Koha-Library-Management-System/C2/Add-Subscription-in-Serials/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
00:01 Serialகளில் subscriptionஐ எப்படி சேர்ப்பது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம், ஒரு புதிய serialக்கு ஒரு subscription ஐ சேர்க்கக்கற்போம்.
00:15 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux Operating System 16.04, மற்றும் Koha பதிப்பு 16.05.
00:29 இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவர்களுக்கு, Library Science பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:35 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:39 மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும்.
00:50 ஒரு முந்தைய டுடோரியலில், Serial subscriptionகளை catalog செய்யக்கற்றோம்.
00:57 இந்த டுடோரியலில், serialகளுக்கு ஒரு புது subscription ஐ சேர்க்கக்கற்போம்.
01:04 Superlibrarian Username Bella மற்றும் அவளின் password.ஐ வைத்து login செய்யவும்.
01:10 இந்த தொடரின் ஒரு முந்தைய டுடோரியலில் விளக்கியது போல், Serials subscription க்கு ஒரு புது Vendorஐ உருவாக்கவும்.
01:18 நான் Mumbai Journal supplier என்ற பெயரை கொடுக்கிறேன். பின், நான் ஒரு மின்னஞ்சல் முகவரியை சேர்த்துள்ளேன்- Mumbaijournals@gmail.com.
01:30 பின்வருவனவற்றிக்கான check-boxகளை check செய்ய நினைவில் கொள்ளவும்- Primary acquisitions contact:, Primary serials contact:, Contact about late orders மற்றும் Contact about late issues.
01:46 இந்த விவரங்கள், இந்த டுடோரியலில் பின்னர் பயன்படுத்தப்படும்.
01:51 இவ்வாறே, உங்கள் vendorன் விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
01:56 நாம் பதிவு செய்யவேண்டிய Journalன் screenshot இங்குள்ளது.
02:01 இங்கு காட்டப்படுகின்ற இந்த விவரங்களையே நான் எனது Koha interface.ல் enter செய்யப்போகிறேன்.
02:08 Koha interface க்கு செல்வோம்.
02:12 இப்போது, Koha homepageல் Serials.ஐ க்ளிக் செய்யவும்.
02:18 திறக்கின்ற பக்கத்தில், ‘New Subscription’ஐ க்ளிக் செய்யவும்.
02:24 Add a new subscription (1/2) எனக் கூறுகின்ற மற்றொரு பக்கத்தை அது திறக்கும்.
02:30 இங்கு, சில விவரங்களை பூர்த்தி செய்ய நாம் தூண்டப்படுவோம்.
02:35 Vendorக்கு, இரண்டு காலி boxகளுக்கு அடுத்துள்ள Search for vendor tabஐ க்ளிக் செய்யவும்.
02:43 ஒரு புதிய windowவில், Serial subscription: search for vendor என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
02:50 Vendor name fieldல், நான் Mumbai Journal Supplier. என டைப் செய்கிறேன்.
02:56 நீங்கள் உங்களது vendorன் பெயரை இங்கு டைப் செய்யவேண்டும். இப்போது, இந்த fieldன் வலது பக்கத்தில் உள்ள OK பட்டனை க்ளிக் செய்யவும்.
03:05 Vendor search resultகளை காட்டுகின்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது.
03:10 கீழுள்ள tableலில், Select: பிரிவின் கீழ், vendorன் பெயருக்கு அடுத்துள்ள Choose ஐ க்ளிக் செய்யவும்.
03:19 அதே பக்கம், Add a new subscription (1/2) மீண்டும் திறக்கிறது. இந்த பக்கம், இந்த டுடோரியலில் பின்னர் மீண்டும் பயன்படுமாதலால், இதை மூட வேண்டாம்.
03:31 அடுத்தது, Record. Recordஐ அடுத்து, இரண்டு காலி boxகள் இருக்கின்றன.
03:37 இந்த காலி boxகளின் கீழ் இரண்டு tabகள் உள்ளன: Search for record மற்றும் Create record.
03:46 ஒரு வேளை, record ஏற்கனவே இருந்தால், பின் Search for record.ஐ க்ளிக் செய்யவும்.
03:53 இல்லையெனில், உரிய serial.க்கு ஒரு புது entryயை உருவாக்க Create record tabஐ க்ளிக் செய்யவும்.
04:01 ஒரு முந்தைய டுடோரியலில், Indian Journal of Microbiology என்ற தலைப்பை கொண்ட ஒரு serial ஐ நாம் ஏற்கனவே catalog செய்துள்ளோம்.
04:10 அதனால், நாம் Search for record. tabஐ க்ளிக் செய்வோம்.
04:16 Catalog search என்ற ஒரு புதிய window திறக்கிறது.
04:21 Keyword fieldக்கு, Indian என enter செய்யவும்.
04:27 பின், பக்கத்தின் கீழுள்ள Search ஐ க்ளிக் செய்யவும்.
04:32 Search results from 1 to 1 of 1, என்ற புதிய பக்கம் திறக்கிறது.
04:39 முன்பு enter செய்யப்பட்ட பின்வரும் விவரங்களை அது கொண்டிருக்கும்: Title- Indian Journal of Microbiology, Publisher- Springer, ISSN- 0046-8991.
04:58 நீங்கள் enter செய்த விவரங்களை நீங்கள் காணலாம்.
05:02 அடுத்து, tableலின் வலது மூலையில் உள்ள Choose பட்டனை க்ளிக் செய்யவும்.
05:07 அதே window மூடி, enter செய்யப்பட்ட விவரங்கள், பக்கத்தில் தோன்றுகின்றன-
05:13 Add a new subscription (1/2), , Recordக்கான fieldல், எனக்கு எண் 3. காட்டப்படுகிறது.
05:22 நீங்கள் செய்துள்ள entryக்களின் எண்ணிக்கையை பொறுத்து, உங்கள் interfaceல் அது வேறுபட்டதாக இருக்கலாம்.
05:29 தொடருகையில், நான் பின்வருவனவற்றை அப்படியே விட்டுவிடுகிறேன்.
05:33 தொடருவோம். Library, க்கு, drop-down னிலிருந்து நான் Spoken Tutorial Library ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
05:41 தேவைப்பட்டால், பின்வருவனவற்றை நீங்கள் பூர்த்தி செய்யலாம்- Public note மற்றும் Nonpublic note.
05:47 நான் அவற்றை காலியாக விடுகிறேன்.
05:50 அடுத்து, Patron notification:. Drop-down னிலிருந்து Routing List.ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:59 Grace period:, க்கு, நான் 15 day(s) ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
06:04 Number of issues to display to staff:, க்கு, enter செய்க: 4.
06:10 Number of issues to display to the public:, க்கு, enter செய்க: 4.
6:15 எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, பக்கத்தின் கீழுள்ள Nextஐ க்ளிக் செய்யவும்.
06:22 Add a new subscription (2/2) என்ற புதிய பக்கம் திறக்கிறது.
06:27 Serials Planning, பிரிவுக்கு, பின்வருவனவற்றை enter செய்யவும்-
06:32 First issue publication date:,க்கு, 01/01/2017 என நான் enter செய்கிறேன்.
06:41 Frequency:, க்கு, drop-down னிலிருந்து நான் ⅓ months, அதாவது quaterlyஐ தேர்ந்தெடுக்கிறேன்.
06:48 Subscription length:- drop-downனிலிருந்து ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், issues,ஐ தேர்ந்தெடுக்கவும். enter amount in numeralsக்கு, boxல் 4ஐ enter செய்யவும்.
07:01 Subscription start date: க்கு, enter செய்க: 01/01/2017. Subscription end date: க்கு, enter செய்க: 01/12/2017.
07:20 Numbering pattern:- drop-down னிலிருந்து, Volume, Numberஐ தேர்ந்தெடுக்கவும்.
07:26 Locale- drop-down னிலிருந்து, Englishஐ தேர்ந்தெடுக்கவும். Englishஐ தவிர வேறு ஏதேனும் மொழியாக இருந்தால், drop-downனிலிருந்து தகுந்த தேர்வை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
07:38 அடுத்து, Volume மற்றும் Numberக்கான tableக்கு பின்வருவனவற்றை enter செய்யவும்.
07:43 Begins with: Volume= 57, Begins with: Number =1, Inner counter: Number =4.
07:55 எனினும், நீங்கள் pattern வகையை மாற்ற விரும்பினால், பின் Show/Hide advanced pattern.ஐ க்ளிக் செய்யவும்.
08:04 Entryகளை edit செய்ய, Advanced prediction pattern table லின் கீழுள்ள modify pattern ஐ க்ளிக் செய்யவும்.
08:12 Pattern name , : Volume, Number ஆக இருக்க வேண்டும்.
08:18 Numbering formula , Vol.{X}, No.{Y} ஆக இருக்க வேண்டும்.
08:24 Advanced prediction pattern, tableக்கு, முன்னிருப்பாக Koha பின்வருவனவற்றிக்கு மதிப்புகளை தேர்ந்தெடுக்கிறது- Label: column X க்கு Volume, column Y க்கு Number.
08:39 Begins with :, column X க்கு 57, Column Y க்கு 1 மற்றும் மேலும் பல.
08:48 இப்போது, பக்கத்தின் கீழுள்ள Test prediction pattern பட்டனை க்ளிக் செய்யவும்.
08:54 அதே பக்கத்தில், வலது பக்கமாக Prediction pattern தோன்றும்.
09:00 Prediction pattern பின்வருவனவற்றின் விவரங்களை காட்டும்- Number, Publication date மற்றும் Not published.
09:11 இறுதியாக, பக்கத்தின் கீழுள்ள Save subscription பட்டனை க்ளிக் செய்யவும்.
09:18 பின்வரும் விவரங்களை கொண்ட, Subscription for Indian Journal of Microbiology என்ற ஒரு புதிய பக்கம் திறக்கிறது- Information, Planning, Issues மற்றும் Summary.
09:34 Planning tabஐ க்ளிக் செய்யவும்.
09:37 பின்வருவனவற்றை சரிபார்க்கவும்- Starting with: tab க்கு, Volume மற்றும் Number: , 57 மற்றும் 1 ஆக இருக்க வேண்டும்.
09:46 Rollover: tabக்கு, Volume மற்றும் Number: , 99999 மற்றும் 12 ஆக இருக்க வேண்டும்.
09:56 அடுத்து, Issues tabஐ க்ளிக் செய்யவும். இது, பின்வரும் விவரங்களை காட்டும்- Issue number: க்கு, Vol. 57 மற்றும் No. 1, Planned date: க்கு, 01/01/2017.
10:17 Published date: க்கு, 01/01/2017, Published date (text): காலியாக இருக்கும், Status: Expected.
10:31 இத்துடன், Journal subscription வெற்றிகரமாக சேர்க்கப்பட்டுவிட்டது.
10:36 Serialகளின் Subscriptionஐ சேர்ப்பதன் நோக்கம், ஒழுங்கான காலமுறையில் வெளியிடப்படுகின்ற Journalகள், Magazineகள்,
10:43 Serialகள், Newspaperகள், மற்றும் மற்ற itemகளை கண்காணிப்பதற்கே ஆகும்.
10:50 இப்போது, நீங்கள் Koha.விலிருந்து log out செய்யலாம்.
10:53 அதைச் செய்ய, Koha interfaceன் மேல் வலது மூலைக்கு செல்லவும். Spoken Tutorial Libraryஐ க்ளிக் செய்து, drop-downனிலிருந்து, Log outஐ தேர்ந்தெடுக்கவும்.
11:05 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
11:09 சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம், ஒரு புதிய serialக்கு ஒரு subscription ஐ சேர்க்கக்கற்றோம்.
11:18 பயிற்சியாக: Journal of Molecular Biology.க்கு ஒரு புதிய Subscriptionஐ சேர்க்கவும்.
11:26 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:33 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
11:42 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
11:46 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
11:58 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree