Inkscape/C2/Create-and-Format-Text/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:15, 28 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Inkscapeல் textஐ உருவாக்குதல் மற்றும் format செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் கற்க போவது: textஐ உள்நுழைத்தல், textஐ format மற்றும் align செய்தல், Spacing மற்றும் bullet.
00:15 கடைசியில் ஒரு எளிய flyer அதாவது விளம்பரத்தை உருவாக்கவும் கற்போம்.
00:19 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 12.04, Inkscape பதிப்பு 0.48.4
00:29 அனைத்து toolகளையும் விளக்க ஏதுவாக அதிக resolution modeல் இந்த டுடோரியலை பதிவு செய்கிறேன்.
00:38 Inkscapeஐ திறப்போம்.
00:40 Tool boxல் உள்ள Text tool மூலம் text ஐ உள்நுழைக்கலாம்
00:45 இரு வழிகளில் textஐ சேர்க்கலாம்- Regular Text மற்றும் Flowed Text.
00:50 முதலில் Regular Text பற்றி அறிவோம். Text tool ல் க்ளிக் செய்து பின் canvasல் க்ளிக் செய்க
00:57 "Spoken" என டைப் செய்க. textன் நீளத்திற்கேற்ப text box நீளுவதைக் கவனிக்கவும்.
01:03 Line breakகளை நாமாக கொடுக்க வேண்டும். எனவே அடுத்த வரிக்கு செல்ல Enter ஐ அழுத்தி டைப் செய்க “Tutorial”.
01:11 இந்த வார்த்தையை முந்தைய வரிக்கு நகர்த்த, 'T'க்கு முன் cursor ஐ வைக்கவும். இப்போது backspace ஐ அழுத்தி இரு வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விடவும்.
01:22 இதேபோல "Spoken Tutorial"க்கு கீழே புது வரியில் டைப் செய்க: http://spoken-tutorial.org.
01:33 அடுத்து, Flowed text முறையில் text ஐ உள்ளிடுவோம்
01:38 இம்முறை, நான் ஏற்கனவே சேமித்த LibreOffice Writer file ல் இருந்து text ஐ copy செய்கிறேன்.
01:45 மொத்த textஐயும் தேர்ந்தெடுக்க Ctrl + A ஐ அழுத்தி copy செய்ய Ctrl + Cஐ அழுத்துகிறேன்.
01:52 இப்போது Inkscapeக்கு வந்து Text tool தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என காணவும்.
01:58 ஒரு செவ்வக text areaஐ உருவாக்க canvasல் க்ளிக் செய்து mouse ஐ இழுக்கவும்.
02:03 mouse பட்டனை விடுவித்ததும் ஒரு நீல நிற செவ்வகப் பெட்டி canvas ல் உருவாக்கப்படுவதைக் கவனிக்கவும்.
02:10 இப்போது, text boxன் உள்ளே, மேல் இடது மூலையில் சிமிட்டும் text prompt ஐ காண்க.
02:17 copy செய்யப்பட்ட textஐ paste செய்ய Ctrl + Vஐ அழுத்துக.
02:22 text boxன் நிறம் சிவப்பாக மாறியிருப்பதைக் காண்க.
02:25 ஏனெனில் உள்ளிடப்பட்ட text ஆனது text boxன் எல்லையைத் தாண்டியுள்ளது.
02:31 இதை text boxன் வலது மூலையில் உள்ள இந்த சிறிய diamond handleஐ பயன்படுத்தி சரிசெய்யலாம்.
02:38 text boxன் நிறம் நீலமாகும் வரை அதை க்ளிக் செய்து இழுக்கவும்.
02:44 கடைசி வாக்கியம் முந்தைய வாக்கியத்துடன் சேர்ந்துள்ளது.
02:48 அதை பிரிக்க கடைசி வாக்கியத்தின் ஆரம்பத்தில் இருமுறை Enterஐ அழுத்தவும்.
02:53 அடுத்து, textக்கான பல்வேறு formatting தேர்வுகளைக் கற்போம். “Spoken Tutorial” வார்த்தை மீது க்ளிக் செய்க
03:01 Main menuக்கு சென்று Textஐ க்ளிக் செய்து பின் Text and Font தேர்வுக்கு செல்லவும்.
03:09 ஒரு dialog box தோன்றுகிறது அதன் இரு தேர்வுகள் – Font மற்றும் Text. Font tabன் கீழ் சில தேர்வுகள் உள்ளன.
03:17 Font family, கிடைக்கும் அனைத்து fontகளையும் பட்டியலிடுகிறது. உங்கள் விருப்பத்திற்கேற்ப ஏதேனும் fontஐ தேர்ந்தெடுக்கலாம்.
03:25 இங்கே preview box ல் தேர்ந்தெடுக்கப்பட்ட font ன் preview ஐ காணலாம். நான் Bitstream Charter fontஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03:33 நான்கு Style தேர்வுகள் உள்ளன - Normal, Italic, Bold மற்றும் Bold Italic. தேவைக்கேற்ப styleஐ தேர்ந்தெடுக்கவும். நான் Boldஐ தேர்ந்தெடுக்கிறேன்
03:46 Font sizeஐ மாற்ற, இந்த drop-down arrowஐ க்ளிக் செய்து அளவை தேர்ந்தெடுக்கவும். இது தலைப்பு என்பதால், பெரிய fontஆக 64ஐ கொடுக்கிறேன்.
03:57 அடுத்தது Layout.
03:59 இந்த தேர்வுக்கு preview தெரிவதில்லை என்பதால் இது பற்றி பின்னர் காண்போம்.
04:04 இப்போது, Font tabக்கு அடுத்த Text tabஐ க்ளிக் செய்க. இங்கே, ஒரு preview window அதனுள் text உடன் காணப்படுகிறது.
04:12 textல் மாற்றங்களை இங்கு செய்யலாம்.
04:16 Apply பட்டனை க்ளிக் செய்து பின் dialog boxஐ மூடுவோம். text இப்போது format செய்யப்படுவதைக் காணலாம்.
04:23 கீழே color paletteஐ பயன்படுத்தி text நிறத்தை மாற்றலாம். maroon நிறம் மீது க்ளிக் செய்கிறேன்.
04:30 அடுத்து, URL text அதாவது http://spoken-tutorial.orgஐ தேர்ந்தெடுப்போம்
04:40 Tool controls bar லும் Text formatting தேர்வுகள் உள்ளன.
04:44 font ஐ Bitstream charter எனவும் Font size ஐ 28 எனவும் நிறத்தை Blueஆகவும் மாற்றுகிறேன்.
04:53 இப்போது, paragraph textஐ தேர்ந்தெடுப்போம்.
04:56 Text tool ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், text boxன் உள் செல்ல அந்த text மீது க்ளிக் செய்யவும்.
05:04 text ன் Font sizeஐ 25 என்கிறேன்.
05:08 text ஐ canvasன் உள் நகர்த்த diamond handleஐ க்ளிக் செய்து இழுக்கிறேன்.
05:15 அடுத்து, textகளை align செய்வோம்.
05:19 Tool controls barல் Italic iconக்கு அடுத்துள்ள நான்கு iconகள் text ஐ text boxன் Left Center அல்லது Right ல் align செய்ய உதவுகின்றன.
05:30 நான்காவது தேர்வு text boxன் எல்லைக்குள் text ஐ justify செய்ய உதவுகிறது. மேலும் செல்வதற்கு முன் left align ஐ க்ளிக் செய்கிறேன்.
05:39 Align and distribute தேர்வைப் பயன்படுத்தியும் text ஐ align செய்யலாம்.
05:43 Main menu க்கு சென்று Object menu ல் Align and Distribute தேர்வை க்ளிக் செய்க.
05:51 இப்போது, Spoken Tutorial ஐ மையத்தில் வைக்க முயற்சிப்போம். எனவே அதை க்ளிக் செய்வோம்.
05:57 முதலில் Relative to parameterல் Page இருக்கிறதா என சோதிக்கவும்
06:01 Centre on vertical axis ஐ க்ளிக் செய்க அந்த text இப்போது மையத்தில் வந்துவிட்டது.
06:10 அடியில் உள்ள காலி இடத்திற்கு சில text ஐ சேர்ப்போம்.
06:13 டைப் செய்க "FOSS Categories". இப்போது அதை பக்கத்தின் மையத்தில் வைக்க Centre on vertical axisஐ க்ளிக் செய்வோம்
06:25 சில FOSS பெயர்களை canvasல் ஆங்காங்கே டைப் செய்வோம் Linux, LaTeX, Scilab, Python .
06:39 இப்போது, இந்த அனைத்து textகளையும் ஒரே வரியில் சீரான இடைவெளியில் align செய்வோம்.
06:44 Shift keyஐ பயன்படுத்தி நான்கு textகளையும் தேர்ந்தெடுக்கவும். க்ளிக் செய்க Align baseline of text பின் Distribute baseline of text horizontally.
06:58 வார்த்தைகளுக்கு இடையே சீரான இடைவெளி இல்லை என்பதை கவனிக்கவும்.
07:02 முதல் வார்த்தையின் முதல் எழுத்தும் இரண்டாம் வார்த்தையின் முதல் எழுத்தும் சீரான இடைவெளியில் உள்ளன. ஆனால் வார்த்தைகளுக்கு இடையே சீரான இடைவெளி இல்லை.
07:10 செங்குத்து textகளும் இவ்வாறே வேலைசெய்யும்.
07:15 இம்மாதிரியான நேரங்களில் இந்த தேர்வுகள் பயன்படலாம்.
07:20 வார்த்தைகளுக்கு இடையே சீரான இடைவெளிகளை அமைப்போம்.
07:23 அதற்கு, Distributeன் முதல் வரியில் நான்காம் icon ஐ க்ளிக் செய்வோம் இப்போது வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி சீராக உள்ளது.
07:32 அடுத்து, paragraph textன் வரிகளுக்கு இடையே இடைவெளியை சரிசெய்ய கற்போம்.
07:38 text boxக்குள் செல்ல paragraph textஐ டபுள் க்ளிக் செய்வோம்.
07:44 Tool controls bar ல் உள்ள Spacing between lines icon வரிகளுக்கு இடையே இடைவெளிகளை குறைக்கவோ அதிகரிக்கவோ உதவுகிறது.
07:50 இடைவெளியை அதிகரிக்கும்போது நடப்பதைக் கவனிக்கவும்.
07:55 line spacing ஐ 1.50 என வைக்கிறேன்.
07:59 அடுத்த icon எழுத்துகளுக்கு இடையே இடைவெளியை சரிசெய்ய உதவுகிறது. மீண்டும், மேல் மற்றும் கீழ் அம்புகளை க்ளிக் செய்து மாற்றங்களை கவனிக்கவும்.
08:07 space parameter ஐ 0 என வைக்கிறேன்.
08:12 canvasன் இரு செங்குத்து பக்கமும் காலியாக இருப்பதைக் கவனிக்கவும். அதில் சில textஐ சேர்க்கலாம்.
08:19 canvasன் வெளியே டைப் செய்க: "Learn Open Source Software for free".
08:24 Font ஐ Ubuntu எனவும் Font sizeஐ 22 எனவும் மாற்றி அதை Bold ஆக்கவும்
08:34 இப்போது Tool controls barன் கடைசி icon அதாவது Vertical textஐ க்ளிக் செய்வோம்
08:39 text இப்போது செங்குத்தாக align ஆகியிருப்பதைக் கவனிக்கவும்.
08:43 Selector toolஐ பயன்படுத்தி text ஐ க்ளிக் செய்து அதை canvas ன் இடது பக்கமாக நகர்த்தவும்.
08:49 அதை dublicate செய்ய Ctrl + D ஐ அழுத்துக Ctrl keyஐ பயன்படுத்தி அந்த பிரதியை பக்கத்தின் மற்றொரு புறமாக நகர்த்தவும்
08:59 இப்போது paragraphல் உள்ள textக்கு bullet pointகளை சேர்ப்போம்.
09:03 Inkscape... textகளுக்கு bullet அல்லது number listகளை கொடுப்பதில்லை. எனவே bullet pointகளை நாமாக உருவாக்க வேண்டும்.
09:11 ellipse toolஐ க்ளிக் செய்து ஒரு சிறிய சிவப்பு வட்டத்தை வரைவோம்.
09:17 இப்போது இந்த bulletஐ paragraphன் முதல் வரிக்கு நகர்த்துவோம். அதை duplicate செய்து அடுத்த வாக்கியத்திற்கு நகர்த்துவோம்.
09:27 இதை அனைத்து வாக்கியங்களுக்கும் செய்வோம்.
09:32 இப்போது, நம் தேவைக்கேற்ப அனைத்து textகளும் உள்ளன.
09:36 கடைசியாக, இதை ஒரு flyer போன்று காட்ட அழுகுப்படுத்துகிறேன்.
09:41 இதோ முடிக்கப்பட்ட flyer.
09:45 மேலும் கீழும் borderகளை சேர்த்துள்ளேன். textகளில் வட்ட செவ்வகம் மற்றும் நீள்வட்டத்தை பயன்படுத்தியுள்ளேன்.
09:51 உங்கள் flyerக்கு வித்தியாசமான layoutகள் மற்றும் வடிவமைப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
09:57 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது.
09:59 text ஐ உள்நுழைத்தல், text ஐ format மறறும் align செய்தல், Spacing மற்றும் bullet listகள்.
10:06 ஒரு எளிய flyer ஐ உருவாக்கவும் கற்றோம்.
10:09 இங்கே உங்களுக்கான பயிற்சி-
10:11 பின்வருமாறு ஒரு flyer ஐ உருவாக்கவும். textகளை டைப் செய்ய text toolஐ பயன்படுத்தவும். bulletகளையும் rectangle toolஐ பயன்படுத்தி பெட்டிகளையும் உருவாக்கவும்.
10:19 star tool ஐ பயன்படுத்தி 10 மூலைகளுடன் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கவும். நிறங்களை மாற்ற color palette மற்றும் Fill and strokeஐ பயன்படுத்தவும். Align and distributeஐ பயன்படுத்தி textஐ align செய்யவும்.
10:31 இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சொல்கிறது. அதை காணவும்.
10:39 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
10:47 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
10:57 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
11:01 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
11:03 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst