Difference between revisions of "Health-and-Nutrition/C2/How-to-bathe-a-newborn/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 | <center>Time</center> |<center>Narration</center> |- | 00:00 | பிறந்த குழந்தையை எவ்வாறு குளிப்பாட...")
 
Line 5: Line 5:
 
|-
 
|-
 
| 00:00
 
| 00:00
| பிறந்த குழந்தையை எவ்வாறு குளிப்பாட்டுவது குறித்த '''Spoken tutorial '''க்கு நல்வரவு.
+
| பச்சிளம் குழந்தையை எவ்வாறு குளிப்பாட்டுவது குறித்த '''Spoken tutorial '''க்கு நல்வரவு.
  
 
|-
 
|-
Line 13: Line 13:
 
|-
 
|-
 
|00:15
 
|00:15
| ஒரு குழந்தைக்கு அதன் முதல் குளியலை எப்போது கொடுக்க வேண்டும், ஸ்பாஞ் குளியல்,
+
| ஒரு ஒரு குழந்தையை முதலில் எப்போது குளிப்பாட்டுவது, ஸ்பாஞ் குளியல்,
  
 
|-
 
|-
Line 25: Line 25:
 
|-
 
|-
 
|00:32
 
|00:32
| புதிதாகப் பிறந்த குழந்தையை எப்படி குளிப்பது என்று புதிய பெற்றோர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
+
| பச்சிளம் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது குறித்து புதிய பெற்றோர்கள் ஆர்வமாக இருப்பர்.
  
 
|-
 
|-
Line 33: Line 33:
 
|-
 
|-
 
|00:42
 
|00:42
| ஒரு தவறான செயல் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நிறைய தீங்கு விளைவிக்கும்.
+
| ஒரு சிறிய தவறு கூட பச்சிளம் குழந்தைக்கு பெரிய தீங்கை விளைவிக்கலாம்.
  
 
|-
 
|-
Line 53: Line 53:
 
|-
 
|-
 
|  01:11
 
|  01:11
| எனவே, ஒரு குழந்தைக்கு அதன் முதல் குளியலை எப்போது கொடுக்க வேண்டும்?
+
| எனவே, ஒரு குழந்தையை முதலில் எப்போது குளிப்பாட்ட வேண்டும்?
  
 
|-
 
|-
 
|01:16
 
|01:16
| பிரசவத்திற்கு 48 மணி நேரத்திற்குப் பிறகு குழந்தைக்கு, ஒரு ஸ்பாஞ் குளியலை தாய் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
+
| பிரசவத்திற்கு 48 மணி நேரத்திற்குப் பிறகு குழந்தையை ஸ்பாஞ்சினால் குளிப்பாட்ட ஆரம்பிக்கலாம்.
  
 
|-
 
|-
 
|01:22
 
|01:22
| தொப்புள் கொடி விழும் வரை ஸ்பாஞ் குளியலை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
+
| தொப்புள் கொடி விழும் வரை ஸ்பாஞ்சினால் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  
 
|-
 
|-
 
|01:29
 
|01:29
| தொப்பிள் கொடி விழுந்தவுடன், தாய் அல்லது வேறு எந்த குடும்ப உறுப்பினரும் குழந்தைக்கு வழக்கமான குளியலை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
+
| தொப்பிள் கொடி விழுந்தவுடன், தாய் அல்லது வேறு எந்த குடும்ப உறுப்பினரும் குழந்தையை வழக்கமான முறையில் குளிப்பாட்ட ஆரம்பிக்கலாம்.
  
 
|-
 
|-
 
| 01:38
 
| 01:38
| இருப்பினும், ஒரு குழந்தைக்கு குறைந்த பிறப்பு எடை இருந்தால், அத்தகைய குழந்தைக்கு 2 கிலோகிராம் வரை எடை அதிகரிக்கும் வரை ஸ்பாஞ் குளியல் கொடுக்க வேண்டும்.
+
| இருப்பினும், ஒரு குழந்தை குறைந்த எடையுடன் பிறந்தால், அத்தகைய குழந்தைக்கு 2 கிலோகிராம் வரை எடை அதிகரிக்கும் வரை ஸ்பாஞ்சினால் குளிப்பாட்ட வேண்டும்.
  
 
|-
 
|-
 
| 01:49
 
| 01:49
| ஸ்பாஞ் குளியல் எவ்வாறு கொடுக்கப்படுகிறது என்று பார்ப்போம்.
+
| ஸ்பாஞ்சினால் எப்படி குளிப்பாட்டுவது என்று பார்ப்போம்.
  
 
|-
 
|-
Line 81: Line 81:
 
|-
 
|-
 
|02:00
 
|02:00
| ஒரு ஸ்பாஞ் குளியலுக்கு முன் மிகவும் மென்மையான, சுத்தமான, சிறிய துணியை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
+
| ஒரு ஸ்பாஞ் குளியலுக்கு முன் மிகவும் மென்மையான, சுத்தமான, சிறிய துணியை தயாராக வைத்திருக்கவும்.
  
 
|-
 
|-
 
| 02:07
 
| 02:07
| குழந்தையை பாதுகாப்பான, தட்டையான மேற்பரப்பில் வைக்க வேண்டும்.
+
| குழந்தையை பாதுகாப்பான, சமமான மேற்பரப்பில் வைக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 117: Line 117:
 
|-
 
|-
 
| 02:50
 
| 02:50
| சிறிய, மென்மையான துணியை தண்ணீரில் நனைத்து அதிகப்படியான தண்ணீரை கசக்கி விடவும்.
+
| சிறிய, மென்மையான துணியை தண்ணீரில் நனைத்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்து நீக்கவும்.
  
 
|-
 
|-
Line 133: Line 133:
 
|-
 
|-
 
| 03:12
 
| 03:12
| மேலும், மடிப்புகளை சுத்தம் செய்ய மறக்காதீர்கள் - கைகளின் கீழ், காதுகளுக்கு பின்னால்,
+
| மேலும், மடிப்புகளை சுத்தம் செய்ய மறக்காதீர்கள் - அக்குள் பகுதி, காதுகளுக்கு பின்னால்,
  
 
|-
 
|-
Line 145: Line 145:
 
|-
 
|-
 
| 03:31
 
| 03:31
| தொப்புள் கொடி விழுந்தபின் ஆரோக்கியமான எல்லா குழந்தைகளுக்கும் வழக்கமான குளியல் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்
+
| தொப்புள் கொடி விழுந்தபின் ஆரோக்கியமான எல்லா குழந்தைகளையும் வழக்கமான முறையில் குளிப்பாட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்
  
 
|-
 
|-
 
| 03:39
 
| 03:39
| ஒரு வழக்கமான குளியல் போது, ​​நீங்கள் ஒரு குளியல் தொட்டியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் - முதலில், குளியல் தொட்டியை 2 அங்குலங்கள் வரை சோப்பு நீரால் நிரப்பவும்.
+
| ஒரு வழக்கமான குளியலின் போது, ​​நீங்கள் ஒரு குளியல் தொட்டியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் - முதலில், குளியல் தொட்டியின் 2 அங்குலங்கள் வரை சோப்பு நீரால் நிரப்பவும்.
  
 
|-
 
|-
Line 157: Line 157:
 
|-
 
|-
 
|03:58
 
|03:58
| புதிய தண்ணீரைக் கொண்டிருக்கும் மற்றொரு தொட்டியை தயார் நிலையில் வைத்திருங்கள்.
+
| மற்றொரு தொட்டியில் நல்ல தண்ணீரை நிரப்பி தயாராக வைத்திருக்கவும்.
  
 
|-
 
|-
Line 165: Line 165:
 
|-
 
|-
 
|04:09
 
|04:09
| நீரின் வெப்பநிலையில் நீங்கள் திருப்தி அடைந்த பிறகு, குழந்தையை மிகவும் கவனமாக சோப்பு நீரைக் கொண்ட தொட்டியில் வைக்கவும், தலையை எப்போதும் தாங்கி பிடித்துக்கொள்ள உறுதிப்படுத்தவும்.
+
| நீரின் வெப்பநிலையை சரிபார்த்த பிறகு, குழந்தையை மிகவும் கவனமாக சோப்பு நீரைக் கொண்ட தொட்டியில் வைக்கவும், தலையை எப்போதும் தாங்கி பிடித்துக்கொள்ள உறுதிப்படுத்தவும்.
  
 
|-
 
|-
Line 181: Line 181:
 
|-
 
|-
 
|04:39
 
|04:39
| அடுத்து, மிகவும் அசுத்தமான, மடிப்புக்கள், பிறப்புறுப்பு பகுதி மற்றும் உடலின் எஞ்சிய பகுதிகளையும் சுத்தம் செய்யவும்.
+
| அடுத்து, மிகவும் அசுத்தம் அடையக்கூடிய, மடிப்புக்கள், பிறப்புறுப்பு பகுதி மற்றும் உடலின் எஞ்சிய பகுதிகளையும் சுத்தம் செய்யவும்.
  
 
|-
 
|-
 
|04:47
 
|04:47
| இறுதியில், உடலின் மற்ற பகுதிகளை மெதுவாக புதிய தண்ணீரில் கழுவவும்.
+
| இறுதியில், உடலின் மற்ற பகுதிகளை மெதுவாக நல்ல தண்ணீரில் கழுவவும்.
  
 
|-
 
|-
 
| 04:53
 
| 04:53
| மறுபுறம் - தாய் அல்லது பராமரிப்பாளர் பாரம்பரிய இந்திய முறையில் குழந்தையை குளிப்பாட்ட விரும்பினால் , உங்கள் கால்களை ஒன்றுக்கு ஒன்று இணையாக விரித்து தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
+
| அடுத்து, தாய் அல்லது பராமரிப்பாளர் பாரம்பரிய இந்திய முறையில் குழந்தையை குளிப்பாட்ட விரும்பினால் , உங்கள் கால்களை நீட்டி தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
  
 
|-
 
|-
Line 197: Line 197:
 
|-
 
|-
 
|05:09
 
|05:09
| குழந்தையின் தலை, தாய் அல்லது பராமரிப்பாளரின் கால்களுக்கு அருகில் இருக்க வேண்டும்.
+
| குழந்தையின் தலை, தாய் அல்லது பராமரிப்பாளரின் பாதத்தின் அருகில் இருக்க வேண்டும்.
  
 
|-
 
|-
Line 221: Line 221:
 
|-
 
|-
 
|05:40
 
|05:40
| பேபி பவுடர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சுவாச சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.
+
| பேபி பவுடர்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு சுவாச சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.
  
 
|-
 
|-
 
|05:45
 
|05:45
| கண்களில் ஒருபோதும் சுர்மா அல்லது மையை பயன்படுத்த வேண்டாம்.
+
| கண்களில் ஒருபோதும் மையை பயன்படுத்த வேண்டாம்.
  
 
|-
 
|-
 
|05:49
 
|05:49
| சுர்மா அல்லது மையின் பயன்பாடு புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஈய விஷம் மற்றும் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
+
| மையின் பயன்பாடு பச்சிளம் குழந்தைகளுக்கு ஈய விஷம் மற்றும் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
  
 
|-
 
|-
Line 237: Line 237:
 
|-
 
|-
 
| 06:04
 
| 06:04
| அத்தகைய இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு, தொப்புள் கொடி விழுவதற்கு முன்பு விரைவான தினசரி ஸ்பாஞ் குளியல் கொடுக்கலாம்.
+
| அத்தகைய இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு, தொப்புள் கொடி விழுவதற்கு முன்பு விரைவான விரைவாக ஸ்பாஞ்சினால் குளிப்பாட்டலாம் கொடுக்கலாம்.
  
 
|-
 
|-
Line 245: Line 245:
 
|-
 
|-
 
|06:20
 
|06:20
| இது குழந்தைகளில் குறைந்த உடல் வெப்பநிலை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
+
| இது குழந்தைகளில் குளிர் நடுக்கம் வராமல் பாதுகாக்கும்.
  
 
|-
 
|-
 
| 06:25
 
| 06:25
|  வாரத்திற்கு இரண்டு முறை, ஷாம்பு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
+
|  வாரத்திற்கு இரண்டு முறை, ஷாம்பு பயன்படுத்தினால் போதும் என்பதை நினைவில் கொள்க.
  
 
|-
 
|-
Line 261: Line 261:
 
|-
 
|-
 
|06:45
 
|06:45
| இந்த திட்டுகள் அல்லது செதில்களைச் சுற்றி சிறிது சிவத்தல் இருக்கலாம்.
+
| இந்த திட்டுகள் அல்லது செதில்களைச் சுற்றி சிறிது சிவந்து இருக்கலாம்.
  
 
|-
 
|-
Line 297: Line 297:
 
|-
 
|-
 
| 07:33
 
| 07:33
| இத்துடன், பிறந்த குழந்தையை எவ்வாறு குளிப்பாட்டுவது குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
+
| இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.
 
|}
 
|}

Revision as of 11:59, 18 January 2020

Time
Narration
00:00 பச்சிளம் குழந்தையை எவ்வாறு குளிப்பாட்டுவது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- குளியலுக்கு முன் மற்றும் குளியலின் போது, ஒரு தாய் அல்லது பராமரிப்பாளருக்கான பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
00:15 ஒரு ஒரு குழந்தையை முதலில் எப்போது குளிப்பாட்டுவது, ஸ்பாஞ் குளியல்,
00:20 வழக்கமான குளியல், பாரம்பரிய குளியல்,
00:23 மலைப்பாங்கான பகுதிகள் அல்லது குளிர்ந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு குளியல் மற்றும் Cradle cap.
00:32 பச்சிளம் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது குறித்து புதிய பெற்றோர்கள் ஆர்வமாக இருப்பர்.
00:37 குழந்தையை குளிப்பாட்டும் போது, அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
00:42 ஒரு சிறிய தவறு கூட பச்சிளம் குழந்தைக்கு பெரிய தீங்கை விளைவிக்கலாம்.
00:46 தொடங்குவதற்கு முன், ஒரு குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை அறிந்து கொள்வது அவசியம் -
00:54 தாய் அல்லது குடும்ப உறுப்பினர்- குழந்தையைத் தொடுவதற்கு முன்பு எப்போதும் விரல் நகங்களை வெட்டியிருக்க வேண்டும் மற்றும்
01:02 மோதிரங்கள், வளையல்கள் அல்லது கடிகாரங்களை அணிந்திருக்கக்கூடாது
01:07 இது குழந்தைக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை குறைக்கும்.
01:11 எனவே, ஒரு குழந்தையை முதலில் எப்போது குளிப்பாட்ட வேண்டும்?
01:16 பிரசவத்திற்கு 48 மணி நேரத்திற்குப் பிறகு குழந்தையை ஸ்பாஞ்சினால் குளிப்பாட்ட ஆரம்பிக்கலாம்.
01:22 தொப்புள் கொடி விழும் வரை ஸ்பாஞ்சினால் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
01:29 தொப்பிள் கொடி விழுந்தவுடன், தாய் அல்லது வேறு எந்த குடும்ப உறுப்பினரும் குழந்தையை வழக்கமான முறையில் குளிப்பாட்ட ஆரம்பிக்கலாம்.
01:38 இருப்பினும், ஒரு குழந்தை குறைந்த எடையுடன் பிறந்தால், அத்தகைய குழந்தைக்கு 2 கிலோகிராம் வரை எடை அதிகரிக்கும் வரை ஸ்பாஞ்சினால் குளிப்பாட்ட வேண்டும்.
01:49 ஸ்பாஞ்சினால் எப்படி குளிப்பாட்டுவது என்று பார்ப்போம்.
01:53 தொடங்குவதற்கு முன், மூடிய ஜன்னல்களுடன் அறை போதுமான அளவு சூடாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும்.
02:00 ஒரு ஸ்பாஞ் குளியலுக்கு முன் மிகவும் மென்மையான, சுத்தமான, சிறிய துணியை தயாராக வைத்திருக்கவும்.
02:07 குழந்தையை பாதுகாப்பான, சமமான மேற்பரப்பில் வைக்க வேண்டும்.
02:12 தரை பாதுகாப்பானது.
02:15 குழந்தையை உயர்ந்த மேடையில் வைக்க வேண்டாம்.
02:19 குளிப்பதற்கான நீரின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கக்கூடாது.
02:26 தாய் தனது முழங்கை அல்லது மணிக்கட்டைப் பயன்படுத்தி நீரின் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும்.
02:32 குளிக்கும் போது, ​​முதலில் சுத்தம் செய்ய சோப்பு நீரைப் பயன்படுத்தவும்.
02:37 சோப்பு நீரை உருவாக்க எப்போதும் லேசான, நிறமற்ற மற்றும் மணமற்ற சோப்பு அல்லது குழந்தை சோப்பை பயன்படுத்தவும்.
02:45 பின்னர் சோப்பை அகற்ற சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தவும்.
02:50 சிறிய, மென்மையான துணியை தண்ணீரில் நனைத்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்து நீக்கவும்.
02:56 இப்போது குழந்தையின் கண்ணை உள் மூலையில் இருந்து வெளிப்புற விளிம்பு வரை துடைக்கவும்.
03:02 மற்ற உடல் பாகங்களைத் துடைக்க அதே துணியைப் பயன்படுத்த வேண்டாம்.
03:06 மற்ற உடல் பாகங்களை சுத்தம் செய்ய எப்போதும் புதிய மற்றும் மென்மையான துணியைப் பயன்படுத்துங்கள்.
03:12 மேலும், மடிப்புகளை சுத்தம் செய்ய மறக்காதீர்கள் - அக்குள் பகுதி, காதுகளுக்கு பின்னால்,
03:18 கழுத்தில், கை விரல்கள் மற்றும் கால்விரல்களுக்கு இடையில் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில்.
03:25 ஸ்பாஞ் குளியல் என்றால் என்ன என்பதை விவாதித்தோம், இப்போது வழக்கமான குளியல் பற்றி அறிந்து கொள்வோம்.
03:31 தொப்புள் கொடி விழுந்தபின் ஆரோக்கியமான எல்லா குழந்தைகளையும் வழக்கமான முறையில் குளிப்பாட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்
03:39 ஒரு வழக்கமான குளியலின் போது, ​​நீங்கள் ஒரு குளியல் தொட்டியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் - முதலில், குளியல் தொட்டியின் 2 அங்குலங்கள் வரை சோப்பு நீரால் நிரப்பவும்.
03:48 சோப்பு நீரை உருவாக்க, முன்பு விளக்கியபடி எப்போதும் லேசான நிறமற்ற மற்றும் மணமற்ற சோப்பு அல்லது குழந்தை சோப்பை பயன்படுத்தவும்.
03:58 மற்றொரு தொட்டியில் நல்ல தண்ணீரை நிரப்பி தயாராக வைத்திருக்கவும்.
04:03 பின்னர், இரண்டு தொட்டிகளிலும் உள்ள தண்ணீரின் வெப்பநிலையை உங்கள் முழங்கையால் சரிபார்க்கவும்.
04:09 நீரின் வெப்பநிலையை சரிபார்த்த பிறகு, குழந்தையை மிகவும் கவனமாக சோப்பு நீரைக் கொண்ட தொட்டியில் வைக்கவும், தலையை எப்போதும் தாங்கி பிடித்துக்கொள்ள உறுதிப்படுத்தவும்.
04:22 குழந்தை ஏற்கனவே தொட்டியில் இருக்கும்போது கூடுதல் தண்ணீரை சேர்க்க வேண்டாம்.
04:27 தொடங்குவதற்கு- முதலில், மணமற்ற மற்றும் நிறமற்ற குழந்தை ஷாம்பு அல்லது சோப்பைப் பயன்படுத்தி குழந்தையின் தலையைக் கழுவுங்கள்.
04:35 பின்னர் மெதுவாக நல்ல தண்ணீரில் சோப்பை கழுவவும்.
04:39 அடுத்து, மிகவும் அசுத்தம் அடையக்கூடிய, மடிப்புக்கள், பிறப்புறுப்பு பகுதி மற்றும் உடலின் எஞ்சிய பகுதிகளையும் சுத்தம் செய்யவும்.
04:47 இறுதியில், உடலின் மற்ற பகுதிகளை மெதுவாக நல்ல தண்ணீரில் கழுவவும்.
04:53 அடுத்து, தாய் அல்லது பராமரிப்பாளர் பாரம்பரிய இந்திய முறையில் குழந்தையை குளிப்பாட்ட விரும்பினால் , உங்கள் கால்களை நீட்டி தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
05:06 பின்னர், குழந்தையை உங்கள் காலில் வைக்கவும்.
05:09 குழந்தையின் தலை, தாய் அல்லது பராமரிப்பாளரின் பாதத்தின் அருகில் இருக்க வேண்டும்.
05:14 குழந்தையின் கால்கள் தாய் அல்லது பராமரிப்பாளரின் அடிவயிற்றின் அருகில் இருக்க வேண்டும்.
05:20 இப்போது குழந்தை குளிக்க சரியான நிலையில் உள்ளது.
05:24 குளித்த பிறகு, மென்மையான மற்றும் சுத்தமான துண்டுகளைப் பயன்படுத்தி குழந்தையை உடனடியாக துடைக்கவும்.
05:30 முன்பு விளக்கியபடி மடிப்புகளை துடைக்க நினைவில் கொள்ளவும்.
05:35 டால்கம் பவுடர் அல்லது பேபி பவுடர் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.
05:40 பேபி பவுடர்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு சுவாச சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.
05:45 கண்களில் ஒருபோதும் மையை பயன்படுத்த வேண்டாம்.
05:49 மையின் பயன்பாடு பச்சிளம் குழந்தைகளுக்கு ஈய விஷம் மற்றும் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
05:56 மலைப்பாங்கான பகுதிகளிலோ அல்லது குளிர்ந்த பகுதிகளிலோ வாழும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
06:04 அத்தகைய இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு, தொப்புள் கொடி விழுவதற்கு முன்பு விரைவான விரைவாக ஸ்பாஞ்சினால் குளிப்பாட்டலாம் கொடுக்கலாம்.
06:11 இருப்பினும், குழந்தையை துடைத்த உடனேயே, தாய் அல்லது பராமரிப்பாளர் குழந்தைக்கு தோலுடன் தோல் தொடர்பை வழங்க வேண்டும்.
06:20 இது குழந்தைகளில் குளிர் நடுக்கம் வராமல் பாதுகாக்கும்.
06:25 வாரத்திற்கு இரண்டு முறை, ஷாம்பு பயன்படுத்தினால் போதும் என்பதை நினைவில் கொள்க.
06:30 எல்லா நாட்களும் ஷாம்பூவை பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இது உச்சந்தலையில் வறட்சியை ஏற்படுத்தும்.
06:35 பிறந்த குழந்தைக்கு உச்சந்தலையில் மிருதுவான திட்டுகள் அல்லது செதில்கள் இருக்கலாம். இது, Cradle cap என்று அழைக்கப்படுகிறது.
06:45 இந்த திட்டுகள் அல்லது செதில்களைச் சுற்றி சிறிது சிவந்து இருக்கலாம்.
06:50 Cradle cap பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்பதை நினைவில் கொள்க.
06:54 அது தானாகவே போய்விடும். அதற்கு, சிகிச்சையளிக்க தேவையில்லை.
06:59 குழந்தை எண்ணெய், செதில்களை மென்மையாக்க உதவும்.
07:04 எண்ணெயைப் பயன்படுத்தும்போது, ​​சிறிய அளவை மட்டுமே செதில்களில் தேய்க்கவும்.
07:09 அதிகப்படியான எண்ணெய் நிலைமையை மோசமாக்கக்கூடும்.
07:12 கண்ணீரை வரவழைக்காத குழந்தை ஷாம்பூவினால் ஓரிரு மணி நேரத்திற்குள் கழுவ வேண்டும்.
07:20 அதன்பிறகு, மேலும் சேர்வதை தவிர்க்க, ஒரு மணிநேரத்திற்குப் பிறகு மெதுவாக செதில்களைத் துலக்குங்கள்.
07:27 புண்பட்ட உச்சந்தலை மேலும் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதால் செதில்களை ஒருபோதும் இழுக்காதீர்கள்.
07:33 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Jayashree