PERL/C2/Variables-in-Perl/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:50, 3 August 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time
Narration
00.01 Perl ல் variableகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00.06 இந்த டுடோரியலில், Perl ல் Variableகள் குறித்துக் கற்போம்
00.12 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும்
00.18 Perl 5.14.2 அதாவது, Perl தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2
00.26 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00.30 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00.34 Perl ல் Variableகள்:
00.37 Variableகள் பின்வருவது போன்ற மதிப்புகளை சேமிக்க பயன்படுகின்றன

text stringகள், எண்கள் அல்லது arrayகள்

00.44 ஒரு variable declare செய்யப்பட்ட பின், அது script ல் திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும்.
00.50 Scalar என்பது ஒரே மதிப்பைக் குறிக்கிறது. அது scalarகளை மட்டும் சேமிக்கும்.
00.56 Scalar variableகள் $ (dollar) குறி மூலம் declare செய்யப்படுகின்றன.
01.00 Variable ஐ Declare செய்வதைக் காண்போம்:
01.03 ஒரு variable பின்வருமாறு declare செய்யப்படுகிறது: dollar priority semicolon


01.09 Perl ல் Variable பெயர்கள் பல்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கலாம். Variableகள் ஒரு எழுத்து அல்லது underscore உடன் ஆரம்பிக்க வேண்டும்
01.18 எழுத்துகள், எண்கள், underscoreகள் அல்லது இவை மூன்றின் கலவையாகவோ இது இருக்கலாம்.
01.24 பெரிய எழுத்துகளில் declare செய்யப்பட்ட Variableகள் Perl ல் சிறப்பு பொருளைக் கொண்டிருக்கும்
01.30 எனவே variableகளை பெரிய எழுத்துக்களில் declare செய்வதை தவிர்க்கவும்.
01.34 இப்போது டெர்மினலை திறந்து டைப் செய்க gedit variables dot pl ampersand


01.44 ampersand... டெர்மினலில் command prompt ஐ விடுவிக்கும். இப்போது எண்டரை அழுத்தவும்.
01.50 இது gedit text editor ல் variables.pl file ஐ திறக்கும்.
01.56 dot pl ஆனது Perl file க்கான முன்னிருப்பு extension ஆகும்.
02.01 பின்வருவதை file ல் டைப் செய்க; dollar priority semicolon எண்டரை அழுத்துக.
02.10 எனவே variable priority ஐ declare செய்துள்ளோம்.
02.13 ஒரு variable ஐ பயன்படுத்தும் முன் அதை declare செய்ய வேண்டியது இல்லை;
02.18 அதை code னுள் நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம்.
02.21 இப்போது variable priority க்கு ஒரு எண் மதிப்பை assign செய்யலாம்.
02.25 அதற்கு டைப் செய்க dollar priority space equal to space ஒன்று semicolon
02.32 எண்டரை அழுத்துக.
02.34 அடுத்து டைப் செய்க
02.36 print space இரட்டை மேற்கோள்களில் Value of variable is: dollar priority slash n semicolon எண்டரை அழுத்துக
02.50 slash n என்பது புது வரிக்கான character.
02.53 இப்போது இந்த file ஐ variables.pl என எங்கேனும் சேமிக்கவும்.
03.02 நான் இதை home/amol directory ல் சேமிக்கிறேன். இந்த file ஐ சேமிக்கிறேன்
03.10 நாம் இப்போது உருவாக்கிய variables.pl file ன் உரிமைகளை இப்போது மாற்றுவோம்
03.18 அதற்கு டெர்மினலில் டைப் செய்க, chmod 755 variables dot pl
03.27 இது file க்கு read, write மற்றும் execute உரிமைகளை கொடுக்கும்.
03.32 இந்த Perl script ஐ compile செய்ய,
03.36 டெர்மினிலில் டைப் செய்க;perl hyphen c variables dot pl
03.42 Hyphen c switch ஏதேனும் compilation அல்லது syntax பிழைக்காக Perl script ஐ compile செய்கிறது.
03.49 எண்டரை அழுத்துக
03.51 நம் script ல் syntax பிழை ஏதும் இல்லை என இது சொல்கிறது.
03.56 இப்போது இந்த Perl script ஐ இயக்கலாம்.

டைப் செய்க perl variables dot pl

எண்டரை அழுத்துக.
04.06 முன்னிலைப்படுத்தப்பட்டது போல வெளியீடு காட்டப்படுகிறது.
04.10 நாம் declare செய்த variable க்கு ஒரு string மதிப்பையும் assign செய்யலாம்.
04.15 Text editor window க்கு மீண்டும் வருவோம்.
04.18 dollar priority equal to ஒன்று; க்கு பதிலாக டைப் செய்க
04.22 dollar priority equal to ஒற்றை மேற்கோள்களில் high
04.28 assignmentகள் வலமிருந்து இடமாக மதிப்பிடப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
04.34 ஒரு scalar எந்த வகை data ஐயும் கொண்டிருக்கலாம். ஒரு string அல்லது ஒரு எண்
04.38 இந்த file ஐ சேமித்து script ஐ மீண்டும் compile செய்யலாம்


04.45 perl hyphen c variables dot pl
எண்டரை அழுத்துக.
04.51 இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது.


04.55 script ஐ இயக்க டைப் செய்க perl variables dot pl
எண்டரை அழுத்துக.
05.03 வெளியீடு காட்டப்படுகிறது.
05.07 இப்போது Text Editor window க்கு மீண்டும் வருவோம்.


05.10 இரட்டை மேற்கோள்களில் strings என நாம் scalar களையும் பயன்படுத்தலாம்.
05.15 dollar priority = இரட்டை மேற்கோள்களில் String


05.19 இந்த file ஐ சேமித்து மூடவும்.
05.22 பல்வேறு variableகளை எவ்வாறு declare செய்வது என காண்போம்.
05.27 அதை செய்ய Text Editor ல் ஒரு புது file ஐ திறக்கவும்.
05.31 டெர்மினிலில் டைப் செய்க- gedit multivar dot pl space ampersand
எண்டரை அழுத்துக.
05.42 இது multivar dot pl file ஐ text editor ல் திறக்கும்
05.48 டைப் செய்க -
05.50 dollar firstVar comma dollar secondVar semicolon

எண்டரை அழுத்துக.

06.00 variable ன் மதிப்பை dollar firstVar லிருந்து dollar secondVar க்கு பிரதி எடுக்க, டைப் செய்க -
06.07 dollar firstVar space equal to space dollar secondVar semicolon

எண்டரை அழுத்துக.

06.19 கணித செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல் போன்ற அனைத்தையும் இந்த variableகள் மூலம் செய்யலாம்
06.30 Perl ஐ பயன்படுத்தி எவ்வாறு இவற்றை செய்யலாம் என காண்போம்.
06.34 text editor க்கு வருவோம்.
06.36 இப்போது இந்த இரு variableகளுக்கும் மதிப்பு 10 ஐ assign செய்வோம்,
06.41 dollar firstVar equal to dollar secondVar equal to பத்து semicolon எண்டரை அழுத்துக.
06.51 இப்போது இந்த மதிப்புகளை அச்சடிக்க டைப் செய்க
06.55 print இரட்டை மேற்கோள்களில் firstVar: dollar firstVar and secondVar: dollar secondVar slash n semicolon
எண்டரை அழுத்துக.
07.17 file ஐ சேமிப்போம்.
07.19 இப்போது இரு variableகளில் உள்ள மதிப்புகளையும் சேர்ப்போம்.
07.23 அதற்கு டைப் செய்க
07.25 dollar addition space equal to space dollar firstVar plus space dollar secondVar semicolon
எண்டரை அழுத்துக.
07.43 variable addition ஐ நாம் ஏற்கனவே declare செய்யவில்லை என்பதை கவனிக்கவும்.
07.47 மீண்டும் variable addition ன் மதிப்பை அச்சடிக்க, டைப் செய்க
07.53 print இரட்டை மேற்கோள்களில் Addition is dollar addition slash n semicolon
08.05 file ஐ சேமிப்போம்
08.07 இந்த file ஐ compile செய்ய டெர்மினலில் டைப் செய்க
08.12 perl hyphen c multivar dot pl
08.18 syntax பிழை ஏதும் இல்லை எனவே script ஐ இயக்கலாம்...
08.24 டைப் செய்க perl multivar dot pl
08.30 காட்டுவது போல இது ஒரு வெளியீட்டைக் கொடுக்கும்.
08.34 அதே போல, கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலையும் முயற்சிக்கவும்.
08.38 இங்கே code ஐ எழுதியுள்ளேன்.
08.41 இப்போது இந்த file ஐ சேமித்து மூடவும்.
08.46 இப்போது file ஐ compile செய்வோம்
08.48 perl hyphen c multivar dot pl
08.54 syntax பிழை ஏதும் இல்லை.
08.55 எனவே இந்த script ஐ இயக்கலாம் perl multivar dot pl
09.01 இயக்கத்திற்கு பின் அதன் வெளியீடு இவ்வாறு இருக்கும்.
09.06 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
09.11 இந்த டுடோரியலில் நாம்
09.14 Perl' ல் scalar variable களை declare செய்யவும் பயன்படுத்தவும் கற்றோம்
09.18 இப்போது பயிற்சி
09.20 ஒரு எண் variable ஐ declare செய்க.
09.22 அதற்கு 10 ஐ Assign செய்க.
09.24 declare செய்யப்பட்ட variable ஐ அச்சடிக்கவும்.
09.26 இரு string variableகளை declare செய்க.
09.29 “Namaste ” மற்றும் “India” என்ற மதிப்புகளை அவற்றிற்கு assign செய்க.
09.34 இந்த இரு variableகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அச்சடிக்கவும்.
09.38 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09.42 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09.45 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09.50 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
09.53 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09.56 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10.01 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10.08 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10.13 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10.23 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
10.29 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst