PHP-and-MySQL/C2/XAMPP-in-Linux/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:14, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். லினக்ஸில் XAMPPஐ நிறுவுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது: எவ்வாறு லினக்ஸ்ல் XAMPPஐ நிறுவுதல், எவ்வாறு ஒரு php fileஐ உருவாக்கி இயக்குதல்.
00:18 இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் 14.04, FireFox Web Browser மற்றும் Gedit Text editor.
00:32 XAMPPஐ நிறுவ உங்களிடம் இணைய இணைப்பு மற்றும் உங்கள் கணினிக்கான Admin அனுமதி இருக்க வேண்டும்.
00:41 உங்களுக்கு Linux commandகள் பற்றிய அடிப்படை அறிவும் இருக்க வேண்டும். இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும்.
00:52 XAMPP ஒரு இலவச Open source web server package ஆகும்.
00:58 XAMPP ல் இருப்பவை: Apache HTTP Server, MySQL database, PHP மற்றும் Perl ல் எழுதப்பட்ட scriptகளுக்காக Interpreterகள்.
01:12 XAMPP நிறுவ சுலபமானது. GNU/Linux, Mac, Windows மற்றும் Solaris இயங்குதளங்களுக்குக் கிடைக்கிறது
01:23 லினக்ஸ்-க்கான XAMPPஐ தரவிறக்குவோம்.
01:27 உங்கள் கணினியில் web browser ஐ திறக்கவும்.
01:31 Address bar ல் டைப் செய்க: https://www.apachefriends.org/download.html பின் Enterஐ அழுத்துக.
01:44 இந்த பக்கத்தில் கீழே வரவும்.
01:47 இங்கே அனைத்து இயங்குதளத்தளத்திற்கும் XAMPP தரவிறக்க கிடைக்கிறது.
01:53 XAMPP for Linux பகுதிக்கு செல்லவும். Xamppன் சமீபத்திய பதிப்பைக் காணலாம்.
02:01 என் கணினி 64bit இயங்குதளத்தைக் கொண்டது. எனவே PHP 5.5.19,
02:11 Download (64 bit)ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
02:15 தரவிறக்கம் ஆரம்பிக்கும்.
02:18 என் Downloads folderல் ஏற்கனவே இந்த file ஐ தரவிறக்கிவிட்டேன்.
02:24 எனவே, இந்த தரவிற்க்க படியைத் தவிர்க்கிறேன்.
02:28 இப்போது terminalஐ திறக்கிறேன்.
02:31 terminalல் டைப் செய்க cd space Downloads Enterஐ அழுத்துக.
02:40 இது நடப்பு directoryஐ Downloadsக்கு மாற்றும்.
02:46 இப்போது டைப் செய்க ls பின் Enterஐ அழுத்துக.
02:51 இது Downloads folderன் உள்ளடக்கத்தைக் காட்டுகிறது.
02:56 இங்கே நம் XAMPP installation file உள்ளது.
03:00 இந்த file க்கு executable permissionஐ கொடுப்போம்
03:04 இதனால் இந்தfileஐ இயக்கமுடியும். டைப் செய்க: chmod space +x space fileபெயர் Enterஐ அழுத்துக.
03:18 இப்போது fileஐ இயக்க டைப் செய்க: sudo space dot slash (./) fileபெயர் Enterஐ அழுத்துக.
03:29 தேவையெனில் admin passwordஐ கொடுக்கவும்.
03:34 Setup wizard dialog box திறக்கிறது.
03:38 தேவைப்படும்போதெல்லாம் Next buttonஐ அழுத்தி காட்டப்படுவதுபோல நிறுவல் படிகளை பின்பற்றவும்.
03:46 Learn more about Bitnami for XAMPP check boxல் குறிநீக்கவும்.
03:52 Nextல் க்ளிக் செய்க.
03:54 நிறுவிய பின், Launch XAMPP check box ஐ குறிநீக்கி பின் Finishல் க்ளிக் செய்க.
04:04 நிறுவிய பின் கணினியின் opt folderல் lampp folder ஐ உருவாக்கப்படும்.
04:12 அந்த folderக்கு சென்று அதை காண்போம்.
04:15 இடப்பக்கம் launcherல் உள்ள Files folder iconஐ க்ளிக் செய்க.
04:21 இடப்பக்க panelல், Devices பகுதியில், Computerஐ க்ளிக் செய்க.
04:29 இங்கே system fileகளை காணலாம். opt folder ஐ டபுள் க்ளிக் செய்து திறக்கவும்.
04:38 இங்கே lampp folder உள்ளது. அந்த folderஐ திறக்கவும்.
04:44 இங்கே சில துணை-folderகளைக் காணலாம்.
04:48 htdocs என்ற folder க்கு செல்லவும்.
04:53 இது தான் நம் Web server Appache ன் root directory ஆகும்.
04:58 நம் PHP code fileஐ இயக்க அதை இந்த folder ன் உள் சேமிக்க வேண்டும்.
05:05 Apacheன் root directory /opt/lampp/htdocs அல்லது /var/www, இது உங்கள் நிறுவல் செயல்பாட்டைப் பொருத்தது.
05:24 htdocs folder ஐ writable ஆக மாற்ற, permissionஐ மாற்ற வேண்டும்.
05:30 எனவே terminalல் டைப் செய்க: sudo chmod 777 -R /opt/lampp/htdocs பின் Enterஐ அழுத்துக.
05:56 தேவையெனில் admin password ஐ கொடுக்கவும்.
06:00 இப்போது Xampp இயங்கிகொண்டிருக்கிறதா இல்லையா என சோதிப்போம்.
06:04 web browserஐ திறக்கவும். Address barல் டைப் செய் localhost பின் Enterஐ அழுத்துக.
06:15 இது காட்டுவது “Unable to connect”.
06:20 எனவே Xampp serviceகள் இயங்கவில்லை.
06:23 அந்த serviceகளை துவக்க, terminalல் டைப் செய்க: sudo /opt/lampp/lampp start பின் Enterஐ அழுத்துக.
06:40 தேவையெனில் admin password ஐ கொடுக்கவும்.
06:44 இது அனைத்து Xampp serviceகளையும் துவக்கும்.
06:47 web browserக்கு திரும்ப வந்து pageஐ refresh செய்யவும்.
06:52 இதோ வந்துவிட்டது! Xamppன் வரவேற்பு செய்தி.
06:56 இது default languageஐ தேர்ந்தெடுக்க சொல்கிறது. நான் Englishஐ தேர்ந்தெடுக்கிறேன்.
07:03 Xampp இப்போது நன்றாக இயங்குகிறது.
07:06 ஒரு உதாரண php code ஐ எழுதி அதை run செய்வோம்.
07:11 htdocsல், phpacademy என்ற ஒரு folderஐ உருவாக்குவோம்.
07:16 பின்னர், என் அனைத்து php fileகளையும் இந்த folderல் சேமிப்பேன்.
07:23 என் fileகள் மற்றவரால் மேல்-எழுதப்படாமல் தவிர்ப்பதை உறுதிசெய்வதற்காக.
07:30 phpacademy folderஐ திறக்கவும். ஒரு php fileஐ உருவாக்குவோம்.
07:37 ரைட் க்ளிக் செய்து New Document பின் Empty documentஐ தேர்ந்தெடுக்கவும். அதற்கு demo.php என பெயரிடவும்.
07:48 demo.phpGedit text editorல் திறக்கவும்.
07:53 உங்களுக்கு விருப்பமான எந்த editorஐயும் பயன்படுத்தலாம்.
07:59 டைப் செய்க: less than question mark php enterஐ அழுத்துக echo space இரட்டை மேற்கோள்களில் "Hello India” semicolon enter ஐ அழுத்துக question mark greater than
08:20 இந்த fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக.
08:27 web browserக்கு மீண்டும் வரவும்.
08:29 address barல், டைப் செய்க: localhost/phpacademy பின் Enterஐ அழுத்துக.
08:40 இதுphpacademy folderனுள் உள்ள fileகளின் பட்டியலைக் காட்டும்.
08:47 இது நம் file demo.php; அதை க்ளிக் செய்க.
08:53 Hello India என்ற செய்தி காட்டப்படுகிறது.
08:57 Xampp serviceகளை நிறுத்த, terminalல் டைப் செய்க: sudo /opt/lampp/lampp stop பின் Enterஐ அழுத்துக.
09:13 தேவையெனில் admin passwordஐ கொடுக்கவும்.
09:17 XAMPP serviceகளின் இயக்கம் நிறுத்தப்படும். பின்னர் Xampp ஐ மீண்டும் எப்போது இயக்க விரும்பினாலும், அதை முதலில் துவக்க மறக்காதீர்.
09:27 சுருங்கசொல்ல. இந்த டுடோரியலில் நாம் கற்றது- XAMPP serviceகளை நிறுவுதல், துவக்குதல் மற்றும் நிறுத்துதல். PHP fileஐ உருவாக்கி இயக்குதல்.
09:45 இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
09:55 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:06 இந்த திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:13 மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
10:19 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst