PERL/C3/Access-Modifiers-in-PERL/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:28, 28 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 PERLல் access modifierகள் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Variableகளின் scope, Private variableகள், Dynamically scoped variableகள் மற்றும் Global variableகள்
00:19 இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04 இயங்கு தளம், Perl 5.14.2 மற்றும் gedit Text Editor.
00:32 உங்களுக்கு விருப்பமான எந்த text editorயும் பயன்படுத்தலாம்.
00:36 இதற்கு அடிப்படைPerl programming தெரிந்து இருக்க வேண்டும்.
00:40 இல்லையெனில், அதற்கானPerl டுடோரியல்களை spoken tutorial இணையத்தளத்தில் காணவும்.
00:47 Variableகளின் scope பற்றிய அறிமுகத்துடன் தொடங்குவோம்.
00:51 Variableன், scope என்பது, அதனை அணுகக்கூடிய codeன் எல்லை ஆகும்.
00:58 வேறு விதமாக கூற, அது variableகளின் visibilityஐ குறிக்கிறது.
01:03 முதலில், Perlலில், my, local மற்றும் our modifierகள் பற்றி விவாதிப்போம்.
01:10 My என்பது Private variables,
01:13 Local என்பது Dynamically scoped variables,
01:17 Our என்பது Global variables.
01:20 My keywordஉடன் declare செய்யப்பட்ட variableகள், தாங்கள் declare செய்யப்பட்டblockக்கு வெளியே தங்கள் தன்மையை இழந்துவிடும்.
01:28 ஒரு variableக்கு மதிப்பு கொடுக்காமல், இவ்வாறு அதை declare செய்ய முடியும்: my $fvalue semicolon
01:37 ஒரு variableக்கு மதிப்பை இவ்வாறு ஒதுக்குவதன் மூலமும், அதை declare செய்ய முடியும்:
01:43 my $fValue = 1 semicolon
01:48 my $fname = இரட்டை மேற்கோள்களுக்குள் Rahul semicolon
01:55 அதே my statementஐ வைத்து, பல variableகளை declare செய்வதற்கான syntax பின்வருமாறு:
02:02 my அடைப்புக்குறி திறக்கவும்$fname கமா $lname கமா $age அடைப்புக்குறி மூடவும் semicolon
02:12 ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி, private variableகளை புரிந்து கொள்வோம்.
02:17 ஒரு மாதிரி program என்னிடம் ஏற்கெனவே உள்ளது. அதை, 'gedit' Text editorல் திறக்கிறேன்.
02:24 Terminalஐ திறந்து, டைப் செய்க: gedit scope hyphen my dot pl ampersand , பின்Enterஐ அழுத்தவும்.
02:34 Geditல், Scope-my dot pl file திறக்கப்படும்.
02:39 திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். அதை இப்போது விளக்குகிறேன்.
02:46 இங்கு, private variableஆன, $fnameஐ, 'my' keywordஉடன், நான் declare செய்துள்ளேன்.
02:52 மேலும், அதற்கு, "Raghu" என்ற மதிப்பை ஒதுக்கியுள்ளேன்.
02:56 இந்த blockன் உள், fname variableன், மதிப்பான, "Raghu"ஐ, print statement print செய்யும்.
03:04 அடுத்த blockன் உள், அதே private variableஆன, $fnameக்கு, Other என்ற மதிப்பை ஒதுக்கியுள்ளேன்.
03:11 அதனால், இந்த குறிப்பிட்ட blockன் உள், print statement , "Other"ஐ print செய்யும்.
03:17 இந்த programன் கடைசி print statement, எந்த outputஐயும் print செய்யாது.
03:23 இது ஏனெனில், முன்பே கூறியது போல், blockகுகளின் scopeக்கு வெளியே, fname க்கு மதிப்பு ஒதுக்கப்படவில்லை.
03:32 இப்போது fileஐ சேமிக்க, Ctrl+Sஐ அழுத்தவும்.
03:37 இப்போது, programஐ இயக்குவோம்.
03:40 Terminalலுக்கு திரும்பி, டைப் செய்க: perl scope hyphen my dot pl , பின்Enterஐ அழுத்தவும்.
03:49 பின்வருமாறு output தெரியும்: "Block 1: Raghu" "Block 2: Other" "Outside Block: " output இல்லை.
03:59 ஆதலால், codeன் ஒரு குறிப்பிட்ட blockன் உள் மட்டுமே, 'my' variable ன் scopeஐ அணுகமுடிகிறது.
04:06 இப்போது, ஏற்கெனவே உள்ள programஐ சிறிது மாற்றுவோம்.
04:10 Blockகுகளுக்கு வெளியே, கடைசி print statementக்கு முன், my $fname = இரட்டை மேற்கோள்களுக்குள் John semicolon என்பதை சேர்ப்போம். மாற்றங்களை சேமிக்கவும்.
04:23 Terminalலுக்கு திரும்பி, முன்பு போல், programஐ இயக்குவோம்.
04:28 காட்டப்படும் outputஐ ஆய்வு செய்யவும்.
04:32 ஒரு blockன் உள், மற்றும் அதன் வெளியே, 'my' variableஐ பயன்படுத்துவதனால் கிடைக்கும் scopeஐ நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
04:41 அடுத்து, Perlலில், dynamically scoped variable பற்றி காண்போம்.
04:47 Global variableக்கு, Local keyword, ஒரு தற்காலிக scopeஐ தருகிறது.
04:52 அசல் blockல் இருந்து call செய்யப்படும் எந்த functionகும், variable தெரியும்.
04:58 ஒரு local variableஐ பின்வருமாறு declare செய்யலாம்: local $fValue = 100 semicolon local $fname = இரட்டை மேற்கோள்களுக்குள் "Rakesh" semicolon
05:13 ஒரு மாதிரி programஐ பயன்படுத்தி, இதைப் புரிந்து கொள்வோம்.
05:17 Terminalலுக்கு திரும்பி வந்து, டைப் செய்க: gedit scope hyphen local dot pl ampersand, பின்Enterஐ அழுத்தவும்.
05:27 இது, scope hyphen local dot pl fileஐ, geditல் திறக்கும்.
05:33 திரையில் தெரியும் பின்வரும் codeஐ டைப் செய்யவும். அதை இப்போது விளக்குகிறேன்.
05:40 இங்கு, முதல் வரியில், $fname variableஐ declare செய்து, அதை initialize செய்துள்ளோம்.
05:47 Welcome() functionன் உள், $fname என்ற அதே பெயரைக் கொண்ட ஒரு local variableஐ declare செய்துள்ளோம்.
05:54 Variable பெயருக்கு முன் உள்ள, local keywordஐ கவனிக்கவும்.
05:59 மேலும், "Rakesh" என்ற மதிப்பை, இந்த variableக்கு ஒதுக்கியுள்ளோம்.
06:03 அதனால், அடிப்படையில், Welcome() functionன் உள், $fname , ஒரு புது தற்காலிக, local variableஆக மாற்றப்படுகிறது. பின், Hello() function, call செய்யப்படுகிறது.
06:15 இதுவே, Hello() functionனின் definition ஆகும்.
06:18 Programன் முடிவில், Welcome() மற்றும் Hello() functionகளை call செய்கிறோம்.
06:25 Programஐ சேமிக்க, Ctrl + Sஐ அழுத்தவும்.
06:29 Programஐ இயக்குவோம்.
06:31 Terminalலுக்கு திரும்பி, டைப் செய்க: perl scope hyphen local.pl, பின்Enterஐ அழுத்தவும்.
06:41 பின்வருமாறு output தெரியும்: Hello, Rakesh"! "Hello, Welcome to Spoken tutorials!"
06:48 Outputஐ புரிந்து கொள்வோம்.
06:51 Welcome() function call செய்யப்படும் போது, அதனுள் இருக்கும்Hello() function, local variableஐ அணுகும்.
06:59 Welcome()ன் உள், $fnameன் மதிப்பு, "Rakesh" ஆகும்.
07:04 அதன் பிறகு, Hello() function, $fname variableஐ மீண்டும் அணுகுகிறது.
07:11 ஆனால், இம்முறை, அது, "Welcome to spoken tutorials"க்கு, initialize செய்யப்பட்ட, $fname variable ஆகும்
07:19 Welcome() functionன் உள் இருக்கும், $fname local variableஐ, அதை அணுகாது.
07:25 அதாவது, Welcome() blockஐ விட்டுச் சென்ற பிறகு, local variable, scopeஐ மீட்கிறது என்று பொருள்.
07:32 அடுத்து, Perlல், global variableகள் பற்றி கற்போம்.
07:38 Programன் எவ்விடத்திலும், ஒரு global variable ஐ அணுகலாம்.
07:43 Global variableகள், 'our' keywordஉடன் declare செய்யப்படுகின்றன.
07:47 இதோ, சில உதாரணங்கள். our $fvalue = 100 semicolon </nowiki> our $fname = இரட்டை மேற்கோள்களில் Priya semicolon
08:01 இப்போது, global variableகளின், ஒரு உதாரணத்தை காணலாம்.
08:06 Terminalலுக்கு திரும்பி, டைப் செய்க: gedit scope hyphen our dot pl ampersand, பின்Enterஐ அழுத்தவும்.
08:16 இது, scope hyphen our.pl fileஐ, geditல் திறக்கும்.
08:22 நான் எழுதிய, மாதிரி programஐ இப்போது விளக்குகிறேன்.
08:27 Package main , மற்றும் ஒரு global variableஐ, our $i என declare செய்து, அதை, 100க்கு intialize செய்துள்ளேன்.
08:37 package First declarationஐ கவனிக்கவும்.
08:40 Package என்பது, தன் சொந்த namespaceஐ கொண்ட, codeன் ஒரு தொகுப்பு ஆகும்.
08:46 Packageகளின் இடையே நேரும், variable name collisionகளை, Namespace தடுக்கிறது.
08:51 பின்வரும் டுடோரியல்களில், package மற்றும் namespaceஐ பற்றி மேலும் அறியலாம்.
08:56 Package Firstன் உள், global variable "i"ன் மதிப்பு, 10 ஆகும்.
09:02 Package Secondல், global variable "i"க்கு, மதிப்பு, 20 என ஒதுக்கப்படுகிறது.
09:08 Package First variable மற்றும் package Second variable, இரண்டையுமே, main package பயன்படுத்துகிறது.
09:15 என் programல், எல்லா packageகளிலும், அதே variableஆன iஐ declare செய்துள்ளேன்.
09:21 Package variable, package name colon colon variable nameஆல் குறிப்பிடப்படுகிறது.
09:29 நம் உதாரணத்தில், அது $First colon colon i, $Second colon colon i ஆகும்.
09:39 நம்மிடம், ஒரே fileலினுள், பல packageகள் உள்ளன. மேலும், எல்லா packageகளும், global variableஐ அணுகும்.
09:47 இப்போது, fileஐ சேமித்து, programஐ இயக்கவும்.
09:51 அதனால், Terminalலுக்கு திரும்பி, டைப் செய்க: perl scope hyphen our dot pl, பின்Enterஐ அழுத்தவும்.
09:59 Terminalலில், output காட்டப்படுகிறது.
10:03 Variable i க்கு, எவ்வாறு மதிப்பு ஒதுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள, நீங்களே outputஐ ஆய்வு செய்யுங்கள்.
10:11 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கசொல்ல,
10:16 இந்த டுடோரியலில் நாம் கற்றது: உதாரணங்களுடன் Variableகளின் scope, Private variableகளின் declaration, Dynamically scoped variableகள் மற்றும் உதாரணங்களுடன் Global variableகள்.
10:29 Compilation வேகமாக இருக்க, localக்கு பதிலாக, 'my'ஐ பயன்படுத்துவது, சிறந்தது.
10:35 இங்கே உங்களுக்கான பயிற்சி.
10:37 பின்வரும் assignmentக்கு, codeஐ எழுதி, அதை இயக்கவும்.
10:42 ஒரு packageஐ, FirstModule என declare செய்யவும்.
10:46 $age என்ற ஒரு variableஐ, our என declare செய்து, அதற்கு, 42 என்ற மதிப்பை ஒதுக்கவும்.
10:52 மற்றொரு packageஐ, SecondModule என declare செய்யவும்.
10:56 ஒரு variable $agewordஐ our என declare செய்து அதற்கு மதிப்பு இரட்டை மேற்கோள்களில் "Forty-Two"ஐ assign செய்யவும்.
11:05 First() என்ற subroutineஐ declare செய்யவும்.
11:08 Subroutine உள், கீழ்கண்டவாறு, local மற்றும் my keywordஐ வைத்து, இரண்டு variableகளை declare செய்யவும்.
11:16 local $age = 52 semicolon
11:20 my $ageword = இரட்டை மேற்கோள்களுக்குள் Fifty-two semicolon
11:27 மற்றொரு routineஐ, Result() என அழைக்கவும்.
11:31 இந்த functionனின் உள், $age மற்றும் $agewordன் மதிப்புகளை printசெய்யவும்.
11:37 Subroutineஐ முடிக்கவும்.
11:39 Result() subroutineஐ declare செய்யவும்.
11:42 மீண்டும், $age மற்றும் $agewordன் மதிப்புகளை printசெய்யவும்.
11:47 Subroutineஐ முடிக்கவும்.
11:49 First() functionஐ call செய்யவும்.
11:51 Package First மற்றும் Package Secondஐ , கீழ்கண்டவாறு print செய்யவும்.
11:57 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:05 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:18 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்.
12:31 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst