Xfig/C2/Simple-block-diagram/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:33, 29 November 2012 by Chandrika (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Timing Narration
0:00 Xfig -ல் block diagram வரைதலுக்கானப் Spoken Tutorial -க்குத் தங்களை வரவேற்கிறேன்.
00:07 இந்த tutorial இல், கீழே கொடுக்கப்பட்ட வகை block diagram -களை எவ்வாறு உருவாக்குவது என விவரிப்போம்.
00:17 இப்பொழுது இதற்குத் தேவைப்படும் கருவிகள் பற்றி பார்க்கலாம். :
00:19 Xfig என்னும் block diagram கையாளும் கருவியை பயன்படுத்துகிறேன்.
00:24 இதில் version 3.2, patch level 5 -ஐப் பயன்படுத்துகிறேன்.
00:29 நான் Terminal மற்றும் pdf browser -யும் பயன்படுத்துகிறேன்.
00:37 நான் tutorial ஐ Max OS X -ல் உருவாக்குகிறேன்.
00:41 Xfig -ஐ Linux மற்றும் Windows -லும் பயன்படுத்தலாம்.
00:45 இவற்றில் Linux -ல் install செய்வது மிகவும் சுலபம்
00:50 அனைத்திலும் Xfig -ஐ உபயோகிக்கும் முறை ஒன்றே.
00:56 Xfig -க்கு மூன்று பொத்தான் சொடுக்கியை பயன்படுத்துவது சிறந்தது.
01:00 ஆனால் ஒன்று அல்லது இரண்டு பொத்தான் சொடுக்கியையும் வடிவமைத்து பயன்படுத்தலாம்.
01:07 Xfig -ன் பயனர் கையேடு இணையத்தில் கிடைக்கும்.
01:16 அதை காணலாம். இந்தப் பக்கத்தில் Xfig -ன் அறிமுகத்தை காணலாம்.
01:23 இங்கு கையேட்டின் உள்ளடக்க அட்டவணையைக் காணலாம்.
01:28 அதை சொடுக்குவோம்.
01:31 இங்கே Xfig -ஐ உருவாக்கியவர்கள் குறித்த தகவலைப் பெறலாம்.
01:36 இந்தப் பக்கத்தைப் பார்க்கலாம்.
01:40 இந்த டுடோரியலுக்கான திரை வடிவமைப்பு பற்றிக் கூறுகிறேன்.
01:46 இதில் slides, Xfig, வலையுலாவி Firefox மற்றும் terminal உள்ளன
01:58 இது Xfig -ஐ Mac -ல் பயன்படுத்துவதற்கான Command.
02:04 இவை சுலபமாகத் தேர்ந்தெடுக்கும்படி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன.
02:10 கேட்பவர் மாறுதலை சுலபமாக அறிந்து கொள்ளலாம். ஊகிக்க தேவையில்லை.
02:17 இப்பொழுது Xfig -உடன் தொடங்கலாம்.
02:20 Xfig வேலைத்தாளின் இடப்பக்கத்தில் "drawing mode பானல்" உள்ளது.
02:26 இந்த panel -ன் மேல்பாதியில் உள்ள buttonகளை பயன்படுத்தி பலவகை objectகள் உருவாக்கப்படுகின்றன.
02:33 கீழே உள்ளவை இவற்றுடன் பயன்படுத்தப்படுகின்றன.
02:39 மேலே உள்ள buttonகளைப் பயன்படுத்தி file வேலைகள், திருத்தங்கள் ஆகியவற்றை செய்ய முடியும்
02:46 நடுவில் உள்ள இந்த காலி இடம் canvas எனப்படுகிறது.
02:50 இதில்தான் படம் வரையப்படும்.
02:53 இப்பொழுது வரைய ஆரம்பிக்கலாம்.
02:55 முதலில் இந்த canvas பகுதியில் Grid -ஐப் பொருத்தலாம்.
03:01 கீழே உள்ள 'Grid mode' -ஐ click செய்வதன் மூலம் இதைப் பொருத்தலாம்.
03:05 இதில் பலவகையான Grid அளவை தேர்ந்தெடுக்கலாம். நான் நடுவில் உள்ளதை தேர்வு செய்கிறேன்.
03:11 Grid நாம் வைக்கும் பல Objectகளை ஒழுங்காக வைக்க உதவுகிறது.
03:16 இந்த டுடோரியலில் நான் சொடுக்கு என்று சொன்னால் அது இடப்பக்க சொடுக்கி button -ஐ சொடுக்கி விடுவதைக் குறிக்கும்.
03:21 இதேபோல் button ஐ தேர்வு செய்தல் என்பது அதை இடப்பக்க சொடுக்கி பட்டனால் சொடுக்குவதைக் குறிக்கும்.
03:29 வேறு செயல் தேவைப்பட்டால் நான் தெளிவாக கூறுகிறேன்.
03:34 நம் படத்தில் ஒரு பெட்டி தேவை, அதற்கு இடப்பக்க panel -ல் இருந்து கூரான விளிம்புகளுடன் உள்ள 'பெட்டி symbol' -ஐத் தேர்வு செய்யலாம்.
04:43 இப்பொழுது அந்த பெட்டியை வைக்க நினைக்கும் இடத்திற்குச் செல்லலாம்.
03:50 இங்கே சொடுக்கியால் சொடுக்குவோம்.
இது பெட்டியின் வடமேற்கு மூலையைத் தேர்வு செய்கிறது.
03:57 நாம் விரும்பும் பெட்டி அளவு வரும் வரை சொடுக்கியை எதிர் முனைக்கு நகர்த்தவும்.
04:12 சரியான அளவுக்கு பெட்டி வந்தவுடன் சொடுக்கியை மறுபடியும் சொடுக்கவும்.
04:16 பெட்டி இப்பொழுது உருவாகிவிட்டது.
04:18 இப்பொழுது Xfig இல் 'Edit' ஐ பயன்படுத்தும் முறையைப் பார்க்கலாம். இதைப்பயன்படுத்தி பெட்டி கோட்டை தடிமனாக்கலாம்.
04:26 இடப்பக்க panel -ல் உள்ள 'edit button' -ஐ சொடுக்கவும்.
04:31 இப்பொழுது பெட்டியின் எல்லா key points -ம் இருப்பதைக் காணலாம்.
04:36 பெட்டியைத் தேர்வு செய்ய ஏதாவதொரு key point -ஐ சொடுக்கவும்.
04:41 ஒரு உரையாடல் பெட்டி தெரிகிறது.
04:43 அதில் சொடுக்கியை “Width” பெட்டிக்குள் கொண்டு போவோம்.
04:47 சொடுக்கியின் நிலைக்காட்டி பெட்டியுள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
04:51 முன்னிருப்பு மதிப்பான1 ஐ நீக்கலாம்.
04:55 சொடுக்கியின் நிலைக்காட்டி பெட்டியுள் இல்லாவிட்டால் அதை மாற்ற இயலாது.
05:01 நிலைக்காட்டி பெட்டியிலிருந்து வெளியே நகர்ந்து விட்டால் அதை மீண்டும் உள்ளே கொண்டு வந்து விட்டு தட்டச்சுங்கள்.
05:07 இப்பொழுது 2 -ஐ உள்ளிடவும்.
05:13 “Done” என்பதை சொடுக்குகிறோம். அதை காட்டுகிறேன்.
05:17 ”Done” என்பதை சொடுக்கி உரையாடல் பெட்டியிலிருந்து வெளியேறுக.
05:20 பெட்டி படத்தின் கோட்டின் கனம் அதிகமாகிவிட்டது.
05:24 இப்பொழுது நாம் அம்புக்குறி கோட்டை சேர்க்கலாம்
05:28 இடப்பக்க panel -ல் இருந்து polyline button -ஐத் தேர்வு செய்யவும்.
05:34 கீழே உள்ள panel attributes panel எனப்படும்.
05:40 இந்த panel -ல் உள்ள button களைப் பயன்படுத்தி ஒவ்வொரு object -ன் parameter களையும் மாற்றலாம்.
05:45 நாம் தேர்ந்தெடுக்கும் object -ஐப் பொருத்து button களின் எண்ணிக்கை வேறுபடும்.
05:52 Attribute panel -ல் இருந்து “Arrow mode” button -ஐத் தேர்வு செய்யவும்.
05:57 உரையாடல் பெட்டியில் இரண்டாவது விருப்பத்தை தேர்வு செய்யலாம். அப்போது கோட்டின் இறுதியில் ஒரு அம்புக்குறி கிடைக்கும்
06:04 “Arrow Type” button -ஐ சொடுக்கலாம்.
06:08 இப்போது தோன்றும் சாளரத்தில் நமக்கு விருப்பமான அம்புக்குறியை தேர்ந்தெடுக்கலாம்.
06:14 கோடு தொடங்க வேண்டிய இடத்தில் சொடுக்கலாம்.
06:23 இப்பொழுது நாம் விரும்பும் கோட்டின் முடிவு புள்ளிவரை சொடுக்கியை நகர்த்தலாம்.
06:31 இப்பொழுது அங்கே சொடுக்கியின் நடு பட்டனால் சொடுக்கலாம்.
06:36 ஒரு அம்புக்குறியுடன் கூடிய கோடு உருவாகிறது.
06:39 அம்புக்குறியை முடிக்க நடுபட்டனை சொடுக்க வேண்டும் என்பதை நினைவில்கொள்க.
06:43 இடதோ வலதோ அல்ல.
06:45 ஏதாவது தவறு செய்தால் Edit -ல் Undo -ஐ அழுத்தவும்.
06:52 Copy செய்வதன் மூலம் பெட்டியின் வெளியீட்டுடன் மற்றொரு கோட்டை வரையலாம்.
06:59 இடப்பக்க panel -ல் 'copy button' -ஐத் தேர்வு செய்யவும்.
07:05 கோட்டை தேர்வு செய்யவும்.
07:09 சொடுக்கியை தேவையான இடத்திற்கு நகர்த்தி சொடுக்கவும்.
07:15 கோடு பிரதி எடுக்கப்பட்டது.
07:18 இப்பொழுது கொஞ்சம் உரையை இங்கே இடலாம்.
07:21 இடப்பக்க panel ல் உள்ள T எனக் குறிக்கப்பட்ட "Text Box” -ஐ சொடுக்கவும்.
07:29 உரையின் எழுதுரு அளவை தேர்வு செய்யலாம்.
07:35 “Attributes panel” -ல் உள்ள "Text size” -ஐ சொடுக்கிய பின் ஒரு உரையாடல் சாளரத்தை காண்கிறோம்.
07:41 இப்பொழுது சொடுக்கியை value பெட்டிக்கு எடுத்துச் சென்று அங்கேயே வைக்க வேண்டும்.
07:46 அங்கே முன்னிருப்பு மதிப்பான 12 -ஐ நீக்கி 16 -ஐ உள்ளிடவும்.
07:52 “Set” button ஐ தேர்வு செய்யவும்.
07:56 உரையாடல் பெட்டி மூடப்பட்டு “Text Size” இப்போது 16 என “attributes panel” இல் காண்கிறது.
08:05 உரையை நாம் நடு ஒழுங்கு செய்யலாம்.
08:08 Attributes panel -ல் "Text Just” button -ஐ சொடுக்கவும் .
08:13 ஒரு உரையாடல் பெட் டி தோன்றுகிறது.
08:15 நடு ஒழுங்குக்கு நாம் மிடில் என தேர்வு செய்வோம்.
08:21 பெட்டியின் நடுவே சொடுக்குவோம்
08:29 “Plant” என தட்டச்சி சொடுக்கியை சொடுக்குகிறேன்.
08:36 உரை உருவாக்கப்பட்டது
08:38 தேவைப்பட்டால் இடப்பக்க panel -ல் உள்ள "Move” விசையைப் பயன்படுத்தி என்னால் உரையை நகர்த்த முடியும்.
08:50 இப்பொழுது இந்த படத்தை சேமிக்கலாம்.
08:52 Xfig -ன் இடப்பக்க மூலையில் உள்ள "file” பட்டனை சொடுக்கி "save” -இல் சொடுக்கியை இழுத்து விடவும்.
09:04 முதல் முறை என்பதால் Xfig , File -ன் பெயரை கேட்கிறது.
09:09 நாம் directory -யும் பின் file பெயரையும் தேர்வு செய்யலாம்.
09:12 இதில் பெயரை "block” என உள்ளிட்டு save ஐ தேர்வு செய்கிறோம்.
09:27 block.fig. என file சேமிக்கப்படுகிறது.
09:30 அந்த பெயரை மேலே நாம் பார்க்கலாம்.
09:34 இப்பொழுது File -ஐ export செய்யலாம்
09:36 மறுபடியும் "file” பட்டனை சொடுக்கி "export” -இல் சொடுக்கியை இழுத்து விடவும்.
09:47 “language” க்கு அடுத்துள்ள பெட்டியில் சொடுக்கி, “PDF” இல் சொடுக்கியை இழுத்து விடவும். “PDF Format” தேர்ந்தெடுக்கப்படும்.
09:59 இப்பொழுது "export” button -ஐ சொடுக்கி "block.pdf” -ஐ பெறலாம்.
10:05 Terminal ல் "open block.pdf” என்ற கட்டளை மூலம் அந்த pdf -ஐ திறக்கலாம்
10:18 இப்பொழுது நமக்குத் தேவையான block diagram கிடைத்துவிட்டது.
10:21 நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றினோம். நமக்குத் தேவையான படத்தைப் பெற்றுள்ளோம்.
10:30 இப்பொழுது உங்களுக்கு ஒரு வேலை.
10:33 பெட்டியை வேறு பல object களாக மாற்றவும்.
10:36 Polyline -ஐப் பயன்படுத்தி செவ்வகம் வரையவும். படத்தின் அளவை மாற்றவும்; படத்தில் அம்புக்குறியின் திசையை மாற்றவும்.
10:43 வெவ்வேறு இடத்திற்கு உரை , கோடு மற்றும் பெட்டி -ஐ மாற்றவும்.
10:48 File -ஐ "eps format” க்கு எக்ஸ்போர்ட் செய்து பார்க்கவும்.
10:51 Block.fig என்ற file -ஐ திருத்தியில் பார்த்து பலவகை components களை கண்டு அறியவும்.
10:58 புதிய பல block diagram களை உருவாக்கவும்.
11:02 இப்பொழுது நாம் இந்த tutorial இன் முடிவுக்கு வந்துவிட்டோம்..
11:06 Spoken Tutorial என்பது இந்திய அரசின் ICT (NMEICT), MHRD ன் National Mission on Education -ஆல் உதவிசெய்யப்படும் Talk To a Teacher Project -ன் ஒரு பகுதி ஆகும். இதைப்பற்றி மேலும் அறிய: http://spoken-tutorial.org/NMEICT-Intro ஐக் காணவும்.
11:28 நான் மேலும் சில இணைய பக்கங்களை தரவிறக்கி உள்ளேன்.
11:38 spoken tutorial pproject ன் இணையதளம் http://spoken-tutorial.org.
11:48 இந்த திட்டம், “What is a Spoken Tutorial” என்ற இணைப்பில் உள்ள video மூலம் விவரிக்கப்படுகிறது.
11:57 spoken-tutorial.org/wiki, இல் நம் திட்டம் ஆதரிக்கும் FOSS கருவிகளை காணலாம்.
12:12 அதில் Xfig -க்கான பக்கத்தைக் காணலாம்..
12:27 உங்களின் பங்களிப்பையும் கருத்துகளையும் வரவேற்கிறோம். மூல பாடம் Kannan Moudgalya . உங்களிடமிருந்து விடை பெறுவது ....... நன்றி, வணக்கம்.

Contributors and Content Editors

Chandrika, Priyacst