Difference between revisions of "Health-and-Nutrition/C2/Storage-of-expressed-breastmilk/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 57: Line 57:
 
|-
 
|-
 
| 01:31
 
| 01:31
| பயன்படுத்தப்பட்ட சமையலறை துணி போன்ற பயன்படுத்தப்பட்ட துணியால் பாத்திரங்களை ஒருபோதும் துடைக்கக்கூடாது.
+
| பயன்படுத்தப்பட்ட சமையலறை துணி போன்ற துணியால் பாத்திரங்களை ஒருபோதும் துடைக்கக்கூடாது.
  
 
|-
 
|-
Line 85: Line 85:
 
|-
 
|-
 
| 02:30
 
| 02:30
| அவள் தாய்ப்பாலை குளிர்சாதன பெட்டியின் மிகக் கீழே உள்ள தட்டின் பின்புறத்தில் வைக்க வேண்டும்.இதுவே, ஒரு குளிர்சாதன பெட்டியின் மிகக் குளிரான பகுதி ஆகும்.
+
| அவள் தாய்ப்பாலை குளிர்சாதன பெட்டியின் மிகக் கீழே உள்ள தட்டின் பின்புறத்தில் வைக்க வேண்டும். இதுவே, ஒரு குளிர்சாதன பெட்டியின் மிகக் குளிரான பகுதி ஆகும்.
  
 
|-
 
|-
Line 117: Line 117:
 
|-
 
|-
 
| 03:26
 
| 03:26
| தாய்க்கு குளிர்சாதன பெட்டி இல்லையென்றால் - தாய்ப்பாலை 6 மணி நேரம் வரை பாதுகாப்பான, குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வீட்டில் வைக்க முடியும்.
+
| குளிர்சாதன பெட்டி இல்லையென்றால் - தாய்ப்பாலை 6 மணி நேரம் வரை பாதுகாப்பான, குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வீட்டில் வைக்க முடியும்.
  
 
|-
 
|-
Line 133: Line 133:
 
|-
 
|-
 
| 04:03
 
| 04:03
| கிருமிகள் புதிய தாய்ப்பாலில் குறைந்தது 6 மணிநேரம் வளரத் தொடங்குவதில்லை - வெப்பமான காலநிலையிலும், குளிர்சாதன பெட்டிக்கு வெளியிலும் கூட.
+
| கிருமிகள் புதிய தாய்ப்பாலில் குறைந்தது 6 மணிநேரம் வரை வளரத் தொடங்குவதில்லை - வெப்பமான காலநிலையிலும், குளிர்சாதன பெட்டிக்கு வெளியிலும் கூட.
  
 
|-
 
|-
Line 145: Line 145:
 
|-
 
|-
 
|04:33
 
|04:33
| இந்த குளிர்ந்த பையை, பாலை கொண்டு செல்லவும் பயன்படுத்தலாம்.
+
| இந்த குளிர் பையை, பாலை கொண்டு செல்லவும் பயன்படுத்தலாம்.
  
 
|-  
 
|-  
Line 161: Line 161:
 
|-
 
|-
 
|05:04
 
|05:04
| முன்பு உறைந்த இந்த தாய்ப்பால், குளிர்சாதன பெட்டியின் மிகக் கீழே உள்ள தட்டில் ஓர் இரவு வைத்து பனி நீக்கம் செய்யப்பட்டால், அதை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.  
+
| முன்பு உறைந்த இந்த தாய்ப்பால், குளிர்சாதன பெட்டியின் கீழே உள்ள தட்டில் ஓர் இரவு வைத்து பனி நீக்கம் செய்யப்பட்டால், அதை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.  
  
 
|-
 
|-

Latest revision as of 12:21, 24 January 2020

Time
Narration
00:01 வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலின் சேமிப்பு குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை பிற்கால பயன்பாட்டிற்கு எவ்வாறு சேமிப்பது என்று கற்கப்போகிறோம்.
00:14 இப்போது தொடங்குவோம். தாய்ப்பாலை வெளிக்கொணர்வது, குழந்தைக்கும் தாய்க்கும் பல பயன்களை கொடுக்கிறது.
00:22 இதே தொடரின், மற்றொரு டுடோரியலில், கைமுறையாக தாய்ப்பாலை வெளிக்கொணர்வது விளக்கப்பட்டுள்ளது.
00:29 வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பால், பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
00:34 அவ்வாறு செய்வது, குழந்தைக்கு அதன் உயர் தரத்தை பராமரிக்கும்.
00:39 தாய்ப்பாலைக் கையாளுவதற்கு முன் - தாய் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவி, சரியாக உலர வைக்க வேண்டும்.
00:47 தாய்ப்பாலை சேமிக்க- தாய், மூடப்படக்கூடிய, அகல வாய் கொண்ட, ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும்.
00:56 ஸ்டீல் பாத்திரங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், சில இடங்களில் கண்ணாடி பாத்திரங்களை நாம் பயன்படுத்துவோம்.
01:03 பாத்திரத்தில் இருக்கும் பாலை தெளிவாகக் காண இது உதவும்.
01:09 அடுத்து, தாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும் .
01:14 அதன் பிறகு, அவள் பாத்திரங்களை கொதிக்கும் நீரில் குறைந்தது 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
01:21 பின்னர், அவள் பாத்திரங்களை முழுவதுமாக உலர வைக்க வேண்டும் அல்லது பயன்படுத்தப்படாத சுத்தமான துணியால் துடைக்க வைக்க வேண்டும்.
01:31 பயன்படுத்தப்பட்ட சமையலறை துணி போன்ற துணியால் பாத்திரங்களை ஒருபோதும் துடைக்கக்கூடாது.
01:40 சுத்தமான பாத்திரம் முழுவதுமாக காய்ந்த பிறகு- வெளிக்கொணர்ந்த பாலை அவள், பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.
01:48 ஒரு தாய்ப்பாலூட்டுதலுக்கான அளவு அல்லது ஒவ்வொரு பாத்திரத்திலும் சுமார் 60 முதல் 90 மில்லிலிட்டர் வரை பாலை மட்டுமே அவள் சேமிக்க வேண்டும்.
01:58 தாய் தனது தாய்ப்பாலை உறைய வைக்க வேண்டுமெனில்- அவள் பாத்திரத்தின் மேற்புறத்தில் ஒரு அங்குல இடத்தை விட்டுவிட வேண்டும், ஏனென்றால் தாய்ப்பால் உறையும்போது விரிவடைகிறது.
02:12 ஒவ்வொரு பாத்திரத்திலும் பால் வெளிப்பாட்டின் தேதி மற்றும் நேரத்தை அவள் பெயரிட வேண்டும்.
02:18 பின்னர், தாய்ப்பால் நிரப்பப்பட்ட இந்த பாத்திரங்களை அவள், குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.
02:25 அவளிடம் ஒரு குளிர்சாதன பெட்டி இருந்தால், அதில் பாலை வைப்பது நல்லது.
02:30 அவள் தாய்ப்பாலை குளிர்சாதன பெட்டியின் மிகக் கீழே உள்ள தட்டின் பின்புறத்தில் வைக்க வேண்டும். இதுவே, ஒரு குளிர்சாதன பெட்டியின் மிகக் குளிரான பகுதி ஆகும்.
02:40 தாய்ப்பாலை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியின் கதவின் உட்புறம் வைக்க கூடாது.
02:44 குறைந்த வெப்பநிலையில் வைப்பது, நீண்ட நாள் கெடாமல் இருக்க உதவும்
02:49 தாய்ப்பாலை 7 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் சுத்தமான நிலையில் பாதுகாக்க முடியும்.
02:56 இதை தொடர்ந்து குளிர்ந்த நிலையில் வைக்க வேண்டும்.
02:59 அடிக்கடி குளிர்சாதன பெட்டியின் கதவு திறக்கப்படுவதால், வெப்பநிலை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
03:07 தாய்ப்பால் உள்ளே இருக்கும் பொழுது மின்வெட்டு அல்லது பிற காரணங்களால் சேமிப்பு நேரத்தில் குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலை அதிகரித்தால் - தாய் 6 மணி நேரத்திற்குள் அதை பயன்படுத்த வேண்டும்.
03:19 6 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் பயன்படுத்தப்படாவிட்டால், அவள் அதைத் கொட்டிவிட வேண்டும்.
03:26 குளிர்சாதன பெட்டி இல்லையென்றால் - தாய்ப்பாலை 6 மணி நேரம் வரை பாதுகாப்பான, குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வீட்டில் வைக்க முடியும்.
03:39 வீட்டின் அறை சூடாக இருந்தால், அவள் - குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட ஒரு மண் பானைக்கு அருகில் அல்லது குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் தாய்ப்பாலை வைக்கலாம்.
03:51 புதிய தாய்ப்பாலில் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கக் கூடிய குணங்கள் உள்ளன.
03:58 எனவே, இது பசுவின் பாலை விட நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
04:03 கிருமிகள் புதிய தாய்ப்பாலில் குறைந்தது 6 மணிநேரம் வரை வளரத் தொடங்குவதில்லை - வெப்பமான காலநிலையிலும், குளிர்சாதன பெட்டிக்கு வெளியிலும் கூட.
04:15 தாய்ப்பாலை பாதுகாக்க மற்றொரு வழி - ஆழமான உறைந்த பனி கட்டி மூட்டைகளுடன் கூடிய குளிர் பை அல்லது பெட்டியைப் பயன்படுத்துதல். அது, ஒவ்வொரு 24 மணி நேரமும் மாற்றப்பட வேண்டும்.
04:27 பால், பனி கட்டிகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையெனில், அது உறைந்து போகக்கூடும்.
04:33 இந்த குளிர் பையை, பாலை கொண்டு செல்லவும் பயன்படுத்தலாம்.
04:38 தாய்ப்பாலை 7 நாட்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டுமானால்-வெளிக்கொணர்ந்த பின் தாய், அதை விரைவில் உறைக்க வேண்டும்.
04:49 ஒரு குளிர்சாதன பெட்டியின் உறைவிப்பானில் திடமாக உறைந்த பால் 2 வாரங்களுக்கு நன்றாக இருக்கும்.
04:56 தனி உறைவிப்பான் ஒன்றில் சேமிக்கப்படும் பால் 3 முதல் 6 மாதங்களுக்கு நன்றாக இருக்கும்.
05:04 முன்பு உறைந்த இந்த தாய்ப்பால், குளிர்சாதன பெட்டியின் கீழே உள்ள தட்டில் ஓர் இரவு வைத்து பனி நீக்கம் செய்யப்பட்டால், அதை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
05:17 அது குளிர்சாதன பெட்டியின் வெளியே பனி நீக்கம் செய்யப்பட்டால், அதை 2 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
05:25 மற்ற டுடோரியல்களில் நாம் பின்வருவனவற்றை விளக்கியுள்ளோம்- குழந்தை குடிப்பதற்கு ஏற்ப, சேமிக்கப்பட்ட தாய்ப்பாலை எப்படி தயாராக வைப்பது
05:32 மற்றும் வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை குழந்தைக்கு எப்படி கொடுப்பது.
05:37 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree