Difference between revisions of "CellDesigner/C2/Getting-Started-with-CellDesigner/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 47: Line 47:
 
|-
 
|-
 
| 00:50
 
| 00:50
|நான் பயன்படுத்துவது Windows XP மற்றும் CellDesigner Version 4.2.  Linux மற்றும் Mac OS X இலும் கூட CellDesigner ஐ செயல்படுத்தலாம்
+
|நான் பயன்படுத்துவது Windows XP மற்றும் CellDesigner Version 4.3.  Linux மற்றும் Mac OS X இலும் கூட CellDesigner ஐ செயல்படுத்தலாம்
 
|-
 
|-
 
| 01:00
 
| 01:00

Latest revision as of 12:24, 6 February 2018

Time Narration
00:01 Getting started with CellDesigner குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:05 இந்த tutorialஇல், நாம் கற்கப் போவது :

CellDesigner, CellDesigner இல்Menu மற்றும் Tool barகள்

00:13 CellDesigner workspaceஇல் உள்ள பற்பல areas
00:17 Species மற்றும் Reactions உள்ளடங்கிய, CellDesignerஇன் Componentகள்
00:23 மேலும், ஒரு எளிய network ஐ எவ்வாறு உருவாக்குவது
00:27 networkஐ Save செய்வது
00:29 Imageஇனை export செய்வது
00:30 ஒரு network இனை எவ்வாறு zoom செய்வது என்பது பற்றியும் கற்போம்
00:33 CellDesigner என்பது மரபணு-ஒழுங்குமுறை மற்றும் உயிர்வேதியியல் networkகள் வரைவதற்கான process diagram editor ஆகும்.
00:40 Process diagram, Kitano மூலம் முன்மொழியப்பட்டது. இந்த diagramகள், Systems Biology Markup Language (SBML) இனைப் பயன்படுத்தி சேமிக்கப்படுகின்றன.
00:50 நான் பயன்படுத்துவது Windows XP மற்றும் CellDesigner Version 4.3. Linux மற்றும் Mac OS X இலும் கூட CellDesigner ஐ செயல்படுத்தலாம்
01:00 CellDesignerஐ திறக்க, desktopஇல் உள்ள CellDesigner shortcut iconமீது double-click செய்யவும்.
01:07 இது CellDesignerஐ திறக்கும். இப்போது அதனை ஆராயலாம்.
01:12 நீங்கள் Menu barஇல், File, Edit, Component ,View, Database போன்றவை உள்ளிட்ட, பற்பல Menu optionகளைப் பார்க்கலாம்.
01:24 Main Menu வின் கீழ், நீங்கள் பல Toolbarகளைக் காணலாம்.
01:30 Editing, species, reactions, compartments உள்ளிட்டவைகளுக்கான Toolbarகள் உள்ளன.
01:38 நாம் இங்கே தொடரும் போது , அவற்றில் சிலவற்றைக் கற்போம்.
01:42 CellDesigner workspaceஇன் பல்வேறு areas பற்றி கற்கலாம்
01:48 இங்கு 5 areas உள்ளதை நீங்கள் பார்க்கலாம்
01:52 வலது பக்கம் காணப்படுவது Draw area.
01:55 இங்கே தான் நாம் networkகளை வரையவிருக்கிறோம்.
01:58 Draw areaவில் காணப்படும் ஒவ்வொரு வடிவமும், எடுத்துக்காட்டாக, செவ்வகம், ஓவல், கோட்டுப் பகுதி ஆகியவை Componentஎன அழைக்கப்படுகின்றன.
02:08 Component என்பது, species, reactions அல்லது compartmentஇனைக் குறிக்கும் பொதுவான பதமாகும்.
02:14 இந்தக் குறியீடுகளின் பட்டியல் மற்றும் அவற்றின் அர்த்தங்களை, CellDesigner websiteஇல் காணலாம்- அதாவது www.celldesigner.org
02:29 நான் Documents மீது click செய்கிறேன்.
02:33 இப்போது Startup guide மீது click செய்யலாம். அது மற்றொரு tabஇலும் உள்ளது.
02:40 நாம் நேரடியாக பக்க எண் 82ற்கு செல்லலாம்.
02:45 இங்கு நீங்கள் பல குறியீடுகள் மற்றும் அவற்றின் அர்த்தங்களைப் பார்க்கலாம்.
02:51 நாம் CellDesigner windowவிற்கு திரும்பலாம்.
02:55 Draw areaவிற்கு கீழிருப்பது List area.
02:59 இங்கே ஒரு modelஇன் componentகள் மற்றும் functionகளின், பட்டியலைக் காண்பிக்கவோ, திருத்தவோ முடியும்.
03:06 Notes பகுதி, componentஇன் குறிப்புகளைக் காண்பிக்கவும், திருத்தவும் பயன்படுகிறது.
03:12 இடது பக்கம் காணப்படும் Tree area, tree structureஇல் உள்ள componentகளைப் பட்டியலிடுகிறது.
03:21 அதற்கு கீழிருக்கும் Layer area, modelஇன் அனைத்து layerகளையும் காண்பிக்கும்.
03:27 Borderlineகளை இழுப்பதன் மூலம், areaக்களின் அளவினை மாற்றலாம்.
03:33 நான் cursorஐ borderlineமீது வைக்கிறேன். நீங்கள் double headed arrowவைப் பார்க்கலாம். அதனை இழுப்பதால் areaவை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும்.
03:45 List மற்றும் Notes areaவின் நிலையை மாற்ற
03:50 View optionக்கு சென்று>> Listமீது click செய்து, Rightஐத் தேர்ந்தெடுக்கவும்..
03:56 அது listஐ வலப்பக்கம் மாற்றும். Down, default நிலையாகும்.
04:00 Slideற்குத் திரும்பலாம்
04:05 இது நாம் உருவாக்கும் எளிய network ஆகும்.
04:10 இந்த networkஇல், புரோட்டீன் A, புரோட்டீன் Cஇன் வினையூக்கத்தால், புரோட்டீன் B எனும் நிலை மாற்றத்திற்கு உள்ளாகிறது.
04:21 மேலும் புரோட்டீன் B நிலை மாற்றத்திற்கு உள்ளாகி, புரோட்டீன் D ஆகிறது
04:27 இந்த மாறுதல், புரோட்டீன் Eயால் தடுக்கப்படுகிறது
04:32 நாம் இந்த networkஐ உருவாக்கலாம்
04:34 நான் இப்போது CellDesigner windowவிற்குத் திரும்புகிறேன்
04:39 இப்போது Fileஇல் clickசெய்து, பிறகு Newவை சொடுக்கவும்.
04:43 New Document’ எனப் பெயரிட்ட, சிறிய dialog box திறக்கப்படும்.
04:48 இது name field ஆகும்.
04:50 நான் “simple network” என type செய்கிறேன்.
04:53 நம் தேவைக்கேற்ப, உயரம் மற்றும் அகலத்தை மாற்ற முடியும். எனினும், நான் defaultஆன உயரம் மற்றும் அகலத்தையே வைத்துள்ளேன்.
05:03 OK, click செய்யவும். Draw areaவின் மேல் இடது மூலையில் பெயர் தோன்றுவதைக் காணலாம்.
05:12 இப்போது Editற்கு சென்று, Grid snap மற்றும் Grid visibleஐ செயல்படுத்தவும்.
05:21 Draw areaவில் ஒரு grid காணப்படும்.
05:25 Grid snap, componentகளை gridஉடன் சரியாக ஒன்றுபடுத்தும்.
05:29 Network முழுமையான பின்பு, நீங்கள், Grid visibleஐ தேர்வுநீக்கம் செய்யலாம்.
05:34 Componentகளை சேர்க்கத் தொடங்கும் முன்பு, species மற்றும் and reactionகளுக்கான எடுத்துகாட்டுகளைக் காண்பிக்கிறேன்.
05:42 முதலில் speciesஐ பார்ப்போம்.
05:45 இங்கு காணப்படும் சின்னங்கள், generic protein, receptor, ion channel, truncated protein, gene, RNA ஆகிவற்றிற்கானதாகும்.
05:58 State transition, Heterodimer association, Dissociation, Catalysis, Inhibition முதலான reactionகளைப் பார்ப்போம்,
06:11 நாம் Species toolbarஇல் முதல் iconஐ click செய்து, அதனைத் தேர்வு செய்வோம். இந்த icon புரோட்டீனுக்கானதாகும்
06:22 Speciesஐ எங்கு வைக்க வேண்டுமோ, அதற்குத் தகுந்தவாறு Draw Areaவில் click செய்யவும்.
06:28 நான் Draw areaவிற்கு இடது பக்கமாக அதனை வைக்கிறேன்.
06:33 ஒரு சிறிய dialog box திறக்கப்பட்டு, species இன் பெயர் கேட்கப்படும்.
06:39 நான் புதிய speciesஐ A எனப் பெயரிட்டு, OKவை click செய்கிறேன்.
06:46 மாற்றத்தை List areaவிலும் பார்க்கவும்.
06:50 நீங்கள் பார்ப்பது போல், Draw areaவில், புதிய speciesஐ சேர்த்துள்ளோம். அவ்வாறே Bயை சேர்க்கலாம்.
06:58 நீங்கள் ஒரு componentஐத் திருத்துவதற்கு அல்லது நகர்த்துவதற்கு முன், அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
07:03 Componentஐ click செய்து அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கு முன், select icon செயலாக்க நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்தவும்.
07:12 நான் Aவிற்கு அடுத்து, Bயை வைக்க விரும்புகிறேன். எனவே B மீது click செய்து, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
07:17 அதனை இழுத்து, Aவிற்கு அடுத்து வைக்கவும்.
07:21 இப்போது, componentஇன் அளவை எவ்வாறு மாற்றுவது எனப் பார்க்கலாம்.
07:24 நான் Aவை click செய்கிறேன். அதில் சிறிய சதுரங்களைக் காண்கிறோம்.
07:29 இவை அளவை மாற்றுவதற்கான, handleகள் ஆகும்.
07:32 நான் இந்த விளிம்பில் cursorஐ வைத்து இழுத்து விடுகிறேன்.
07:36 Aவின் அளவு மாற்றப்பட்டுள்ளதைக் காணலாம்.
07:39 Component இன் அளவை மாற்றும் மற்றொரு முறையை, பிந்தைய tutorialஇல் கற்கலாம்.
07:46 நீங்கள் 'Ctrl-Z' மூலம் முந்தைய செயல்களை “undo" செய்யலாம்.
07:52 “re-do” செய்ய வேண்டுமெனில், Ctrl-Yயை அழுத்தவும்.
07:54 நேரடியாக undo மற்றும் redo iconகளை click செய்வதன் மூலமும் இதனை செய்யலாம்
08:03 இப்போது reactionகளை சேர்ப்போம்.
08:06 Reaction என்பது இரண்டு objectகளுக்கிடையேயான செயலெதிர்ச்செயல் ஆகும்.
08:09 இது state transition reaction ஆகும்.
08:12 எனவே Reaction toolbarஇல் உள்ள State transitionக்கான icon மீது click செய்கிறேன்.
08:18 Aவின் எந்த விளிம்பிலாவது click செய்து, பின்னர் B மீது click செய்யவும்
08:23 இவ்வாறு, reaction arrow, A மற்றும் Bயை இணைப்பதைக் காணலாம்.
08:30 முதலில் தேர்ந்த்தெடுக்கப்பட்ட component, reactantஆகக் கருதப்படுகிறது.
08:35 எனவே எப்போதும், reactantகளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
08:39 re1, default reaction id ஆகிறது.
08:43 இப்போது species C யை சேர்த்து, முந்தைய slideஇல் காட்டப்பட்டுள்ளபடி, பொருத்தமான நிலையில் அதனை வைக்கலாம்.
08:54 நான் Reaction toolbarஇலிருந்து, இந்த iconஐ, Catalysisற்காகத் தேர்வு செய்கிறேன்.
09:00 நான் Cயின் விளிம்பில் click செய்து, State transition reactionஇன் சதுர சின்னத்திலும் சொடுக்குகிறேன்.
09:08 இப்போது species Dயை சேர்த்து, அதனை Bயின் அருகில் வைக்கிறேன்.
09:15 Bயிலிருந்து Dற்கு, ஒரு State transition reactionஐ சேர்க்கலாம். Default reaction id, re2 ஆகும்.
09:26 நான் species E யை இணைத்து, முந்தைய slideஇல் காட்டியபடி, தகுந்த இடத்தில் அதனை வைக்கிறேன்.
09:35 நான் இப்போது Inhibition reactionஐக் குறிக்கும் இந்த iconஐ, Reaction toolbarஇலிருந்து தேர்ந்தெடுக்கிறேன்.
09:44 நான் Eயின் விளிம்பில் click செய்து, State transition reactionஇன் இந்த சதுர சின்னத்திலும் சொடுக்குகிறேன். இரண்டு புள்ளிகளையும் இது இணைக்கும்.
09:54 இப்போது simple networkஐக் காணலாம்
09:57 நாம் செய்த பணிகளை save செய்யலாம்.
10:00 Fileக்கு சென்று, Save asஐ click செய்யவும்.
10:04 நான் “Simple Network” எனப் பெயரிடுகிறேன்.
10:06 இது நாம் செய்த பணிகளை .xml formatஇல் Save செய்யும். . Saveஇனை சொடுக்கவும்.
10:12 இப்போது நாம் imageஇனை எவ்வாறு export செய்வது எனக் கற்போம். இதற்கு செல்க: File>Export Image
10:22 நீங்கள் imageஇனை, pdf, png, jpeg முதலான வெவ்வேறு formatகளில் save செய்யலாம்.
10:29 நான் jpeg imageஆக save செய்கிறேன். Saveஇனை சொடுக்கவும்.
10:35 நாம் networkஇனை zoom செய்வது எவ்வாறு எனப் பார்ப்போம்.
10:38 Zoom செய்வதற்கான 4 தேர்வுகள் - Zoom In, Zoom Out, Zoom Fit. Zoom Reset
10:47 நான் Zoom In icon ஐ இரண்டு முறை click செய்கிறேன். Image பெரிதானதை நாம் காணலாம்.
10:54 இப்போது Zoom Resetஐ click செய்கிறேன். Network, உண்மையான அளவிற்கு மீண்டும் வருகிறது
11:02 இத்துடன் நாம் Getting started with CellDesignerக்கான spoken tutorial இன் முடிவிற்கு வருகிறோம்.
11:08 சுருக்கமாகப் பார்ப்போம். நாம் கற்றது CellDesignerஇல், Menu மற்றும் Tool bar
11:14 CellDesignerஇல் பல்வேறு areas. Species மற்றும் Reactions முதலான componentகள்.
11:20 நாம் species மற்றும் reaction componentகளைப் பயன்படுத்தி, ஒரு simple network ஐ உருவாக்கினோம்.
11:26 மேலும் networkஇனை எவ்வாறு zoom செய்வது, save செய்வது மற்றும் imageஇனை export செய்வது எனக் கற்றோம்.
11:32 ஒரு பயிற்சியாக, CellDesigner 4.2வினைப் பயன்படுத்தி, ஒரு networkஇனை உருவாக்கவும்.
11:39 இந்த networkஇல், A மற்றும் B புரோட்டீன்கள் இணைந்து, வினையூக்கி புரோட்டீன் C உள்ள போது, ஒரு complexஇனை (Complex1) அமைக்கின்றன.
11:51 இந்த complex, வினையூக்கி புரோட்டீன் D இருக்கும் போது சிதைகிறது.
11:58 இது போன்றொரு networkஇனை நீங்கள் பெற வேண்டும்.
12:01 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்
12:13 Spoken Tutorial திட்டக்குழு, spoken tutorialகளைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி தேர்வில் தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, contact at spoken hyphen tutorial dot orgக்கு மின்னஞ்சல் செய்யவும்
12:28 Spoken Tutorial பாடங்கள், Talk to a Teacher திட்டத்தின் முனைப்பாகும். இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித் திட்டம், இதற்கு ஆதரவு தருகிறது
12:41 இந்த திட்டம் பற்றிய மேலும் தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:53 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி ..

Contributors and Content Editors

Aishwarya raman, Priyacst, Venuspriya