Difference between revisions of "Skill-Development--InStore-Promoter/C2/Interacting-with-a-customer/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:00 | '''வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ளுதல்''' குறி...")
 
 
Line 33: Line 33:
 
|-
 
|-
 
|00:31
 
|00:31
|ஒரு சிறப்பான தகவல்தொடர்புக்கு,  '''கடை விற்பனையாளர்''' நான்கு முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
+
|ஒரு சிறப்பான தகவல்தொடர்புக்கு,  '''கடை விற்பனையாளர்''' நான்கு முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை:  
அவை:  
+
  
 
|-
 
|-
Line 90: Line 89:
 
|-
 
|-
 
| 01:39
 
| 01:39
| மற்றும் பின்வருமாறு ஒரு எளிய கேள்வியுடன் *“எந்த வகையான  phone உங்களுக்கு தேவை?”  
+
| மற்றும் பின்வருமாறு ஒரு எளிய கேள்வியுடன் *“எந்த வகையான  phone உங்களுக்கு தேவை?” அல்லது
 
+
அல்லது
+
  
 
|-
 
|-
Line 216: Line 213:
 
|-
 
|-
 
| 04:19
 
| 04:19
| விலை,  
+
| விலை, பொருள்,  
 
+
|-
+
| 04:20
+
| பொருள்,  
+
  
 
|-
 
|-
 
| 04:22
 
| 04:22
| கடை மற்றும் அதன் சேவை,  
+
| கடை மற்றும் அதன் சேவை, அல்லது '''கடை விற்பனையாளர்'''.  
 
+
|-
+
| 04:23
+
| அல்லது '''கடை விற்பனையாளர்'''.  
+
  
 
|-
 
|-
Line 264: Line 253:
 
|-
 
|-
 
| 05:10
 
| 05:10
|“மற்ற  brand களிலும் குறைந்த விலையில் இதே model (மாதிரி) இருப்பது உங்களுக்கு தெரியுமா?”
+
|“மற்ற  brand களிலும் குறைந்த விலையில் இதே model (மாதிரி) இருப்பது உங்களுக்கு தெரியுமா?” அல்லது
 
+
அல்லது
+
  
 
|-
 
|-
Line 514: Line 501:
 
|-
 
|-
 
|10:22
 
|10:22
|சுருங்கசொல்ல
+
|சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது எவ்வாறு தீர்க்க கவனித்தல் மற்றும் வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ளுதல்
 
+
|-
+
|10:23
+
|இந்த டுடோரியலில் நாம் கற்றது எவ்வாறு தீர்க்க கவனித்தல் மற்றும் வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ளுதல்
+
  
 
|-
 
|-

Latest revision as of 17:13, 23 February 2017

Time Narration
00:00 வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ளுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:09 சிறப்பாக விற்பனை செய்ய தேவையான தகவல்தொடர்பு திறமைகள்
00:14 கவனிக்கும் மற்றும் கேள்வி கேட்கும் திறனை மேற்படுத்துதல்
00:17 வாடிக்கையாளரிடம் பொருளை விற்பதற்கு தேவையான படிகள்
00:22 கைபேசிக்கு(handset) செயல்விளக்கம் அளித்து அதை வாங்க ஊக்குவித்தல்
00:26 பொருளை வாங்கும்படி வாடிக்கையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துதல்.
00:31 ஒரு சிறப்பான தகவல்தொடர்புக்கு, கடை விற்பனையாளர் நான்கு முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை:
00:39 வாடிக்கையாளரின் தகவல்தொடர்பு பாங்கைப் புரிந்துகொள்ளுதல்
00:44 தகவல்தொடர்பில் துல்லியம்
00:46 கவனிக்கும் கலை
00:49 கேள்வி கேட்கும் கலை.
00:51 எனவே, கடையில் நடக்கும் பொதுவான ஒரு காட்சியுடன் ஆரம்பிக்கலாம்.
00:56 ஒரு வாடிக்கையாளர் உள்ளே வந்து காட்சியில் இருப்பவற்றை காண ஆரம்பிக்கிறார்.
01:00 ஒரு விற்பனையாளர் இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?
01:03 முதலில், வாடிக்கையாளர் பொருட்களை பார்த்து பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும்.
01:10 2 நிமிடமாவது, வாடிக்கையாளரை விற்பனையாளர் குறுக்கீடோ தொந்தரவோ செய்யக் கூடாது.
01:17 அமைதியாக இருப்பது என்பது வாடிக்கையாளர் கடைக்கு வந்த பிறகு அவர்கள் செளகரியமாக உணர்வதற்கு கொடுக்கும் நேரம் ஆகும்.
01:25 இப்போது விற்பனையாளர் விற்பனையை ஆரம்பிக்கலாம்.
01:30 விற்பனையாளர் வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்வதில் மிகவும் ஆர்வமாய் இருப்பதைக் காட்டவேண்டும்.
01:36 இதை ஒரு புன்னகையுடன் ஆரம்பிக்கலாம்.
01:39 மற்றும் பின்வருமாறு ஒரு எளிய கேள்வியுடன் *“எந்த வகையான phone உங்களுக்கு தேவை?” அல்லது
01:46 “ஏதேனும் குறிப்பிட்ட brand ன் phone தேவையா?”
01:49 தகவல் தொடர்பின் போது, வாடிக்கையாளர் விரும்பும் மொழியில் பேசுவது ஒரு நல்ல பழக்கம்.
01:55 உதாரணமாக: வாடிக்கையாளர் இந்தியில் பேசினால், நீங்களும் இந்தியில் பேசுங்கள்.
02:02 எல்லா நேரங்களிலும், வாடிக்கையாளர் அசெளகரியமாக உணரும் படி விற்பனையாளர் விடக்கூடாது.
02:07 கண்ணைப் பார்த்து பேசுவதும் கை அசைவுகளும் வாடிக்கையாளருக்கு எளிமையை உணர்த்தும்.
02:14 இந்நிலையில் நல்ல குரலும் பேச்சும் மிக முக்கியம்.
02:19 எளிய கேள்விகளுடன் ஆரம்பிப்பது, வாடிக்கையாளருக்கு உங்களுக்கு உதவும் தகவலை கொடுக்க வசதியளிக்கும்.
02:26 விற்பனையாளர் எப்போதும் வாடிக்கையாளர் பேசுவதை கவனமாக கேட்கவேண்டும்.
02:30 வாடிக்கையாளர் ஒரு “fancy” phone (ஆடம்பரமான கைபேசி) வேண்டுமென்றால், வாடிக்கையாளருக்கு எது “fancy” என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
02:36 இது “தீர்க்க கவனித்தல் (active listening)” எனப்படும்.
02:40 ஏற்கனவே வாடிக்கையாளர் சொன்னதை திரும்ப சொல்வது “தீர்க்க கவனித்தலை” செய்துகாட்டுவதற்கான ஒரு வழி.
02:48 இது வாடிக்கையாளரின் மனதில் ஒரு நல்லெண்ணத்தை உருவாக்கும்.
02:53 விற்பனையாளர் பின்வரும் கேள்விகளையும் கேட்கலாம்-
02:56 எதற்காக உங்கள் phone ஐ பயன்படுத்துகிறீர்கள்?
02:58 phone ல் எந்தெந்த அம்சங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
03:01 எந்த விலையில் phone ஐ எதிர்பார்க்கிறீர்கள்?
03:04 உங்களுக்கு touch screen phone வேண்டுமா... அல்லது qwerty keypad phone வேண்டுமா?
03:10 வாடிக்கையாளர் விற்பனை பொருளை நன்கு காண அம்சங்கள், நன்மைகள் மற்றும் பயன்கள் உதவும்.
03:17 அம்சங்கள் என்பவை ஒரு பொருளின் பண்புகள் மற்றும் சிறப்பியல்புகள்.
03:21 வாடிக்கையாளர்கள் பயனுள்ள பொருளை வாங்குவார்கள், அம்சங்களை அல்ல.
03:26 வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்திசெய்யும் சரியான பொருளுக்கு விற்பனையாளர் வழிகாட்டலாம்.
03:32 எந்த பொருள் வாடிக்கையாளரின் தேவையை பூர்த்திசெய்யும் என்பதை விற்பனையாளர் தெளிவாக சொல்லலாம்.
03:40 எனவே விற்பனையாளர் வாடிக்கையாளருக்கு தேவையான சரியான பொருளை கண்டுபிடிக்க சிறப்பாக உதவலாம்.
03:48 உதாரணமாக: வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் விலையில் அல்லது brand ல் உள்ள அனைத்து பொருள்களும்.
03:56 கேள்விகளாவன:
03:58 எவ்வாறு phone ஐ பயன்படுத்த வாடிக்கையாளர் திட்டமிடுகிறார்?
04:01 அந்த mobile ஐ அவரே பயன்படுத்தபோகிறாரா அல்லது பரிசளிப்பதற்காகவா?
04:06 அவரின் தேர்வுக்கேற்றவாறு வழிக்காட்டவும்.
04:10 சில நேரங்களில், வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை பின்னர் வாங்குவதாக முன்பதிவு செய்வார்கள்.
04:15 இதற்கு அவர் பின்வருவனவற்றின் மீது திருப்தி இல்லாமல் இருக்கலாம்
04:19 விலை, பொருள்,
04:22 கடை மற்றும் அதன் சேவை, அல்லது கடை விற்பனையாளர்.
04:27 உறுதியற்ற வாடிக்கையாளரை கட்டாயப்படுத்துவதை விட மீண்டும் உறுதியளிப்பது சிறந்தது.
04:32 முன்பதிவுகளை கையாளுவதற்கான சிறந்த முறை நிதானமாக கேட்பது.
04:39 வாடிக்கையாளர் முழுவதுமாக அவரின் உணர்வுகளை சொல்லியபின் பதிலளிக்கவும்.
04:46 முதலில், வாடிக்கையாளரின் செயல் அசாதாரணமானது இல்லை என்பதை உணரவும்.
04:51 பின் மறுப்பை பயனாக மாற்ற தொடரவும்.
04:55 விலை காரணமாக முன்பதிவு செய்வதை இரு படிகளில் அனுகலாம்.
05:00 முதலில், கடை விற்பனையாளர் வாடிக்கையாளரின் கண்ணோட்டத்திலிருந்து முன்பதிவுகளை பார்க்க முயற்சிக்க வேண்டும்.
05:07 உதாரணமாக- விற்பனையாளர் பின்வருமாறு கேட்கலாம்
05:10 “மற்ற brand களிலும் குறைந்த விலையில் இதே model (மாதிரி) இருப்பது உங்களுக்கு தெரியுமா?” அல்லது
05:16 “இந்த model ஐ குறைந்த விலையில் வேறு கடையில் நீங்கள் பார்த்தீர்களா.
05:21 அது ஒத்த அம்சங்களை கொண்ட இதே model தானா என்பதை தயவுசெய்து சொல்ல முடியுமா?”
05:25 நினைவில் கொள்க, அனைத்து வாடிக்கையாளர்களும் குறைந்த விலை பொருளைத்தான் வாங்க விரும்புவார்கள்.
05:31 ஆனால் அவற்றின் கூடுதல் நன்மைகளை சுட்டிக்காட்டினால் வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுப்பார்கள்.
05:37 உதாரணமாக- பொருளின் நிலைத்த தன்மை
05:41 கடையின் சேவை
05:43 கடன் கிடைப்பது
05:45 திருப்பி கொடுப்பதற்கான கொள்கை
05:47 ஒரே கடையில் வாடிக்கையாளருக்குத் தேவையான அனைத்தையும் வாங்கவைக்கும் பலவகைப்பட்ட பொருள்கள்.
05:53 முன்பதிவுகளை சமாளிக்கும் இரண்டாம் வழி குறைந்த விலை பொருள்களை பரிந்துரைப்பது.
06:00 வாடிக்கையாளர் வாங்க தயாராக உள்ளாரா என்பதை எவ்வாறு கடை விற்பனையாளர் தெரிந்துகொள்வது?
06:04 வாடிக்கையாளரின் பேச்சோ அல்லது செய்கைகளோ அவர் வாங்க தயாராக உள்ளாரா என காட்டும் அறிகுறிகள்.
06:11 சில சமயம் முக பாவனைகள் அவர் வாங்க தயாராக இல்லை என்பதை காட்டும்.
06:16 முகம் சுளிக்கும்...... அல்லது குழப்பத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் பொருளை நிச்சயமாக வாங்கமாட்டார்கள் என காணலாம்.
06:25 பின்வரும் வாடிக்கையாளர்களின் செயல்பாடுகள் ஒரு கடை விற்பனையாளரை விற்பனை முயற்சியை துவக்க வைக்கும்:
06:33 கடை விற்பனையாளரின் விற்பனை முயற்சியை தடுத்துதல்.
06:38 பொருளை தீவிரமாய் ஆராய்தல் அல்லது பரிசோதித்தல், அதை கையாளுதல், மற்றும் அதை வெவ்வேறு கோணங்களில் பார்த்தல்.
06:45 அந்த பொருளைப் பார்க்கும் போது புன்னகைத்தல் அல்லது உற்சாகமாக காணப்படுதல்.
06:51 ஒரு பொருளை இரண்டாவது அல்லது மூன்றாவது முறை கையாளுதல் அல்லது பயன்படுத்துதல்.
06:56 விற்பவரும் வாங்குபவரும் விற்பனையின் நிபந்தனைகளுக்கு சம்மதித்த பின் விற்பனை முடிகிறது
07:02 வாங்குபவர் பரிமாற்றத்தை உறுதிப்படுத்துவார்.
07:06 விற்பனை முடிவு.... விற்பனை செயல்பாட்டின் வழக்கமான முடிவாக இருக்கவேண்டும்.
07:11 விற்பனை செயல்பாடு முழுவதிலும் மேலும் நன்மையை பெற “முடிவை சோதிக்கும் (trial close)” உத்தியை பயன்படுத்த வேண்டும்.
07:17 இது விற்பனையின் முடிவில் வாடிக்கையாளர் பொருளை வாங்குவாரா என்பதை உறுதிபடுத்தும்.
07:24 “முடிவை சோதித்தலுக்கான” உதாரண கேள்விகள் -
07:27 “உங்கள் தேர்வில் நம்பிக்கை உள்ளதா?”
07:30 “அனைத்து அம்சங்களையும் மீண்டும் செய்து காட்டவா?”
07:34 விற்பனையின் முடிவில் முடிவை சோதிக்கும் உத்தியைப் பயன்படுத்துவது விற்பனை செயல்பாட்டின் கட்டுப்பாட்டை உங்களுடையதாக்கும்.
07:40 இப்போது “கடைசி கேள்வி”:
07:43 “இந்த பொருளை bill போட கொடுக்கலாமா?”
07:46 அல்லது “ card ஆகவா அல்லது பணமாக செலுத்துகிறீர்களா?”
07:49 அல்லது “முழுபணத்தையும் செலுத்துகிறீர்களா அல்லது தவனை முறையிலா?”
07:56 ஒரு சமயத்தில் ஒரு கேள்வியை மட்டும் கேட்டு வாடிக்கையாளரின் பதிலுக்காக காத்திருக்கவும்.
08:01 ஒரு கேள்வி கேட்கப்படும் போது அங்கே எப்போதும் ஒரு பதற்றம் இருக்கும்.
08:06 வாடிக்கையாளர் யோசித்து பதிலளிக்கும் வரை பொறுமையாக காத்திருக்கவும்.
08:12 வாடிக்கையாளருக்கு நன்றி தெரிவிக்கவும்,
08:13 அவர்களின் தேர்வு சிறந்தது என்பதை உறுதிபடுத்தவும்
08:16 சேவை மற்றும் இதர பல விஷயங்கள் பற்றி பேசவும்.
08:19 வாடிக்கையாளர் எதையும் தீர்மானிக்கவில்லை என்றால், பின் வாங்குபர் சொல்வதை கேட்கவும்.
08:24 தகவல்தொடர்பில் தடை இல்லை என்பதை உறுதிசெய்யவும்.
08:28 இதனால் வாடிக்கையாளரின் பார்வையில் நன்மதிப்பை கடை விற்பனையாளர் ஏற்படுத்தலாம்.
08:34 வாடிக்கையாளர் இம்முறை எதுவும் வாங்காமல் இருக்கலாம்.
08:37 ஆனால் அடுத்த முறை வாங்க விரும்பும்போது வருவார்.
08:40 கடை விற்பனையாளர் வாடிக்கையாளரிடம் நீண்ட கால உறவை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம் அதனால் அவர் மீண்டும் கடைக்கு வருவார்.
08:50 நன்மதிப்பு என்பது சில்லறை விற்பனையாளர் மற்றும் கடை விற்பனையாளர் மீதான வாடிக்கையாளரின் மனப்பான்மையின் மதிப்பு ஆகும்.
08:58 நன்மதிப்பை உருவாக்குவதற்கான வழிமுறைகளாவன:
09:01 வாடிக்கையாளின் விருப்பத்தை அதிமுக்கியமாக வைத்தல்,
09:04 வாடிக்கையாளரின் தீர்மானத்தை மீண்டும் உறுதிபடுத்துதல்,
09:07 பொருளின் சரியான பயன்பாட்டை உறுதிபடுத்துதல்,
09:09 வாடிக்கையாளர் புகார்களை கையாளுதல் மற்றும்
09:11 “எதிர்பார்ப்புக்கும் மேலான” சேவையை தருதல்.
09:16 பொருள்களை கொள்முதல் செய்த பின் bill போடப்படுகிறது.
09:20 விற்பனை இடத்திலிருந்து billing இடத்திற்கு வாடிக்கையாளரை சுமூகமாக கொண்டுபோக billing செயல்பாடு தேவைப்படுகிறது.
09:28 விற்பனை பரிவர்த்தணை முடியும் முன் திறமையான விற்பனையாளர்கள் சில கூடுதல் பொருள்களை பரிந்துரைப்பர்.
09:36 வாடிக்கையாளரை கையாளும் விற்பனையாளர் கூடுதல் பொருள்களை வாங்குமாறு சொல்வது அவரின் கடமையாகும்.
09:45 பொதுவாக அந்த பொருள்கள் முதன்மை பொருளுக்கு ஆதரவானவை
09:49 உதாரணமாக, நீட்டிக்கப்பட்ட உத்திரவாதங்கள் (warranties), கூடுதல் பேட்டரிகள், கூடுதல் storage, மேலுறைகள், உபரி பாகங்கள், முதலியன.
10:00 அந்த கூடுதல் பொருள்கள் உண்மையில் உதவியாக இருக்கும் என்பதை வாடிக்கையாளருக்கு உறுதிகொடுத்தல்.
10:05 கடைசியாக bill(விலைப்பட்டியல்)போடவும்.
10:08 bill போட்ட பின், அந்த பொருளை அதனுடன் கூடிய மற்ற பொருள்களுடன் சேர்த்து புன்னகையுடன் வாடிக்கையாளரிடம் கொடுக்கவும்!
10:18 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
10:22 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது எவ்வாறு தீர்க்க கவனித்தல் மற்றும் வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்ளுதல்
10:29 வாடிக்கையாளரின் சந்தேகங்கள் மற்றும் நிராகரிப்புகளை கையாளுதல் மற்றும்
10:33 பொருளையும் கூடுதல் பொருள்களையும் வாடிக்கையாளர் வாங்கும் படி செய்தல்.
10:38 இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
10:44 அதை தரவிறக்கிக் காணவும்.
10:46 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் எழுதவும்.
10:57 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு இந்திய அரசின் MHRD, NMEICT மூலம் ஆதரவு கிடைக்கிறது.
11:04 Telecom Sector Skill Council க்காக பிரத்தியேகமாக இந்த டுடோரியல் உருவாக்கப்பட்டது. இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst