LibreOffice-Suite-Base/C2/Build-a-complex-form-with-form-controls/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 10:51, 27 February 2017 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு!
00:04 complex forms குறித்த இந்த tutorial லில் நாம் கற்கப்போவது
00:08 complex form ஐ கட்டுமானம் செய்வது, இந்த form ஐ மாற்றுவது
00:13 முந்தைய tutorial லில் எப்படி, நாம் form களை பயன்படுத்தி data வை உள்ளிடுவது... Base ஐ பயன்படுத்தி ஒரு form ஐ மாற்றுவது என கண்டோம்.
00:22 இந்த tutorial லில், complex form ஐ கட்டுமானம் செய்வதை காணலாம்.
00:28 முதலில் LibreOffice Base நிரல் திறந்து இராவிடில் அதை துவக்குவோம். <pause>
00:44 நம் Library database ஐ திறப்போம்.
00:47 Base திறந்திருப்பின் நாம் File menu வின் கீழ் Library database ஐ சொடுக்கி திறக்கலாம்.
00:57 அல்லது File menu வின் கீழ் Recent Documents ஐ சொடுக்கி திறக்கலாம்.
01:03 ஒரு புதிய form ஐ design செய்யலாம். அது நூலக உறுப்பினர்களுக்கு கொடுத்த புத்தகங்களை தொடர்பில் வைக்க உதவ வேண்டும்.
01:12 திரையில் தோன்றுவதைப்போல ஒரு form ஐ நாம் design செய்ய வேண்டும்.
01:18 LibreOffice Base main window வுக்கு போகலாம். இடது panel இல் உள்ள database பட்டியலில் form icon ஐ சொடுக்கலாம்.
01:29 பின் 'Use Wizard to create form' மீது சொடுக்கலாம்.
01:34 இது form window வை மேலே, பழகிவிட்ட wizard உடன் திறக்கிறது.
01:41 இந்த wizard ஐ விவரமாக பார்த்து இருக்கிறோம். ஆகவே விரைந்து போகலாம்.
01:49 படி 1 இல் , Field Selection, -- Tables or queries எனும் label கீழ் உள்ள drop down box யிலிருந்து 'Tables:BooksIssued' ஐ தேர்ந்தெடுக்கலாம்.
02:02 இரட்டை அம்புக்குறி button ஐ பயன்படுத்தி எல்லா field களையும் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் கொண்டு போகலாம். <pause>
02:09 Next மீது சொடுக்கலாம்.
02:12 படி 2, ஆனால் இப்போதைக்கு இந்த படியை தவிர்த்து, கீழே உள்ள next button மீது சொடுக்கலாம்.
02:20 படி 5 : முதல் அமைப்பான 'Columnar – Labels Left' ஐ தேர்ந்தெடுத்து Next ஐ சொடுக்கலாம்.
02:30 படி 6 ஐயும் தவிர்த்து Next ஐ சொடுக்கலாம்.
02:36 படி 7, Ice blue தேர்ந்தெடுத்து Next ஐ சொடுக்கலாம்.
02:42 படி 8 , படிவத்துக்கு 'Books Issued to Members' என பெயரிடலாம். <pause>
02:53 'Modify form' தேர்வை சொடுக்கலாம்
02:57 அடுத்து Finish ஐ சொடுக்கலாம்
03:00 வழி காட்டியின் popup window போய்விட்டது; நாம் படிவ design window வை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
03:07 data வை உள்ளீட்டுக்கு இந்த form ஐ பயன்படுத்தும் முன் நாம் சில மாறுதல்களை செய்வோம்.
03:15 படிவத்தில் காணும் எல்லா element களையும் Ungroup செய்வோம்.
03:22 படிவத்தில் தனி element களின் propertiesகளை திருத்த இப்படி நாம் செய்கிறோம்.
03:31 எல்லா element களையும் ஒரே படியில் Ungroup செய்ய, முதலில் எல்லா element களையும் தேந்தெடுக்க வேண்டும்.
03:40 இதற்கு முதலில் படிவ Design toolbar ஐ திறக்கவும்.
03:46 மேலே View menu வில் Toolbars ஐயும், பின் form Design ஐயும் சொடுக்கலாம்
03:56 இந்த toolbar இல், முதல் மற்றும் இடது கோடியில் இருக்கும் mouse pointer icon மீது சொடுக்குவோம்.
04:05 இதை இனி Select icon என்போம்.
04:11 இது படிவ elementகளை சொடுக்கி இழுத்து தேர்ந்தெடுக்க பயனாகிறது.
04:18 இப்போது, form இன் மேல் இடது மூலையில் சொடுக்கி, கீழ் வலது மூலைக்கு இழுக்கலாம்.
04:26 கருப்பு வெள்ளை நிறத்தில் மாறி மாறி கோடுகளுடன் ஒரு செவ்வகத்தை பார்க்கலாம்.
04:32 படிவ element கள் எல்லாம் இந்த செவ்வகத்தில் இருப்பதை உறுதி செய்க.
04:38 நாம் படிவ element களின் தொகுதியை தேர்ந்தெடுக்க இந்த வழியை அடிக்கடி பயன்படுத்துவோம்.
04:46 இப்போது எல்லா element களும் சிறு பச்சை பெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ளதை காணலாம்.
04:53 இப்போது என்ன செயலை இங்கு செய்தலும் அது எல்லா element களையும் ஒரே மாதிரி பாதிக்கும்.
05:02 இப்போது mouse pointer ஐ இங்கு ஏதேனும் லேபிள் மீது கொண்டு செல்வோம்.
05:08 labelகள், உரைப்பெட்டிகள் மீது mouse pointer ஒரு கூட்டல் குறியாக தோன்றுவதை கவனிக்க.
05:18 ஒரு label மீது வலது சொடுக்கி பின் கீழே Group; பின் 'Ungroup' மீதுசொடுக்கலாம்
05:27 இப்போது form element களுக்கு மேலே வரும் தலைப்பை type செய்யலாம்.
05:35 இதற்கு படிவ elementகளை கீழே தள்ளி. பின் அவற்றை படிவத்துக்குள் மையப்படுத்தலாம்.
05:43 முதலில் கீழ் நோக்கு அம்புக்குறியை ஏழு முறை போல அழுத்தலாம்.
05:50 பின் வலது அம்புக்குறியை பதின்நான்கு முறை போல அழுத்தலாம்.
05:57 தேர்ந்தெடுத்த படிவ elementகள் கீழே தள்ளப்பட்டு படிவத்துக்குள் வலது பக்கம் மையத்துக்கு வந்துவிட்டன.
06:07 cursor ஐ தலைப்பை type செய்ய வேண்டிய இடத்துக்கு கொண்டு போகலாம்.
06:14 இதை செய்ய, படிவ window வில் மேல் இடது பக்கம் சொடுக்கலாம்.
06:21 enter விசையை இரு முறை தட்டவும்.
06:26 tab விசையை 4 முறை தட்டவும். type செய்க: 'form to track Books Issued to Members'.
06:38 இப்போது நாம் தனித்தனி labels மற்றும் உரைப்பெட்டிகளை சொடுக்க, இந்த எலமென்ட்கள் தனியாக தேர்ந்தெடுக்கப்படுவதோ அல்லது highlight ஆவதையோ காணலாம்.
06:52 அடுத்து BookId மற்றும் MemberId label களை படிவத்தில் மறு பெயரிடலாம்.
07:00 BookId label ஐ இரட்டை சொடுக்கு சொடுக்க அது இப்போது பழகிவிட்ட Properties window ஐ திறக்கிறது.
07:12 label க்கு எதிரே Book Title என type செய்க.
07:18 இப்போது படிவத்தில் MemberId label மீது சொடுக்கலாம்.
07:24 Properties window புதுப்பிக்கப்படுவதை காணலாம். நாம் 'Member Name' என Label எதிரே type செய்யலாம்.
07:34 நாம் tab விசையை அழுத்த, படிவத்தில் புதிய label மாற்றங்களை காணலாம்.
07:43 அடுத்து, இந்த elementகளின் font அளவை மாற்றலாம்.
07:49 மீண்டும் எல்லா elementகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
07:54 நாம் சொடுக்கி -இழுத்து- விடும் முறையை பயன்படுத்தலாம்.
07:59 இப்போது, ஏதேனும் ஒரு label மீது சொடுக்கலாம்; அது Properties window வை திறக்கும்.
08:08 ஸ்க்ரால் செய்து Font ஐ கண்டு பிடித்து வலது பக்கம் உள்ள சதுர button மீது சொடுக்கலாம்.
08:18 தோன்றும் புதிய pop up window வில் Bold, அளவு 8 .. மீதும் சொடுக்கலாம்
08:26 Ok மீது சொடுக்கவும்.
08:29 படிவத்தில் முழுதும் font... Bold மற்றும் அளவு 8 என காணலாம்.
08:38 அடுத்து படிவ element களை window வின் மையத்துக்கு நகர்த்தலாம்.
08:44 இதற்கு நாம் எல்லா elementகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
08:49 இப்போது ஏதேனும் ஒரு label மீது சொடுக்கி படிவ design window வின் மையத்துக்கு இழுக்கலாம்.
09:00 இப்போது form ஐ சேமிக்கலாம்.
09:03 இந்த window வை மூடலாம். form இப்போது எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
09:10 Base இன் main window வுக்கு சென்று, வலது panel இல் 'Books Issued to Members' form இன் மீது சொடுக்கலாம்.
09:20 இது data வை உள்ளிட தயாராக உள்ள form ஐ திறக்கிறது.
09:26 இப்போது, படிவத்தில் மாதிரி data வை உள்ளிடலாம்.
09:31 book title மற்றும் member name எதிரில் சில எண்களை காண்கிறோம்.
09:37 இவை உண்மையில் Books மற்றும் Members table யிலுள்ள main எண்களாகும். ஆனால் அவை தோதான மதிப்புகள் அல்ல.
09:46 நமக்கு உண்மையான புத்தக தலைப்புகளும் பெயர்களும் தெரிய வேண்டும்.
09:50 இதை எப்படி செய்யலாம்?
09:53 ஒரு வழி - List box என்னும் form கட்டுப்படுத்தியை சேர்க்கலாம்.
09:59 நாம் அடுத்த tutorial லில் எப்படி list box மற்றும் இதர படிவ control களை அமைத்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
10:07 இத்துடன் LibreOffice Base இல் complex form மீதான இந்த Spoken Tutorial முடிகிறது.
10:13 நாம் கற்றது: complex form ஐ கட்டுமானம் செய்வது, இந்த form ஐ மாற்றுவது
10:20 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:40 தமிழாக்கம் கடலூர் திவா, வணக்கம்

Contributors and Content Editors

Chandrika, Priyacst