Inkscape/C2/Layers-and-Boolean-operations/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 17:07, 24 November 2015 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:00 Inkscapeல் “Layerகள் மற்றும் boolean செயல்பாடுகள்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் கற்க போவது Layerகள்
00:11 Filterகள்
00:12 Boolean செயல்பாடுகள்.
00:15 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது
00:18 Ubuntu Linux 12.04
00:21 Inkscape பதிப்பு 0.48.4
00:25 Inkscapeஐ திறக்கலாம். Dash home க்கு சென்று Inkscape என டைப் செய்க.
00:30 Inkscape logo ல் க்ளிக் செய்க.
00:32 நாம் ஏற்கனவே உருவாக்கிய Assignment_2.svg file ஐ திறப்போம்.
00:38 அதை documents folderல் சேமித்துள்ளேன்.
00:41 முதலில், Inkscapeல் Layerகள் பற்றி அறிவோம்
00:45 'Layer menu க்கு சென்று Layers option'ல் க்ளிக் செய்க
00:50 இப்போது interfaceன் இடப்பக்கம் Layer palette திறக்கிறது.
00:55 முன்னிருப்பாக அங்கு ஒரு layer உள்ளது. அதன் பெயர் Layer 1 என காணலாம்.
01:01 ஒரு புது layerஐ சேர்க்கவோ உருவாக்கவோ, Layer paletteல் கூட்டல் icon ஐ க்ளிக் செய்க.
01:07 Add layer என்ற ஒரு dialog box திறக்கிறது.
01:10 Layer name text boxல், layerக்கு ஒரு பெயரைக் கொடுக்கலாம்.
01:15 இந்த layerஐ நான் eye என்கிறேன்
01:18 இப்போது, Position drop down listஐ க்ளிக் செய்து layer ன் இடத்தை நிர்ணயிக்கலாம்.
01:25 இங்கே 3 தேர்வுகள் உள்ளன.
01:27 Above current இந்த layer ஐ நடப்பு layerன் மேலே வைக்கும்.
01:32 Below current இந்த layer ஐ நடப்பு layerக்கு கீழே வைக்கும்.
01:36 As sublayer of current என்பது நடப்பு layerன் ஒரு பகுதியாக இது இருக்கும் என்கிறது.
01:41 இதை Above current என வைத்து Add button என க்ளிக் செய்கிறேன்.
01:47 eye என்ற ஒரு புது layer இப்போது Layer palette ல் தெரிவதைக் காண்க
01:52 இதேபோல, bow என்ற மற்றொரு layer ஐயும் உருவாக்கவும்
02:00 இப்போது Layer paletteல் 3 layerகள் உள்ளன
02:04 அடுத்து, layerன் பெயரை மாற்றக் கற்போம்
02:08 முதலில் Layer 1ஐ டபுள் க்ளிக் செய்து பின் அதன் பெயரை circle என மாற்றி Enterஐ அழுத்துக
02:16 நம் canvasக்கு மீண்டும் வருவோம். இரு கண்கள் மற்றும் ஒரு சுழல் முடிச்சு உள்ளன.
02:20 இந்த வடிவங்களை நாம் உருவாக்கிய இரு வெவ்வேறு layerகளுக்கு நகர்த்துவோம்.
02:25 mouseஐ இழுத்து இரு கண்களையும் தேர்ந்தெடுப்போம்.
02:28 இப்போது Ctrl + X ஐ அழுத்தவும். கண்கள் மறைந்துவிட்டன.
02:34 Layer Paletteல் இப்போது eye layerஐ க்ளிக் செய்க
02:38 canvas க்கு வந்து Ctrl + Alt + Vஐ அழுத்துக
02:44 இதே செயலை சுழல்முடிச்சு வடிவத்திற்கும் செய்யவும்.
02:52 objectகளை தேர்வு நீக்க canvas ன் காலி இடத்தில் எங்கேனும் க்ளிக் செய்க.
03:00 layerகளை மறைக்கவும் பூட்டவும் eye மற்றும் lock iconகள் உதவுகின்றன.
03:04 ஒரு layerஐ மறைக்கும்போது, அதனை தொடர்ந்து வரும் கீழ் layerகளில் உள்ள objectகளை தெளிவாக காணமுடியும்.
03:11 ஒரு layerஐ பூட்டும் போது, அந்த குறிப்பிட்ட layerஐ தற்செயலான edit களில் இருந்து காக்கலாம்.
03:18 பெரிய சிக்கலான graphic வேலைகளை செய்யும்போது குறிப்பாக இவை இரண்டும் மிக பயனுள்ளதாக இருக்கும்.
03:25 ஒவ்வொரு layerன் இடப்பக்கமும் eye மற்றும் lock என்ற இரு iconகளைக் காணலாம்
03:32 இப்போது இவற்றை பயன்படுத்த கற்போம்.
03:35 layerகளை பூட்டவோ பூட்டை நீக்கவோ, lock iconஐ க்ளிக் செய்க. bow layerஐ இப்போது பூட்டியுள்ளேன்
03:42 ஒரு layer பூட்டியிருந்தால், அந்த layerல் நாம் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
03:47 canvas ல் சுழல் முடிச்சுயை தேர்ந்தெடுக்க முயற்சிப்போம். அதை செய்ய முடியவில்லை என காணலாம்.
03:58 இப்போது, bow layerன் பூட்டை நீக்குகிறேன்.
04:01 bow objectஐ இப்போது தேர்ந்தெடுக்க முடிகிறது அதன் propertiesஐயும் மாற்ற முடிகிறது.
04:07 canvasல் ஒரு layer ஐ காட்டவோ மறைக்கவோ, layerன் இடப்பக்கமுள்ள eye iconஐ க்ளிக் செய்க.
04:15 bow layerக்கான eye iconஐ க்ளிக் செய்கிறேன்
04:18 canvasல் நடப்பதை கவனிக்கவும்.
04:23 இப்போது bow layerஐ நகல் எடுக்கிறேன்
04:26 Layer menu க்கு சென்று Duplicate Current Layer தேர்வை க்ளிக் செய்க.
04:32 Layer Palette window ல் ஒரு புது layer bow copy உருவாக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.
04:41 ஆனால் canvasல் புது சுழல்முடிச்சு ஏதும் இல்லை. ஏனெனில் சுழல்முடிச்சானது முந்தைய layerன் மேலே அமைந்துள்ளது .
04:50 இரு சுழல்முடிச்சுகளையும் காண மேல் layer ல் உள்ள சுழல்முடிச்சை நகர்த்தி வைக்கவும்.
04:56 circle layerஐ தேர்ந்தெடுக்கவும்
04:58 கண்கள் மற்றும் சுழல்முடிச்சுகளை மூடுமாறு ஒரு நீள்வட்டத்தை canvasல் வரையவும். அதற்கு orange நிறம்கொடுக்கவும்.
05:05 அந்த நீள்வட்டம் பின்புறத்திலும் மற்ற objectகள் அதற்கு மேலேயும் காணப்படுகின்றன.
05:10 Layers Paletteல் plus icon க்கு அடுத்துள்ள நான்கு iconகள் தேர்ந்தெடுக்கப்பட்ட layerஐ நிலையில் வைக்க உதவுகின்றன.
05:17 தேர்ந்தெடுக்கப்பட்ட layer ஐ, முதல் icon உயர்மட்ட layerஆக வைக்கிறது.
05:23 தற்போது circle layer தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
05:25 இந்த icon ஐ க்ளிக் செய்யும்போது circle layer இப்போது உயர்மட்ட layer ஆக மாறுவதைக் காணலாம்
05:33 கடைசி icon தேர்ந்தெடுக்கப்பட்ட layer ஐ அடிமட்ட layer ஆக்கும்
05:38 இந்த iconஐ க்ளிக் செய்க. circle layer இப்போது அடிமட்ட layer ஆக மாறுவதைக் கவனிக்கவும்
05:44 இரண்டாம் icon தேர்ந்தெடுக்கப்பட்ட layer ஐ ஒரு layer மேலே அனுப்புகிறது.
05:48 இந்த iconஐ க்ளிக் செய்க. eye layerக்கு மேலே circle layer நகர்ந்துள்ளது எனவே கண்கள் தெரியவில்லை.
05:57 மூன்றாம் icon தேர்ந்தெடுக்கப்பட்ட layer ஐ ஒரு layer கீழே நகர்த்துகிறது.
06:01 இந்த iconஐ க்ளிக் செய்க. இப்போது eye layerக்கு கீழே circle layer நகர்ந்துள்ளது
06:07 எனவே, இவ்வாறுதான் இந்த நான்கு iconகளும் பயன்படுத்தப்படுகின்றன.
06:13 கடைசியில் உள்ள minus icon தேர்ந்தெடுக்கப்பட்ட layerஐ நீக்குகிறது. bow copy layer ஐ தேர்ந்தெடுத்து அதன் மீது க்ளிக் செய்க.
06:21 இப்போது bow copy layer தெரியவில்லை என்பதை காணலாம்.
06:27 Blend mode என்பது Blend filterஐ ஒரு layer முழுதும் பயன்படுத்துவதற்கான shortcut ஆகும்.
06:31 அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட layerகளில் objectகள் ஒன்றன் மேல் ஒன்று இருந்தால், Inkscape அந்த இரு objectகளையும் pixel-by-pixelஆக கலக்கும்.
06:41 எனவே, filterகளை தெரியவைக்க circle layerஐ மேலே வைப்போம்.
06:46 Blend modeன் drop down listஐ க்ளிக் செய்க இங்கு 5 தேர்வுகள் இருப்பதைக் காண்க
06:52 முதல் தேர்வு Normal, அது layerக்கு எந்த filterஐயும் சேர்க்காது.
06:57 அதை க்ளிக் செய்கிறேன். layerக்கு எந்த filter உம் சேர்க்கப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்.
07:03 அடுத்து Multiply ஐ க்ளிக் செய்க
07:06 உயர்மட்ட layerல் உள்ள objectகள், lightஐ filterசெய்வதால் கீழ் layerகளில் உள்ள objectகள் தெரிகின்றன.
07:14 அதே நேரத்தில், ஒன்றன் மேல் ஒன்று உள்ள பகுதிகளில், அடர்த்தியான நிறங்களை உருவாக்க நிறங்களை கலக்கின்றன.
07:21 அடுத்த தேர்வு Screen.
07:25 மேல் objectகளை கவனிக்கவும்; அவை கீழ் objectகளுக்கு lightnessஐ சேர்க்கின்றன.
07:30 எனவே, ஒன்றன் மேல் ஒன்று உள்ள பகுதிகளில் லேசான நிறங்களை உருவாக்க நிறங்களை கலக்கின்றன.
07:36 Darken மீது க்ளிக் செய்க மேல் layerல் உள்ள objectகள், கீழ் layerகளில் உள்ள objectகளை அடர்த்தியாக்குகின்றன.
07:44 இப்போது, கடைசி தேர்வான Lighten மீது க்ளிக் செய்க இங்கே மேல் objectகள் கீழ் objectகளை லேசாக்குகின்றன.
07:53 Blend mode ல் Normalக்கு வந்தால், இதுவரை பயன்படுத்தப்பட்ட blend filterகள் மறைகின்றன.
08:00 மேலும் பல filterகளை Filters menuல் காணலாம்
08:04 ஒரு குறிப்பிட்ட filterஐ பயன்படுத்த, முதலில் objectஐ தேர்ந்தெடுத்து பின் தேவையான filter மீது க்ளிக் செய்யவும்.
08:12 circle layer ஐ மீண்டும் கீழே நகர்த்துவோம்.
08:16 ஒரு கண்ணை தேர்ந்தெடுக்கிறேன். Filters menuக்கு சென்று Blurs பின் Fancy blur ஐ தேர்ந்தெடுக்கிறேன்
08:26 கண்ணின் மாற்றத்தை கவனிக்கவும்.
08:29 மற்றொரு கண்ணை தேர்ந்தெடுக்கிறேன். Filters menu க்கு சென்று Bevels பின் Smart jelly ஐ தேர்ந்தெடுக்கிறேன்
08:39 கண்ணின் மாற்றத்தை மீண்டும் கவனிக்கவும்.
08:44 இப்போது சுழல்முடிச்சை தேர்ந்தெடுப்போம். Filters menuக்கு சென்று Scatter பின் Air sprayஐ தேர்ந்தெடுப்போம்
08:51 காற்று தெளிக்கப்பட்டது போல சுழல் முடிச்சு தோன்றுகிறது.
08:55 Blend modeக்கு கீழ் உள்ள Opacity தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட layerன் Opacityஐ குறைக்க உதவுகிறது.
09:01 circle layerஐ தேர்ந்தெடுக்கவும்
09:03 Opacity levelமாற்றி.... ellipseன் மாற்றத்தை கவனிக்கவும்.
09:10 அடுத்து boolean செயல்பாடுகள் பற்றி அறிவோம்
09:13 Path menuக்கு செல்லவும் இவைதான் boolean செயல்பாடுகள்.
09:21 இந்த வடிவங்களை ஒரு ஓரமாக வைப்போம்.
09:26 ஒரு பச்சை நிற சதுரம்... மற்றும் ஒரு சிவப்பு நிற வட்டத்தை வரைவோம். இந்த வட்டத்தை சதுரத்தின் மேல் ஒரு பக்கமாக வைப்போம்.
09:36 இரண்டையும் தேர்ந்தெடுக்கவும். Path menuக்கு சென்று Union மீது க்ளிக் செய்க. இரு வடிவங்களும் இப்போது ஒன்றாக இணைந்திருப்பதைக் காணலாம்
09:46 இந்த செயல்பாட்டை undo செய்ய கீபோர்டில் Ctrl + Zஐ அழுத்துக.
09:51 மீண்டும் இரண்டையும் தேர்ந்தெடுத்து... Path menuக்கு சென்று...
09:55 Difference மீது க்ளிக் செய்து நடப்பதை கவனிக்கவும்.
09:59 இந்த செயல்பாட்டை undo செய்ய Ctrl + Zஐ அழுத்துக.
10:03 மீண்டும் இரு objectகளையும் தேர்ந்தெடுக்கவும். Path menuக்கு சென்று Intersection மீது க்ளிக் செய்து வடிவத்தின் மாற்றத்தை காணவும்.
10:11 இந்த செயல்பாட்டை undo செய்ய Ctrl + Zஐ அழுத்துக.
10:16 மீண்டும் இரு objectகளையும் தேர்ந்தெடுக்கவும். Path menu க்கு சென்று Exclusion ஐ க்ளிக் செய்க
10:22 வடிவத்தின் மாற்றத்தை கவனிக்கவும்.
10:24 மீண்டும் Ctrl + Zஐ அழுத்துக
10:27 மீண்டும் இரு objectகளையும் தேர்ந்தெடுத்து Path menu க்கு சென்று Division மீது க்ளிக் செய்க
10:34 பிரிக்கப்பட்ட வட்டத்தை க்ளிக் செய்து முடிவை காண அதை தனியே நகர்த்தவும்.
10:39 இந்த செயல்பாடுகளை undo செய்ய இருமுறை Ctrl + Zஐ அழுத்துக.
10:44 மீண்டும் இரு objectகளையும் தேர்ந்தெடுத்து Path menu க்கு சென்று Cut path மீது க்ளிக் செய்க
10:50 வடிவத்தின் மாற்றத்தை கவனிக்கவும்.
10:53 objectல் stroke இருந்தால் மட்டுமே Cut path தேர்வு வேலைசெய்யும். முதலில் வடிவங்களை தேர்வுநீக்குவோம்.
10:59 இப்போது, cut path ஐ காண ஏதேனும் ஒரு strokeஐ தேர்ந்தெடுத்து தனியே நகர்த்தவும்.
11:05 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
11:09 Layerகள்
11:10 Filterகள் மற்றும் Boolean செயல்பாடுகள்.
11:14 இங்கே உங்களுக்கு நான்கு பயிற்சிகள் உள்ளன
11:16 ஒரு ஊதா நிற செவ்வகம் மற்றும் ஒரு பச்சை நிற முக்கோணத்தை வரையவும்.
11:21 செவ்வகத்தின் உச்சியில் முக்கோணத்தை வைக்கவும்.
11:24 இரண்டையும் தேர்ந்தெடுத்து Unionஐ பயன்படுத்தவும் அது ஒரு வீடு போன்று இருக்க வேண்டும்.
11:30 அந்த layerக்கு home என பெயரிடவும்
11:32 இரு வட்டங்களை வரையவும்.
11:34 அவற்றை ஒன்றன் மேல் ஒன்று அருகருகே வைக்கவும்.
11:36 இரண்டையும் தேர்ந்தெடுத்து Differenceஐ பயன்படுத்தவும்.
11:39 அது ஒரு பிறைச்சந்திரன் போல இருக்க வேண்டும்.
11:42 * ஒரு நீள்வட்டத்தை வரையவும்.
11:44 10 மூலைகள் கொண்ட ஒரு நட்சத்திரத்தை வரையவும்.
11:46 அதை நீள்வட்டத்தின் மையத்தில் வைக்கவும்.
11:49 இரண்டையும் தேர்ந்தெடுத்து Exclusionஐ பயன்படுத்தவும்
11:52 crescent மற்றும் star என்ற இரு layerகளை உருவாக்கவும்.
11:57 பிறைச்சந்திர வடிவத்தை வெட்டி crescent layerல் ஒட்டவும்.
12:00 அதே போல நட்சத்திர வடிவத்திற்கும் செய்யவும்.
12:03 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
12:07 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
12:16 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
12:23 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
12:27 இந்த திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
12:34 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
12:39 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
12:42 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst