Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C2/Formatting-Data/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 201: Line 201:
 
|-
 
|-
 
||06:41  
 
||06:41  
|| ஒரு cell இல் உள்ள உரையின் எழுத்துரு விவரம் தானியங்கியாக உரை cell க்குள் பொருந்தும் படி மாற்றப்பட முடியும்.
+
|| ஒரு cell இல் உள்ள உரையின் எழுத்துரு விவரம் தானியங்கியாக உரை cell க்குள் பொருந்தும் படி மாற்றப்பட முடியும். அதை கற்போம்.
|-
+
||06:49
+
|| அதை கற்போம்.
+
 
|-
 
|-
 
||06:50  
 
||06:50  

Latest revision as of 17:41, 6 April 2017

Time NARRATION
00:00 Calc இல் தரவை ஒழுங்கு செய்வது குறித்த tutorial க்கு நல்வரவு!
00:06 இதில் நாம் கற்கப்போவது: பார்டர்களையும் பின்புல நிறத்தையும் ஒழுங்கு செய்வது
00:12 தானியங்கி மடித்தல் அம்சத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட உரை வரிகளை ஒழுங்கு செய்வது,
00:18 Cell களை இணைத்து ஒன்றாக்குவது. Cell க்கு தகுந்தபடி உரையை சுருக்குவது.
00:22 இங்கு பயனாவது Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4
00:33 Calc இல் பார்டர்களை ஒழுங்கு செய்வதை முதலில் கற்கலாம்.
00:39 நம் “personal finance tracker.ods” file ஐ திறக்கலாம்.
00:45 பார்டர்களை ஒழுங்கு செய்வதை ஒரு குறிப்பிட்ட செல்லுக்கு அல்லது ஒரு தொகுதி செல்களுக்கும் செய்யலாம்.
00:50 உதாரணமாக “Serial Number”, “Item”, “Cost”, “Spent”, ”Received”, ”Date” மற்றும் ”Account” என தலைப்புகள் உள்ள செல்களுக்கு ஒழுங்கு செய்வோம்.
01:01 “SN” ஆல் குறிக்கப்படும் வரிசை எண் தலைப்புள்ள செல்லை முதலில் சொடுக்குவோம்.
01:08 இடது சொடுக்கி button ஐ அழுத்திக்கொண்டு தலைப்புகள் உள்ள செல்கள் மீது இழுப்போம்.
01:14 தலைப்புகள் உள்ள கிடைமட்ட வரி முழுவதையும் தேர்ந்தெடுத்தபின் Formatting toolbar இல் உள்ள “Borders” சின்னம் மீது சொடுக்கவும்.
01:23 பல border பாங்குகளை உடைய கீழிறங்கும் பெட்டி ஒன்று திறக்கிறது.
01:28 border களில் பொருத்த நமக்கு விருப்பமான பாங்கை சொடுக்கவும்.
01:33 நான் கடைசி தேர்வு மீது சொடுக்குகிறேன்.
01:34 border களின் ஒழுங்கு நாம் தேர்ந்தெடுத்த பாங்குக்கு மாறிவிட்டதை காணலாம்.
01:39 இந்த மாறுதலை செயல் நீக்குவோம்.
01:45 தேர்ந்தெடுத்த செல்கள் இன்னும் முன்னிலைப்படுத்தப்பட்டுளன. தேர்வில் வலது சொடுக்கு செய்க. “Format Cells” ஐ தேர்வு செய்க.
01:54 “Borders” கீற்றில் சொடுக்குக.
01:56 நீங்கள் “Line arrangement”, “Line”, “Spacing to contents” மற்றும் “Shadow style” ஆகிய தேர்வுகளை காணலாம்.
02:05 இதன் ஒவ்வொன்றிலும் Calc இன் முன்னிருப்பு அமைப்பு காட்டப்படுகிறது.
02:10 தேவைக்கு ஏற்ப இவை எதையும் மாற்றிக்கொள்ளலாம்.
02:14 “User-defined” இன் கீழ் ஒரு சிறிய முன்பார்வை சாளரத்தை காணலாம். இது தேர்வை முன்பார்வையிட உதவும்.
02:22 “Default” இன் கீழ் மூன்றாம் தேர்வை தேர்ந்தெடுக்கிறேன். அது முன்பார்வை சாளரத்தில் காட்டப்படுகிறது.
02:29 “Style”, “Width” மற்றும் “Color” ஆகியவற்றையும் மாற்றுகிறேன்.
02:33 மீண்டும் அவை அனைத்தும் முன்பார்வை சாளரத்தில் காட்டப்படுகின்றன.
02:38 Spacing to contents என்பதில் “Synchronize” தேர்வாகி உள்ளது.
02:42 அதாவது எல்லா விளிம்புகளுக்கும் ஒரே இடைவெளி தரப்படுகிறது.
02:47 நாம் அதை தேர்வு நீக்கலாம். மேலும் வசதி போல விளிம்பின் இடைவெளியை அமைத்துக்கொள்ளலாம்.
02:53 “Top” மற்றும் “Bottom” விளிம்புகளை 1.4pt என மாற்றுகிறேன்.
03:00 பலவித நிழல் பாங்குகளை நீங்களே மாற்றிப் பார்க்க விட்டுவிடுகிறேன்.
03:04 OK ஐ சொடுக்குகிறேன்.
03:06 தேர்ந்தெடுத்த செல்களுக்கு தேர்ந்தெடுத்த பாங்கு செயலாக்கப்படுகிறது.
03:11 border களை ஒழுங்கு செய்வதை பார்த்தோம். இப்போது cell களுக்கு பின்புல நிறத்தை கொடுப்பதை காணலாம்.
03:18 இதற்கு Formatting toolbar இல் “Background Color” என்ற தேர்வை கால்க் கொடுக்கிறது.
03:27 அது செயலாக்கப்படுவதை என பார்க்கலாம்.
03:30 உதாரணமாக தலைப்புகள் உள்ள cell களுக்கு பின்புல நிறத்தை கொடுக்கலாம்.
03:36 “SN” ஆல் குறிக்கப்படும் வரிசை எண் தலைப்புள்ள செல்லை முதலில் சொடுக்குவோம்.
03:44 இடது சொடுக்கி button ஐ அழுத்திக்கொண்டு தலைப்புகள் உள்ள செல்கள் மீது இழுப்போம்.
03:50 தலைப்புகள் உள்ள கிடைமட்ட வரி முழுவதையும் தேர்ந்தெடுத்தபின் Formatting toolbar இல் உள்ள “Background Color” சின்னம் மீது சொடுக்கவும்.
04:00 துள்ளும் மெனு ஒன்று திறக்கிறது. அதில் நீங்கள் உங்களுக்கு தேவையான பின்புல நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்.
04:08 நாம் “Grey” நிறத்தின் மீது சொடுக்கலாம்.
04:11 நீங்கள் தலைப்புகளை உடைய செல்களின் பின்புல நிறம் சாம்பல் ஆவதை காணலாம்.
04:17 Calc உரைகளின் பல வரிகளை ஒழுங்கு செய்ய தேர்வுகளை தருகிறது.
04:22 முதலாவது “தானியங்கி மடித்தல்” ஐ பயன்படுத்துவது.
04:26 "தானியங்கி மடித்தல்” ஒரு பயனர் ஒரே செல்லில் பல வரிகளை உள்ளிடுவதை அனுமதிக்கிறது.
04:33 இதை செயலாக்குவதைப் பார்க்கலாம்.
04:37 இப்போது நம் “personal finance tracker.ods” sheet இல் ஒரு காலி செல்லை சொடுக்குவோம்.
04:44 உதாரணமாக cell எண் “B12”.
04:49 cell இல் வலது சொடுக்கி பின் “Format Cells” தேர்வில் சொடுக்கவும்.
04:54 உரையாடல் பெட்டியில் “Alignment” கீற்றில் சொடுக்கவும்.
04:58 உரையாடல் பெட்டியின் கீழ் “Wrap text automatically” தேர்வில் சொடுக்கி பின் “OK” button இல் சொடுக்கவும்.
05:08 type செய்க, “THIS IS A PERSONAL FINANCE TRACKER. IT IS VERY USEFUL”.
05:11 ஒரே cell இல் அத்தனை வாக்கியங்களும் மடிந்து பொருந்துவதை காணலாம்.
05:19 மாற்றங்களை செயல் நீக்குவோம்
05:21 “தானியங்கி மடித்தல்” பற்றி கற்றபின், இப்போது Calc இல் எப்படி cell களை இணைத்து ஒன்றாக்குவது என்று பார்க்கலாம்.
05:29 நம் “personal finance tracker.ods” file இல், “SN” தலைப்பில் வரிசை எண்களுள்ள செல்களையும் அவற்றுக்கான உருப்படிகளையும் ஒன்றாக சேர்க்க விரும்பினால், முதலில் “SN” கீழ் தரவு உள்ளீடு '1' ஐ சொடுக்கவும்.
05:46 “Shift” விசையை அழுத்திக்கொண்டு அதற்கான உருப்படியான “Salary” செல்லை சொடுக்கவும்.
05:55 இது சேர்க்கப்படப்போகும் இரண்டு செல்களையும் முன்னிலைப்படுத்துகிறது.
05:59 அடுத்து menu bar இல் “Format” பின் “Merge Cells” தேர்வு மீது சொடுக்கவும்.
06:07 துள்ளித்தோன்றும் பக்கப்பட்டியில் “Merge Cells” தேர்வில் சொடுக்கவும்.
06:12 இரண்டு செல்களிலும் தெரியும் உள்ளடக்கங்களை ஒரே செல்லுக்கு நகர்த்த தோன்றும் உரையாடல் பெட்டியில் “Yes” ஐ சொடுக்கவும்.
06:21 தேர்ந்தெடுத்த செல்கள் ஒன்றாகிவிட்டதையும் மேலும் உள்ளடக்கங்களும் ஒரே செல்லில் இருப்பதையும் காணலாம்.
06:31 “CTRL+Z” ஐ ஒரே நேரத்தில் அழுத்தி ஒன்றாக்கிய செய்த செயலை நீக்கலாம்.
06:37 அடுத்து ஒரு cell க்குள் உரையை பொருந்துமாறு சுருக்கலாம்.
06:41 ஒரு cell இல் உள்ள உரையின் எழுத்துரு விவரம் தானியங்கியாக உரை cell க்குள் பொருந்தும் படி மாற்றப்பட முடியும். அதை கற்போம்.
06:50 B14 என்று குறிக்கப்படும் செல்லில் இந்த உரையை type செய்யலாம்: “This is for the month of January”
07:00 உரை cell க்குள் பொருந்தவில்லை என்பதை காணலாம்.
07:03 உரையை செல்லுக்குள் சரியாக பொருந்தும்படி சுருக்க B14 செல்லில் சொடுக்கவும்.
07:11 இப்போது menu bar இல் “Format” பின் “Cells” தேர்வில் சொடுக்கவும்.
07:18 மாறாக cell இல் வலது சொடுக்கு சொடுக்கி “Format Cells” இல் சொடுக்கவும்.
07:24 “Format Cells” உரையாடல் பெட்டி தோன்றுவதை பார்க்கலாம்.
07:28 உரையாடல் பெட்டியில் “Alignment” கீற்றில் சொடுக்கவும்.
07:31 உரையாடல் பெட்டியின் கீழ், “Shrink to fit cell size” பெட்டியில் குறியிட்டு, பின் “OK” button ஐ சொடுக்கவும்.
07:41 நீங்கள் B14 cell இல் உள்ள உரையின் எழுத்துரு விவரம் cell க்குள் பொருந்தும் படி எழுத்துரு அளவை குறைத்து தானியங்கியாக உரை மாற்றப்பட்டதை காணலாம்.
07:54 மாற்றங்களை செயல் நீக்குவோம்
07:57 இத்துடன் Calc மீதான இந்த Tutorial முடிகிறது.
08:02 சுருங்கச்சொல்ல நாம் கற்றது: Calc இல் பார்டர்களையும் பின்புல நிறத்தையும் ஒழுங்கு செய்வது,
08:09 தானியங்கி மடித்தல் அம்சத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட உரை வரிகளை ஒழுங்கு செய்வது,
08:14 Cell களை இணைத்து ஒன்றாக்குவது. Cell க்கு தகுந்தபடி உரையை சுருக்குவது.
08:19 முழுமையான பயிற்சி
08:21 “spreadsheet practice.ods” sheet ஐ திறக்கவும்.
08:25 எல்லா தலைப்புகளையும் தேர்ந்தெடுக்கவும்.
08:27 தலைப்புகளுக்கு நீல நிற பின்புல நிறம் கொடுக்கவும்.
08:31 “தானியங்கி மடித்தல்” ஐ பயன்படுத்தி “This is a Department Spreadsheet” என்ற உரையை type செய்யவும்.
08:37 இந்த உரை செல்லுக்குள் பொருந்தும்படி சுருக்கவும்.
08:40 கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.
08:43 இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
08:46 இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
08:51 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08:56 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:00 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@ spoken hyphen tutorial dot org
09:06 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:11 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:18 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:29 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Pravin1389, Priyacst