Koha-Library-Management-System/C3/Copy-cataloging-using-Z39.50/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 09:20, 28 March 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Z39.50ஐ பயன்படுத்தி, catalogingஐ copy செய்வது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம், Z39.50 ஐ பயன்படுத்தி, catalogல், recordsகளை சேர்க்கக்கற்போம்.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04,
00:28 மற்றும் Koha பதிப்பு 16.05.
00:33 நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.
00:38 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள, கற்பவர்களுக்கு பின்வருவனவற்றை பற்றி தெரிந்து இருக்கவேண்டும்- Library Science,
00:45 Cataloging standards, AACR2 மற்றும் MARC21.
00:54 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
01:00 மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும்.
01:05 மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
01:13 Z39.50 என்றால் என்ன?
01:18 Z39.50 என்பது, தொலைவிலுள்ள கணினியின் databaseகளில் இருக்கும் தகவலை தேடுவதற்கும் மீட்டெடுப்பதற்குமான ஒரு client–server protocol ஆகும். சுருங்கச் சொல்ல, அது catalogingஐ copy செய்வதற்கான ஒரு கருவி ஆகும்.
01:37 தொடங்குவோம். முதலில், நான் Koha interface க்கு மாறி, Superlibrarian, Bellaஆக login செய்கிறேன்.
01:47 Koha homepageல், Koha administrationஐ க்ளிக் செய்யவும்.
01:53 இந்தப் பக்கத்தில், கீழே scroll செய்து, Additional parametersஐ கண்டறியவும்.
01:59 பின், Z39.50/SRU serversஐ க்ளிக் செய்யவும்.
02:07 Z39.50/SRU servers administration என்ற புதிய பக்கம் திறக்கிறது.
02:16 இங்கு, இரண்டு tabகள் இருக்கின்றன- +New Z39.50 server மற்றும் +New SRU server.
02:26 +New Z39.50 server. tabஐ க்ளிக் செய்யவும்.
02:32 New Z39.50 server என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
02:40 target Z39.50 Server,ஐ சேர்க்க, target server ன் விவரங்கள் நமக்கு தெரிந்து இருக்கவேண்டும் என்பதை கவனிக்கவும்.
02:51 Z39.50 serverன் எந்த விவரங்களும் உங்களுக்கு தெரியவில்லையெனில், Z39.50 serversகளின் பட்டியலை, நீங்கள் இந்த URLல் நீங்கள் கண்டறியலாம்.
03:05 IRSpy பக்கம் திறந்து, சில விவரங்களை பூர்த்தி செய்ய நம்மை தூண்டுகிறது.
03:12 தொடங்குவோம்.
03:14 field (Anywhere) ஐ காலியாக விடவும்.
03:18 Nameக்கு, நான் Library of Congress. என டைப் செய்கிறேன்.
03:23 ஏனெனில், இது மிகப்பெரிய நூலகத்தில் ஒன்றாகும் மற்றும் இது பெரிய bibliographical data வை கொண்டிருக்கிறது.
03:31 அடுத்து, Country, க்கான fieldல், drop-downனிலிருந்து, United States.ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:38 Protocol, க்கு, drop-downனிலிருந்து, Z39.50.ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:46 உங்கள் தேவைக்கேற்றவாறு மற்ற விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
03:51 பின், பக்கத்தின் கீழுள்ள Search பட்டனை க்ளிக் செய்யவும்.
03:57 தேடுதலின் முடிவுகளை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
04:01 பின்வரும் பல்வேறு தலைப்புகளின் கீழ், 9 libraryகளின் ஒரு பட்டியல் காட்டப்படுகிறது- Title, Host Connection Reliability, Host, Port மற்றும் DB. போன்றவை.
04:16 இந்த விவரங்கள், Koha.வினுள் உள்ள New Z39.50 server ல், விவரங்களை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும்.
04:26 பத்துக்கும் மேற்பட்ட libraryகளின் வேறுபட்ட ஒரு பட்டியலை நீங்கள் காணலாம் என்பதை கவனிக்கவும்.
04:32 எந்த target Z39.50 serverஐயும் சேர்ப்பதற்கு முன், Host Connection Reliabilityஐ உறுதிப்படுத்திக்கொள்ள நினைவு கூறவும்.
04:43 நான் Title : Library of Congress.ஐ க்ளிக் செய்கிறேன்.
04:48 Library of Congress, என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
04:54 சிறிது நேரத்திற்கு பின்பு, இந்த பக்கத்தில் உள்ள விவரங்கள் நமக்கு தேவைப்படுமாதலால், இந்த பக்கத்தை திறந்தே வைக்கவும்.
05:01 இப்போது, இந்த டுடோரியலில் முன்பு நாம் திறந்து வைத்த New Z39.50 server பக்கத்திற்கு திரும்பச் சென்று,
05:12 இந்தப் பக்கத்தில், தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய தொடங்குவோம்.
05:17 நாம் திறந்து வைத்துள்ள, பக்கத்தில் Library of Congress ன் விவரங்கள் உள்ளன.
05:23 தொடங்குவோம்.
05:25 New Z39.50 server பக்கத்தில், Server name, க்கு டைப் செய்க Library of Congress.
05:34 இந்த விவரம், Library of Congress பக்கத்தில், Name, பிரிவிலிருந்து எடுக்கப்பட்டது.
05:41 Library of Congress பக்கத்திலிருந்து நான் எடுத்த மேலும் சில விவரங்களை, New Z39.50 server பக்கத்தில் நான் பூர்த்தி செய்துள்ளேன்.
05:54 நீங்கள் காணொளியை இடைநிறுத்தி, உங்கள் தேவைக்கேற்றவாறு விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
06:01 சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள fieldகள், கட்டாயமானவை என்பதை கவனிக்கவும்.
06:06 அடுத்து, Preselected (searched by default). check-box ஐ நாம் காண்கிறோம்.
06:12 இந்த குறிப்பிட்ட libraryன் database, முன்னிருப்பாக எப்போதும் தேடப்படவேண்டுமெனில் இதை க்ளிக் செய்யவும். நான் அதை uncheck செய்கிறேன்.
06:23 இப்போது, Rank (display order).க்கான fieldக்கு நாம் வருகிறோம். Libraryகளின் பட்டியலில் முதலில், இந்த library உங்களுக்கு பட்டியலிடப்படவேண்டுமெனில், பின் இங்கு 1 ஐ enter செய்யவும்.
06:37 நீங்கள் பல z39.50 targetகளை சேர்க்கவேண்டுமெனில், தகுதியின் படி நீங்கள் அவற்றை வரிசைப்படுத்தலாம் என்பதை கவனிக்கவும்.
06:47 Syntaxக்கு, drop-downனிலிருந்து நான் MARC21/USMARCஐ தேர்ந்தெடுக்கிறேன். உங்கள் தேவைக்கேற்றவாறு எந்த Syntaxஐயும் நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
07:00 Encoding,க்கு, Koha முன்னிருப்பாக utf8.ஐ தேர்ந்தெடுக்கிறது. நான் அதை அப்படியே விடுகிறேன்.
07:08 உங்கள் தேவைக்கேற்றவாறு நீங்கள் வேறு எந்த மதிப்பையும் தேர்ந்தெடுக்கலாம்.
07:14 அடுத்தது, Time out (0 its like not set). ஆகும்.
07:20 இங்கு, முடிவுகள் தோன்றுவதற்கு நீங்கள் காத்திருக்க விரும்புகின்ற நொடிகளின் எண்ணிக்கையை டைப் செய்யவும். நான் 240. என enter செய்கிறேன்.
07:32 Record type, க்கு, Koha முன்னிருப்பாக Bibliographic.ஐ தானாகவே தேர்ந்தெடுக்கிறது. அப்படி செய்கையில், ஒவ்வொரு recordஉம் ஒரு Bibliographic விவரத்தை கொண்டிருக்கும்.
07:44 எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, பக்கத்தின் கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்.
07:51 Z39.50/SRU servers administration பக்கம் திறக்கிறது.
08:00 இந்தப் பக்கத்தில், வெவ்வேறு தலைப்புகளின் கீழ் சேர்க்கப்பட்ட விவரங்களை நாம் காணலாம்.
08:06 இப்போது, இந்த libraryல் உள்ள recordகளை தேட, Koha homepageக்கு சென்று, Cataloging.ஐ க்ளிக் செய்யவும்.
08:16 இரண்டு தேர்வுகளைக் கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. +New record மற்றும் New from Z39.50/SRU.
08:29 New from Z39.50/SRU க்கு சென்று, drop-downனிலிருந்து BOOKS.ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:40 Z39.50/SRU search என்ற புதிய window திறக்கிறது.
08:48 பக்கத்தின் வலது முனைக்கோடியில் உள்ள Search targets fieldஐ கண்டறியவும்.
08:54 இந்த டுடோரியலில், நாம் முன்னர் சேர்த்த Z39.50 targetஐ இங்கு நீங்கள் காணலாம். அதாவது, LIBRARY OF CONGRESS.
09:07 இப்போது, LIBRARY OF CONGRESS.க்கு அடுத்துள்ள check-boxஐ க்ளிக் செய்யவும்.
09:14 அதே பக்கத்தின், இடது பக்கத்தில் பல்வேறு fieldகளை கொண்ட Z39.50/SRU search இருக்கிறது.
09:25 இந்த fieldகளுக்கிடையே Title ஐ கண்டறிந்து Clinical Microbiology. என டைப் செய்யவும்.
09:33 நீங்கள் விரும்பினால், மீதமுள்ள fieldகளையும் பூர்த்தி செய்யலாம். நான் அவற்றை காலியாக விடுகிறேன்.
09:40 இப்போது, பக்கத்தின் கீழுள்ள Search பட்டனை க்ளிக் செய்யவும்.
09:46 எனினும், க்ளிக் செய்வதற்கு முன், நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
09:52 பின்வரும் தலைப்புகளின் கீழ் விவரங்களை கொண்ட Results என்ற மற்றொரு புதிய பக்கம் திறக்கிறது: Server, Title, Author, Date, Edition, ISBN, LCCN, MARC and Card.
10:11 இப்போது, பக்கத்தின் வலது முனைக்கோடிக்கு சென்று, Import.ஐ கண்டறியவும்.
10:18 Title: Clinical Microbiology. fieldக்கு, நான் Import ஐ க்ளிக் செய்கிறேன்.
10:25 உங்கள் தேவைக்கேற்றவாறு, வேறு ஏதேனும் Title க்கு நீங்கள் Import ஐ க்ளிக் செய்யலாம்.
10:32 Import க்ளிக் செய்யப்பட்டவுடன், Add MARC record என்ற பெயருடைய ஒரு புதிய window திறக்கிறது.
10:39 Library of Congress databaseலிருந்து import செய்யப்பட்ட சில tagகளை நீங்கள் காணலாம்.
10:47 ஆனால், உரிய tagகளுக்கான காலியான fieldகள், உங்கள் தேவைக்கேற்றவாறு உங்களால் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
10:55 ஒரு முந்தைய டுடோரியலில், இந்த பக்கத்தின் விவரங்களை நாம் பூர்த்தி செய்துள்ளோம் என்பதை நினைவு கூறவும்.
11:02 காணொளியை இடைநிறுத்தி, விவரங்களை பூர்த்தி செய்யவும்.
11:06 விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் மேலுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும்.
11:13 Items for Clinical microbiology by Ross, Philip W. என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
11:22 இப்போது, பக்கத்தின் கீழுள்ள Add item பட்டனை க்ளிக் செய்யவும்.
11:28 Items for Clinical microbiology by Ross, Philip W. பக்கம் திறக்கிறது.
11:36 இத்துடன், Library of Congress லிருந்து Clinical microbiology புத்தகத்தின் விவரங்களை Koha.வினுள் நாம் வெற்றிகரமாக import செய்துவிட்டோம்.
11:48 சுருங்கச் சொல்ல
11:50 இந்த டுடோரியலில் நாம், Z39.50 ஐ பயன்படுத்தி, catalogல், recordsகளை சேர்க்கக்கற்றோம்.
12:00 பயிற்சியாக- Z39.50 ஐ பயன்படுத்தி, catalogல், ஒரு Serialன் recordகளை சேர்க்கவும்.
12:10 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
12:28 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
12:32 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
12:45 விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து, பெல்லா டோனி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree