Ubuntu-Linux-on-Virtual-Box/C2/Installing-VirtualBox-on-Ubuntu-Linux-OS/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:04, 23 March 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Ubuntu Linux OS ல், VirtualBoxஐ நிறுவுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில், Ubuntu Linux 16.04 Operating System ல், VirtualBoxஐ தரவிறக்கக் கற்போம்.
00:18 இந்த டுடோரியலை பதிவு செய்ய, Ubuntu Linux 16.04 OS,
00:25 VirtualBox பதிப்பு 5.2,
00:29 gedit text editor பயன்படுத்தப்பட்டுள்ளது.
00:32 எனினும், உங்களுக்கு விருப்பமான எனது text editorஐயும் நீங்கள் பயன்படுத்தலாம்.
00:37 தொடங்குவதற்கு முன், நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.
00:43 VirtualBox என்றால் என்ன? VirtualBox, Virtualizationக்கான, ஒரு இலவச மற்றும் open source software ஆகும்.
00:50 Base machine அதாவது (host)ல், பல OSகளை நிறுவ மற்றும் பயன்படுத்த, இது அனுமதிக்கிறது.
00:57 base machine , Windows, Linux அல்லது MacOS ஐ கொண்டிருக்கலாம்.
01:03 ஒரு VirtualBoxன் உள், ஒரு OSஐ நிறுவ, base machine , பின்வரும் கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும்.
01:11 i3 processor அல்லது அதற்கு மேற்பட்டது,
01:14 Ram 4GB அல்லது அதற்கு மேற்பட்டது,
01:17 Hard diskல், காலியான இடம், 50GB அல்லது அதற்கு மேல், மற்றும்,
01:22 Virtualization , BIOSல் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
01:27 இது, VirtualBox சீராக வேலை செய்ய உறுதிப்படுத்தும்.
01:32 ஒரு வேளை, base machine, Ubuntu Linux OSஐ கொண்டிருந்தால், அது, பின்வரும் பதிப்புகளில் ஒன்றாக இருக்க வேண்டும்:
01:40 Ubuntu Linux 14.04, Ubuntu Linux 16.04 அல்லது Ubuntu Linux 18.04.
01:50 நிறுவதலை தொடங்குவோம்.
01:53 இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்ட commandகள், பிளேயரின் கீழ் உள்ள Code Files இணைப்பில் உள்ளன.
02:00 எனது machineல், இந்த fileஐ gedit text editorல் நான் திறந்துள்ளேன்.
02:05 மேலும், செயல்விளக்கத்தின் போது, commandகளை copy-paste செய்ய, அதே fileஐ நான் பயன்படுத்துவேன்.
02:11 முக்கிய குறிப்பு: VirtualBoxஐ தரவிறக்குவதற்கு முன், நமது கணிணியில், Virtualization, செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
02:21 Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று நாம் சரி பார்ப்போம்.
02:26 Terminalஐ திறக்க, உங்கள் keyboardல், Ctrl, Alt மற்றும் T key களை ஒன்றாக அழுத்தவும்.
02:35 இந்த commandஐ, code fileல் இருந்து copy செய்து terminalலில் paste செய்யவும். செயல்படுத்த, Enterஐ அழுத்தவும்.
02:43 output, vmx flagகளை கொண்டிருந்தால், இந்த கணினியில் Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளது.
02:50 அது செயல்படுத்தப்படவில்லை எனில், BIOS settingகளில், அதை enable செய்யவும்.
02:55 BIOS settingகுகள் ஒவ்வொரு கணினிக்கும் மாறுபடுவதால், அதைப் பற்றிய ஒரு demoவை எங்களால் காட்ட இயலாது.
03:02 நீங்கள் ஒரு தொழில்நுட்ப நபர் இல்லையெனில், ஒரு System Administratorன் உதவியுடன், இதை செய்யவும்.
03:09 BIOSல், Virtualization என்ற தேர்வு இல்லையெனில், அந்த கணிணியில், நாம் VirtualBoxஐ நிறுவ முடியாது.
03:17 எனக்கு, அது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.
03:21 பின்வரும் commandஐ பயன்படுத்தி, முதலில் base machineமேம்படுத்துவோம்.
03:27 அதற்கு, terminalலில் டைப் செய்க: sudo <space> apt-get <space> update. பின் Enter.ஐ அழுத்தவும்.
03:38 உங்கள் system password.ஐ enter செய்ய நீங்கள் தூண்டப்படலாம். Passwordஐ டைப் செய்து, Enter.ஐ அழுத்தவும்.
03:46 இப்போதிலிருந்து, இந்த நிறுவுதலின் போது, தூண்டப்படும் போதெல்லாம் system password ஐ டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்.
03:55 அடுத்து VirtualBox.ஐ நிறுவுவோம். இப்போது, Ubuntu source listக்கு நாம் VirtualBox repositoryஐ சேர்க்க வேண்டும்.
04:04 அதற்கு, இந்த commandcopy செய்து, terminalலில் paste செய்யவும். பின் Enter.ஐ அழுத்தவும்.
04:11 அடுத்து, நாம் apt sourceக்கு VirtualBox repository keyஐ சேர்க்க வேண்டும்.
04:17 அதற்கு, இந்த இரண்டு commandகளையும் ஒன்றன் பின் ஒன்று copy செய்யவும். அவற்றை, terminalலில் paste செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்.
04:32 இப்போது, நாம் repository list.ஐ புதுப்பிக்க வேண்டும்.
04:36 அதற்கு, terminalலில் டைப் செய்க: sudo <space> apt-get <space> update. பின் Enter.ஐ அழுத்தவும்.
04:50 அடுத்து, டைப் செய்க: sudo space apt-get space install space virtualbox-5.2. பின் Enter.ஐ அழுத்தவும்.
05:04 நிறுவப்படவேண்டிய packageகளின் ஒரு பட்டியல்,
05:09 இணையத்திலிருந்து தரவிறக்கப்படவேண்டிய file size, மற்றும் நிறுவுதலுக்குப் பிறகு உள்ள பயன்படுத்தப்பட்ட disk spaceஐ, terminal காட்டும்.
05:17 Do you want to continue?” என்று கேட்கப்பட்டால், Y என டைப் செய்து, பின் Enter.ஐ அழுத்தவும்.
05:23 உங்கள் இணையத்தின் வேகத்தை பொறுத்து, நிறுவுதலுக்கு சிறிது நேரம் ஆகலாம்.
05:31 நிறுவுதல் இப்போது முடிவு பெற்றுவிட்டது.
05:34 இப்போது, Dash home.க்கு செல்லவும். search barல், டைப் செய்க: Virtualbox.
05:42 இப்போது, Oracle VM VirtualBox icon ஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
05:47 VirtualBox அப்ளிகேஷன் திறக்கிறது. இது, நிறுவுதல் வெற்றிகரமாக என்று குறிக்கிறது.
05:54 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். சுருங்கச்சொல்ல,
05:59 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Virtualization செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பது மற்றும் Ubuntu Linux 16.04 Operating System ல், VirtualBoxஐ தரவிறக்குவது.
06:11 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
07:54 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது.
06:27 மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
06:31 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
06:35 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
06:47 இந்த ஸ்கிரிப்ட் மற்றும் காணொளி, NVLI மற்றும் ஸ்போகன் டுடோரியல் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து, நான்சி வர்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree, Nancyvarkey