Difference between revisions of "Linux-AWK/C2/Basics-of-Single-Dimensional-Array-in-awk/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- | 00:01 | '''Awk'''ல், '''Single dimensional arrayன் அடிப்படைகள்...")
 
 
Line 385: Line 385:
 
|-
 
|-
 
| 09:01
 
| 09:01
| இந்த ஸ்கிரிப்ட், அந்தராவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து பிரவீன். கலந்துகொண்டமைக்கு நன்றி.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 11:22, 5 July 2019

Time
Narration
00:01 Awkல், Single dimensional arrayன் அடிப்படைகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Awkல் Arrayக்கள்
00:12 array elementகளை ஒதுக்குவது
00:15 மற்ற programming languageகளில் உள்ள arrayக்களில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது மற்றும் ஒரு arrayன் elementகளை பார்ப்பது.
00:23 இதை சில உதாரணங்கள் மூலம் நாம் செய்வோம்.
00:26 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04 Operating System மற்றும் gedit text editor 3.20.1ஐ பயன்படுத்துகிறேன்.
00:38 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:42 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, எங்கள் வலைத்தளத்தில் உள்ள முந்தையawk டுடோரியல்களை நீங்கள் படித்திருக்க வேண்டும்.
00:49 C அல்லதுC++ போன்ற ஏதேனும் ஒரு programming language பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்.
00:56 இல்லையெனில், எங்கள் வலைத்தளத்தில் உள்ள அதற்கான டுடோரியல்களை படிக்கவும்.
01:02 இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள fileகள், இந்த டுடோரியல் பக்கத்தில் உள்ள Code Files இணைப்பில் உள்ளது. அவற்றை தரவிறக்கி, extract செய்துகொள்ளவும்.
01:11 Awkல் ஒரு array என்றால் என்ன? தொடர்புடைய elementகளை சேமிப்பதற்கு, awk, arrayக்களை ஆதரிக்கிறது.
01:18 Elementகள், ஒருnumber அல்லது ஒருstringஆக இருக்கலாம்.
01:21 Awkல் உள்ள arrayக்கள், associative ஆகும்.
01:24 இதன் பொருள், ஒவ்வொரு array element உம், ஒரு index-value pair. ஆகும்.
01:29 இது, மற்ற programming language ல் உள்ள arrayக்களை போலவே இருக்கிறது.
01:33 ஆனால், சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
01:36 முதலாவது, ஒரு arrayஐ பயன்படுத்துவதற்கு முன்பு, அதை நாம் declare செய்ய வேண்டிய அவசியமில்லை.
01:41 மேலும், array கொண்டிருக்கப்போகின்றelementகளின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
01:47 Programming languageகளில், array index பொதுவாக ஒரு positive integer ஆகும்.
01:52 வழக்கமாகindex, 0ல் இருந்து தொடங்கி, பின் 1 , பின் 2 மேலும் பல.
01:58 ஆனால் awkல், index எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்- ஏதேனும்number அல்லது ஒரு string.
02:03 Awkல் ஒரு array element ஐ ஒதுக்குவதற்கான syntax இது. Array name, எந்த ஒரு செல்லுபடியான variableன் பெயராக இருக்கலாம்.
02:11 இங்கு index என்பது, ஒரு integer அல்லது ஒரு string.ஆக இருக்கலாம்.
02:16 Stringகள், index ன் பெயர் அல்லது ஒரு value என எதுவாக இருந்தாலும், அவற்றை இரட்டை மேற்கோள்களினுள் எழுத வேண்டும்.
02:23 இதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.
02:27 நான் ஏற்கனவே codeஐ எழுதி, அதை array_intro.awk என சேமித்துள்ளேன்.
02:34 இந்த file , playerன் கீழ் உள்ள Code Files இணைப்பில் உள்ளது. அதை தரவிறக்கி, பயன்படுத்திக் கொள்ளவும்.
02:41 இங்கு நான், வாரநாட்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, அதை BEGIN sectionஇனுள் எழுதியுள்ளேன்.
02:48 இங்கு, array ன் பெயர், day ஆகும்.
02:52 நான் index ஐ 1 ஆகவும், மதிப்பை Sunday எனவும் set செய்துள்ளேன்.
02:57 இந்த array elementல், index.ஆக நான் ஒரு string ஐ பயன்படுத்தியுள்ளேன். அதனால், index first, க்கு, மதிப்பு Sunday ஆகும்.
03:06 முழு arrayஉம் இவ்வாறே காட்டப்படுகிறது.
03:10 Array elementsகள் இங்கு வரிசையில் இல்லாதிருப்பதை கவனிக்கவும். நான் day four ஐ , day threeக்கு முன் declare செய்துள்ளேன்.
03:18 Awk arrayக்களில், index வரிசை முறையில் இல்லாமல் இருக்கலாம்.
03:23 புதிய ஜோடிகளை எந்நேரமும் நாம் சேர்க்கமுடியும் என்பதே associative arrayன் நன்மை ஆகும்.
03:29 Arrayல், நாள் 6ஐ நான் சேர்க்கிறேன்.
03:33 இறுதி வரியின் கடைசியில், cursorஐ வைத்து, பின் Enterஐ அழுத்தவும். பிறகு, பின்வருவனவற்றை டைப் செய்யவும்.
03:42 Fileஐ சேமிக்கவும்.
03:44 நாம் arrayஐ declare செய்துவிட்டோம். ஆனால், array elementஐ எப்படி பார்ப்பது?
03:49 ஒரு குறிப்பிட்ட index.ல் ஒரு element ஐ பார்க்க, arrayname மற்றும் index ஐ சதுர அடைப்புக்குறிகளினுள் எழுதவும். இதை முயற்சிப்போம்.
03:58 மீண்டும் codeக்கு மாறவும்.
04:01 மூடுகின்ற curly braceக்கு முன், cursorஐ வைக்கவும்.
04:05 Enterஐ அழுத்தி, டைப் செய்க: print space day சதுர அடைப்புக்குறிகளினுள்6
04:13 Codeஐ சேமிக்கவும்.
04:15 CTRL, ALT மற்றும் T keyகளை அழுத்தி, terminalஐ திறக்கவும்.
04:20 cd commandஐ பயன்படுத்தி, நீங்கள் தரவிறக்கி, extract செய்த Code Fileகளை வைத்துள்ள folderக்கு செல்லவும்.
04:27 இப்போது டைப் செய்க: awk space hyphen சிறியf space array_intro.awk . Enter.ஐ அழுத்தவும்.
04:38 Outputஆக, Fridayஐ பெறுகிறோம்.
04:42 அடுத்து, ஒரு குறிப்பிட்ட indexல், ஒரு arrayல் ஏதேனும் ஒரு element உள்ளதா என்று சரி பார்ப்போம்.
04:48 இதற்கு, நாம் in operatorஐ பயன்படுத்த வேண்டும். இதை ஒரு உதாரணத்துடன் நான் விளக்குகிறேன்.
04:55 Editor windowவில் உள்ள codeக்கு மாறவும்.
04:59 Print statementன் இறுதியில் cursorஐ வைத்து, பின் Enter.ஐ அழுத்தவும். பின், காட்டப்பட்டுள்ளபடி டைப் செய்யவும்.
05:09 Codeஐ சேமிக்கவும்.
05:11 இப்போது நான், இரண்டு if conditionகளை சேர்த்துள்ளேன்.
05:15 முதல் if condition , day.ல் index two உள்ளதா என்று சரி பார்க்கிறது.
05:21 உண்டு எனில், பின் அதற்குரிய print statement செயல்படுத்தப்படும்.
05:26 இரண்டாவதுcondition , day.ல் index seven உள்ளதா என்று சரி பார்க்கிறது. அது true எனில், அது print statement ஐ செயல்படுத்துகிறது.
05:35 index two, arrayல் இருப்பதையும், seven இல்லாதிருப்பதையும் நாம் காண்கிறோம். Outputஐ சரிபார்க்க, இந்த fileஐ செயல்படுத்துவோம்.
05:44 Terminalக்கு திரும்பவும். முன்பு செயல்படுத்தப்பட்ட commandஐ பெற Up arrow keyஐ அழுத்தவும்.
05:51 செயல்படுத்த, Enter ஐ அழுத்தவும்.
05:54 எதிர்பார்த்தது போல் outputஐ நாம் பெறுகிறோம்.
05:57 இப்போது, codeக்கு மேலும் சில மாற்றங்களை செய்வோம். இங்கு காட்டப்பட்டுள்ளபடி, codeஐ update செய்யவும்.
06:04 Day conditionல், 7னின் கீழ், நான் மேலும் ஒரு conditionஐ சேர்த்துள்ளேன்.
06:09 இது, index sevenனின் மதிப்பு, nullஆக இருக்கிறதா, இல்லையா என்று சரிபார்க்கும்.
06:14 True எனில், Index 7 is not null என அது print செய்யும்.
06:18 7என்ற index நம்மிடம் இல்லை என்பதனால், அது எதையும் print செய்யாது.
06:24 அடுத்து, day.ல் உள்ள condition 7 னின் print statement ஐ நாம் மாற்றியுள்ளோம்.
06:30 Codeஐ சேமிக்கவும். Codeஐ செயல்படுத்தும் போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
06:35 Terminalக்கு மாறவும். முன்பு செயல்படுத்தப்பட்ட commandஐ பெற Up arrow keyஐ அழுத்தவும்.
06:43 செயல்படுத்த, Enter ஐ அழுத்தவும்.
06:46 எதிர்பார்க்காத outputஐ நாம் பெறுகிறோம்.
06:49 "Index 7 is present after null comparison." என்ற statement print செய்யப்படுகிறது. இது எப்படி சாத்தியம்?
06:57 day[7] , nullக்கு சமமாக இல்லை என்று நாம் எழுதும் போது, நாம் index 7.ல் உள்ள elementஐ அணுக முயற்சிக்கிறோம்.
07:04 இந்த அணுகல், முதலில் index 7 ல் ஒரு elementஐ உருவாக்கி, பின் null மதிப்புக்கு அதை initialize செய்யும்.
07:12 அடுத்து, index 7ல் உண்மையாக ஏதேனும்element உள்ளதா என்று சரிபார்க்க நாம் முயற்சிக்கிறோம்.
07:18 null element ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டதால், null ஒப்பீட்டுக்கு பிறகு Index 7 இருப்பதை output காட்டுகிறது.
07:26 இதை நினைவில் கொள்ளவும். ஒரு element இருப்பதை சரிபார்ப்பதற்கு, day at index 7 , null க்கு சமமாக இல்லை என கூறுவது தவறான வழியாகும்.
07:34 அது, index 7ல் ஒரு null element ஐ உருவாக்கும்.
07:38 அதற்கு பதிலாக, நாம் in operator.ஐ பயன்படுத்தவேண்டும்.
07:41 அது, array.ல் எந்த கூடுதல் elementஐயும் உருவாக்காது. இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
07:50 இந்த டுடோரியல் நாம் கற்றது- Awkல் Arrayக்கள்
07:54 array elementகளை ஒதுக்குவது
07:56 மற்ற programming languageகளில் உள்ள arrayக்களில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது
08:00 ஒரு arrayன் elementகளை பார்ப்பது.
08:03 பயிற்சியாக- 'ஒரு array flowerColor'ஐ வரையறுக்கவும்
08:07 Indexல் பூக்களின் பெயர்கள் இருக்கும்.
08:10 பூக்களின் வண்ணம் அதற்குரிய மதிப்பாகும்.
08:14 உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஐந்து பூக்களுக்கு, entryக்களை புகுத்தவும்.
08:18 நான்காவது பூவின் வண்ணத்தை print செய்யவும். arrayல், “Lotus” பூ உள்ளதா என்று சரிபார்க்கவும்.
08:25 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
08:33 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு , ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
08:42 மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
08:46 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
08:50 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
09:01 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது ரிஷிதா. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree