Health-and-Nutrition/C2/Type-1-and-Type-2-nutrients/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 18:22, 28 February 2020 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:00 வகை 1 மற்றும் வகை 2 ஊட்டச்சத்துக்கள் குறித்த spoken tutorialக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியல், வகை 1 மற்றும் வகை 2 ஊட்டச்சத்துக்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை பற்றியதாகும்
00:12 இப்போது தொடங்குவோம்
00:14 உணவு நமக்கு ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் தருகிறது.
00:17 நமது உடலின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு ஊட்டச்சத்துக்கள் அவசியம்.
00:22 இந்த ஊட்டச்சத்துக்களில் சிலவற்றை நம் உடலால் உற்பத்தி செய்ய முடியாது.
00:27 இத்தகைய ஊட்டச்சத்துக்க,ள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
00:31 மொத்தம் 40 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், உணவிலிருந்து பெறக்கூடியவை ஆகும்
00:36 ஊட்டச்சத்து இல்லாத உணவுகளிலிருந்து இந்த ஊட்டச்சத்துக்களை நாம் போதுமான அளவு பெற முடியாது.
00:42 இத்தகைய உணவுகள், நிறைய எடுத்துக்கொண்டால் கூட, பசியாற்ற மட்டுமே உதவும்.
00:48 இருப்பினும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் நாம் குறைபாடுள்ளவர்களாக இருக்கலாம்.
00:54 இது மறைக்கப்பட்ட பசி என்று அழைக்கப்படுகிறது.
00:58 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் 2 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன:
01:02 வகை 1 ஊட்டச்சத்துக்கள் அல்லது செயல்பாட்டு ஊட்டச்சத்துக்கள்
01:05 மற்றும் வகை 2 ஊட்டச்சத்துக்கள் அல்லது வளர்ச்சி ஊட்டச்சத்துக்கள்.
01:09 Iron, calcium,
01:11 iodine, மற்றும் copper வகை 1 ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
01:15 Manganese,
01:17 fluorine, மற்றும் selenium ஆகியவையும் இதே வகையை சேர்ந்தவை ஆகும்.
01:21 Vitamin B, C,
01:23 A, D,
01:25 E மற்றும் K ஆகியவையும் வகை 1 ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
01:29 Sulphur, chlorine மற்றும்
01:32 protein அல்லதுessential amino acids, வகை 2 ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
01:37 Sodium, potassium,
01:39 magnesium, phosphorus
01:41 மற்றும் zinc ஆகியவையும் அதே குழுவைச் சேர்ந்தவை ஆகும்.
01:45 omega 3 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் வகை 2 ஊட்டச்சத்துக்களாகும்.
01:51 வகை 1 மற்றும் வகை 2 ஊட்டச்சத்துக்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வோம்.
01:56 திசுக்களில் நடக்கின்ற குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு வகை 1 ஊட்டச்சத்துக்கள் தேவை.
02:02 எனவே, அவை ஒரு குறிப்பிட்ட திசு அல்லது திசுக்களின் ஒரு குழுவில் குவிந்துள்ளன.
02:08 calcium aமற்றும்vitamin A ஐ உதாரணங்களாக எடுத்துக்கொள்வோம்
02:13 வலுவான எலும்புகளுக்கு Calcium தேவைப்படுகிறது.
02:17 ஆரோக்கியமான கண்களுக்கு Vitamin A தேவைப்படுகிறது.
02:21 இதற்கு மாறாக, உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வகை 2 ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.
02:28 அவை உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவின் அமைப்பு மற்றும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கின்றன
02:34 எனவே, அவை அனைத்து உடல் திசுக்களிலும் உள்ளன
02:38 வகை 1 மற்றும் வகை 2 ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் நம் உடல் எவ்வாறு பாதிப்படைகிறது என்று பார்ப்போம்
02:45 வகை 1 ஊட்டச்சத்தின் குறைப்பாட்டினால் உடல் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை.
02:50 இந்த ஊட்டச்சத்தை உடலானது குறிப்பிட்ட திசுக்களில் இருந்து எடுத்துக்கொள்கிறது.
02:57 ஒரு உதாரணமாக calciumஐ எடுத்துக்கொள்வோம்
03:00 calcium குறைப்பாட்டின் போது, எலும்புகளில் இருக்கக்கூடிய calciumஐ உடல் பயன்படுத்துகிறது.
03:07 இதன் விளைவாக, திசுக்களில் அந்த ஊட்டச்சத்தின் அளவு குறைகிறது.
03:13 பின்னர், அந்த ஊட்டச்சத்தை சார்ந்துள்ள உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
03:18 எனவே, அந்த நபர் நோய்வாய்ப்படுகிறார்.
03:21 நோய்வாய்ப்பட்ட நபர், குறைபாட்டின் ஒரு குறிப்பிட்ட அறிகுறியைக் வெளிப்படுத்துகிறார்.
03:26 4 எடுத்துக்காட்டுகளின் உதவியுடன் இதைப் புரிந்துகொள்வோம்:
03:31 1. எலும்பு மெலிதல் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படக்கூடிய அதிக வாய்ப்புகள் ஆகியவை கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
03:37 2. Anaemia' என்பது iron குறைபாட்டின் அறிகுறியாகும்.
03:41 3. இரவு நேரத்தில் கண் பார்வையின்மை என்பது vitamin A' குறைபாட்டின் அறிகுறியாகும்.
03:45 4. மேலும் Hypothyroidism என்பது iodine குறைபாட்டின் அறிகுறியாகும்.
03:50 மாறாக, வகை 2 ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு ஒரே 1 அறிகுறி மட்டுமே உள்ளது.
03:57 அந்த அறிகுறி வளர்ச்சியின்மை என்று அழைக்கப்படுகிறது.
04:00 வளர்ச்சியின்மை என்பது, 2 முக்கிய செயல்முறைகளின் வீதத்தைக் உடல் குறைக்கிறது என்பதாகும்:
04:06 1. புதிய உயிரணுக்களை உருவாக்குதல் மற்றும்
04:08 பழைய உயிரணுக்களை மாற்றுதல்
04:11 உடலானது புதிய திசுக்களை உருவாக்குவதையும் அதன் வளர்ச்சியையையும் நிறுத்திவிடுகிறது.
04:16 இது குறைந்த உடல் எடை,
04:18 குறுகிய உயரம் மற்றும் குறைந்த தசை எடையை விளைவிக்கிறது.
04:23 நோயெதிர்ப்பு அமைப்பு உட்பட உடலின் அனைத்து உயிரணுக்களும் பாதிக்கப்படுகின்றன.
04:29 இது தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
04:32 இறுதியில், இது மரணத்தை ஏற்படுத்தலாம்.
04:35 வகை 2 ஊட்டச்சத்துக்கள் உடலில் சேமிக்கப்படுவதில்லை.
04:39 ஒரு குறைபாட்டில், உடலின் திசுக்கள் அல்லது தசைகள் தேய ஆரம்பிக்கலாம்.
04:45 இது உடலில் குறைபாடுள்ள வகை 2 ஊட்டச்சத்தை வெளியிடுகிறது.
04:50 இந்த ஊட்டச்சத்து பின்னர் உடலின் மற்ற திசுக்களுக்கு பயன்படுத்தப்படும்.
04:55 திசுக்களின் தேய்மானம் அதிகரிக்கும் போது, உயிரணுக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
05:02 மேலும், பசி குறைகிறது.
05:05 திசுக்கள் தேய்ந்து, உடலில் குறைபாடுள்ள ஊட்டச்சத்தை வழங்குகிறது.
05:11 மேலும், இது திசுக்களில் இருந்து மற்ற அனைத்து வகை 2 ஊட்டச்சத்துக்களையும் வெளியிடுகிறது.
05:17 இந்த ஊட்டச்சத்துக்கள் பின்னர் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.
05:21 எனவே, அனைத்து வகை 2 ஊட்டச்சத்துக்களும், வகை 2 ஊட்டச்சத்து குறைபாட்டில் வழங்கப்பட வேண்டும்.
05:28 வகை 1 ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய அனைத்து வகை 1 ஊட்டச்சத்துக்களும் தேவையில்லை.
05:34 உடலில் குறைபாடுள்ள ஊட்டச்சத்துக்களை மட்டுமே கொடுத்து சிகிச்சையளிக்க முடியும்.
05:40 அடுத்து, தாய்ப்பாலில் இருந்து வகை 1 மற்றும் 2 ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது பற்றி பார்ப்போம்.
05:47 தாய்ப்பால், வகை 2 ஊட்டச்சத்துக்களை நிலையான அளவில் கொண்டிருக்கிறது
05:52 தாய்க்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும், அவற்றின் அளவு குறைவதில்லை
05:57 ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாயின் குழந்தை, போதுமான தாய்ப்பாலின் மூலம் நன்றாக வளர முடியும்.
06:03 இதற்கு மாறாக, தாய்ப்பாலில் உள்ள வகை 1 ஊட்டச்சத்துக்களின் அளவு நிலையானது அல்ல.
06:09 இது, தாய் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்களின் அளவிற்கு ஏற்றார் போல் மாறுபடும்
06:13 vitamin Dஐ உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
06:17 vitamin Dஇன் குறைபாடுள்ள தாயின் தாய்ப்பாலில் vitamin D அளவு குறைவாக இருக்கும்.
06:23 அடுத்து, வகை 1 மற்றும் வகை 2 ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கண்டறிவது பற்றி பார்ப்போம்.
06:30 வகை 1 ஊட்டச்சத்து குறைபாடு பொதுவாக 2 வழிகளில் கண்டறியப்படுகிறது.
06:36 முதலில், குறைபாட்டின் தனித்துவமான அறிகுறிகள் கண்டறியப்படுகிறது.
06:41 பின்னர், உடலில் உள்ள அந்த ஊட்டச்சத்தின் அளவு இரத்த பரிசோதனை மூலம் அளவிடப்படுகிறது.
06:46 iron மற்றும் iodineஐ எடுத்துக்காட்டுகளாக எடுத்துக்கொள்வோம்.
06:50 iron குறைபாட்டில், வெளிறிய தோல் மற்றும் சோர்வு போன்றவை அறிகுறிகளாகும்.
06:56 உடலில் உள்ள haemoglobinனின் அளவு இரத்த பரிசோதனையின் மூலம் அளவிடப்படுகிறது.
07:01 Iodine குறைபாடு அதன் தனித்துவமான அறிகுறிகள் மற்றும் சோதனைகளால் கண்டறியப்படுகிறது.
07:07 கழுத்தில் வீக்கம்
07:10 எடை அதிகரிப்பு மற்றும்
07:12 முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் ஆகும்
07:14 உடலில் iodine மற்றும் thyroid hormoneகளின் அளவு, இரத்த பரிசோதனைகளால் அளவிடப்படுகின்றன.
07:21 வகை 1 ஊட்டச்சத்து குறைபாடுகள் நன்கு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றன.
07:26 வகை 1 ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய பல்வேறு வழிகள் உள்ளன.
07:31 அதற்குரிய ஊட்டச்சத்துக்களின் பரிந்துரைக்கப்பட்ட அளவை ஒருவர் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
07:36 இந்த ஊட்டச்சத்தை பெற கூடுதல் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
07:41 Iron, vitamin C மற்றும்
07:43 folic acidஐ கொண்ட மருந்துகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன.
07:47 குறைபாடு பொதுவாக உள்ள பகுதிகளில் வகை 1 ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து பலப்படுத்தப்படுகிறது.
07:53 நன்கு அறியப்பட்ட எடுத்துக்காட்டு, iodineஉடன் கூடிய உப்பு.
07:59 ஒரு தகுதிவாய்ந்த ஊட்டச்சத்து நிபுணர் இந்த முறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்க முடியும்.
08:04 ஒரு வகை 2 ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை செய்வது கடினம்.
08:10 எந்த ஒரு வகை 2 ஊட்டச்சத்து குறைபாட்டையும் கண்டறிய ஒரே 1 வழி மட்டுமே உள்ளது.
08:15 அது, பின்வருவனவற்றை அளவிடுவதும் கண்காணிப்பதும் ஆகும்.
08:17 எடை, உயரம்
08:19 மற்றும் மேல் கையின் நடுப்பகுதியின் சுற்றளவு.
08:22 இருப்பினும், இது வளர்ச்சியின்மையை கண்டறிய மட்டுமே உதவும்.
08:27 ஒவ்வொரு வகை 2 ஊட்டச்சத்து குறைபாட்டாலும் வளர்ச்சியின்மை ஏற்படுகிறது.
08:33 உடலில் எந்த குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என்பதை தீர்மானிப்பது கடினம்.
08:40 எனவே, வகை 2 ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய அனைத்து வகை 2 ஊட்டச்சத்துக்களும் தேவை.
08:47 அத்தகைய குறைபாட்டில், அனைத்து வகை 2 ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவு கொடுக்கப்பட வேண்டும்.
08:53 முன்பு கொடுக்கப்பட்ட உணவின் அளவை மட்டும் அதிகரிப்பது பலனளிக்காது.
08:59 முன்பு கொடுக்கப்பட்ட உணவு, உடலுக்கு வகை 2 ஊட்டச்சத்துக்களை வழங்கத் தவறிவிட்டது.
09:04 உடலின் இயல்பான வளர்ச்சிக்கு உணவின் தரம் மாற்றப்பட வேண்டும்.
09:10 மேலும் வழிகாட்டலுக்கு தகுதியான ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்.
09:15 வகை 1 மற்றும் வகை 2 நிறைந்த உணவுகள் குறித்து, மற்ற டுடோரியல்களில் விளக்கப்பட்டுள்ளன.
09:22 மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்
09:26 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Jayashree