Linux/C3/The-grep-command/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Grep command குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:05 இந்த tutorial ல் grep command பற்றி கற்கலாம்.
00:09 நாம் இதைச் சில உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம்.
00:11 இந்த tutorial ஐப் பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது
00:15 Ubuntu Linux Operating System version 12.04
00:20 மற்றும் GNU BASH version 4.2.24
00:24 இந்த tutorial ஐ பயிற்சி செய்ய GNU bash version 4 அல்லது அதற்கு மேல் பரிந்துரைக்கப்படுகிறது
00:32 இதற்கு முன்னதாக Linux terminal அடிப்படைகளை அறிந்திருத்தல் அவசியம்.
00:36 அது சார்ந்த tutorial களுக்கு இங்கே தரப்பட்டுள்ள எங்கள் இணையதளத்தை அணுகவும்.
00:41 முதலில் regular expressions பற்றி அறியலாம்.
00:45 Regular expressions என்பவை ஒரு line, paragraph அல்லது file ல் குறிப்பிட்ட pattern உள்ளதா என காண்பதற்கான pattern matching techniques



00:56 உதாரணமாக, ஒரு telephone directory ல் ஒரு தொலைபேசி எண்ணைத்தேட
01:02 அல்லது ஒரு paragraph ல் ஒரு keyword அல்லது line ஐ தேட நாம் grep command ஐப் பயன்படுத்தலாம். இப்பொழுது grep ற்கு செல்வோம்.
01:11 grep, ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்ட pattern களை ஒன்று அல்லது பல வரிகளில், பத்திகளில் அல்லது file ல் தேடுகிறது.
01:17 File ன் பெயர் தரப்படாவிட்டால் grep, pattern களை standard input ல் தேடுகிறது.
01:23 File ன் பெயரைக் காணவில்லையெனில் grep, pattern களை standard input ல் தேடுகிறது.
01:30 நான் இப்பொழுது grepdemo.txt எனும் demo file மூலம் grep ன் பயன்பாடுகளை விளக்குகிறேன்.
01:37 File ல் உள்ள content களைப் பார்ப்போம்.
01:40 இது 13 entry களைக் கொண்ட ஒரு file.
01:44 ஒவ்வொரு entry யிலும் 6 field கள் உள்ளன, அவை roll number, name, stream, marks, மற்றும் stipend amount.
01:52 ஒவ்வொரு field உம் ஒரு கோடினால் பிரிக்கப்பட்டுள்ளது, அது delimiter என்றழைக்கப்படுகிறது'.
01:56 grep வேலை செய்யும் விதம் பற்றி பார்ப்போம்.
02:00 உதாரணமாக, நாம் computers stream ல் உள்ள மாணவர்கள் யார் என அறிய grep command ஐப் பயன்படுத்த வேண்டும்.
02:07 இதற்கு terminal ஐத் திறக்கவும்.
02:10 அதற்கு, உங்கள் keyboard ல் Ctrl + Alt and T ஐ ஒருசேர அழுத்தவும்.
02:16 இப்பொழுது terminal ல் type செய்யவும்:
02:18 grep, space இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் computers இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின் space grepdemo .txt
02:27 Enter ஐ அழுத்தவும். இப்பொழுது இது computers எனும் stream ல் உள்ள entry களை பட்டியலிடும்.
02:33 இப்பொழுது original file ல் உள்ள result களை ஒப்பிடவும்.
02:37 மீண்டும் நமது text editor க்கு வருக.
02:40 Zubin உடைய entry ஐ பட்டியலிடவில்லை என காண்கிறோம்.
02:45 இது ஏன்? ஏனெனில், “grep” தேடியது small c ஐ உடைய computers எனும் pattern ஐ.
02:52 ஆனால் Zubin க்கு உரிய stream, Computers ல் capital C உள்ளது.
02:57 pattern matching, case sensitive பண்புடையது.
03:00 அதை case insensitive உடையதாக்க, grep உடன் minus i (-i) option ஐப் பயன்படுத்த வேண்டும்.
03:06 இப்பொழுது மீண்டும் terminal க்கு வந்து type செய்யவும்: grep, space, (minus) i, space, இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் computers இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின் space, grepdemo.txt
03:20 Enter ஐ அழுத்தவும். இது தற்பொழுது நான்கு entry களையும் பட்டியலிடும்.
03:25 இதன்மூலம் நாம் பார்த்தது, grep நாம் கொடுக்கும் pattern உடன் பொருந்தக்கூடிய வரிகளை மட்டும் files ல் இருந்து பட்டியலிடும் என்பது.
03:32 இதைத் தலைகீழாகவும் செய்யலாம்.
03:34 Pattern உடன் பொருந்தாத வரிகளையும் grep மூலம் பட்டியலிட முடியும்.
03:40 அதற்கு minus v எனும் option நம்மிடம் உள்ளது.
03:43 உதாரணமாக, நாம் தேர்ச்சி பெறாத மாணவர்களுடைய entry களை திரட்டவேண்டும்.
03:48 நம்மால் இந்த result ஐ மற்றொரு file ல் சேமிக்க முடியும்.
03:52 அதற்கு, type செய்க: grep, space, minus iv, space இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் pass, இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின் space, grepdemo.txt, space, greater than குறியீடு, space, notpass.txt
04:11 Enter ஐ அழுத்தவும். File இன் contentஐ காண type செய்க: cat, space, notpass.txt
04:20 Enter ஐ அழுத்தவும். Output காண்பிக்கப்படுகிறது.
04:24 இப்பொழுது prompt ல் type செய்யவும்:
04:26 grep ,space, minus i, space, இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் fail இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின், space grepdemo.txt
04:37 Enter ஐ அழுத்தவும். இது வேறாக உள்ளது.
04:41 இது தேர்ச்சிபெறாத ஆனால் result முழுமைபெறாத மாணவர்களைக் கொண்டிருக்கும்.
04:46 file ல் பட்டியலிடப்பட்டுள்ள entry களின் வரிசை எண்ணைக் காண்பதற்கு minus n' option உள்ளது
04:54 Prompt ஐக் clear செய்வோம்.
04:58 இப்பொழுது type செய்க: grep, space, -in, space, இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் fail இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின், space, grepdemo.txt
05:09 Enter ஐ அழுத்தவும்.
05:11 வரிசை எண் காண்பிக்கப்படுகிறது.
05:15 இதுவரை கண்ட pattern கள் ஒற்றை வார்த்தை உடையவை.
05:18 பல வார்த்தை உடைய pattern களையும் பெற முடியும்.
05:21 ஆனால் pattern முழுவதும் மேற்கோள் குறிகளுக்குள் வர வேண்டும்.
05:24 அதனால் type செய்க, 'grep, space, minus i, space, இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் ankit, space, saraf இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின், space, grepdemo.txt
05:38 Enter ஐ அழுத்தவும்.
05:40 நம்மால் ankit saraf உடைய record ஐ காணமுடியும்.
05:44 நம்மால் multiple file களிலும் pattern களைப் பெற முடியும்.
05:48 இதற்கு type செய்க: grep, space, minus i, space, இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் fail இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின் grepdemo.txt, space, notpass.txt
06:03 Enter ஐ அழுத்தவும். Output காண்பிக்கப்படுகிறது.
06:07 Multiple file களுடன் entry ஐப் பெற்ற file ன் பெயரையும் grep பதிவுசெய்கிறது. grepdemo.txt மற்றும் notpass.txt.
06:18 இவை notpass.txt உடைய record கள் மற்றும் இவை grepdemo.txt உடைய record கள்.
06:26 நமக்கு 'number of matches அல்லது count மட்டும் வேண்டுமெனில்.
06:31 அதற்கு, நம்மிடம் minus c, option உள்ளது.
06:35 அதனால் type செய்க:, grep, space, minus c, space, இரட்டை மேற்கோள் குறிகளுக்குள் fail இரட்டை மேற்கோள் குறிகளுக்கு பின் capital F, space, grepdemo.txt
06:48 Enter ஐ அழுத்தவும்.
06:50 இது நமக்கு matched line களின் எண்ணிக்கைக்கான count ஐக் காட்டுகிறது.
06:55 இது இந்த tutorial ன் நிறைவுப்பகுதிக்கு நாம் வந்துவிட்டோம்
06:59 சுருக்கமாக காண்போம்.
07:01 இந்த tutorialல் நாம் கற்றது:
07:03 ஒரு file ன் content களை காண்பது உதாரணம் cat, filename
07:07 ஒரு குறிப்பிட்ட stream ன் entry களை பட்டியலிடுவது. உதாரணம grep, computers, grepdemo.txt
07:14 Case களைப் புறக்கணிப்பது. உதாரணம் grep -i, computers, grepdemo.txt
07:21 Pattern உடன் பொருந்தாத Line கள். உதாரணம் grep -iv, pass, grepdemo.txt
07:30 Entry களுடன் வரிசை எண்களைப் பட்டியலிடுவது. உதாரணம் grep -in, fail, grepdemo.txt
07:38 Result ஐ மற்றொரு file ல் சேமிப்பது. உதாரணம் grep -iv, pass, grepdemo.txt > notpass.txt
07:50 மற்றும் count ஐத் தெரிந்துகொள்வது. உதாரணம் grep -c, Fail, grepdemo.txt.
07:57 Assignment ஆக -E, + and ? போன்ற மற்ற command களை அறிந்துகொள்ள முயலவும்.
08:04 கீழே கொடுக்கப்பட்டுள்ள link ல் இருக்கும் video வைப் பார்க்கவும்.
08:06 அது Spoken Tutorial project உடைய சுருக்கமாகும்.
08:10 உங்களிடம் நல்ல bandwidth இல்லையெனில், download செய்து பார்க்கவும்.
08:14 Spoken Tutorial project குழு:
08:16 Spoken tutorial களை பயன்படுத்தி workshopகள் நடத்துகிறது
08:19 Online தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குகிறது.
08:23 மேலதிக விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்
08:30 Spoken Tutorial Project ஆனது Talk to a Teacher project ன் ஒரு பகுதி.
08:33 இது National Mission on Education through ICT, MHRD, Government of India ன் ஆதரவு பெற்றது.
08:40 இந்த Mission பற்றிய கூடுதல் தகவல்கள் http://spoken-tutorial.org\NMEICT-Intro ல் உள்ளன.
08:45 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சதீஷ், குரல் கொடுத்தது…... நன்றி.

Contributors and Content Editors

Priyacst