Health-and-Nutrition/C2/Junk-food/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 08:08, 2 October 2020 by Arthi (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:00 ஜங்க் உணவுகள் குறித்த ஸ்போகன் டுட்டோரியலுக்கு நல்வரவு.
00:04 இந்த டுட்டோரியலில் நாம் கற்க போவது.
00:07 ஜங்க் உணவில் உள்ளடிங்கியவை.
00:09 ஜங்க் உணவுகளால் ஏற்படும் தீமைகள்.
00:14 எந்த ஒரு உணவும் மூன்று காரணிகளால் ஜங்க் உணவாக கருதப்படுகிறது.
00:20 முதல் இரண்டு காரணிகள் அதில் உள்ளடங்கிய பொருட்கள்.
00:23 சமைக்கும் முறை.
00:26 உணவின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மூன்றாவது காரணியாகும்.
00:32 ஜங்க் உணவுகள், அதிக அளவிலான சர்க்கரை, உப்பு, சுத்திகரிக்கப்பட்ட கொழுப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவை கொண்டுள்ளன.
00:41 பெரும்பான்மையான ஜங்க் உணவுகள் பொறித்தல் அல்லது பேக்கிங் செய்யப்படுகின்றன
00:48 பல செயற்கையான வண்ணங்கள், சுவைகள் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் இந்த உணவில் சேர்க்கப்படுகின்றன.
00:56 உணவின் சுவை, தோற்றம் மற்றும் நீண்ட நாள் கெடாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றை அதிகரிக்க இவை சேர்க்கப்படுகின்றன.
01:03 ஜங்க் உணவுகள் கலோரிகள் அதிகம் நிறைந்தவை
01:07 இவை ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்களை மிகக் குறைந்த அளவில் கொண்டுள்ளன.
01:15 பொதுவாக உட்கொள்ளப்படும் ஜங்க் உணவுகள், பொறித்த, அதிக உப்பு நிறைந்த உணவுகள் ஆகும்.
01:22 பெரும்பான்மையான துரித உணவுகளும் ஜங்க் உணவுகளாகும்.
01:27 எடுத்துக்காட்டாக: pizza, burgers, french fries, noodles, puff pastry, samosa, இன்னும் பல
01:39 சில பானங்கள் ஜங்க் உணவாக கருதப்படுகின்றன
01:43 எடுத்துக்காட்டாக: குளிர் பானங்கள், பழ ரசங்கள் மற்றும் செயற்கை சுவை கொண்ட பானங்கள்.
01:51 காபி தேயிலை பானங்கள், சோடா மற்றும் உற்சாக பானங்கள் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
01:57 இனிப்பு வகைகள், பொறித்த இனிப்புகள், jamகள், jellyகள், sauce, ketchup ஆகியவையும் ஜங்க் உணவுகளாகும்.
02:07 Biscuit, cake, chocolate, மிட்டாய், ice cream ஆகியவை இன்னும் சில எடுத்துக்காட்டுகளாகும்.
02:14 நம் உடம்பில் ஜங்க் உணவுகளின் விளைவுகளை பார்ப்போம்.
02:18 சர்க்கரை அளவு அதிகம் உள்ள ஜங்க் உணவுகள், நம் ரத்தத்தின் சர்க்கரை அளவை உடனடியாக அதிகப்படுத்துகின்றன.
02:24 இதன் விளைவாக pancreas இன்சுலினை ரத்தத்தில் வெளியிடுகிறது
02:30 இன்சுலின் என்பது செல்களை திறக்கக்கூடிய ஒரு சாவியாக வேலை செய்யும் ஹார்மோன் ஆகும்
02:35 செல்கள் ரத்தத்தில் இருந்து சர்க்கரையை உறிஞ்சி நமக்கு ஆற்றலை கொடுக்கிறது
02:42 அதிகப்படியான சர்க்கரை கொழுப்பாக உடம்பில் சேமிக்கப்படுகிறது
02:48 அதிக சர்க்கரை உணவுகளை வழக்கமாக எடுத்துக்கொள்ளும் பொழுது இன்சுலின் எதிர்ப்பை விளைவிக்கிறது.
02:54 இன்சுலின் எதிர்ப்படையும் வேலையில் நம் உடம்பு இன்சுலினை உபயோகிக்க முடிவதில்லை.
03:02 இதனால் ரத்தத்திலிருந்து சர்க்கரையை நம் செல்களால் எடுக்க முடிவதில்லை.
03:07 இதன் விளைவாக இன்சுலின் அளவு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
03:14 அதிக இன்சுலின் அளவு, பசி உணர்வை மூளைக்கு அனுப்புகிறது
03:20 நம் உடம்பிற்கு பசிக்கவில்லை என்றால் கூட அதிக உணவு உட்கொள்ள தூண்டுகிறது
03:26 இது ஒரு சுழற்சியாக மாறி அதிகப்படியான உண்ணும் பழக்கத்தை விளைவிக்கிறது.
03:32 இதை ஒரு எடுத்துக்காட்டுடன் புரிந்து கொள்வோம்.
03:35 ஒரு பிஸ்கட் அல்லது லட்டுவை உண்ணும் பொழுது நம்மால் ஒன்றோடு நிறுத்திக்கொள்ள முடிவதில்லை.
03:42 இன்னும் அதிகமாக உண்ண தோன்றுகிறது
03:45 ஒரே நேரத்தில் ஒரு முழு பிஸ்கட் பாக்கெட் அல்லது நிறைய லட்டுகளையும் உண்கிறோம்
03:52 இது மூளைக்கு செல்லப்படும் பசி உணர்வின் விளைவாகும்
03:57 சர்க்கரை கூட ரத்த அழுத்தத்தை பாதிக்கிறது
04:02 அதிக சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவை உண்ணும் பொழுது, நமது சோடியம் அளவு அதிகரிக்கிறது
04:08 சர்க்கரையானது, சிறுநீரகம் சோடியத்தை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது
04:14 இதன் விளைவாக, சோடியுமானது நம் உடம்பில் தேக்கம் அடைகிறது
04:18 இதன் காரணமாக, நம் உடம்பில் ரத்த அழுத்தம் மற்றும் தண்ணீர் தேக்கம் அதிகரிக்கிறது
04:25 இதனால் கைகள் மற்றும் கால்களில் வீக்கத்தைக் காணலாம்.
04:30 வேறொரு எடுத்துக்காட்டை கூறுகிறேன்
04:34 சிப்ஸ் உண்டவுடன் நமக்கு தாகம் ஏற்படுகிறது
04:38 ஏனெனில், உப்புள்ள உணவு உண்பதால் ரத்தத்தில் சோடியத்தின் அளவு அதிகரிக்கிறது.
04:45 மூளை, நமக்கு தாக உணர்வை ஏற்படுத்துவதால் நாம் தண்ணீர் குடிக்கிறோம்.
04:51 தண்ணீர் குடிப்பதன் மூலம் சோடியத்தின் அளவு நம் உடம்பில் கரைக்கப்படுகிறது
04:56 ஆனால், பழ ரசம் அல்லது குளிர் பானங்கள் நம் உடம்பில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்
05:03 இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்
05:07 சர்க்கரை மற்றும் உப்பு அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவு கூட ஜங்க் உணவாகும்
05:14 சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு பொதுவாக உபயோகிக்கபடுகிறது
05:18 இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவுகளில் நார்ச்சத்து மற்றும் தேவையான ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறது
05:24 நார்ச்சத்து நம் உடம்பில் முக்கிய பங்கு வகிக்கிறது
05:28 இது மெதுவாக ஜீரணம் ஆகக்கூடியது
05:31 இதனால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
05:35 நாம் குறைந்த நார்ச்சத்துள்ள ஜங்க் உணவுகளை உண்பதால் விரைவில் ஜீரணம் ஆகிறது.
05:42 நம் வயிறு சீக்கிரம் காலியாகி மீண்டும் பசி எடுக்கிறது
05:47 நார்ச்சத்தின் மற்றொரு முக்கியமான பலன் ஆரோக்கியமான குடலை மேம்படுத்துவது ஆகும்
05:53 நமது குடல் நல்ல மற்றும் தீய பேக்டீரியாக்களை கொண்டுள்ளது
05:58 நார்ச்சத்து நல்ல பேக்டீரியாக்கள் வளர உதவி புரிகிறது
06:02 இதன் மூலம் சரியான ஜீரணம் மற்றும் சத்துக்களை உறிஞ்ச உதவிபுரியும்
06:08 மேலும் சில பலன்கள் பலமான எதிர்ப்பு சக்தி
06:11 ஆரோக்யமான சருமம் மற்றும் குறைந்த வீக்கம்
06:15 நம் மலத்திற்கு தேவையான தண்ணீரை கொடுப்பதற்கு நார்ச்சத்து அவசியம்
06:21 இது மலத்தை இலகுவாகவும் பருமனாகவும் ஆக்குகிறது
06:25 இதனால் மலம் எளிதாக குடலின் வழியே செல்கிறது
06:31 ஜங்க் உணவுகளில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், வழக்கமாக அதை உண்ணுதல் மலச்சிக்கலை உண்டாகும்.
06:38 ஜங்க் உணவுகளின் மேலும் ஒரு கெடுதல், குடலின் நல்ல பேக்டீரியாக்களை அழிக்கிறது.
06:45 இதன் விளைவாக வீக்கம் ஏற்படுகிறது
06:47 மேலும் பல வியாதிகள் உண்டாகிறது
06:50 சில ஜங்க் உணவுகளில் transfatகள் நிறைந்திருக்கின்றன
06:56 Cake, biscuit, bake செய்த உணவுகள் பதப்படுத்தப்பட்ட வெண்ணெய், வனஸ்பதி இவை அனைத்திலும் transfatகள் உள்ளன
07:05 Transfatகள் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது
07:08 நல்ல கொழுப்பின் அளவை குறைக்கிறது
07:11 கொலஸ்ட்ரால் என்பது நம் ரத்தத்தில் உள்ள ஒரு வகையான கொழுப்பாகும்
07:16 நல்ல கொழுப்பானது மூளை, சருமம் மற்றும் இதயம் சரியாக வேலை செய்வதற்கு உதவுகிறது
07:23 அதிக அளவிலான கெட்ட கொழுப்பு நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது
07:28 பெரும்பாலான ஜங்க் உணவுகள் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெயிலேயே செய்யப்படுகின்றன
07:35 எடுத்துக்காட்டாக சூரியகாந்தி எண்ணெய், குசமபப்பூ எண்ணெய், சோயாபீன் எண்ணெய்
07:41 சோள எண்ணெய் மற்றும் பருத்தி விதை எண்ணெயும் கூட இதில் அடங்கும்
07:46 இந்த எண்ணெய்களில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், நம் உடம்பில் கெட்ட கொழுப்புகளின் அளவை அதிகரிக்கின்றன.
07:52 அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் நம் ரத்த குழாய்களின் சுவற்றில் படிகின்றன
07:58 அதிகப்படியான ஒமேகா 6 கொழுப்பு உடம்பில் வீக்கத்தையும் அதிகரிக்கிறது
08:06 இதன் விளைவாக இன்சுலின் அளவின் குறைபாடு மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன
08:12 அதிக அளவிலான ஜங்க் உணவினை உண்ணுவதால் பல தீமைகள் ஏற்படுகின்றன
08:17 உடல் பருமன், ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை பொதுவானவை
08:23 மேலும், கெட்ட கொழுப்பின் அதிகப்படியான அளவு மற்றும் இதய நோய்க்கான ஆபத்தையும் விளைவிக்கிறது
08:30 தூக்கமின்மை அல்லது கருப்பை நீர்க்கட்டி கூட ஏற்படலாம்
08:37 அதிகப்படியான ஜங்க் உணவுகள் உண்ணுவதால் வயிற்றில் கோளாறு ஏற்படலாம்.
08:42 குமட்டல், வாந்தி மற்றும் பசியின்மை ஆகிவையும் ஏற்படும்
08:48 ஜங்க் உணவினால் ஏற்படும் மற்ற விளைவுகள் பல் பூச்சிகள், ஒவ்வாமை மற்றும் புற்றுநோய்
08:54 ஜங்க் உணவுகளில் நம் உடம்புக்கு தேவையான நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடையாது
08:59 இதனால் ஜங்க் உணவுகளை அதிகமாக உண்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது
09:05 அதன் விளைவாக நாம் அடிக்கடி சோர்வாகவும் மற்றும் பலவீனமாகவும் உணர்கிறோம்
09:09 பொதுவாக ஜங்க் உணவினால் நம் உடலுக்கு ஏற்படும் தீமையை நாம் அறிவதில்லை
09:14 யோசிக்காமல் நாம் இதை வழக்கமாக அதிக அளவில் உண்கிறோம்
09:20 ஆதலால், நாம் உண்ணும் உணவை கவனமாக தேர்வு செய்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
09:27 இத்துடன் இந்த டுட்டோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.

இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி

Contributors and Content Editors

Arthi