Health-and-Nutrition/C2/Powder-recipes-for-6-to-24-months-old-children/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:43, 24 June 2021 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான சத்துள்ள பொடிகள் தயாரிக்கும் முறை பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுட்டோரியலில் நாம் பல்வேறு சத்துள்ள பொடிகள் தயாரிக்கும் முறை பற்றி கற்போம் அவை
00:14 Amylase பொடி
00:17 விதைகளின் பொடி
00:19 கொட்டைகள் மற்றும் விதைகளின் பொடி
00:22 தானியப்பொடி
00:24 கறிவேப்பிலை பொடி
00:26 முருங்கை இலை பொடி
00:29 பல்வேறு சத்துள்ள பொடிகளை சிரமம் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம்
00:36 கைக்குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் ஊட்டச்சத்துகள், இந்த சத்துள்ள பொடிகளில் உள்ளன
00:42 குழந்தைளுக்கு 6 மாதங்கள் முடிந்த உடனேயே
00:44 இந்த சத்துள்ள பொடிகளை கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது
00:51 எப்போதும் குழந்தைக்கு 1 புது பொடியை கொடுக்க ஆரம்பிக்கும்போது
00:54 குழந்தையின் உணவில் அதை சேர்த்து, 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்
00:59 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு வேறொரு புதிய பொடியை கொடுக்க தொடங்கலாம்
01:05 இரண்டு பொடிகளை கலந்தும் கொடுக்கலாம். ஆனால் அவற்றை முதலில் தனித்தனியாக கொடுத்துபார்க்க வேண்டும்.
01:10 அதனால் குழந்தைக்கு உடலில் ஏதேனும் சரும அரிப்பு அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகள் வந்திருக்க கூடாது.
01:19 ஒவ்வாமை உருவாக்கும் கொட்டைகள் நிறைந்த பொடிகளை குழந்தைக்கு முதல் முறை கொடுக்கும் போது
01:26 குறைந்த அளவாக, கால் தேக்கரண்டி கொடுத்து ஆரம்பிக்க வேண்டும்
01:31 10 நிமிடங்கள் காத்திருந்து, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்
01:36 குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை குழந்தையின் உணவில் உப்பு சேர்க்க வேண்டாம்
01:41 குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை குழந்தையின் உணவில் சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்க்க வேண்டாம்
01:47 இப்பொழுது சத்துக்கள் அடங்கிய பொடிகளை எப்படித் தயாரிப்பதெனப் பார்ப்போம்
01:52 நினைவில் கொள்க
01:54 இந்த டுட்டோரியலில் உணவுகள் பின்வரும் முறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டன
02:00 ஊறவைத்தல், வதக்குதல்
02:03 முளைக்கட்டுதல்
02:05 மற்றும் சமைத்தல்
02:07 சமைக்கும் முறை பின்வரும் ஒன்று அல்லது இணைந்த முறைகளை பின்பற்றியதாகும்:
02:12 வருத்தல்
02:14 வேக வைத்தல் மற்றும் கொதிக்க வைத்தல்
02:17 இந்த அனைத்து முறைகளும் உணவிலிருந்து தாதுக்களை உறிஞ்சுவதை கட்டுப்படுத்தும் phytatesகள் மற்றும் oxalatesகளை குறைக்கின்றன
02:26 மற்றும் உணவிலிருந்து ஊட்டச்சத்து உறுஞ்சுதலையும் அதிகரிக்கின்றன
02:30 இப்பொழுது நம் முதல் உணவிலிருந்து தொடங்குவோம்:
02:33 Amylase பொடி. முதலில் அதன் நன்மைகளைப் பார்க்கலாம்
02:39 Amylase என்பது செரிமானத்திற்கு தேவையான என்சைம் அல்லது வேதி பொருள் ஆகும்
02:45 குழந்தையின் உடலில் அது குறைந்த அளவே உற்பத்தியாகிறது.
02:50 இந்த பொடி, உடலின் amylase அளவை அதிகரிக்கிறது.
02:53 உணவில் உள்ள ஊட்டச்சத்தையும், அதை உடல் உறுஞ்சுதலையும் அதிகரிக்கிறது
02:59 எனவே amylase சத்துமாவு அல்லது பொடியை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்
03:05 amylase பொடித் தயாரிப்பு முறையை பார்ப்போம்
03:08 amylase பொடியைத் தயாரிக்க தேவையான பொருட்கள்-
03:13 கோதுமை 1/2 கிண்ணம்
03:15 பச்சைப்பயிறு 1/2 கிண்ணம் மற்றும்
03:17 கேழ்வரகு 1/2 கிண்ணம்
03:19 செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும்
03:25 ஊறவைப்பதனால் அவற்றின் ஈரப்பதம் அதிகமாகும்
03:29 10 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து பொருட்களையும் நீக்கவும்
03:33 வடிகட்டி மூலம் அவற்றில் இருந்து நீரை வடிகட்டவும்
03:38 பின்னர் சுத்தமான உலர்ந்த பருத்தி துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும்
03:43 அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும்
03:46 இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும்
03:49 குறிப்பு:
03:51 முளைக்கட்ட சில பொருட்கள் நீண்ட நேரம் எடுக்கும்
03:53 சில பொருட்கள் குறைந்த நேரம் எடுக்கும்
03:57 இங்கு கேழ்வரகு, மற்ற பொருட்களை விட அதிக நேரம் எடுக்கும்
04:02 முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும்
04:07 காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை குறைந்த தீயில் வறுக்க வேண்டும்
04:14 வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும் என்பதை நினைவுகொள்க
04:20 அடுத்து சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து மேல் தோலை நீக்க வேண்டும்
04:26 தோலை நீக்கிய பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்
04:30 இப்போது mixer அல்லது உரலைப் பயன்படுத்தி அனைத்தையும் பொடியாக்கவும்.
04:35 amylase பொடி தயாராகிவிட்டது
04:39 இந்த amylase பொடியை ஒரு காற்றுபுகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
04:43 பின்வரும் குழந்தையின் உணவை சமைக்கும் போது இந்த amylase பொடியை 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம்
04:49 பருப்பு
04:51 காய்கறி கூழ் அல்லது பருப்பு சாதம்
04:54 amylase கஞ்சியையும் தயாரிக்கலாம்
04:59 1 தேக்கரண்டி amylase பொடியில்,
05:02 கிட்டத்தட்ட 18 கலோரிகளும்
05:04 0.6 கிராம் புரதமும் உள்ளது
05:07 Amylase பொடியில் குழந்தைக்கு தேவையான சில சிறப்பு பண்புகள் உள்ளன
05:13 இது உணவின் அடர்த்தியை குறைத்து
05:16 அதனால், அதிக amylase பொடியை குழந்தையின் உணவில் சேர்க்கலாம்
05:20 இது உணவின் அடர்த்தியை குறைத்து ஊட்டச்சச்தை அதிகரிக்கிறது
05:27 அடுத்து விதைகளின் பொடியை தயாரிக்கும் முறையை பார்ப்போம்
05:35 இந்த பொடியில் துத்தநாகம், நார்சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது
05:38 இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வலிமையை அதிகரிக்கிறது.
05:43 மேலும் இந்த பொடியில் உள்ள நல்ல கொழுப்பு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
05:50 இந்த பொடியை தயாரிக்க தேவையான பொருட்கள்:
05:54 கருப்பு எள் ½ கிண்ணம்
05:57 ஆளி விதைகள் ½ கிண்ணம்
05:59 பச்சை பூசணி விதைகள் ½ கிண்ணம்
06:02 செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4-5 நிமிடங்கள் வறுக்க வேண்டும்
06:10 வறுத்த பொருட்கள் ஆறியதும் அவற்றை அரைத்து பொடியாக்கவும்
06:14 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
06:18 குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 1 தேக்கரண்டி சேர்க்கவும்
06:23 இதில் 30 கலோரிகளும்
06:26 2.7 கிராம் புரதமும் உள்ளது
06:30 அடுத்து கொட்டைகள் மற்றும் விதைகளின் பொடியை தயாரிக்க கற்போம்
06:34 இந்த பொடியில் துத்தநாகம்
06:37 மெக்னீசியம்
06:39 Iron போன்ற சத்துகள் உள்ளன
06:41 சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இந்த தாதுசத்துகள் உதவுகின்றன
06:46 மேலும் இந்த பொடியில் உள்ள நல்ல கொழுப்பு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
06:53 இந்த பொடியைத் தயாரிக்க தேவையான பொருட்கள்
06:58 வேர்க்கடலை ½ கிண்ணம்
07:00 காய்ந்த தேங்காய் துறுவல் ½ கிண்ணம்
07:02 ஆளி விதைகள் ½ கிண்ணம்
07:05 கருப்பு எள் ½ கிண்ணம்
07:08 செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4 ல் இருந்து 6 நிமிடங்கள் வறுக்க வேண்டும்
07:16 பிறகு ஒரு உரல் அல்லது mixerஐ பயன்படுத்தி அனைத்தையும் பொடியாக்கவும்
07:23 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
07:26 குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 1 தேக்கரண்டி சேர்க்கவும்
07:32 இதில் 28 கலோரிகளும்
07:35 0.9 கிராம் புரதமும் உள்ளது
07:38 இப்போது நாம் தானியப்பொடியை தயாரிக்க கற்போம்
07:42 இந்த பொடியில் பொட்டாசியம்,
07:45 புரதம், ஃபோலேட்,
07:47 மெக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன
07:49 இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வலிமையை அதிகரிக்கிறது
07:54 நம் உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இவை உதவுகின்றன
07:59 தானியப்பொடியை தயாரிக்க தேவையான பொருட்கள்:
08:02 பச்சைபயிறு ½ கிண்ணம்
08:05 பட்டாணி ½ கிண்ணம்
08:07 கொண்டைக்கடலை ½ கிண்ணம்
08:09 நரி பயிறு ½ கிண்ணம்
08:11 செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும்
08:17 ஊறவைப்பதனால் அவற்றின் ஈரப்பதம் அதிகமாகும்
08:20 10 மணி நேரத்திற்கு பிறகு நீரிலிருந்து எடுத்து விடவும்
08:23 வடிகட்டியின் மூலம் நீரை வடிகட்டவும்
08:27 பின்னர் சுத்தமான உலர்ந்த பருத்தி துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும்
08:32 அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும்
08:34 இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும்
08:38 முளைக்கும் நேரம் ஒவ்வொரு பொருளுக்கும் வேறுபடும் என்பதை நினைவுகொள்க
08:45 முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும்
08:50 காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை மிதமான தீயில் வறுக்க வேண்டும்
08:55 வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும்
08:59 இதனால் பொருட்கள் கருகாமல் இருக்கும்
09:02 வறுத்த பிறகு, சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து தோலை நீக்க வேண்டும்
09:09 இப்போது அனைத்து தானியங்களையும் ஒன்றாக சேர்த்து பொடியாக்கவும்.
09:13 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
09:16 குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை 2 தேக்கரண்டி சேர்க்கவும்
09:21 இந்த பொடியின் 2 தேக்கரண்டியில்,
09:23 கிட்டத்தட்ட 33 கலோரிகளும்
09:26 1.8 கிராம் புரதமும் உள்ளது
09:28 அடுத்து கறிவேப்பிலை பொடி தயாரிப்பு முறை பற்றி கற்போம்
09:32 கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம்
09:36 மற்றும் விட்டமின் சி உள்ளது
09:38 இந்த அனைத்து ஊட்டச்சத்துகளும், உணவு செரிமானத்திற்கும் பல் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது
09:43 நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது
09:46 இந்த பொடியை தயாரிக்க நமக்கு கறிவேப்பில்லை தேவை
09:49 செய்முறை - சுத்தமான நீரில் கறிவேப்பிலையை நன்றாக கழுவவும்
09:53 நிழலில் உலர வைக்கவும்
09:55 இப்போது உலர்ந்த கறிவேப்பிலையை பொடியாக்கவும்.
09:58 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
10:01 குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை ¼ தேக்கரண்டி சேர்க்கவும்
10:07 இதில் 9 மில்லி கிராம் கால்சியம் உள்ளது
10:10 அடுத்து முருங்கை இலை பொடியை தயாரிக்க கற்போம்
10:15 இந்த பொடியில் கால்சியம்,
10:18 Iron, Vitamin C,
10:20 Vitamin A, Protein
10:22 மற்றும் Sulphur உள்ளது
10:23 குழந்தையின் பல்ஈறுகள் வளர்ச்சியடையவும்
10:27 கண்களின் ஆரோக்கியத்திற்கும் இந்த ஊட்டச்சத்துக்கள் தேவை
10:30 இவை நோய்தொற்றிலிருந்து பாதுகாத்து குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது
10:35 இந்த பொடியை தயாரிக்க நமக்கு முருங்கை இலை தேவை
10:39 செய்முறை: சுத்தமான நீரில் முருங்கை இலையை நன்றாக கழுவவும்
10:45 அதை நிழலில் உலர வைக்கவும்
10:47 இப்போது உலர்ந்த முருங்கை இலையை பொடியாக்கவும். முருங்கை இலை பொடி தயார்
10:50 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
10:54 குழந்தையின் உணவை சமைக்கும் பொழுது இந்த பொடியை ¼ தேக்கரண்டி சேர்க்கவும்
10:59 இதில் 5 மில்லிகிராம் கால்சியம் உள்ளது
11:03 பின்வருவனவற்றை நினைவில் கொள்ளவும்
11:07 கருவேப்பிலைபொடி மற்றும் முருங்கைஇலைப்பொடியை பின்வரும் Calcium நிறைந்த உணவுப்பொருட்களுடன் சேர்த்து கொடுக்கவும்
11:13 வறுத்த எள்
11:15 முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை
11:17 முளைகட்டிய கொண்டைக்கடலை
11:20 குழந்தைக்கு 9 மாதங்கள் முடிந்தவுடன்,
11:23 இந்த பொடிகளை தயிருடன் சேர்த்துக் கொடுக்கலாம்
11:26 இந்த பொடிகளை தயாரிக்க உள்ளூரில் கிடைக்கும் கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களை பயன்படுத்தவும்
11:34 ஒவ்வொரு வேளை உணவிற்கும் வெவ்வேறு பொடிகளை பயன்படுத்தவும்
11:38 ஒவ்வொரு பொடியையும் உணவை சமைப்பதற்கு முன் சேர்க்க வேண்டும். ஏனனெனில் உணவுடன் சேர்ந்து பொடியும் நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும்
11:47 இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது ஆர்த்தி, நன்றி.

Contributors and Content Editors

Arthi, PoojaMoolya, Venuspriya