் கூறியதை நினைவு கூறவும்.
05:36 ARGV என்பது, command line argumentகளை சேமிக்கின்ற ஒரு array ஆகும். அதன் மதிப்புகளை நாம் எப்படி காட்டமுடியும்? பார்ப்போம்.
05:45 நான் argc_argv.awk.ல் ஏற்கனவே codeஐ எழுதிவிட்டேன். அதன் உள்ளுறையை சரிப்பார்ப்போம்.
05:53 Code, awk BEGIN section.னுள் எழுதப்பட்டுள்ளது.
05:57 முதலில், நாம் argumentகளின் எண்ணிக்கையை, அதாவது, ARGV.ன் மதிப்பை print செய்கிறோம்.
06:03 அடுத்து, for loop, ஐ பயன்படுத்தி, i ன் மதிப்பு, 0ல் இருந்துARGC-1. வரை இருக்கின்ற வரைக்கும் loop செய்கிறோம்.
06:11 மேலும், index iல் நாம் ARGVஐ print செய்கிறோம். Terminalக்கு மாறி, fileஐ செயல்படுத்தவும்.
06:19 இப்போது, terminalலில் டைப் செய்க: awk space hyphen சிறியf space argc underscore argv dot awk space one space two space three
06:35 இங்கு, one two three என்பன, command line argumentகள் ஆகும். Commandஐ செயல்படுத்த Enterஐ அழுத்தவும்.
06:43 Argumentகளின் எண்ணிக்கையை4 ஆக நாம் பெறுகிறோம். ஆனால் நாம், 3 argumentகளை மட்டுமே கொடுத்தோம் என்பதை நினைவு கூறவும்.
06:50 தனிப்பட்ட argumentகளைப் பார்ப்போம். index 0 ல் உள்ள, முதல் argument அல்லது argv, உண்மையாக awk, அதாவது commandன் பெயராகும்.
07:02 அடுத்து, நாம் command line.ல் கொடுத்த மூன்று argumentகளை கொண்டுள்ளோம்.
07:07 அதனால் தான், ARGCன் மதிப்பு, நாம் கொடுத்த command line argumentகளின் எண்ணிக்கை plus ஒன்று ஆகும்.
07:16 மேலும் ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். Built-in variable ENVIRON , environment variableகளின் ஒரு associative array ஆகும்.
07:24 array element indexகள், environment variable ன் பெயர்களாகும். Array elementன் மதிப்புகள், குறிப்பிட்ட environment variableகளின் மதிப்புக்களாகும்.
07:35 வெவ்வேறு environment variableகளின் மதிப்புகளை எப்படி காணலாம் என்று பார்ப்போம்.
07:40 முதலில், நமது usernameஐ print செய்வோம்.
07:43 environment variable USERன் மதிப்பை நாம் print செய்யவேண்டும்.
07:48 Command promptல், பின்வருவனவற்றை டைப் செய்யவும்.
07:53 Enterஐ அழுத்தவும்.
07:55 Loginன் செய்த userன் பெயரை output காட்டும்.
08:00 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல.
08:05 இந்த டுடோரியல் நாம் கற்றது- fileஉடன் awk array ஐ பயன்படுத்துவது
08:11 ஒரு arrayன் elementகளை ஸ்கேன் செய்வது
08:14 Delete statement, ARGV array மற்றும்ENVIRON array
08:20 பயிற்சியாக- தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, குறிப்பிட்ட சலுகைகளை கணக்கிடவும்.
08:25 உதவித்தொகையின் 80 சதவிகிதம், Paper presentation சலுகையாக இருக்கவேண்டும்.
08:30 உதவித்தொகையின் 20 சதவிகிதம், performance incentiveஆக இருக்கவேண்டும்.
08:35 சலுகைகளை, இரண்டு வெவ்வேறு arrayக்களில் சேமிக்கவும்.
08:38 ஒவ்வொரு சலுகைக்கும் தேவையான மொத்த தொகையையும், averageஐயும் print செய்யவும்.
08:43 awk programல் இருந்து, environment variable PATH ன் மதிப்பை print செய்யவும்.
08:48 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
08:56 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு , ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
09:05 மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
09:08 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
09:12 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
09:24 இந்த ஸ்கிரிப்ட், அந்தராவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து பிரவீன். கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree