Introduction-to-Computers/C2/Google-Drive-Options/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:27, 29 November 2015 by Pravin1389 (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Google drive options குறித்த ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு
00:06 இதில் நாம் கற்கப்போவது Google drive'ல் உள்ள தேர்வுகள்
00:12 Document, Spreadsheet, மற்றும் Presentation'ஐ உருவாக்குதல்
00:17 File அல்லது folder'ஐ பதிவேற்றுதல்
00:20 பகிரும் வசதிகள்
00:22 இதற்கு நமக்கு இணைய இணைப்பு மற்றும் ஒரு வெப் ப்ரெளசர் தேவை
00:29 நான் firefox web browser'ஐ பயன்படுத்துகிறேன்
00:33 முன் நிபந்தனையாக gmail குறித்த அடிப்படை அறிவு தேவை
00:38 இல்லையென்றால் எங்கள் இணையத்தில் உள்ள டுட்டோரியலை காணவும்
00:43 இதோ துவங்கலாம்
00:45 web browser'ஐ திறந்து, gmail'ல் login செய்யவும்
00:49 நான் ஏற்கனவே இதை செய்து விட்டேன்
00:51 வலது மேல் புறத்தில், நம் பெயருக்கு அடுத்துள்ள grid icon'ஐ காணலாம்
00:56 அதன் மீது mouse'ஐ நகர்த்தும் போது, Apps என்ற உரை தோன்றுகிறது. அதை click செய்யலாம்
01:02 இது சில google app'களான google plus, search, youtube, maps, play store, news, mail, drive மற்றும் calander'ஐ காட்டுகிறது
01:18 அவற்றை click செய்தால், அது குறிப்பிட்ட app'ன் பக்கத்திற்கு நம்மை கொண்டுசெல்லும்
01:24 இந்த பட்டியலை நமக்கு ஏற்றார் போல் நாம் apps icon'ஐ இடம்மாற்றி வைத்துகொள்ளலாம்
01:32 இந்த டுட்டோரியலில், நாம் drive'ஐ பற்றிக் கற்போம்
01:35 Drive'ன் மீது click செய்யலாம்
01:39 இது Google drive'ன் பக்கத்தை புதிய tab'ல் திறக்கிறது
01:43 பக்கத்தின் மேல் பகுதியில் search bar'ஐ காணலாம்
01:47 இடது புறத்தில் சில மெனுக்கள் உள்ளன
01:51 மேலும் மேல் வலது புறத்தில் சில icon'கள் உள்ளன
01:55 மையப்பகுதியில் இரண்டு file'களை காணலாம்
01:59 முதல் file, கணக்கு உருவாக்கும் வேளையில் Google Team'ஆல் பகிரப்பட்டது
02:05 இரண்டாவது நாம் முன்னதாக பதிவேற்றியது
02:10 இடது புறத்தில் உள்ள மெனுக்களை காணலாம்
02:14 அவை New, My drive, Shared with me, Google Photos, Recent, Starred மற்றும் Trash.
02:27 முன்னிருப்பாக My Drive தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உள்ளடக்கங்கள் மையப்பகுதியில் காட்டப்படுகின்றன
02:34 அனைத்து file'களையும் folder'களையும் மையப்பகுதியில் காணலாம்
02:38 நாம் முந்தைய டுட்டோரியலில் பதிவேற்றிய pdf மற்றும் zip file'களை இங்கு காணலாம்
02:47 நாம் உருவாக்கிய அல்லது பதிவேற்றிய file'கள் My Drive'ன் கீழ் இருக்கும்
02:53 அடுத்த மெனு Shared with me, அதை click செய்யலாம்
02:58 யாராவது நம்முடன் file'ஐ பகிர்ந்திருந்தால், அதை இந்த மெனு'வின் கீழ் காணலாம்
03:03 இதுவரை நமக்கு யாரும் எந்த file'ஐயும் பகிரவில்லை. எனவே இது காலியாக உள்ளது
03:09 சமீபத்தில் Google photos'ஐ அணுக, Drive'ல் ஒரு shortcut link'ஐ google உருவாக்கியுள்ளது
03:15 இந்த டுட்டோரியலில் நான் இதை தவிர்கிறேன்
03:19 நாம் சமீபத்தில் திறந்த file அல்லது folder'ன் பட்டியலை Recent மெனு இங்கு காட்டும்
03:25 இது My Drive மற்றும் Shared with me'ல் உள்ள உள்ளடக்கங்களைக் காட்டும்
03:30 இங்கு நாம் pdf மற்றும் zip file'களைக் காணலாம். ஏனெனில் இவற்றை நாம் சமீபத்தில் திறந்துள்ளோம்
03:37 Starred - நாம் முக்கியம் என குறிக்கப்பட்ட file அல்லது ஆவணமோ இருந்தால் அதை இங்கு காணலாம்
03:45 My Drive'க்கு சென்று, pdf file'ன் மீது right click செய்க
03:51 பின் Add Star'ஐ click செய்க
03:55 அடுத்து Starred menu மீது click செய்ய. இதோ நமது file
04:00 இந்த file'ஐ பிரதி எடுக்கலாம்
04:03 மீண்டும் ஒருமுறை, அந்த file'ன் மீது right click செய்து, make a copy 'ஐ தேர்ந்தெடுக்கவும்
04:10 இப்போது நம்மிடம் இரண்டு file'கள் உள்ளது
04:13 அவற்றில் ஒன்றை நீக்குவோம். file'ஐ தேர்ந்தெடுத்து Keyboard'ல் உள்ள Delete key'ஐ அழுத்தவும்
04:20 நீக்கிய file'ஓ அல்லது ஆவணமோ Trash'ல் இருக்கும்
04:25 இது தற்காலிக நீக்கமே
04:28 இதை நிரந்திரமாக நீக்க Trash'ஐ தேர்ந்தெடுத்து Empty Trash மீது click செய்யவும்
04:36 Trash'ல் உள்ள அனைத்து file'களும், 30 தினங்களுக்குப் பின் Google server'ல் இருந்து தானாகவே நிரந்திரமாக நீக்கப்படும்
04:44 ஒரு file அல்லது folder'ஐ எப்படி உருவாக்குவது மற்றும் பதிவேற்றுவது என கற்போம்
04:49 அதற்கு நான்கு வழிகள் உள்ளன, சிகப்பு நிறத்தில் உள்ள New button மீது click செய்தல்
04:56 இரண்டாவது வழி, My drive'ன் மீது right click செய்தல்
05:00 My Drive'விற்கு திரும்ப வருவோம், My drive தேர்வின் மையப்பகுதியில் right click செய்தால் மற்றொரு வழி
05:09 கடைசியாக மேல் பகுதியில் உள்ள My drive'ன் மீது click செய்தல்
05:14 நாம் New தேர்வை அணுகலாம், New button மீது click செய்யவும்
05:19 சில தேர்வுகள் தோன்றுகின்றன, Folder, file upload, Google docs, sheets, slides மேலும் பல
05:28 ஒவ்வொன்றாக காணலாம்
05:31 folder'ஐ உருவாக்க Folder தேர்வை பயன்படுத்துகிறோம்
05:34 அதை click செய்யவும், உடனே பெயரை உள்ளிட ஒரு window தோன்றுகிறது
05:40 folder'க்கு spoken tutorial என பெயரிட்டு create button மீது click செய்யவும்
05:48 முன்னிருப்பாக அந்த folder, My Drive'ல் தோன்றும்
05:52 அதை இந்த மையப்பகுதியில் காணலாம்
05:56 folder'கள் நாம் file'களை ஒருங்கிணைக்க உதவுகின்றன
06:00 நம் தேவைக்கேற்ப தனித்தனி folder'களை உருவாக்கலாம், உதாரணமாக work, personal மற்றும் பல
06:07 file'ஐ பதிவேற்ற முதலில் New button மீது click செய்து பின் File Upload மீது click செய்யவும்
06:13 அது ஒரு file browser'ஐ திறக்கிறது
06:16 பதிவேற்ற வேண்டிய file தேர்ந்தெடுக்கவும்
06:19 நான் Desktop'ல் உள்ள xyz.odt என்ற file'ஐ தேர்ந்தெடுத்து Open மீது click செய்கிறேன்
06:26 கீழ் வலது புறத்தில் நாம் பதிவேற்றப்படும் நிலையை காணலாம்
06:30 உங்கள் file'ன் அளவு மற்றும் இணைய இணைப்பிற்கு ஏற்ப இது சற்றே தாமதமாகலாம்
06:35 பதிவேற்றிய பின் அந்த file'ஐ மையப்பகுதியில் காணலாம்
06:41 கீழே உள்ள, progress window'ஐ மூடலாம்
06:45 இதே போல் நாம் folder'ஐ பதிவேற்ற Drive'ல் உள்ள Folder Upload'ஐ பயன்படுத்தலாம்
06:52 இந்த வசதி சில web browser'களில் மட்டுமே காணப்படுகிறது. உதாரணமாக Google Chrome
06:59 நாம் பதிவேற்றிய file'ஐ எப்படி Spoken Tutorial folder'ல் நகர்த்துவது
07:04 file'ஐ இது போல் இழுத்து folder'ல் விடவேண்டும்
07:09 இடது புறத்தில் உள்ள My Drive'ஐ கவனியுங்கள்
07:14 இடது புறத்தில் ஒரு சிறிய முக்கோணத்தை காணலாம்
07:18 அதை click செய்வதன் மூலம் My Drive'ன் உள் folder'களை காணலாம்
07:22 இதோ நமது Spoken Tutorial folder'ம், அதன் உள்ளே xyz.odt file'ஐயும் காணலாம்
07:31 நம் தினசரி வேலைக்காக நாம் Document, Spreadsheet மற்றும் Presentation'ஐ பயன்படுத்துகிறோம்
07:36 அவற்றை Google Drive 'ல் உருவாக்கி நிர்வகிப்பது சாத்தியமா?
07:39 ஆம் Google Drive'ல் நாம் Document, Spreadsheet மற்றும் Presentation'களை பிற Office Suite'களில் உள்ளது போல் உருவாக்கலாம்
07:50 ஆவணத்தை உருவாக்க - Google Docs
07:54 Spreadsheet'ஐ உருவாக்க - Google Sheets
07:57 Presentation'ஐ உருவாக்க - Google Slides
08:01 பயிற்சிக்காக நான் Google Docs'ஐ பயன்படுத்தி எப்படி ஆவணத்தை உருவாக்குவது என காட்டுகிறேன்
08:08 ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க New button'ஐ click செய்து Google Docs'ஐ தேர்ந்தெடுக்கவும்
08:14 இது ஒரு காலி ஆவணத்தை புதிய Tab'ல் திறக்கிறது
08:19 பிற Office Suite'களில் உள்ளது போல மெனுக்களையும் உரை வடிவமைக்கும் தேர்வுகளையும் இங்கே காணலாம்
08:26 மேலே கவனித்தால் ஆவணத்தின் பெயர் untitled document என உள்ளது
08:31 இதை திருத்த இயலும். தலைப்பை மாற்ற அந்த உரை மீது click செய்யவும்
08:38 Rename Document window திறக்கிறது
08:41 ஆவணத்துக்கு தகுந்த பெயரை உள்ளிடலாம்
08:46 நான் My first google doc என உள்ளிட்டு, OK’வை click செய்கிறேன்
08:53 பெயர் மாறியதை கவனிக்கவும்
08:56 அடுத்தபடியாக ஆவணத்தில், Welcome to Google Docs என்ற வாக்கியத்தை உள்ளிடவும்
09:02 இந்த ஆவணத்தில் செய்யப்படும் எந்த ஒரு மாற்றமும் தானாகவே சேமிக்கப்படும்
09:08 மேலே Help மெனுவின் அருகில், All changes saved in Drive என்ற செய்தியை கவனியுங்கள்
09:14 இதை click செய்க, வலது புறத்தில் Revision History'ஐ காணலாம்
09:19 இதில் கடைசியாக செய்த மாற்றத்தின் தேதி, நேரம் மற்றும் யார் செய்தார் என்பதைக் காணலாம்
09:26 இதுவரை இந்த ஆவணம் யாருடனும் பகிரப்படவில்லை
09:30 எனவே நாம் பயனரான Rebecca raymond உடன், தேதியை Today எனவும் நேரத்தையும் காணலாம்
09:37 இந்த Google Doc பலருடன் பகிரப்பட்டு இருந்தால், Revision History'ல் அவரவர் செய்த மாற்றங்களை பல வண்ண வேறுபாடுகளைக் கொண்டு காணலாம்
09:48 இதை விரிவாக சிறிது நேரம் கழித்து காண்போம்
09:53 Revision History'ஐ மூடலாம்
09:56 Google Doc'ஐ மூடலாம். ஆவணம் தானாகவே சேமிக்கப்படும்
10:02 இப்போது நாம் My Drive'ல் உள்ளோம், இங்கே நமது file'ஐ காணலாம்
10:07 Double click செய்து file'ஐ திறக்கலாம்
10:10 இப்பொழுது Welcome to Google Docs என்ற வரியை இரு முறை உள்ளிட்டு ஆவணத்தை மூடலாம்
10:17 double click செய்து மீண்டும் file'ஐ திறக்கலாம்
10:20 மீண்டும் ஒருமுறை Welcome to Google Docs என்ற வரியை உள்ளிடுவோம்
10:26 இப்பொழுது, Revision History மீது click செய்யவும். நாம் இந்த file'ன் அனைத்து திருத்தங்களையும் அவை நடந்த தேதி, நேரம் மற்றும் பயனரின் தகவல்களையும் காணலாம்
10:36 அனைத்து திருத்தங்களையும் காண இயலவில்லையா? பின் கீழே உள்ள Show detailed revisions button மீது click ஐ செய்யவும்
10:44 திருத்தங்கள் கால வரிசைப்படி பட்டியலிட்டு கடைசி திருத்தம் மேலே இருக்கும்
10:50 திருத்தங்கள் மீது click செய்து அவை எப்படி வேலைசெய்கின்றன என காணலாம்
10:55 நான் இந்த ஆவணத்தை வேறு இரண்டு நபர்களுடன் பகிர்கிறேன்
10:59 அதற்கு மேல் வலது புறத்தில் உள்ள Share மீது click செய்யவும்
11:03 Share with others window தோன்றுகிறது
11:07 People உரைப்பெட்டியில் நாம் யாருடன் இந்த documentஐ பகிர உள்ளோமோ, அவர்களின் மின்னஞ்சலை இங்கே உள்ளிடவும்
11:15 நான் 0808iambecky@gmail.com என உள்ளிடுகிறேன்
11:23 நாம் ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்பிய நபரின் முகவரியை உள்ளிடும் போது auto fill வசதியை கவனியுங்கள்
11:31 மற்றவர்களுடன் ஆவணத்தை பகிர மூன்று முறைகள் உள்ளன.
11:36 அவைகளைக்காண இந்த button'ஐ click செய்யவும், can edit, can comment, can view
11:44 Can edit தேர்வு, பிறர் ஆவணத்தில் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது
11:51 Can comment தேர்வு, பிறர் தங்கள் கருத்துக்களை தர உதவுகிறது
11:56 Can view தேர்வு, பிறர் இந்த ஆவணத்தைக்காண மட்டும் அனுமதிக்கிறது
12:00 இதனால் திருத்தவோ கருத்தளிக்கவோ இயலாது
12:04 0808iambecky'கு can edit வசதியை தரலாம்
12:09 நான் stlibreoffice@gmail.com'ஐயும் சேர்க்கிறேன்
12:16 இரண்டு முகவரிகளுக்கு இடையிலும், comma'வை பயன்படுத்த மறக்காதீர்
12:21 மின்னஞ்சலை உள்ளிட்ட உடனேயே window'வின் மாற்றத்தை கவனிக்கவும்
12:25 நமக்கு Add a note உரை பகுதி கிடைக்கிறது
12:28 இந்த ஆவணத்தை பற்றி பிறருக்கு ஏதேனும் தகவல் தர இருந்தால், அதை இங்கு உள்ளிடவும்
12:36 நான் Please find attached a document for testing purpose. Kindly modify or suggest as per the permission given to you. Thanks Ray.Becky என உள்ளிடுகிறேன்
12:47 கடைசியாக Send button மீது click செய்க, பகிரும் செயல்முறை நிறைவு பெறுகிறது.
12:52 இது நமது செய்தியை இந்த இணையத் தொடுப்புடன், நாம் பகிரவிருக்கும் நபருக்கு மின்னஞ்சல் அறிவிப்பை அனுப்பும்
12:59 Share button மீது click செய்யவும்
13:02 பின் Advanced மீது click செய்யவும்
13:05 இப்பொழுது stlibreoffice பயனருக்கு பகிரும் முறையை can comment என மாற்றலாம்
13:12 கடைசியாக save changes button மீது click செய்து பின் Done மீது click செய்யவும்
13:18 இந்த ஆவணத்தை மூடலாம்
13:21 இரு நபர்களும் நாம் பகிர்ந்த ஆவணத்தில் சில மாற்றம் செய்துள்ளார்கள் என்று கருதுவோம்
13:27 நாம் அந்த ஆவணத்தை சில நேரம் கழித்து திறக்க, பிறர் செய்த திருத்தங்களை காணலாம்
13:34 stlibreoffice'ற்கு பரிந்துரைக்க மட்டுமே அனுமதி உள்ளதால் அந்த பயனரின் பரிந்துரைகளை காணலாம்
13:43 cursor'ஐ பரிந்துரை பெட்டியில் உள்ள, சரி மற்றும் தவறு குறிகள் மீது நகர்த்தவும்
13:49 பரிந்துரையை ஏற்க சரியும், நிராகரிக்க தவறும் உதவுகின்றன
13:56 நான் ஒரு பரிந்துரையை ஏற்று மற்றொன்றை நிராகரிக்கிறேன்
14:02 0808iambecky'ன் comment'ஐ இங்கு காணலாம்
14:07 மேலும் இங்கே Resolve button'ஐ காணலாம்
14:11 Can edit வசதி கொண்ட பயனர், Comment text மீது click செய்து பதிலளிக்கலாம்
14:18 comment'ஐ நீக்க Resolve button மீது click செய்யவும்
14:22 0808iambecky என்ற பயனர், ஆவணத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பதைக் காணலாம்
14:29 இந்த பயனருக்கு edit செய்ய அனுமதியுள்ளதை நினைவில் கொள்ளுங்கள்
14:34 இந்த பயனர் செய்த மாற்றத்தை எப்படி காண்பது
14:39 அதற்கு நாம் Revision History'ஐ பார்க்கவேண்டும்
14:43 அதைத் திறக்க File, பின் See revision history மீது click செய்யவும்
14:50 இங்கு 0808iambecky செய்த சில மாற்றங்களையும், அவை வேறு வண்ணத்தில் இருப்பதையும் காணலாம்
14:58 stlibreoffice@gmail.com பரிந்துரைகளை வேறு வண்ணத்தில் இருப்பதையும் காணலாம்
15:05 இந்த ஆவணத்தின் உரிமையாளரான நமக்கும் வேறு வண்ணம் இருப்பதை கவனியுங்கள்
15:11 Revision history window'வை இப்பொழுது மூடலாம்
15:14 ஆவணத்தை பகிர வேறொரு வழியுள்ளது. Share button மீது click செய்யவும்
15:20 Share with others window'வில், மேல் வலது புறத்தில் get sharable link உரையைக் காணலாம். அதை click செய்யவும்
15:29 Anyone with the link can view என சொல்கிறது
15:32 இது இந்த ஆவணத்தின் தொடுப்பை உருவாக்குகிறது
15:35 இப்பொழுது நாம் இந்த தொடுப்பை எந்த மின்னஞ்சல் முகவரிக்கு வேண்டுமானாலும் பகிரலாம். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் இந்த ஆவணத்தைக் காண இயலும்
15:44 டுட்டோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம்
15:47 இதில் நாம் கற்றது
15:49 Google Drive’ஐ அணுகுதல், file'ஐ உருவாக்கி பதிவேற்றுதல், Google Doc’ஐ உருவாக்குதல் மற்றும் பகிரும் தேர்வுகளைப் பயன்படுத்துதல்.
16:00 இந்த இணையதளத்தில் உள்ள வீடியோ, Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. இதை தரவிறக்கம் செய்து பார்க்கவும்.
16:07 நாங்கள் பயிற்சிகள் நடத்தி தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றோம். மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளவும்.
16:16 ஸ்போகன் டுட்டோரியலிற்கு ஆதரவு NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேற்கொண்டு விவரங்கள் இந்த இணையதள முகவரியில் உள்ளது.
16:27 உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.

Contributors and Content Editors

Pravin1389, Priyacst