Health-and-Nutrition/C2/Vegetarian-recipes-for-7-month-old-babies/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:27, 6 September 2019 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:00 7 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, 7 மாத குழந்தைகளுக்கான கூடுதல் உணவின் முக்கியத்துவம் மற்றும்
00:16 பின்வரும் சைவ உணவுகளை எப்படி தயாரிப்பது- பலாப்பழ விதைகள் கஞ்சி
00:23 கொள்ளு தண்டு கீரை கஞ்சி
00:26 தண்டு கீரை காராமணி கஞ்சி
00:28 வெந்தய இலைகள் பீன்ஸ் கஞ்சி மற்றும் வரகு கடலை பருப்பு கஞ்சி
00:35 தொடங்குவோம். முதல் வருடம், குழந்தை தவழ்ந்து நகர தொடங்கும் போது, அவளது வளர்ச்சி அதிக விரைவாக இருக்கிறது.
00:43 குழந்தைக்கு தேவையான சக்தி தேவைகளும் அதிகரிக்கின்றன.
00:48 6-8 மாத வயது குழந்தைகளுக்கு கூடுதல் உணவுகளிலிருந்து, 200 கலோரி வரை தேவைப்படுகிறது.
00:55 கொடுக்கப்படுகின்ற உணவின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும்.
00:59 போதுமான கூடுதல் உணவோடு தாய்ப்பால் கொடுப்பதும் மிக முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளவும்
01:07 ஆகையால், குழந்தைக்கு ஏழு மாதங்கள் நிறைவடையும் போது,ஒரு நாளைக்கு மூன்று முறை அரை கப் கூடுதல் உணவைக் கொடுக்கத் தொடங்கவும்
01:16 அரை கப் என்பது சுமார் 125 மில்லிலிட்டர்கள் அல்லது 8 மேசைக்கரண்டிகள் உணவாகும்
01:22 இப்போது, குழந்தை பல்வேறு உணவுப் வகைகளை ஏற்றுக்கொள்ள பழகி இருக்கும்
01:28 ஏனெனில், ஆறாவது மாதத்திலிருந்தே அவள், கூடுதல் உணவை உட்கொள்ள தொடங்கிவிட்டாள்
01:33 இப்போது குழந்தைக்கு உணவுகளின் கலவையை அறிமுகப்படுத்தத் தொடங்குங்கள்.
01:38 பிசைந்த மற்றும் கூழாக்கப்பட்ட உணவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்
01:44 குழந்தையின் உணவின் நிலைத்தன்மை போதுமான அளவு கெட்டியாகவும், முழுதும் நீராக இல்லாமலும் இருக்க நினைவில் கொள்ளவும்
01:52 குழந்தையின் உணவைத் தயாரிக்கும் போது - எப்போதும் உள்ளூர் மற்றும் பருவகாலப் பொருட்களைப் பயன்படுத்தவும்
01:59 மேலும், பின்வரும் பல்வேறு ஊட்டச்சத்து மிக்க பொடிகளை சேர்க்க நினைவில் கொள்க- கொட்டைகள் மற்றும் விதைகளின் தூள், முளைத்த பீன்ஸ் தூள்
02:08 கறிவேப்பிலை தூள், முருங்கை இலை தூள்
02:11 இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் இது விளக்கப்பட்டுள்ளது
02:17 குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை குழந்தையின் உணவில் உப்பு சேர்க்க வேண்டாம்
02:21 குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை குழந்தையின் உணவில் சர்க்கரை, வெல்லம் சேர்க்க வேண்டாம்.
02:27 இப்போது- குழந்தைக்கு கூடுதல் உணவாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு சில சைவ உணவு வகைகளை நாம் பார்ப்போம்
02:35 நமது முதலாவது உணவு, பலாப்பழ விதைகள் கஞ்சி
02:39 இதற்கு தேவையான பொருட்கள்: 15-20 பலாப்பழ விதைகள், ஒரு சிறிய வாழைப்பழம் அல்லது ½ வாழைப்பழம்
02:48 தேங்காய் பால் அல்லது தாய்ப்பால்
02:50 ஒரு தேக்கரண்டி கொட்டைகள் மற்றும் விதைகளின் தூள்
02:53 பலாப்பழ விதைகள் கஞ்சியை தயாரிக்க- பலாப்பழ விதைகளை நன்கு கழுவவும்.
02:59 இந்த விதைகளை ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். விதைகள் மூடும் வரை தண்ணீரை சேர்க்கவும்.
03:06 5-6 விசில் வரை பிரஷரில் சமைக்கவும்.
03:09 இந்த விதைகளை ஒரு தட்டில் வைத்து, சிறிது நேரம் ஆற விடவும்.
03:16 பின், வெளிப்புற தோலை அகற்ற அவற்றை உரிக்கவும்.
03:20 அடுத்து, மிக்சி அல்லது அம்மியை பயன்படுத்தி அதை கூழாக்கவும்
03:25 இதனுடன், ஒரு பழுத்த வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு கரண்டியால் பிசையவும்
03:32 இப்போது பிசைந்த வாழைப்பழம் மற்றும் பலாப்பழ விதைகளின் கூழை ஒன்றாக கலக்கவும்.
03:37 அதில் 2 மேசைக்கரண்டி தேங்காய் பால் அல்லது தாய்ப்பாலை சேர்க்கவும்.
03:42 அதில், கொட்டைகள் மற்றும் விதைகளின் தூளை சேர்க்கவும்
03:45 அதை நன்றாக கலக்கவும்
03:47 இந்த கலவையை 3-4 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.
03:52 பலாப்பழ விதைகள் கஞ்சி தயார்.
03:56 இந்த பலாப்பழ விதைகள் கஞ்சியில் பின்வருபவை நிறைந்துள்ளதுள்ளன- Protein
03:59 Omega 3 fatty acids
04:02 Potassium மற்றும் Phosphorus
04:06 இரண்டாவது உணவு, கொள்ளு தண்டு கீரை கஞ்சி
04:11 இதை தயாரிக்க நமக்கு தேவையானவை- 2 மேசைக்கரண்டிகள் கொள்ளு பொடி, 2 கப் கழுவிய தண்டு கீரை
04:19 ¼ தேக்கரண்டி கறிவேப்பிலை தூள், ½ தேக்கரண்டி நெய்
04:24 செய்முறை: முதலில், கொள்ளை 7 முதல் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
04:31 பின், அதை ஒரு வடிகட்டியில் வைத்து தண்ணீரில் நன்கு கழுவவும்,
04:37 எல்லா நீரும் வடிந்த பிறகு, அதை ஒரு சுத்தமான பருத்தி துணியில் கட்டி, முளை கட்டும் வரை ஒரு ஓரமாக வைக்கவும்
04:47 இந்த முளை கட்டிய கொள்ளை, ஓரிரு நாள் சூறிய ஒளியில் காய வைக்கவும்
04:52 அதை குறைந்த தீயில் 8-10 நிமிடங்கள் வறுக்கவும். பின், ஆற வைக்கவும்
04:58 பின் அதனை அரைத்து பொடியாக்கவும். இந்த முழு செயல்முறை malting. என அழைக்கப்படுகிறது.
05:05 அதே நேரத்தில், ஒரு கடாயில் நெய்யை சூடாக்கவும்.
05:10 அதில், கழுவிய தண்டு கீரையை சேர்க்கவும்
05:13 இதை 4-5 நிமிடங்கள் வதக்கி, ஆற வைக்கவும்
05:17 பின், ஒரு மிக்சி அல்லது அம்மியை பயன்படுத்தி அதை கூழாக்கவும்
05:23 அடுத்து, கொள்ளு பொடியில் 2 மேசைக்கரண்டிகள் தண்ணீரை சேர்க்கவும்.
05:28 கட்டி தட்டாமல் இருக்க, அதை நன்கு கலக்கவும்
05:32 இந்த நீர்த்த விழுதை குறைந்த தீயில் 6-7 நிமிடங்கள் சமைக்கவும்.
05:37 இப்போது, தண்டு கீரை கூழை இந்த கொள்ளு விழுதுடன் சேர்த்து நன்கு கலக்கவும்
05:43 அடுத்த 2-3 நிமிடங்களுக்கு அதை குறைந்த தீயில் சமைக்கவும்.
05:48 அதில் கறிவேப்பிலை தூளை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
05:52 அதை தீயிலிருந்து நீக்கவும். நமது கொள்ளு தண்டு கீரை கஞ்சி தயார்
05:59 இந்த கஞ்சியில் பின்வருபவை நிறைந்துள்ளதுள்ளன- Protein, Omega 3 fatty acids, Calcium
06:06 Phosphorus, Iron மற்றும் Potassium
06:10 இத்தகைய கஞ்சிகளை செய்ய, உள்ளூரில் கிடைக்கின்ற பீன்ஸ் மற்றும் இலை காய்கறிகளை ஒருவர் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளவும்
06:20 எப்போதும், சோளம், ராகி, வரகு போன்ற பல்வேறு சிறுதானியங்கள் மற்றும் தானியங்களுடன் பீன்ஸை சேர்க்க முயற்சிக்கவும்
06:31 இந்த கலவை குழந்தைக்கு முழுமையான புரதத்தை வழங்குகிறது.
06:35 இந்த தானியங்கள் மற்றும் சிறுதானியங்களின்malt செய்யப்பட்ட பொடிகளை குழந்தையின் உணவில் அல்லது
06:42 சமைக்கப்பட்ட முளைகட்டிய சிறுதானியங்களை பிசைந்து இத்தகைய கஞ்சிகளில் நீங்கள் சேர்க்கலாம்
06:48 மூன்றாவது உணவு, தண்டு கீரை காராமணி கஞ்சி
06:53 இதற்கு தேவையான பொருட்கள்: 2 மேசைக்கரண்டிகள்malt செய்யப்பட்ட தண்டு கீரை பொடி
06:59 2 மேசைக்கரண்டிகள் முளைக்கட்டிய காராமணி கூழ், ¼ தேக்கரண்டி முருங்கை இலை பொடி
07:06 செய்முறை: malt செய்யப்பட்ட தண்டு கீரை பொடியை செய்ய, இதே டுடோரியலின் முந்தைய செயல்முறையில் விளக்கப்பட்டுள்ள அதே வழிமுறையை பின்பற்றவும்
07:17 பின், முளைகட்டிய காராமணியை ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். 4 முதல் 5 விசில் வரை அதை பிரஷரில் சமைக்கவும்.
07:26 இப்போது, இந்த சமைக்கப்பட்ட காராமணியை ஒரு கூழாக்கவும்
07:30 பின், இரண்டு மேசைக்கரண்டிகள் malt செய்யப்பட்ட தண்டு கீரை பொடியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில், போதுமான அளவு தண்ணீரை சேர்க்கவும்
07:38 கட்டி தட்டாமல் இருக்க, அதை நன்கு கலக்கவும்
07:42 இந்த தண்டு கீரை பொடியின் நீர்த்த விழுதை, 2-3 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சமைக்கவும் . இதில் காராமணி கூழை சேர்க்கவும்
07:52 இதை நன்கு கலக்கி, 4-5 நிமிடங்களுக்கு சமைக்கவும். பின், தீயிலிருந்து நீக்கவும்
07:58 இறுதியாக, இந்த சமைத்த கஞ்சியில், ¼ தேக்கரண்டி முருங்கை இலை பொடியை சேர்க்கவும். தண்டு கீரை காராமணி கஞ்சி தயார்
08:09 இந்த தண்டு கீரை காராமணி கஞ்சியில் பின்வருபவை நிறைந்துள்ளன- Protein, Omega-3 fatty acids
08:17 Phosphorus , Magnesium
08:20 Iron, Potassium மற்றும் Calcium
08:24 இத்தகைய கஞ்சிகளை செய்ய, பின்வரும் பொருட்களின் ஒரு கலவையை ஒருவர் பயன்படுத்தலாம்- ராகி, சோளம்
08:32 நரி பயறு, கடலை பருப்பு போன்றவை
08:37 நான்காவது உணவு- வெந்தய இலைகள் பீன்ஸ் கஞ்சி
08:41 இதற்கு தேவையான பொருட்கள்: 2 கப்கள் நறுக்கி, கழுவிய வெந்தய இலைகள், 1 தேக்கரண்டி நெய்
08:49 2 மேசைக்கரண்டிகள் புதிதாக அரைத்த தேங்காய் விழுது
08:52 2 மேசைக்கரண்டிகள் முளைக்கட்டிய பீன்ஸ் பொடி
08:56 பீன்ஸ் பொடியை செய்ய, இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்
09:04 செய்முறை: கடாயில் 1 தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும்.
09:09 வெந்தய இலைகளை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்
09:13 அதை ஒரு சுத்தமான தட்டில் கொட்டி, சிறிது நேரம் ஆற விடவும்
09:18 பின், ஒரு மிக்சி அல்லது அம்மியை பயன்படுத்தி அதை கூழாக்கவும்
09:23 இந்த கூழை குறைந்த தீயில் ஒரு நிமிடம் சமைக்கவும். அதில் 2 மேசைக்கரண்டிகள் பொடித்த பீன்ஸை சேர்க்கவும்.
09:31 கட்டி தட்டாமல் இருக்க, அதை நன்கு கலக்கவும்
09:35 தேவைப்பட்டால், அதில் சிறிது அளவு கொதித்த, ஆறிய நீரைச் சேர்க்கவும்.
09:40 இப்போது, இதில் 2 மேசைக்கரண்டிகள் தேங்காய் விழுதை சேர்க்கவும்
09:44 தேங்காய் விழுதை செய்ய, புதிதாய் துருவிய தேங்காயை அரைத்து விழுதாக்கவும்
09:51 அடுத்து,இந்த கலவையை அடுத்த 7-8 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் தொடர்ந்து கிளறவும்.
09:58 வெந்தய இலைகள் பீன்ஸ் கஞ்சி தயார்
10:03 இந்த வெந்தய இலைகள் பீன்ஸ் கஞ்சியில் பின்வருபவை நிறைந்துள்ளன- Protein, Omega-3 fatty acids
10:10 Folate, Iron
10:12 Calcium, Phosphorus
10:14 Zinc மற்றும் Potassium
10:16 இந்த உணவை தயாரிக்கும் போது, முன்பு விளக்கியுள்ளது போல், தானியங்களை சேர்க்க அல்லது பல்வேறு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களை கலக்க நினைவில் கொள்ளவும்
10:27 ஐந்தாவது உணவு, வரகு கடலை பருப்பு கஞ்சி
10:32 தேவையான பொருட்கள்: 2 மேசைக்கரண்டிகள் வரகு
10:35 2 மேசைக்கரண்டிகள் முளைக்கட்டிய கடலை பருப்பு
10:38 3 மேசைக்கரண்டிகள் தேங்காய் பால், 1 தேக்கரண்டி நெய்
10:43 செய்முறை: ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டிகள் வரகை எடுத்துக்கொள்ளவும்.
10:48 அதை நன்கு கழுவவும். பின், அதில் 3-4 மேசைக்கரண்டிகள் தண்ணீரை சேர்க்கவும்
10:55 3-4 விசில்கள் வரும் வரை, அதை பிரஷரில் சமைக்கவும்
10:58 இதற்கிடையில், முளைக்கட்டிய கடலை பருப்பை 4-5 விசில்கள் வரும் வரை, அதை பிரஷரில் சமைக்கவும்
11:04 பின், அதனை ஒரு கூழாக்கவும்
11:07 ஒரு ஸ்டீல் பாத்திரத்தில், 1 தேக்கரண்டி நெய்யை சூடாக்கவும்
11:11 அதில், சமைத்த வரகு, கடலை பருப்பு கூழ் மற்றும் தேங்காய் பாலை சேர்க்கவும். அதை நன்கு கலக்கவும்
11:18 அடுத்த 4-5 நிமிடங்களுக்கு அதை சமைக்கவும். பின், ஆற விடவும். இப்போது, வரகு கடலை பருப்பு கஞ்சி தயார்
11:27 இந்த கூழில், பின்வருபவை நிறைந்துள்ளன- Protein, Iron
11:30 Phosphorus, Magnesium
11:33 Calcium மற்றும்Potassium
11:36 இத்துடன், 7 மாத குழந்தைகளுக்கான சைவ சமையல் குறித்த குறித்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree