Health-and-Nutrition/C2/Powder-recipes-for-6-to-24-months-old-children/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:50, 15 June 2018 by Venuspriya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான சத்துமாவுகள் தயாரிக்கும் முறை பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலுக்கு நல்வரவு
00:08 இந்த டுட்டோரியலில் நாம் பல்வேறு சத்துமாவுகள் தயாரிக்கும் முறை பற்றி கற்போம் அவை
00:15 Amylase மாவு
00:17 விதைகள் அடங்கிய மாவு
00:19 கொட்டைகளும் விதைகளும் அடங்கிய மாவு
00:20 தானியப்பொடி
00:22 கறிவேப்பிலை பொடி
00:24 முருங்கை இலை பொடி
00:27 பல்வேறு சத்துமாவுகளை சிரமம் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம்
00:33 இந்த சத்துமாவுகளை எவ்வாறு செய்வது என பார்ப்போம்
00:38 கைக்குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் ஊட்டச்சத்துகள், இந்த சத்துமாவுகளில் உள்ளன
00:44 6 மாதங்கள் முடிந்த குழந்தைகளுக்கு மட்டுமே இந்த சத்துமாவுகளை ஊட்ட பரிந்துரைக்கப்படுகிறது
00:52 எப்போதும் குழந்தைக்கு புது உணவை ஊட்ட ஆரம்பிக்கும்போதும் 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்
01:00 பிறகு வேறொரு புதிய உணவை, 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு ஊட்டலாம்
01:05 இரண்டு சத்துமாவுகளை கலந்தும் கொடுக்கலாம். ஆனால் அவற்றை முதலில் தனித்தனியாக கொடுத்துபார்க்க வேண்டும். அதனால் குழந்தைக்கு உடலில் ஏதேனும் சரும அரிப்பு அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகள் வந்திருக்க கூடாது.
01:20 ஒவ்வாமை உருவாக்கும் கொட்டைகள் அல்லது புதிய உணவுகளை குழந்தைக்கு முதல் முறை கொடுக்கும் போது குறைந்த அளவாக, கால் டீஸ்பூன் கொடுத்து ஆரம்பிக்க வேண்டும்
01:30 10 நிமிடங்கள் காத்திருந்து, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைக்கு ஊட்ட வேண்டும்
01:35 குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை குழந்தையின் உணவில் சர்க்கரை, உப்பு அல்லது எந்த வகை மசாலாவையும் சேர்க்க வேண்டாம்
01:44 நாம் Amylase பொடி தயாரிப்பு முறையில் இருந்து ஆரம்பிக்கலாம்
01:49 முதலில் அதன் நன்மைகளைப் பார்க்கலாம்
01:53 Amylase என்பது உணவை செரிக்க தேவையான என்சைம் அல்லது வேதி பொருள் ஆகும்
01:59 குழந்தையின் உடலில் அது குறைந்த அளவே உற்பத்தியாகிறது.
02:03 இந்த சத்துணவு, உடலின் amylase அளவை அதிகரிக்கிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்தையும், அதை உடல் உறிஞ்சிக்கொள்வதையும் அதிகரிக்கிறது
02:12 எனவே amylase சத்துமாவை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்
02:18 amylase சத்துமாவுக்கான தயாரிப்பு முறையை பார்ப்போம்
02:22 amylase சத்துமாவை தயாரிக்க தேவையான பொருட்கள்-கோதுமை 1/2 கிண்ணம்
02:27 பச்சைப்பயிறு 1/2 கிண்ணம் மற்றும்
02:29 கேழ்வரகு 1/2 கிண்ணம்
02:32 செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும்
02:39 ஊறவைப்பதனால் அவற்றின் ஈரப்பதம் அதிகமாகும்
02:42 10 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து பொருட்களையும் நீக்கவும்
02:46 வடிகட்டி மூலம் அவற்றில் இருந்து நீரை வடிகட்டவும்
02:50 பின்னர் சுத்தமான உலர்ந்த காட்டன் துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும்
02:55 அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும்
02:58 இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும்
03:01 குறிப்பு: முளைக்கட்ட சில பொருட்கள் நீண்ட நேரம் எடுக்கும் சில பொருட்கள் குறைந்த நேரம் எடுக்கும்
03:08 இங்கு கேழ்வரகு, மற்ற பொருட்களை விட அதிக நேரம் எடுக்கும்
03:14 முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும்
03:19 காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை குறைந்த தீயில் வறுக்க வேண்டும்
03:25 வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும் என்பதை நினைவுகொள்க
03:30 அடுத்து சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து மேல் தோலை நீக்க வேண்டும்
03:36 தோலை நீக்கிய பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்
03:41 இப்போது கல்உரல் மூலம் அனைத்தையும் மாவாக்கவும்.
03:45 amylase மாவு தயாராகிவிட்டது
03:48 இந்த amylase மாவை ஒரு காற்றுபுகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
03:52 குழந்தைக்கு உணவு சமைக்கும் போது இந்த amylase மாவை ஒரு டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது
03:59 amylase மாவில் கஞ்சி செய்யலாம்
04:03 1 டீஸ்பூன் amylase மாவில், கிட்டத்தட்ட 18 கலோரிகளும் 0.6 கிராம் புரதமும் உள்ளது
04:10 100 கிராம் amylase மாவில், கிட்டத்தட்ட 360 கலோரிகளும் 12 கிராம் புரதமும் உள்ளது
04:17 Amylase மாவில் குழந்தைக்கு தேவையான சில சிறப்பு பண்புகள் உள்ளன
04:23 இது உணவின் அடர்த்தியை குறைத்து குழந்தைக்கு சுவையான உணவாக மாற்றுகிறது
04:28 இது உணவின் அளவை குறைத்து குழந்தையின் உணவுக்கு ஆற்றலை அதிகரிக்கிறது
04:34 அடுத்து விதைகளினால் ஆன மாவை தயாரிக்கும் முறையை பார்ப்போம்
04:38 இந்த மாவில் துத்தநாகம், நார்சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது
04:44 இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது.
04:50 மேலும் இந்த மாவில் உள்ள நல்ல கொழுப்பு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
04:57 இந்த மாவை தயாரிக்க தேவையான பொருட்கள்: கருப்பு எள்ளு ½ கிண்ணம்
05:03 ஆளி விதை ½ கிண்ணம்
05:05 பூசணி விதை பச்சையாக ½ கிண்ணம்
05:08 செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4, 5 நிமிடங்கள் வறுக்க வேண்டும்
05:16 வறுத்த பொருட்கள் ஆறியதும் அவற்றை மாவாக்கவும்
05:20 இந்த மாவை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
05:23 உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில் இந்த மாவை ஒரு டீஸ்பூன் சேர்க்க வேண்டும்
05:29 இதில் 30 கலோரிகளும் 2.7 கிராம் புரதமும் உள்ளது
05:36 100 கிராம் மாவில், கிட்டத்தட்ட 600 கலோரிகளும் 55 கிராம் புரதமும் உள்ளது
05:43 அடுத்து கொட்டைகளும் விதைகளும் அடங்கிய மாவை தயாரிக்க கற்போம்
05:47 இந்த மாவில் துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுசத்துகள் உள்ளன
05:53 ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய இந்த தாதுசத்துகள் உதவுகின்றன
05:57 மேலும் இந்த மாவில் உள்ள நல்ல கொழுப்பு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது
06:04 இந்த மாவை தயாரிக்க தேவையான பொருட்கள்
06:08 நிலக்கடலை ½ கிண்ணம்
06:10 காய்ந்த தேங்காய் துறுவல் ½ கிண்ணம்
06:12 ஆளி விதை ½ கிண்ணம்
06:15 கருப்பு எள்ளு ½ கிண்ணம்
06:18 செய்முறை: அனைத்து பொருட்களையும் குறைந்த தீயில் ஒவ்வொன்றாக 4 ல் இருந்து 6 நிமிடங்கள் வறுக்க வேண்டும்
06:26 பிறகு ஒரு கல்உரல் அல்லது mixer grinderஐ பயன்படுத்தி அனைத்தையும் மாவாக்கவும்
06:33 இந்த மாவை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
06:36 உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில் இந்த மாவை ஒரு டீஸ்பூன் சேர்க்க வேண்டும்
06:42 இதில் 28 கலோரிகளும் 0.9 கிராம் புரதமும் உள்ளது
06:48 100 கிராம் மாவில், கிட்டத்தட்ட 600 கலோரிகளும் 19 கிராம் புரதமும் உள்ளது
06:56 இப்போது நாம் தானியப்பொடியை தயாரிக்க கற்போம்
06:59 இந்த பொடியில் பொட்டாசியம், புரதம், ஃபோலேட், மெக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன
07:05 இந்த ஊட்டச்சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது
07:11 நம் உடலில் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய இவை உதவுகின்றன
07:16 தானியப்பொடியை தயாரிக்க தேவையான பொருட்கள்: பச்சைபயிறு ½ கிண்ணம்
07:22 காய்ந்த பச்சை பட்டாணி ½ கிண்ணம்
07:24 கொண்டைக்கடலை ½ கிண்ணம்
07:27 Moth beans ½ கிண்ணம்
07:30 செய்முறை: முதலில் அனைத்து பொருட்களையும் தனித்தனியே நீரில் 10 மணிநேரம் ஊற வைக்கவும்
07:35 ஊறவைப்பதனால் அவற்றின் ஈரப்பதம் அதிகமாகும்
07:40 10 மணி நேரத்திற்கு பிறகு
07:43 அவற்றில் இருந்து நீரை வடிகட்டவும்
07:47 பின்னர் சுத்தமான உலர்ந்த காட்டன் துணியில் அவற்றை ஒவ்வொன்றாக கட்டவும்
07:52 அவை முளைக்கும் வரை அப்படியே வைக்கவும்
07:55 இந்த செயல்முறை முளைக்கட்டுதல் எனப்படும்
07:59 ஏற்கனவே சொன்னது போல முளைக்கும் நேரம் ஒவ்வொரு பொருளுக்கும் வேறுபடும் என்பதை நினைவுகொள்க
08:06 முளைக்கட்டிய பிறகு அவற்றை வெயிலில் ஒரிரு நாட்கள் காய வைக்கவும்
08:12 காய்ந்த பிறகு, அனைத்து பொருட்களும் முற்றிலும் உலரும் வரை அவற்றை மிதமான தீயில் வறுக்க வேண்டும்
08:17 வறுக்கும் போது இடைவிடாமல் கிளற வேண்டும்
08:20 இதனால் பொருட்கள் கருகாமல் இருக்கும்
08:24 வறுத்த பிறகு, சுத்தமான கைகளால் அவற்றை நன்கு தேய்த்து தோலை நீக்க வேண்டும்
08:30 இப்போது அனைத்து தானியங்களையும் ஒன்றாகசேர்த்து பொடியாக்கவும்.
08:34 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
08:38 குழந்தைக்கு உணவு சமைக்கும் போது இந்த பொடியை இரண்டு டீஸ்பூன் சேர்க்க வேண்டும்
08:43 இரண்டு டீஸ்பூன் பொடியில், கிட்டத்தட்ட 33 கலோரிகளும் 1.8 கிராம் புரதமும் உள்ளது
08:49 100 கிராம் பொடியில், கிட்டத்தட்ட 250 கலோரிகளும் 15 கிராம் புரதமும் உள்ளது
08:57 அடுத்து கறிவேப்பிலை பொடி தயாரிப்பு முறை பற்றி கற்போம்
09:00 கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் சி உள்ளது
09:06 இந்த அனைத்து ஊட்டச்சத்துகளும், உணவு செரிமானத்திற்கும் பல் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது
09:12 மேலும் இவை குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது
09:16 இந்த பொடியை தயாரிக்க நமக்கு கறிவேப்பில்லை தேவை
09:19 செய்முறை - சுத்தமான நீரில் கறிவேப்பிலையை நன்றாக அலசவும்
09:23 அதை நிழலில் உலர வைக்கவும்
09:26 இப்போது உலர்ந்த கறிவேப்பிலையை பொடியாக்கவும். இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
09:33 உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில் இந்த பொடியை ¼ டீஸ்பூன் சேர்க்கலாம்
09:39 இதில் 9 மில்லி கிராம் கால்சியம் உள்ளது
09:42 100 கிராம் பொடியில் கிட்டத்தட்ட 700 மில்லிகிராம் கால்சியம் உள்ளது
09:48 அடுத்து முருங்கை இலை பொடியை தயாரிக்க கற்போம்
09:53 இந்த பொடியில் கால்சியம், இரும்பு, விட்டமின் சி, விட்டமின் எ, புரதம் மற்றும் கந்தகம் உள்ளது
10:01 குழந்தையின் பல்ஈறுகள் வளர்ச்சியடையவும் கண்களின் ஆரோக்கியத்திற்கும் இந்த ஊட்டச்சத்துக்கள் தேவை
10:07 இவை நோய்தொற்றிலிருந்து பாதுகாத்து குழந்தையின் வலிமையை அதிகரிக்கிறது
10:12 இந்த பொடியை தயாரிக்க நமக்கு முருங்கை இலை தேவை
10:17 செய்முறை: சுத்தமான நீரில் முருங்கை இலையை நன்றாக அலசவும்
10:22 அதை நிழலில் உலர வைக்கவும்
10:25 இப்போது உலர்ந்த முருங்கை இலையை பொடியாக்கவும். முருங்கை இலை பொடி தயார்
10:31 இந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளவும்
10:33 உணவு ஊட்டும் முன் குழந்தையின் உணவில் இந்த பொடியை ¼ டீஸ்பூன் சேர்க்க வேண்டும்
10:40 இதில் 5 மில்லிகிராம் கால்சியம் உள்ளது
10:44 100 கிராம் பொடியில் கிட்டத்தட்ட 350 மில்லிகிராம் கால்சியம் உள்ளது
10:50 பின்வருவனவற்றை எப்போதும் நினைவுகொள்ளவும். இந்த சத்துமாவுகளை தயாரிக்க உங்கள் ஊரில் கிடைக்கும் கொட்டைகள், விதைகள் மற்றும் தானியங்களை பயன்படுத்தவும்
10:58 ஒவ்வொரு வேளை உணவிற்கும் வெவ்வேறு மாவுகளை பயன்படுத்தவும்
11:01 உதாரணமாக; 1 டீஸ்பூன் கொட்டைகள் அல்லது விதைகளால் ஆன மாவை சமைத்த உணவில் சேர்க்கலாம் அல்லது
11:08 ¼ டீஸ்பூன் கறிவேப்பிலை பொடி அல்லது முருங்கை இலை பொடியை சமைத்த உணவில் சேர்க்கலாம் அல்லது
11:14 2 டீஸ்பூன் தானியப்பொடியை உணவுடன் சேர்த்து சமைக்கலாம்
11:21 பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி இந்த சத்துமாவுகள் தயாரிக்கப்பட்டன என்பதை குறித்துக்கொள்ளவும்
11:26 ஊறவைத்தல், வறுத்தல் மற்றும்
11:28 முளைக்கவைத்தல்
11:30 இந்த அனைத்து முறைகளும், உணவில் இருந்து தாதுசத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்வதை தடுக்கும் Phytic acidஐ குறைத்து....
11:38 உணவில் இருந்து ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்வதை அதிகரிக்கிறது
11:42 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான சத்துமாவுகள் தயாரிக்கும் முறை பற்றிய ஸ்போக்கன் டுட்டோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்
11:51 இந்த டுடோரியலில் நாம் பல்வேறு சத்துமாவுகளை தயாரிக்க கற்றோம் அவை
11:57 Amylase மாவு, விதைகள் அடங்கிய மாவு
12:00 கொட்டைகளும் விதைகளும் அடங்கிய மாவு
12:02 தானியப்பொடி
12:04 கறிவேப்பிலை பொடி மற்றும்
12:06 முருங்கை இலை பொடி
12:08 இந்த டுடோரியல், Spoken Tutorial Project, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது
12:14 Spoken Tutorial Project க்கு நிதியுதவி, இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்.
12:21 இந்த tutorial ன் ஒருபகுதி நிதி, WHEELS Global Foundationன் பெருந்தன்மையான பங்களிப்பாகும்.
12:32 இந்த tutorial, Maa aur Shishu Poshan projectன் ஒரு பகுதி ஆகும்.
12:36 இந்த tutorialக்கான domain reviewerகள், Dr. Rupal Dalal, MD Pediatrics மற்றும் Ms. Deepali Fargade, Nutritionist
12:46 இந்த tutorial, Nutritionist Rajani Sawant மற்றும் animator Arthi anbalagan ஆல் உருவாக்கப்பட்டது.

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி.

Contributors and Content Editors

Arthi, PoojaMoolya, Venuspriya