Ubuntu-Linux-on-Virtual-Box/C2/Installing-VirtualBox-on-Ubuntu-Linux-OS/English-timed/C2/Installing-Ubuntu-Linux-OS-in-a-VirtualBox/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 ஒரு VirtualBox.'ல், Ubuntu Linux OSஐ நிறுவுவது குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம், ஒரு Windows base machine.ல், VirtualBox.ல் Ubuntu Linux 16.04 ஐ நிறுவக் கற்கப்போகிறோம்.
00:18 இந்த டுடோரியலை பதிவு செய்ய, Windows OS பதிப்பு 10,
00:23 VirtualBox பதிப்பு 5.2.18,
00:27 Ubuntu Linux 16.04 OS பயன்படுத்தப்பட்டுள்ளது.
00:31 தொடங்குவதற்கு முன், நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்களா என்று உறுதிபடுத்திக்கொள்ளவும்.
00:36 ஒரு VirtualBoxன் உள், ஒரு OSஐ நிறுவ, base machine , பின்வரும் கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும்.
00:43 i3 processor அல்லது அதற்கு மேற்பட்டது,
00:46 Ram 4GB அல்லது அதற்கு மேற்பட்டது,
00:49 Hard diskல், காலியான இடம், 50GB அல்லது அதற்கு மேல், மற்றும்,
00:54 Virtualization , BIOSல் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
00:58 இது, VirtualBox சீராக வேலை செய்ய உறுதிப்படுத்தும்.
01:03 நிறுவுதலை தொடங்குவதற்கு முன், System type , 32-bitஆ அல்லது vir64-bit.ஆ என்று குறுக்குச் சரி பார்க்கவும்.
01:12 அதற்கு, Start menu விற்கு பக்கத்தில் உள்ள search boxக்கு செல்லவும். டைப் செய்க: About your PC.
01:22 About your PC.ஐ தேர்ந்தெடுக்கவும்.
01:25 System typeன் கீழ், Windows.ன், 32-bit அல்லது 64-bit பதிப்பை ஒட்டிக்கொண்டிருக்கின்றோமா என்று நாம் காணலாம்.
01:34 இங்கு, அது 64-bit Windows. ஆகும்.
01:39 உங்கள் System typeஐ பொறுத்து, தகுந்த Ubuntu Linux 16.04 ISOஐ இந்த இணைப்பிலிருந்து தரவிறக்கவும்: http colon double slash releases dot ubuntu dot com slash 16.04
01:59 32-bitக்கு, இவ்வாறு இருக்கும்: ubuntu hyphen 16.04.5 hyphen desktop hyphen i386 dot iso
02:12 64-bitக்கு, இவ்வாறு இருக்கும்: ubuntu hyphen 16.04.5 hyphen desktop hyphen amd64 dot iso
02:26 முன்பு கூறியது போல், எனது Windows System type, 64-bit. ஆகும்.
02:31 அதனால், இந்த செயல்விளக்கத்திற்கு ubuntu hyphen 16.04.5 hyphen desktop hyphen amd64.iso file ஐ நான் தரவிறக்கியுள்ளேன்.
02:45 முதலில், ஒரு VirtualBox.ன் உள் ஒரு virtual machineஐ உருவாக்கக்கற்போம்.
02:52 அதை தொடங்க, Desktopல் உள்ள VirtualBox icon ஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
02:59 VirtualBox windowவின் மேல், New என்ற நீல நிற iconஐ கண்டறிந்து, அதை க்ளிக் செய்யவும்.
03:06 திறக்கப்படுகின்ற Create Virtual Machine windowல், Name and Operating system. பக்கத்தை நாம் காணலாம்.
03:14 Name text boxன் கீழ், உங்களுக்கு விருப்பமான பெயரை டைப் செய்யவும். நான் Ubuntu. என டைப் செய்கிறேன்.
03:22 Typeன் drop-downனின் கீழ், Linux.ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:27 Versionனின் drop-downலிருந்து நான், Ubuntu (64-bit).ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:33 உங்கள், base machine, 32-bitஆக இருந்தால், drop-downலிருந்து Ubuntu (32-bit) ஐ தேர்ந்தெடுக்கவும்.
03:40 பின், windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
03:44 அடுத்த பக்கம், Memory size.ஆகும். இங்கு, virtual machine.க்கான RAMன் அளவை நாம் ஒதுக்கீடு செய்கிறோம்.
03:52 RAMக்கான அளவை ஒதுக்கீடு செய்ய, slider அல்லது text-boxஐ பயன்படுத்தவும்.
03:58 Unit, MB என கூறுவதால், text-boxல், 4048 என நான் டைப் செய்கிறேன்.
04:05 இது, இந்த virtual machineக்கு, 4GB RAMஐ ஒதுக்கீடு செய்யும்.
04:11 base machineனின், system memory வெறும் 4GBஆக இருந்தால், பின் virtual machine.க்கு 2GBஐ ஒதுக்கீடு செய்யவும்.
04:19 இப்போது, windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
04:24 Hard disk பக்கத்தில், எவ்வகையான virtual hard disk ஐ நாம் பயன்படுத்தப்போகிறோம் என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.
04:32 நான் ஒரு புது virtual machineஐ உருவாக்குகின்றேன். அதனால் நான், Create a virtual hard disk now.ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
04:39 defaultஆக, இந்த தேர்வு உங்களுக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.
04:44 கீழுள்ள Create பட்டனை க்ளிக் செய்யவும்.
04:48 Hard disk file typeல், VDI (Virtual Disk Image)ஐ தேர்ந்தெடுக்கவும். பின், windowவின் கீழுள்ள Next பட்டனை க்ளிக் செய்யவும்.
04:59 அடுத்த பக்கமான, Storage on physical hard diskல், நமது hard disk storage எவ்வாறு இருக்க வேண்டும் என நாம் தீர்மானிக்க வேண்டும். இங்கு இரண்டு தேர்வுகள் உள்ளன.
05:11 பயன்பாட்டை பொறுத்து, Dynamically allocated தேர்வு, hard disk storageஐ விரிவாக்கும்.
05:19 Fixed Size , நாம் வரையறுக்கின்ற அளவை ஒதுக்கீடு செய்யும். நான் Fixed Size ஐ தேர்வு செய்கிறேன்.
05:27 தொடர்வதற்கு, Next பட்டனை க்ளிக் செய்யவும்.
05:31 அடுத்த பக்கமான, File location and size, hard disk sizeஐ ஒதுக்கீடு செய்வதற்காகும்.
05:38 நாம் முன்பு கொடுத்த Ubuntu பெயரை, இங்கு நீங்கள் காணலாம்.
05:44 மேலும், வலது பக்கத்தில், ஒரு folder iconஐ காணலாம்.
05:48 இந்த Virtual Disk Imageஐ வேறொரு இடத்தில் நீங்கள் save செய்ய விரும்பினால், இந்த iconஐ க்ளிக் செய்து தொடரவும். இந்த செயல்விளக்கத்திற்கு, இந்தப்பகுதியை நான் தவிர்க்கிறேன்.
06:02 அடுத்து, hard disk size.ஐ ஒதுக்கீடு செய்ய, slider அல்லது text-boxஐ பயன்படுத்தவும்.
06:09 பரிந்துரைக்கப்படுகின்ற அளவு, 10GB ஆகும். ஆனால், நான் அதை 20GB.க்கு மாற்றுகிறேன்.
06:16 பின், கீழுள்ள Create பட்டனை க்ளிக் செய்யவும்.
06:20 இதுவரைக்கும் நாம் வழங்கியுள்ள விவரங்களுடன் கூடிய ஒரு புதிய Virtual Machine baseஐ இது உருவாக்கும். இதற்கு சிறிது நேரம் எடுக்கலாம்.
06:31 Virtual Machine உருவா னவுடன், அதை நாம் இடது பக்கத்தில் காணலாம்.
06:37 நாம் தற்போது உருவாக்கிய, Virtual Machine, Ubuntu இதோ.
06:42 நாம், Virtual Machine அதாவது VMஐ வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம் என்பதை இது குறிக்கிறது.
06:49 அடுத்து, அதன் மேல், Ubuntu Linux 16.04ஐ நாம் நிறுவுவோம்.
06:55 முன்னிருப்பாக, Virtual Machine, Power off செயல்வகையில் இருக்கும்.
07:00 Virtual Machine, Ubuntu.ஐ தேர்ந்தெடுக்கவும். பின், மேலுள்ள, பச்சை நிற அம்பால் குறியிடப்பட்ட Start பட்டனை க்ளிக் செய்யவும்.
07:09 ஒரு புதிய window திறந்து, virtual optical disk fileஅல்லது optical driveஐ திறக்கச் சொல்லி கேட்கும். folder iconஐ கண்டறிந்து, அதை க்ளிக் செய்யவும்.
07:22 இப்போது, நாம் முன்பு தரவிறக்கிய ubuntu hyphen 16.04.5 hyphen desktop hyphen amd64.iso fileஐ கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும்.
07:37 பின், கீழுள்ள Open பட்டனை க்ளிக் செய்யவும்.
07:41 இப்போது, நாம் முந்தைய screenக்கு திரும்பி அனுப்பப்படுவோம். இப்போது, ubuntu hyphen 16.04.5 hyphen desktop hyphen amd64.iso தேர்ந்தெக்கப்பட்டிருப்பதை பார்க்கவும்.
07:56 நிறுவுதலைத் தொடங்க, கீழுள்ள Start பட்டனை க்ளிக் செய்யவும்.
08:02 இங்கு, Ubuntu Linux ஏறிக்கொண்டிருப்பதை நாம் காணலாம்.
08:07 நாம் பார்க்கின்ற முதல் திரை, மூன்று தேர்வுகளை கொண்டிருக்கும்.
08:11 இடது பக்கத்தில், மொழிகளின் ஒரு பட்டியலை நாம் காணலாம். உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்கவும்.
08:18 முன்னிருப்பாக, English தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். அத்தேர்வை நான் அப்படியே விட்டுவிடுகிறேன்.
08:25 நடுவில், நாம் இரண்டு தேர்வுகளை காணலாம், Try Ubuntu மற்றும் Install Ubuntu.
08:31 நிறுவுவதற்கு முன், Ubuntu பார்ப்பதற்கும், உணர்வதற்கும் எவ்வாறு இருக்கும் என நீங்கள் காண விரும்பினால், Try Ubuntuஐ க்ளிக் செய்யவும்.
08:38 இல்லையெனில், நேரடியாக Install Ubuntuஐ க்ளிக் செய்யவும். நான் Install Ubuntu. தேர்வை க்ளிக் செய்கிறேன்.
08:47 அடுத்த பக்கம் இரண்டு தேர்வுகளை காட்டுகிறது. Downloading update while installing Ubuntu, மற்றும் நிறுவுதலின் போது, Installing some third-party software.
09:00 நான் இவைகளை தவிர்த்து, கீழுள்ள Continue பட்டனை க்ளிக் செய்கிறேன்.
09:05 மூன்றாவது பக்கம், Ubuntu Linux நிறுவுதலின் போதுள்ள முக்கியமான படியாகும். இங்கு, Ubuntu Linuxஐ நாம் எங்கே நிறுவப்போகிறோம் என்று தீர்மானிக்க வேண்டும்.
09:18 Something else. VirtualBox இல்லாமல், நம் கணினியில் நேரடியாக Ubuntuவை நாம் நிறுவுவதாக இருந்தால், இது ஒரு நல்ல தேர்வாகும்.
09:28 இந்த தேர்வினால், நமது base machine.ல், ஒரு dual boot OSஐ நாம் வைத்துக்கொள்ளலாம்.
09:34 நான் ஒரு VirtualBoxல் பணி செய்து கொண்டிருப்பதால், நான் Erase disk and install Ubuntuஐ தேர்ந்தெடுக்கிறேன்.
09:41 இந்த தேர்வு, முழு Virtual hard diskஐயும் அழித்து Ubuntu OS ஐ, ஒரு ஒற்றை பிரிவினையாக நிறுவும்.
09:49 பின், கீழுள்ள Install Now பட்டனை க்ளிக் செய்யவும்.
09:53 Write the changes to the disks? எனக் கூறுகின்ற ஒரு pop-up window திறக்கிறது.
09:59 இங்கு, Continue பட்டனை க்ளிக் செய்யவும்.
10:03 அடுத்து வருகின்ற பக்கம்- Where are you?. நான் Indiaவில் உள்ளேன். அதனால் நான் Indiaவை க்ளிக் செய்கிறேன்.
10:11 கீழுள்ள text-box, Kolkata எனக் கூறுகிறது. நமது தேர்வைப்பொறுத்து, அது நேர மண்டலத்தை அமைக்கும்.
10:21 கீழுள்ள Continue பட்டனை க்ளிக் செய்யவும்.
10:24 இப்போது, நமது Keyboard layout.ஐ நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
10:28 முன்னிருப்பாக, English (US) இரண்டு பக்கங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
10:34 நீங்கள் மொழியை மாற்ற விரும்பினால், பின், விரும்பிய தேர்வை தேர்ந்தெடுக்கவும். நான் English (US).உடன் தொடருகிறேன்.
10:42 கீழுள்ள Continue பட்டனை க்ளிக் செய்யவும்.
10:46 இறுதிப்படி, login விவரங்களை வழங்குவதாகும். Your name fieldல், spoken. என நிரப்புகிறேன்.
10:55 உடனே, நமது inputஐ பொறுத்து, Computer’s name மற்றும் Pick a username fieldகள் தானாக நிரப்பப்படும். நீங்கள் விரும்பினால், இந்த மதிப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.
11:07 அடுத்து, Choose a password text-boxல், உங்களது Ubuntu Linux OSக்கான password ஐ டைப் செய்யவும். நான் spoken. என டைப் செய்கிறேன்.
11:18 Confirm your password text-boxல், அதே password ஐ மீண்டும் டைப் செய்யவும்.
11:24 இந்த Ubuntu Linux OS.க்கு, இது admin password ஆதலால், இந்த passwordஐ குறித்து வைத்துக்கொள்ளவும்.
11:32 Password textboxன் கீழ், மேலும் சில தேர்வுகளை நாம் காணலாம். நான் Require my password to login.ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
11:42 ஒவ்வொரு முறை அவன்/அவள் log in செய்யும் போது, user, password ஐ enter செய்ய, இது வற்புறுத்தும்.
11:49 நிறுவுதலைத் தொடர, Continueஐ க்ளிக் செய்யவும்.
11:53 நிறுவுதல் முடிவுபெற சிறிது நேரம் ஆகலாம்.
11:58 நிறுவுதல் முடிந்தவுடன், Installation Complete. எனக் கூறுகின்ற ஒரு dialog-boxஐ நாம் காணலாம்.
12:06 அந்த dialog boxல், Restart Now பட்டனை க்ளிக் செய்யவும்.
12:11 Ubuntu ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது எனக்கூறுகின்ற ஒரு திரை தோன்றும். நிறுவுதல் ஊடகத்தை நீக்க, Enterஐ அழுத்தச் சொல்லி, அது நம்மை தூண்டும்.
12:20 உதாரணத்திற்கு: CD/USB Stick போன்றவை. உங்களது keyboardல் Enterஐ அழுத்தவும்.
12:28 இது, இந்த Virtual Machine ஐ தொடக்கி, login page.க்கு நம்மை கொண்டு செல்லும்.
12:34 நிறுவுதலின் போது நாங்கள் கொடுத்த விவரங்களுடன் login செய்யவும்.
12:39 Ubuntu 16.04 Desktopக்கு நாம் கொண்டுவரப்பட்டுவிட்டோம். நிறுவுதலை நாம் வெற்றிகரமாக முடித்துவிட்டோம் என்பதை இது குறிக்கிறது.
12:49 Ubuntuவை மூட, வலது மேல் மூலையில் உள்ள power iconஐ க்ளிக் செய்யவும். மேலும், Shut Down தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
12:58 தோன்றுகின்ற popupல், பெரிய Shut Down பட்டனை க்ளிக் செய்யவும்.
13:04 உடனே, Ubuntu window மூடப்பட்டு, நாம் VirtualBox manager.க்கு திரும்பி விடுகிறோம்.
13:11 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச்சொல்ல,
13:16 இந்த டுடோரியலில் நாம் கற்றது: ஒரு VirtualBoxல் ஒரு Virtual Machineஐ உருவாக்குவது,
13:24 Virtual Machineல், Ubuntu Linux 16.04 ஐ நிறுவுவது.
13:30 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
13:38 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது.
13:50 உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும்.
13:54 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
14:06 ஸ்கிரிப்ட் மற்றும் காணொளி, NVLI மற்றும் ஸ்போகன் டுடோரியல் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயியிலிருந்து, நான்சி வர்கே. கலந்துகொண்டமைக்கு நன்றி.





Contributors and Content Editors

Jayashree, Nancyvarkey