Health-and-Nutrition/C2/Physical-methods-to-increase-the-amount-of-breastmilk/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:53, 27 March 2019 by Arthi (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:02 தாய்ப்பாலின் அளவை அதிகப்படுத்துவதற்கான, உடல் சார்ந்த வழி முறைகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம், வெவ்வேறு உடல் சார்ந்த முறைகளை பயன்படுத்தி, எவ்வாறு தாய்ப்பாலின் அளவை அதிகரிப்பது என்பது பற்றி கற்க போகிறோம்.
00:17 முதலில், கங்காரு மதர் கேர் இல் இருந்து தொடங்குவோம்.
00:20 இம்முறையில்- குழந்தையும் தாயும் தோலுடன் தோல் தொடர்பில், நீண்ட நேரம் இருக்க வேண்டும்.
00:27 கங்காரு மதர் கேர்க்கான செயல்முறை, இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளவும்.
00:34 அடுத்து, லெட்-டௌன் ரிஃப்ளெக்ஸ் அல்லது ஆக்ஸிடோசின் ரிஃப்ளெக்ஸ்ஐ எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி கற்போம். அதற்கு முன், ஆக்ஸிடோசின் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
00:44 ஆக்ஸிடோசின் என்பது, லெட்-டௌன் ரிஃப்ளெக்ஸ் ஐ ஊக்குவிக்கின்ற ஒரு ஹார்மோன் ஆகும். இதனால், குழந்தையைப் பற்றி நினைக்கின்ற மாத்திரத்திலேயே, பால் வெளியில் தள்ளப்படுகிறது.
00:54 அதனால், பாலை வெளியில் தள்ள, முதலில்- தாய் ஓய்வெடுத்துக்கொண்டு, பின் தன் அமைதியான குழந்தையைப் பார்க்க வேண்டும்.
01:01 அவள், தனது குழந்தையின் துவைக்கப்படாத துணிகளின் வாசனையை முகர்ந்து, மற்றும் மென்மையான இசையையும் கேட்கலாம்.
01:09 மாறாக, பாலை வெளியில் தள்ளுவதற்கான, மேலும் வேறு முறைகள்- சூடான நீர் ஒத்தடம் கொடுப்பது
01:16 மேல் முதுகு மற்றும் மார்பகத்தை தடவி விடுவது.
01:20 சூடான நீர் ஒத்தடம் கொடுப்பது எப்படி என்று பார்ப்போம்.
01:24 தாய், சூடான நீர்க்குளியல் எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது, தனது மார்பகத்தின் மீது ஒரு மிதமான சூடுடைய துணியை வைத்துக்கொள்ள வேண்டும்.
01:30 இந்த இரண்டு முறைகளும், மார்பகத்தின் பாலோட்டத்திற்கு உதவி புரிந்து, பாலை வெளியில் தள்ளுகிறது.
01:36 அடுத்து, மசாஜ் செய்வது பற்றி கற்போம்.
01:40 மேல் முதுகு மற்றும் கழுத்தை தடவிக்கொடுப்பது, பாலின் சீரான ஓட்டத்திற்கு உதவி புரியும். ஏனெனில், அதே நரம்பு தான், மேல் முதுகு மற்றும் மார்பகத்திற்கு செல்கிறது.
01:49 பாலூட்டலுக்கு முன், மார்பகத்தை தடவிக்கொடுப்பது, பால் நாளங்களை திறந்துவிடுகிறது.
01:53 இதனால், பால் சீராக ஓடி மற்றும் மார்பகம் முழுவதும் காலியாகிறது. இது, அதிக பால் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
02:01 குழந்தையை சரியாக பற்றிக் கொள்ள ஊக்கப்படுத்துவது, தாய்ப்பாலின் அளவை அதிகப்படுத்துவதற்கான மற்றொரு முறை ஆகும்.
02:09 அதை எப்படி செய்வதெனப் பார்ப்போம்.
02:12 குழந்தையின் மேல் உதட்டின் மீது முலைக்காம்பை தேய்க்கவும். இது, குழந்தை தன் வாயை அகலமாக திறக்க உதவிபுரியும். மேலும் சரியான பிடிமானத்திற்கு உதவிபுரிந்து, குழந்தைக்கு போதிய அளவு பாலைக் கொடுக்கும்.
02:24 பின் வருவனவற்றை தாய்ப்பாலூட்டலின் போது கடைபிடிக்கவும்.
02:27 தாய், குழந்தையின் முழு உடம்பையும் தாங்கிக்கொள்ள வேண்டும்.
02:30 குழந்தையின் வயிறு, தாயின் வயிற்றின் மீது பட வேண்டும்.
02:34 குழந்தையின் தலை, கழுத்து மற்றும் உடம்பு, நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.
02:39 குழந்தையின் மூக்கும், தாயின் முலைக்காம்பும், ஒரே கோட்டில் இருக்க வேண்டும்.
02:43 கன்னம் முன்னால் கொண்டுவரப்பட்டு, தாயின் மார்பகத்திற்குள் தள்ளப்படவேண்டும். கீழ் உதடு வெளிப்புறமாக சுருண்டு இருக்க வேண்டும்.
02:50 பற்றிக்கொள்ளுகையில், குழந்தை, ஏரியோலாவின் கீழ் பகுதியை அதிகமாக பற்றிக்கொள்ள வழி வகை செய்யவும். அப்போது தான், ஏரியோலாவின் கீழ் பகுதியை விட, மேற்பகுதி மேலும் தெளிவாக தெரியும்.
03:01 ஏரியோலா என்பது- முலைக்காம்பை சுற்றியிருக்கின்ற கருமையான பகுதி என்பதை நினைவில் கொள்ளவும்.
03:05 அடுத்து, மற்றொரு உடல் சார்ந்த முறையான, மார்பகத்தை மென்மையாக அழுத்தும் முறையை பார்ப்போம்.
03:12 அதைச் செய்ய, தாய்ப்பாலூட்டலின் போது, மார்பகத்தை மென்மையாக பிடித்து அழுத்தவும்.
03:17 பால் சுரப்பிகளின் மீது கொடுக்கின்ற மென்மையான அழுத்தம், அதிக பாலை வெளியேற்ற உதவி புரிகிறது.
03:22 ஒவ்வொரு முறை, குழந்தை உறிஞ்சும் போதும், அதிக பால் வர, இது உதவி புரியும்.
03:27 இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், மார்பகத்தை மென்மையாக அழுத்தும் முறை விளக்கப்பட்டுள்ளது.
03:33 ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இரவு நேர தாய்ப்பாலூட்டல் முக்கியமாகும். இது ஏன் என புரிந்துகொள்வோம்.
03:41 மார்க்கப்பாலில் இருக்கின்ற, ப்ரோலாக்டின் என்ற ஹார்மோன் அளவு, இரவு நேரத்தில் அதிகமாக இருக்கின்றது.
03:46 இரவு நேரத்தில் அதிகமாக தாய்ப்பாலூட்டுவதன் மூலம், குழந்தைக்கு தாய்ப்பாலின் அளவு அதிகமாக கிடைக்கிறது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது
03:56 தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கக்கூடிய மற்றொரு முக்கிய காரணி- தாய்ப்பாலூட்டலின் இடைவெளி.
04:04 24 மணிநேரத்தில், குறைந்தபட்சம் 10 முதல் 12 முறையாவது குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட வேண்டும். மேலும் இரவில், குறைந்தபட்சம் 2இல் இருந்து 3 முறையாவது குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது முக்கியமாகும்.
04:15 குழந்தையை பசித்திருக்க விடாதீர்கள்.
04:17 பின்வரும் ஆரம்ப பசி அறிகுறிகளை கவனியுங்கள்- குழந்தை தன் கை மற்றும் கால்களை நகர்த்துவது.
04:24 குழந்தை தன் கன்னத்தில் பட்ட எதையும் நோக்கி திரும்பி, தன் வாயை திறப்பது.
04:30 குழந்தை அழுவது பசியின் ஒரு தாமதமான அறிகுறி என்பதை நினைவில் கொள்ளவும். ஆகையால், குழந்தையின் ஆரம்பகால பசி அறிகுறிகளை கவனித்தவுடன் தாய்ப்பாலூட்டவும்.
04:39 மேலும், இறுதிப்பாலை நீக்குவது முக்கியமாகும். இறுதிப்பால் என்பது, மார்பகத்தின் பிற்பகுதியில் இருக்கின்ற பாலாகும்.
04:49 அது கொழுப்பு சத்துகளினால் ஆனதாகும். இது கெட்டி தன்மை உடையதாகும்.
04:53 அதனால், தாய் ஒரு மார்பகத்தை முழுவதுமாக காலி செய்த பிறகே, மற்றொரு மார்பகத்தின் மூலம் வழங்க வேண்டும்.
05:00 இப்போது, குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிய பிறகு மார்பகத்தில் இருந்து பாலை வெளிக்கொணர்தல் பற்றி பார்ப்போம்.
05:06 வெளிக்கொணர்தல் என்பது, தாய் தன் கைகளால் பாலை கைமுறையாக நீக்குவதாகும்.
05:11 அதைச் செய்ய, தாய் தன் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களை, ஏரியோலாவின் விளிம்பு மற்றும் மார்பகத்தின் தோலின் மேல் வைக்க வேண்டும்.
05:19 பின், ஏரியோலாவை மார்பை நோக்கி உட்புறமாக மென்மையாக அழுத்தி பின் விட வேண்டும்.
05:26 குழந்தை முழுவதுமாக உறிஞ்சிய பின்னரும் இதை செய்ய வேண்டும்.
05:31 இரண்டு தாய்ப்பாலூட்டுதலுக்கு இடையிலும், தாய் பாலை நீக்க வேண்டும்.
05:35 பாலை அடிக்கடி நீக்குதல், மார்பக்கப்பாலின் அளவை மேம்படுத்திக்கொடுக்கும்.
05:40 பின்வருவனவற்றை எப்போதும் நினைவில் கொள்க- செயற்கை முலைக்காம்புகள் மற்றும் தயாரிக்கப்பட்ட பாலை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில், அவை தாய்ப்பாலை குறைக்கிறது.
05:50 மாடு அல்லது ஆட்டின் பால், அல்லது தயாரிக்கப்பட்ட பாலை கொடுப்பதை தவிர்க்கவும்.
05:54 மார்பகக்காம்பு கவசங்களை தவிர்க்கவும். ஏனெனில், அது குழந்தைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.
05:59 குழந்தை ஆரம்பகால பசி அறிகுறிகளைக் காட்டும் போதே, தாய்ப்பாலூட்டுவது அவசியம் என்பதை நினைவில் கொள்க.
06:06 சுகாதார ஊழியர், தாய்க்கு சரியான பிடிமானத்திற்கான நுட்பத்திற்கு வழிகாட்டி அவரின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.
06:12 குழந்தை, நாளுக்கு 25 முதல் 30 கிராம்கள் வரை எடை கூடுகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, குழந்தையின் எடையை தினமும் கண்காணிக்கவும்.
06:21 தாய்ப்பாலின் அளவை அதிகப்படுத்துவதற்கான, உடல் சார்ந்த வழிமுறைகள் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். கலந்துகொண்டமைக்கு நன்றி.

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree