GChemPaint/C2/Editing-molecules/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:21, 28 October 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:02 வணக்கம் (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் ல் மூலக்கூறுகளை திருத்துதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு..
00:06 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது
00:09 ஒரு அணுவில் கட்டுறா எலெக்ட்ரானை சேர்த்தல்
00:12 கார்பானிக் அமிலம் (Carbonic acid) மற்றும் கந்தக அமிலத்தின் (Sulphuric acid) அமைப்புகளை வரைதல்
00:16 அணுக்களின் தொகுதியில் ஒரு இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்.
00:21 மேலும் நாம் கற்பது,
00:23 அணுவில் இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்
00:26 வட்டமுறை மூலக்கூறுகளை சேர்த்தல்
00:29 ஒரு வட்டமுறை மூலக்கூறுகளை இரு வட்டமுறை மூலக்கூறுகளாக மாற்றுதல்.
00:34 இங்கே நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04
00:39 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் பதிப்பு 0.12.10
00:46 இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு,
00:50 (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:53 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:58 ஒரு புதிய (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் application ஐ திறந்துள்ளேன்.
01:02 முதலில் அம்மோனியா (Ammonia) அமைப்பை வரைவோம்.
01:06 Current element கீழிறங்கு அம்பு பட்டனை க்ளிக் செய்வோம்.
01:09 அட்டவணையில் N ஐ தேர்ந்தெடுப்போம்.
01:11 tool box ல் N ஐ கவனிக்கவும்.
01:15 Add or modify an atom tool ஐ க்ளிக் செய்க.
01:18 பின் காட்சி பகுதியில்' க்ளிக் செய்க.
01:21 காட்சி பகுதியில் NH3 ஐ காணலாம்.
01:24 capital Hஐ அழுத்துக. H உடன் ஆரம்பிக்கும் தனிமங்களின் பட்டியலுடன் ஒரு துணைmenu தோன்றுகிறது
01:30 பட்டியலில் H ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:33 Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க.
01:38 நைட்ரஜன் அணுவிற்கு மூன்று பிணைப்புகளை வரைய
01:41 நைட்ரஜன் அணுவின் மீது மூன்று முறை க்ளிக் செய்து பிணைப்புகளை இழுக்கவும்.
01:46 ஒரு பிரமிட் போன்ற அமைப்பை உருவாக்குமாறு அந்த பிணைப்புகளை வைக்கவும்.
01:51 நைட்ரஜன் அணுவில் ஒரு ஜோடி கட்டுறா எலெக்ட்ரான்களை சேர்ப்போம்.
01:56 Add an electron pair to an atom tool மீது க்ளிக் செய்க.
02:01 பின் அம்மோனியாவின் நைட்ரஜன் அணு மீது க்ளிக் செய்க .
02:05 மாற்றங்களை கவனிக்கவும்.
02:07 இப்போது அம்மோனியாவின் நைட்ரஜன் ஒரு ஜோடி எலெக்ட்ரான்களை கொண்டிருப்பதை கவனிக்கவும்.
02:12 இந்த ஜோடி பிணைப்பில் இல்லை.
02:16 இந்த ஜோடி எலெக்ட்ரான்கள் தனி ஜோடி ஆகும்.
02:21 பயிற்சியாக, பாஸ்பரஸ் ட்ரைக்ளோரைட் (Phosphorus trichloride) அமைப்பை வரைக
02:24 பாஸ்பரஸ் (Phosphorus) அணுவிற்கு கட்டுறா எலெக்ட்ரான்களின் ஒரு ஜோடியை செர்க்கவும்.
02:29 இப்போது'கார்பானிக் அமிலம் (Carbonic acid) (H2CO3) மற்றும் கந்தக அமிலம் (Sulphuric acid)(H2SO4) ன் அமைப்புகளை வரைவோம்.
02:34 இங்கே, கார்பானிக் அமிலம் மற்றும் கந்தக அமிலத்தின் அமைப்புகள் உள்ளன.
02:40 முதலில் அம்மோனியா அமைப்பை ஒரு பக்கமாக நகர்த்துவோம்.
02:44 அதற்கு, Select one or more objects tool மீது க்ளிக் செய்க.
02:48 பின் அம்மோனியா அமைப்பின் மீது க்ளிக் செய்து அதை ஒரு பக்கமாக இழுக்கவும்.
02:53 இப்போது கார்பானிக் அமிலம் அமைப்பை வரைவோம்.
02:56 Current element கீழிறங்கு அம்பு பட்டன் மீது க்ளிக் செய்க.
03:00 அட்டவணையில் C ஐ தேர்ந்தெடுப்போம்.
03:02 Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க.
03:07 காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
03:09 தலைகீழ் Y போன்ற அமைப்பை தருமாறு மூன்று பிணைப்புகளை அமைக்கவும்.
03:15 ஏதேனும் ஒரு பிணைப்பில் இரட்டை பிணைப்பை நான்காம் பிணைப்பாக வரையவும்.
03:21 இப்போது Current element கீழிறங்கு அம்பு பட்டன் மீது க்ளிக் செய்க.
03:26 O ஐ தேர்க. Add or modify an atom tool மீது க்ளிக் செய்க
03:30 பிணைப்புகளுக்கு அருகில் கர்சரை வைக்கவும்.
03:33 மூன்று பிணைப்பு நிலைகளிலும் க்ளிக் செய்க.
03:37 கார்பானிக் அமிலம்(H2CO3) அமைப்பு வரையப்பட்டது.
03:40 இப்போது கந்தக அமிலம் அமைப்பை வரைவோம்.
03:44 Current element கீழிறங்கு அம்பு பட்டன் மீது க்ளிக் செய்க.
03:48 S ஐ தேர்க Add or modify an atom tool மீது க்ளிக் செய்க.
03:52 காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
03:55 H2S ஐ கவனிக்கவும்.
03:57 இப்போது காட்சி பகுதியில் எங்கேனும் O ஐ அழுத்துக
04:01 O மற்றும் Os என்ற இரு தேர்வுகளுடன் ஒரு துணை menu திறக்கிறது.
04:06 O ஐ தேர்க.
04:08 Add or modify an atom tool மீது க்ளிக் செய்க.
04:11 பின் Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க.
04:17 Property menu ல், 200 அல்லது அதற்கு மேலாக Bond length மதிப்பை அதிகரிக்கவும்.
04:23 S க்கு OH ன் மூன்று பிணைப்புகளை வரைய H2S மீது க்ளிக் செய்க.
04:29 S க்கு அருகே ஒரு நேர் மின்னூட்டத்தைக் கவனிக்கவும்.
04:32 கந்தகத்தின் இணைத்திறன் 6 ஐ பூர்த்திசெய்ய வேண்டும் என்பதால் இது தோன்றுகிறது.
04:39 நான்காம் பிணைப்பிற்கு, முதலில் S மீது க்ளிக் செய்க.
04:43 இப்போது mouse ஐ விடுவிக்காமல் ஒரு பக்கதிற்கு பிணைப்பை இழுக்கவும்.
04:47 இப்போது எதிர்பக்க பிணைப்புகளை இரட்டை பிணைப்புகளாக மாற்றுவோம்.
04:52 Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க.
04:58 பின அமைப்பில் எதிர் பக்கத்தில் உள்ள பிணைப்புகளின் மீது க்ளிக் செய்க.
05:03 நேர்மின்னூட்டம் தெரிவதில்லை என்பதை கவனிக்கவும்.
05:08 கந்தக அமில அமைப்பு முடிந்தது.
05:12 அடுத்து கார்பானிக் அமிலம் மற்றும் கந்தக அமில அமைப்புகளில் இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை (local charge) சேர்ப்போம்.
05:18 இடஞ்சார்ந்த மின்னூட்டத்தைக் காட்ட Decrement the charge of an atom tool மீது க்ளிக் செய்க.
05:24 கார்பானிக் அமில அமைப்பின் இரு O-H தொகுதிகளின் மீதும் க்ளிக் செய்க.
05:30 கார்போனேட் அயனி (Carbonate ion) CO3 2- உருவாக்கப்பட்டத்தை கவனிக்கவும்.
05:36 கந்தக அமில அமைப்பின் மீது இடஞ்சார்ந்த மின்னூட்டத்தைக் காட்ட
05:41 Decrement the charge of an atom tool மீது க்ளிக் செய்க.
05:44 கந்தக அமிலத்தின் எதிரெதிரான இரு O-H தொகுதிகளின் மீது க்ளிக் செய்க .
05:49 சல்பேட் அயனி (Sulphate ion) SO4 2- உருவாக்கப்பட்டதை கவனிக்கவும்.
05:57 பயிற்சியாக, நைட்ரிக் அமில (Nitric acid) அமைப்பை உருவாக்கவும்
05:59 நைட்ரேட் அயனியில் (Nitrate ion) இடஞ்சார்ந்த மின்னூட்டத்தைக் காட்டவும்
06:02 பயிற்சியை முடித்தபின் அது இவ்வாறு இருக்க வேண்டும்.
06:07 ஒரு அணுவில் எவ்வாறு இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்ப்பது என விரைவாக செய்துகாட்டுகிறேன்.
06:12 காட்சிப்பகுதியில் எங்கேனும், capital N ஐ அழுத்தவும்.
06:16 ஒரு துணை menu திறக்கிறது அதில் Na ஐ தேர்ந்தெடுக்கலாம்.
06:21 Add or modify an atom tool மீது க்ளிக் செய்க
06:24 பின் காட்சிபகுதியில் க்ளிக் செய்க.
06:27 காட்சி பகுதியில் சோடியம் அணு தோன்றுகிறது.
06:30 Increment the charge of an atom tool மீது க்ளிக் செய்க.
06:35 பின் Na மீது க்ளிக் செய்க.
06:37 சோடியம் அணுவின் மீது நேர்மின்னூட்டத்தைக் கவனிக்கவும்.
06:41 அதேபோலவே, ஒரு அணுவிற்கு ஒரு எதிர் மின்னூட்டத்தையும் சேர்க்கலாம்.
06:46 Decrement the charge of an atom tool ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம் இதை செய்யலாம்.
06:51 இப்போது வட்டமுறை மூலக்கூறுகளை வரையக் கற்போம்.
06:54 அதற்கு, ஒரு புதிய (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் விண்டோவை திறப்போம்.
06:59 toolbar ல் Create a new file ஐகான் மீது க்ளிக் செய்க.
07:03 C அதாவது கார்பன் ஒரு தனிமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்க.
07:09 Bond length 200 அல்லது அதற்கு மேல் உள்ளதா எனவும் காண்க.
07:14 tool box ல் நான்காவது toolbar.... Cycle tool ஆகும்
07:19 இங்கே நாம் பயன்படுத்த கூடிய பல்வேறு toolகள் உள்ளன.
07:22 உதாரணமாக -
07:24 Add a three membered cycle
07:26 Add a four membered cycle
07:29 மேலும் சில cycle toolகள்
07:32 பின் Add a cycle tool.
07:35 Add a four membered cycle ஐ பயன்படுத்துவோம்.
07:40 அதன் மீது க்ளிக் செய்க.
07:42 பின் காட்சி பகுதியில் க்ளிக் செய்க.
07:44 வளையத்தின் மூலைகளில் அணுக்களை சேர்ப்போம்.
07:49 ஏதேனும் ஒரு மூலையில் ரைட் க்ளிக் செய்க.
07:52 ஒரு துணைmenu திறக்கிறது. Atom ஐ தேர்ந்தெடுத்து பின் Display symbol மீது க்ளிக் செய்க.
07:58 அதேபோல மற்ற அனைத்து மூலைகளிலும் அணுக்களை சேர்ப்போம்.
08:03 பெறப்பட்ட அமைப்பு சைக்ளோப்யூட்டேன் (Cyclobutane).
08:07 இப்போது ஒரு வட்டமுறை சேர்மத்தை (mono-cyclic compound) இரு வட்டமுறை சேர்மமாக ( bi-cyclic compound) மாற்றுவோம்.
08:12 Add a six membered cycle tool மீது க்ளிக் செய்க.
08:16 பின் காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க.
08:19 வளையத்தின் பிணைப்பின் மீது கர்சரை வைத்து மீண்டும் க்ளிக் செய்க.
08:24 இரு வட்டமுறை சேர்மத்தை (Bi-cyclic compound) கவனிக்கவும்.
08:27 file ஐ சேமிக்க, toolbar ல் Save the current file ஐகான் மீது க்ளிக் செய்க.
08:32 Save as dialog box திறக்கிறது.
08:35 file பெயரை Editing Molecules என கொடுக்கவும்
08:38 Save பட்டன் மீது க்ளிக் செய்க.
08:41 சுருங்க சொல்ல.
08:43 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
08:45 ஒரு அணுவில் கட்டுறா எலெக்ட்ரானை சேர்த்தல்
08:48 கார்பானிக் அமிலம் (Carbonic acid) மற்றும் கந்தக அமிலத்தின் (Sulphuric acid) அமைப்புகளை வரைக
08:53 அணுக்களின் தொகுதியில் ஒரு இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்.
08:58 மேலும நாம் கற்றது,
09:00 ஒரு அணுவில் ஒரு இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்த்தல் மற்றும் மாற்றுதல்
09:04 வட்டமுறை மூலக்கூறுகளை சேர்த்தல்
09:06 ஒரு வட்டமுறை மூலக்கூறுகளை இரு வட்டமுறை மூலக்கூறுகளாக மாற்றுதல்.
09:11 பயிற்சியாக
09:13 காட்சி பகுதியில் ஏழு உறுப்பினர் கொண்ட வட்டமுறையை சேர்க்கவும்
09:16 அதை மூவட்டமுறை சேர்மமாக மாற்றவும்.
09:20 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org /What_a_Spoken_Tutorial
09:24 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:27 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:32 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:36 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:40 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:46 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:50 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:57 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:03 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Ashwini, PoojaMoolya, Priyacst