OpenFOAM/C3/Creating-and-Meshing-aerofoil-in-Gmsh/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Gmshல், aerofoilஐ உருவாக்கி, mesh செய்வது குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில், Gmshஐ பயன்படுத்தி, ஒரு aerofoil ஐ எப்படி உருவாக்குவது,
00:14 மற்றும், உருவாக்கப்பட்ட aerofoil ஐ எப்படி mesh செய்வது என்று கற்போம்.
00:17 முன்நிபந்தனையாக, userக்கு, aerofoil மற்றும்Gmsh. பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
00:23 இல்லையெனில், Gmshக்கு, spoken tutorial வலைதளத்தில், Installing and running Gmsh மீதான டுடோரியலை பார்க்கவும்.
00:31 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு14.04, மற்றும், Gmsh பதிப்பு2.8.3ஐ பயன்படுத்துகிறேன்.
00:42 Aerofoilக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன்.
00:45 Aerofoilகள், விமானங்கள் மற்றும் turbo இயந்திரத்தில் பயன்படுத்தப்படுகின்றstreamline வடிவிலான இறக்கைகள் ஆகும்.
00:53 இந்த வடிவங்களில், drag force, liftன், ஒரு மிகச் சிறிய பகுதியாக இருக்கும்.
00:59 இது, aerofoilன் ஒரு படமாகும்.
01:03 Aerofoilக்கான, predefined coordinateகள், எளிய text fileலில், ".dat" extensionஉடன் கிடைக்கின்றன.
01:11 இந்த urlல் இருந்து .dat fileஐயும், Python scriptஐயும் நான் download செய்கிறேன்:
01:19 நான் வலைத்தளத்தை திறக்கிறேன்.
01:22 .dat file மற்றும்Python script ஐ download செய்து, Downloads folderக்கு செல்லவும்.
01:31 Downloads folderல் இருந்து, இந்த இரண்டு fileகளையும், Desktopல், copy மற்றும் paste செய்யவும்.
01:37 .dat fileஐ திறக்கவும்.
01:40 aerofoilஐ வரையறுக்கின்ற ஒவ்வொரு pointற்கான, கணக்கிடப்பட்ட, X மற்றும் Y coordinateகளை, இந்த file கொண்டிருக்கிறது. Z coordinate, பூஜ்ஜியமாக வைக்கப்படுகிறது.
01:51 X, Y மற்றும்Z co-ordinteகள், நமக்கு, Gmsh ஏற்றுக்கொள்ளக்கூடியformatல் தேவை.
01:56 இதை manualஆக செய்யலாம். ஆனால், அதிக நேரம் எடுக்கும்.
02:01 இப்போது, Python scriptஐ திறக்கவும்.
02:04 இந்தPython script , .dat fileலில் இருக்கின்ற dataஐ மாற்றி, Gmsh புரிந்துகொள்ளக்கூடிய வகையில், outputஐ ஒரு தனி fileலில் தருகிறது.
02:14 இப்போது, Terminal windowஐ திறக்கவும். டைப் செய்க: cd space Desktop.
02:21 இப்போது, டைப் செய்க: python space dat2gmsh.py space, dat fileன் பெயர், பின், Enterஐ அழுத்தவும்.
02:31 இப்போது, டைப் செய்க: ls. naca5012xyz.dat .geo என்ற பெயரை கொண்ட ஒரு புது file உருவாக்கப்படுவதை நீங்கள் காணலாம்.
02:43 அந்த geo fileஐ திறக்கவும்.
02:46 இது, co-ordinateகளை, Gmsh formatல் கொண்டிருக்கிறது.
02:50 இங்கு, nac_lc என்பது characteristic நீளம் ஆகும். இது, முதல் வரியில், 0.005 என வரையறுக்கப்பட்டுள்ளது.
02:59 இதை நான், 0.5க்கு மாற்றுகிறேன்.
03:03 ஏனெனில், நமக்கு, கொச்சையானmesh தேவைப்படுகிறது.
03:07 உங்கள் mesh தேவைக்கு ஏற்றவாறு, இந்த மதிப்பை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இப்போது, இந்த fileஐ சேமிக்கவும்.
03:15 Terminal windowவில், டைப் செய்க: gmsh space, geo fileன் பெயர், பின், Enterஐ அழுத்தவும்.
03:25 இது, gmshஐ , aerofoilஉடன் திறக்கிறது.
03:29 இப்போது, Aerofoilன் கடைமடை பகுதியில்scroll செய்து, zoom in செய்யவும்.
03:35 Aerofoil, ஒரு திறந்த பின் விளிம்பை கொண்டிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.
03:40 gmshஐ மூடவும். இப்போது, geo fileக்கு திரும்பச் செல்லவும். Scroll down செய்யவும்.
03:48 நாம் கடைசி pointஐ கூட்டி, அதை சேர்ப்போம்.
03:53 இப்போது, splineக்கு மேல், Point open close bracket 1046 space = open close curly bracket space 1.005 comma space -0.0005 comma space 0.00000 comma space nac_lc. ஒரு semicolonஐ வைத்து முடிக்கவும்.
04:26 Splineஐ , Spline(1000) = curly braces open 1000 colon 1046 comma 1000 close the curly bracket semicolon என மாற்றவும்.
04:44 Geo fileஐ சேமிக்கவும்.
04:47 இப்போது, மாற்றப்பட்ட fileஐ Gmshல் திறக்கவும். Edge சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
04:56 இப்போது, pointகளை பயன்படுத்தி, aerofoilஐ சுற்றி, ஒரு boundaryஐ செய்வோம்.
05:02 4, 3, 0 என்ற coordinateகளை enter செய்து, prescribed mesh element sizeஐ , 0.5 க்கு மாற்றவும். Enterஐ அழுத்தவும்.
05:17 இவ்வாறே, மற்ற pointகளை சேர்க்கவும். 4 -3 0, -4 -3 0, -4 3 0.
05:29 இப்போது, pointகளை, ஒரு நேர்க் கோட்டை கொண்டு சேர்க்கவும்.
05:44 zoom-in செய்து, hole boundaryஆக, aerofoilஐ தேர்ந்தெடுக்கவும்.
05:58 தேர்ந்தெடுப்பை முடிக்க, eஐ அழுத்தவும். நமது surface உள்ளதை நாம் காணலாம்.
06:04 இப்போது, surfaceஐ , 3D ஆக்க, அதை extrude செய்வோம். Translate >> Extrude Surface.க்கு செல்லவும்.
06:14 Translationக்கான, coordinateகளை கேட்கின்ற ஒரு புது window தோன்றும்.
06:19 Surfaceஐ , Z திசையில் நமக்கு extrude செய்ய வேண்டுமாதலால், Z திசைக்கான coordinateகளை, 1 என enter செய்யவும். பின், surfaceன் boundaryஐ க்ளிக் செய்யவும்.
06:30 தேர்ந்தெடுப்பை முடிக்க, eஐ அழுத்தவும்.
06:33 Geometryஐ நகர்த்த, mouseன் இடது க்ளிக்கை பயன்படுத்தவும்.
06:37 Geometry, extrude செய்யப்பட்டுவிட்டதை நீங்கள் காணலாம்.
06:42 இதை மூடவும். gmsh window ஐ மூடவும்.
06:45 geo fileஐ திறக்கவும்.
06:48 Scroll down செய்து, Extrude.க்கு செல்லவும்.
06:52 Extrude.இனுள், இந்த வரிகளை சேர்க்கவும்: Layers{1};, பின், Enterஐ அழுத்தவும். Recombine;, இந்த fileஐ சேமிக்கவும்.
07:09 Mesh, ஒரு element தடிப்பாக இருக்க, இது உறுதிப்படுத்தும்.
07:14 இப்போது, terminal windowவில், geo fileஐ திறக்கவும்.
07:19 இப்போது, நமது geometryஐ நாம் கொண்டுள்ளோம். நாம் meshingஐ செய்வோம்.
07:23 வரையறுக்கப்பட்ட geometryக்கு, Gmsh, தானாகவே, meshஐ உருவாக்குகிறது.
07:28 Meshக்கு செல்லவும்.
07:30 1D mesh, 2D mesh மற்றும்3D mesh.ஐ க்ளிக் செய்யவும்.
07:36 Mesh உருவாக்கப்பட்டுவிட்டது.
07:39 Aerofoilக்கு அருகே, mesh லேசாகவும், boundaryக்கு அருகே செல்லச் செல்ல, கொச்சையாக மாறுவதையும் நீங்கள் கவனிக்கலாம்.
07:48 Mesh menuவில் இருக்கும், Refine by Splitting parameterஐ க்ளிக் செய்வதன் மூலம், meshஐ நாம் refineஉம் செய்யலாம்.
07:56 இப்போது, நமது வேலையை சேமிப்போம்.
07:59 File menuக்கு சென்று, Save as.ஐ க்ளிக் செய்யவும்.
08:05 ஒரு புது window தோன்றும். Drop downல், mesh formatக்கு மாற்றவும்.
08:11 Fileன் பெயரை, aerofoil.msh என டைப் செய்யவும்.
08:17 இங்கு, msh , mesh file வகையை குறிப்பதை கவனிக்கவும்.
08:22 OK ஐ க்ளிக் செய்யவும். மீண்டும், OK ஐ க்ளிக் செய்யவும்.
08:26 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
08:29 பயிற்சியாக, வெவ்வேறு aerofoil வடிவங்களுக்கு, வெவ்வேறு dat fileஐ பயன்படுத்தி, மற்றொரு aerofoil'ஐ உருவாக்கவும்.
08:37 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Gmshல், ஒரு aerofoil ஐ எப்படி உருவாக்குவது, Gmshல் எப்படி meshingஐ செய்வது.
08:45 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும். அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
08:52 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.


08:56 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09:00 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
09:03 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
09:06 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
09:09 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
09:15 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
09:19 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .


Contributors and Content Editors

Jayashree, Venuspriya