Difference between revisions of "Scilab/C2/Xcos-Introduction/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border = 1 |'''Time''' |'''Narration''' |- |00:01 | ''' Xcos: Scilabக்கு இணைக்கப்பட்டObject Simulator''' குறித்த ஸ்ப...")
 
 
Line 301: Line 301:
 
|-
 
|-
 
|07:46
 
|07:46
| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org க்கு  மின்னஞ்சல் செய்யவும்.  
+
| மேலும் விவரங்களுக்கு contact@spoken hyphen tutorial dot org க்கு  மின்னஞ்சல் செய்யவும்.  
  
 
|-
 
|-

Latest revision as of 11:57, 16 August 2017

Time Narration
00:01 Xcos: Scilabக்கு இணைக்கப்பட்டObject Simulator குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 Xcos, dynamical systemகளை, simulate மற்றும் modeling செய்வதற்கான ஒரு Scilab package ஆகும். இதில், continuous மற்றும் discrete systemகள் இரண்டும் உள்ளடங்கும்.
00:17 இந்த டுடோரியலில், பின்வருவனவற்றை கற்போம். XCOS என்றால் என்ன. palette என்றால் என்ன, XCOSல் block diagramகளை கட்டுவது
00:26 Blockகளின் parameterகளை அமைப்பது, simulation parameterகளை அமைப்பது, constructசெய்யப்பட்டblock diagramகளை simulate செய்வது.
00:35 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணிணியில்Scilab நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
00:40 செயல் விளக்கத்திற்கு, நான் Ubuntu Linux 12.04 மற்றும் Scilab பதிப்பு 5.3.3ஐ பயன்படுத்துகிறேன்.
00:48 உங்கள் கணிணியில், Scilab console windowஐ திறக்கவும்.
00:52 Applicationsக்கு சென்று, Xcosஐ தேர்ந்தெடுக்கவும், அல்லது, உங்கள் Scilab console windowவில், xcos என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்.
01:02 இதைச் செய்வதால், இரண்டு windowக்கள் திறக்கும். அவை, Palette browser மற்றும் Untitled-Xcos window ஆகும்.
01:14 Palette browserல், வெவ்வேறு வகையான blockகளை காண்பீர்கள், Commonly Used Blocks
01:20 Continuous time system blocks , Discrete time systems blocks , மேலும் பல.
01:26 Untitled-Xcos, என்ற மற்றொரு window, gridகளுடன் வெற்று இடமாக இருக்கும்.
01:31 இப்போது, ஒரு first order systemஐ, step inputஉடன் simulate செய்வோம்.
01:36 தொடங்குவதற்கு, Continuous time systems paletteல் இருந்து, ஒரு transfer function blockஐ தேர்ந்தெடுக்கிறேன்.
01:43 இந்த blockஐ, Untitled-Xcos windowக்கு இழுக்கவும்.
01:48 Sources paletteல் தேவையான sourceஐ தேர்ந்தெடுக்கவும். நான் scroll down செய்து, STEP FUNCTION blockஐ பயன்படுத்துகிறேன்.
01:56 அதை இழுத்து, transfer function blockன் முன் வைக்கிறேன்.
02:01 இவ்வாறே, Sinks paletteல் இருக்கும், CSCOPE blockஐ பயன்படுத்தி, output, காட்டப்படுகிறது.
02:08 CSCOPE block, transfer function blockக்கு பிறகு வைக்கப்படுகிறது.
02:13 CSCOPEல் இருக்கும் சிவப்பு input port, இந்த block, ஒரு “event driven” block என குறிக்கிறது.
02:19 இதன் இயக்கத்திற்கு, ஒரு event input தேவை.
02:22 Event handling paletteல், ஒரு event generator block இருக்கிறது.
02:29 இந்த blockன் பெயர், Clock underscore c ஆகும்.
02:34 இந்த blockஐ இழுத்து, CSCOPE blockகிற்கு மேலே வைக்கவும்.
02:39 Simulationஐ செய்ய தேவையான எல்லா blockகளையும் நாம் சேகரித்து விட்டோம்.
02:44 இப்போது, எல்லா blockகளையும் ஒருங்கிணைப்போம்.
02:47 Step function blockன், output portஐ தேர்ந்தெடுத்து, transfer function blockன் input portக்கு இணைக்கவும்.
02:55 தேர்ந்தெடுக்கப்பட்டinput port, பச்சை நிறத்தில் முன்னிலைபடுத்தப்படுவதை கவனிக்கவும்.
03:00 இவ்வாறே, மீதமுள்ள blockகளை, காட்டப்பட்டுள்ளபடி, இணைக்கவும்.
03:05 இப்போது, ஒவ்வொரு blockன் parameterகளை set செய்வோம்.
03:10 முதலில், step blockக்கு சென்று, அதை டபுள்-க்ளிக் செய்யவும்.
03:14 Step Time, Initial Value மற்றும் Final Valueஐ கேட்கின்ற ஒரு pop up window தோன்றுகிறது.
03:23 Step change ஏற்படும் நேரமே, Step Time ஆகும். அதற்கு, அதன் முன்னிருப்பு மதிப்பான 1 ஐ வைப்போம்.
03:32 Initial Value என்பது step functionனின், initial outputன் மதிப்பு ஆகும்.
03:37 அதற்கு, அதன் முன்னிருப்பு மதிப்பான 0 ஐ வைப்போம்.
03:41 Step Time முடிந்தவுடன் கிடைக்கும், step functionனின் output, Final Value ஆகும். அதை, 2ற்கு மாற்றுவோம்.
03:50 OKஐ க்ளிக் செய்யவும்.
03:52 வேறு ஏதேனும் blockஐ configure செய்ய, இதே செயல்முறையை பின்பற்றவும்.
03:56 Transfer function blockக்கு, பின்வரும் configuration தேவைப்படுகிறது. Laplace domainனின் Numerator மதிப்பு enter செய்யப்பட வேண்டும்.
04:05 அதன் முன்னிருப்பு மதிப்பான 1 ஐ வைப்போம்.
04:09 Laplace domainனின் Denominator மதிப்பு enter செய்யப்பட வேண்டும். அதை, 2 asteric s plus 1க்கு மாற்றுவோம். OKஐ க்ளிக் செய்யவும்.
04:20 பின்வரும் parameterகளை configure செய்ய, CSCOPE blockஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
04:25 Ymin மற்றும் Ymaxன் மதிப்பு, plot செய்யப்பட வேண்டிய, variableஉடைய மதிப்பின் வரம்பை பொறுத்து அமைக்கப்பட வேண்டும்.
04:34 Ymin மதிப்பை, 0க்கு அமைக்கவும்.
04:38 Step inputஐ 2 என நான் கொடுத்துள்ளதால், Outputஐ, graphல் காட்ட, Ymax, ஏதேனும் உயரிய மதிப்புக்கு நான் மாற்ற வேண்டும்.
04:46 அதை, 3க்கு மாற்றுவோம்.
04:50 Refresh periodன் முன்னிருப்பு மதிப்பை, மனதில் குறித்துக் கொள்ளவும். முன்னிருப்பான மதிப்பு, 30 ஆகும்.
04:57 மற்ற parameterகளை மாற்றாமல் வைத்திருப்போம். OKஐ க்ளிக் செய்யவும்.
05:02 Menu barல் இருக்கும் Simulationக்கு சென்று, Setupஐ க்ளிக் செய்யவும்.
05:08 ஒரு pop up window தோன்றுகிறது.
05:11 Final integration timeன் மதிப்பை, நாம் மாற்றுவோம். Simulation run செய்யப் போகும் கால அவகாசத்தை, Final integration time தீர்மானிக்கிறது.
05:20 CSCOPE blockனுடைய, refresh periodன் மதிப்பை நினைவு கூறவும்.
05:24 Final integration timeன் மதிப்பை, CSCOPE blockனுடைய, refresh periodன் மதிப்புக்கு சமமாக வைத்திருக்கப் போகிறேன்.
05:30 அதனால், அதை 30க்கு மாற்றுகிறேன்.
05:34 மற்ற parameterகளை மாற்றாமல் வைத்திருக்கவும். OKஐ க்ளிக் செய்யவும்.
05:39 தகுந்த file பெயரை கொடுத்து, Control Sஐ அழுத்தி, அதை சேமிக்கவும். நான் அதை, firstorder.xcos என சேமிக்கிறேன்.
05:50 Simulationஐ தொடங்க, Xcos windowவின், Menu barல் இருக்கும் Start பட்டனை க்ளிக் செய்யவும்.
05:58 முதல் order transfer function.னின், step responseஐ காட்டும் Graphic window ஒன்று திறக்கும்.
06:04 இந்த plotஐ, ஒரு image fileஆக நாம் சேமிக்கலாம்.
06:06 Graphஐ சேமிக்க, File menuக்கு சென்று, Export to optionஐ க்ளிக் செய்யவும்.
06:12 அதற்கு firstorder.png என பெயரிட்டு, OKஐ க்ளிக் செய்கிறேன்.
06:20 முன்னிருப்பு மதிப்பாக வைத்திருக்க , நாம் குறிப்பிட்ட parameterகளை தேர்வு செய்தோம். இவைகளை மாற்றலாம்.
06:26 உதாரணத்திற்கு, Clock underscore c blockல், sampling period என்று பொருள்படும் periodஐயும், initial timeஐயும் set செய்யலாம்.
06:36 CSCOPE blockல், output window number
06:40 position, size, buffer size , graph color ஆகியவற்றையும் நாம் set செய்யலாம்.
06:46 வீடியோவை இங்கு இடைநிறுத்தி, வீடியோவுடன் கொடுக்கப்பட்ட பயிற்சியை தீர்க்கவும்.
06:52 Damping ratio, 0.5ஆகவும், angular frequency, 1க்கு சமமாகவும் கூடிய ஒரு second order transfer functionஐ simulate செய்யவும்.
07:01 Output graphன் நிறத்தை மாற்ற முயற்சிக்கவும்.
07:04 முதல் பயிற்சியை பயன்படுத்தி, Step input மற்றும் outputஐ, ஒரு single plot windowவில் plot செய்யவும்.
07:11 இப்போது, சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது: palette browserஐ பயன்படுத்தி, Xcos simulation diagramகளை உருவாக்குவது
07:18 Simulation தேவைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு blockஐயும் configure செய்வது
07:22 Simulation parameterகளை setup செய்வது. Output plotஐ சேமிப்பது.
07:26 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
07:37 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
07:46 மேலும் விவரங்களுக்கு contact@spoken hyphen tutorial dot org க்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:52 ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
08:02 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்: spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:12 இந்த டுடோரியல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்ற நம்புகிறேன். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree