Joomla/C2/Article-Options-in-Joomla/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 வணக்கம். Joomla ல் Article Options குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial ல் நாம் கற்கபோவது:

article ன் status article க்கான publishing Options Article களுக்கான Global Options.

00:17 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது :

Ubuntu 14.04, Joomla 3.4.1, XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache, MySQL மற்றும்PHP.

00:34 இந்த tutorial ஐ பின்பற்ற :உங்களுக்கு Joomla ல் article களை எப்படி உருவாக்குவது என்று தெரிந்திருக்க வேண்டும்
00:40 இல்லையெனில், spoken tutorial website ல் , Joomla series ல் அதற்கான tutorial களை பார்க்கவும் .
00:46 முன்னரே நாம் Joomla ல் article ஐ உருவாக்குவது , edit செய்வது , copy செய்வது மற்றும் நீக்குவது பற்றி கற்றோம்.
00:53 நாம் இந்த article களுக்கான மற்ற option களை பற்றி கற்கலாம்.
00:57 Joomla Control Panel க்கு செல்லலாம்.
01:00 Article Manager ஐ click செய்யலாம்.
01:03 நாம் முன்னரே உருவாக்கிய article கள் : “Benefits of Sodium” மற்றும் “Vitamin A” ஆகியவை இங்கே உள்ளன.
01:10 அவை homepage ல் தெரிகின்றனவா என பார்க்கவும்.
01:14 மேலே வலதுபுறம் Digital India ஐ click செய்க.
01:22 இங்கே “Benefits of Sodium” ஐ காணலாம் ஆனால் “Vitamin A” ஐ காணமுடியாது . இது ஏன் ? நாம் “Benefits of Sodium” ஐ ஒரு featured article ஆக கொண்டுள்ளோம் .
01:33 article “ Vitamin A” ஐயும் featured ஆக மாற்றலாம்.
01:38 Article Manager page க்கு திரும்பவும்.
01:42 Featured attribute ஐ click செய்யவும் , அதாவது article “ “ Vitamin A” க்கான featured column ல் உள்ள நட்சத்திரத்தை.
01:49 Featured attribute ன் மீது மீண்டும் click செய்வதன் மூலம் அந்த மாற்றத்தை undo செய்கிறேன்.
01:54 Checkbox ஐ article title ன் இடதுபுறம் உள்ள முதல் column ல் check செய்வதன் மூலமும் articlefeature செய்யலாம்.
02:01 Top menu ல் Featured button ஐ click செய்யவும்.
02:05 featured column ல் மஞ்சள் வண்ண நட்சத்திரம் தோன்றியுள்ளதை கவனிக்கவும்.
02:09 இப்போது, refreshசெய்வதற்காக Digital India webpage tab ஐ click செய்து பிறகு F5 ஐ அழுத்தவும்
02:15 இப்போது இரண்டு article களும் தெரிவதை நாம் காணலாம்.
02:19 Article Manager page க்கு நாம் திரும்பலாம்.
02:22 மேலும் சில Article attribute களை நாம் கற்கலாம்.
02:26 Edit Article page ஐ அடைய article “ Vitamin A” ஐ click செய்யவும்.
02:31 இங்கே Status என்ற பெயருடைய field உள்ளது. அது எதை குறிக்கிறது?
02:36 எப்போது article உருவாக்கப்படுகிறதோ அப்போது status, முன்னிருப்பு மதிப்பான “Published” ஐ கொண்டிருக்கும்.
02:42 featured article இணையத்தளத்தில் காட்டப்பட்டிருக்கும்.ஏனெனில் அதன் status Published ஆகும்.
02:48 இப்போது நம்மிடம் இரண்டு article கள் உள்ளன.
02:51 article ன் status Unpublished ஆக இருந்தால் என்னவாகும்?
02:56 Article Manager page க்கு திரும்பலாம்.
02:59 நாம் “Vitamin A” ன் Edit Article ல் உள்ளோம்.
03:02 Article “Vitamin A” ன் status ஐ Unpublished க்கு மாற்றலாம்.
03:07 Save & Close button ஐ click செய்யவும்.
03:10 Digital India web page க்கு சென்று page ஐ refresh செய்யவும்.
03:14 'article “Vitamin A” இங்கு தெரியவில்லை என்பதை கவனிக்கவும்.
03:19 article manager page க்கு மீண்டும் செல்லவும்.
03:23 Status ன் மூன்றாவது மதிப்பான Archived பற்றி கற்கலாம்.
03:28 மாற்றத்திற்காக , “Benefits of Sodium” ன் status ஐ Archived க்கு மாற்றியமைக்கலாம்.
03:34 “Benefits of Sodium” எனும் தலைப்பை ஐ click செய்க.
03:38 Status drop-down ஐ click செய்து StatusArchived க்கு set செய்யலாம்.
03:43 save and close button ஐ click செய்யவும்.
03:46 Article Manager க்கு திரும்பியுள்ளோம்.
03:49 Article Manager ன் Articles பட்டியலில் இருந்து “Benefits of Sodium” நீக்கப்பட்டுள்ளது.
03:55 homepage இலும் அது காட்டப்படாது என்பதை சரிபார்க்கவும்.
04:00 ஆகவே article எங்கே சென்றது ?
04:02 Article Manager க்கு திரும்பி வரவும்.
04:05 archived articles ஐ காண , நாம் filter ஐ பயன்படுத்த வேண்டும்.
04:10 search box ன் வலதுபுறம் , Search Tools button ஐ நாம் காணலாம்.
04:15 அதை click செய்யவும் . அது பல search filter களை காட்டும்.
04:20 Select Status filter ஐ click செய்யவும்.
04:23 Filter ஐ Archived க்கு set செய்யலாம்.
04:26 article “Benefits of Sodium” இங்கே பட்டியலிடப்பட்டிருப்பதை நாம் காணலாம்.
04:31 ஒரு article archived ஆக்கப்பட்டால் அது historical data ன் ஒரு அங்கமாக்கப்படும்.
04:36 தேவைப்படும்போது அதை re-publish செய்யலாம்.
04:40 archived article ன் status நேரடியாக Unpublished அல்லது Published க்கு set செய்யப்படலாம்.
04:47 காட்டியுள்ளபடி முதலில் mouse ஐ Status column ல் வைக்கவும்.
04:52 இங்கே “Unpublish Item”' என்று கூறும் ஒரு சிறிய tooltip ஐ நீங்கள் காணலாம்.
04:57 Status column ல் இடது icon ஐ click செய்யவும்.
05:00 article ஐ இப்போது காண முடியாது என்பதை கவனிக்கவும்.
05:04 இது ஏனெனில் Status filter இன்னமும் Archived க்கு set ஆகியுள்ளது.
05:09 Search Tools க்கு அடுத்து உள்ள Clear button ஐ click செய்வதன் மூலம் filter ஐ நாம் நீக்கலாம்.
05:15 இங்கே பட்டியலிடப்பட்டுள்ள article “Benefits of Sodium” ஐ நாம் காணலாம்.
05:20 status icon இப்போது மாறியுள்ளதை கவனிக்கவும்.
05:24 புதிதாக பெறப்பட்ட status, இப்போது article வெளியிடுவதற்கு தயாராக உள்ளது என்பதை காட்டுகிறது.
05:30 அதே முறையில் , Published, Unpublished மற்றும் Trashed article களின் பட்டியலையும் நீங்கள் பெறலாம்.
05:37 முதலில் article “Benefits of Sodium” ன் status ஐ Archived க்கு மாற்றுகிறேன்.
05:43 தலைப்பின் இடதுபுறம் உள்ள checkbox ஐ click செய்யவும்.
05:46 மேலே toolbar ல் Archive button ஐ click செய்யவும்.
05:51 Article archive செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தி தோன்றும்.
05:56 Article Manager ல் Archived அல்லது Unpublished article ஐ காணலாம் மற்றும் edit செய்யலாம்.
06:03 status filter ஐ திரும்பவும் Archived க்கு மாற்றலாம்.
06:07 Archived article “Benefits of Sodium” ஐ click செய்யவும்.
06:11 கொடுக்கப்பட்ட text ன் இறுதியில் இந்த வாக்கியத்தைச் சேர்க்கலாம்.
06:15 “The daily consumption of sodium, however, depends on a number of factors.”
06:21 அது article ன் status ஐ Archived ல் இருந்து Published க்கு மாற்றும்.
06:26 Save & Close ஐ click செய்க.
06:29 Select Status filter ல் All ஐ தேர்வு செய்யவும்.
06:34 அது article களின் status ஐ சார்ந்து அல்லாமல் அனைத்தையும் காட்டும்.
06:39 இங்கே எல்லா article களின் status ஐயும் கவனிக்கவும்.
06:42 நாம் முந்தைய tutorial ல் delete அல்லது trash செய்த article “Sodium” யும் கவனிக்கவும்.
06:49 அதன் status ஐ நீங்களே மாற்றமுடியுமா என ஆராயவும் .
06:53 இங்கு கிடைக்கும் மற்ற filter கள் Category, Levels, Access, Author, Language மற்றும் Tag ஆகியனவாகும்.
07:02 இனிவரும் tutorial களில் நாம் அதை கற்கலாம். மேலும் தொடரலாம் .
07:08 Articles list ல் இருந்து “Vitamin A” ஐ click செய்யவும்.
07:12 நாம் இப்போது Edit Article page ல் உள்ளோம்.
07:15 article ன் status ஐ Published க்கு மாற்றலாம்.
07:19 Content tab ன் வலதுபுறம் , Publishing tab ஐ நாம் காணலாம்.
07:24 அதை click செய்க . அது article ன் meta-data ஐ பதிவு செய்யும்.
07:29 முக்கியமான சிலவற்றை நாம் காணலாம்.
07:33 Created by option , creator ன் பெயரை காட்டும்.
07:37 நமது விஷயத்தில் அது Super User.
07:40 Select User button ஐ பயன்படுத்தி அதை மாற்ற கற்கலாம்.
07:45 இங்கே Created Date, Start Publishing, Finish Publishing என்ற மூன்று வெவ்வேறு date field களை கவனிக்கவும்.
07:53 முன்னிருப்பாக , Created Date என்பது , article உருவாக்கப்பட்ட date ஆகும்.
07:58 Start Publishing என்பது article வெளியிடப்படும் அல்லது homepage ல் காட்டப்படும் date ஆகும்.
08:05 அதாவது, அதன் status தானாகவே published க்கு set செய்யப்படும் date.
08:11 முன்னிருப்பாக , இந்த date Created Date க்கு set செய்யப்பட்டிருக்கும்.
08:16 Finish Publishing date என்பது article homepage ல் தெரியும் date ஆகும்.
08:22 அதாவது, அதன் status தானாகவே Unpublished க்கு set செய்யப்படும் date.
08:28 அது blank க்கு set செய்யப்பட்டிருக்கும்.
08:31 அதாவது, முன்னிருப்பாக article எப்போதும் கிடைக்கும்.
08:36 Created Date மற்றும் Start Publishing date இரண்டும் ஒன்று என்பதை கவனிக்கவும்.
08:41 இந்த தேதிகளை மாற்ற , வலதுபுறம் உள்ள calendar icon ஐ click செய்து calendar ஐ திறக்கவும்.
08:48 இன்றைய தேதிக்கு நான் Created Date ஐ மாற்றுகிறேன்:18 January 2016.
08:55 Save & Close button ஐ click செய்க.
08:58 homepage க்கு சென்று refresh செய்யவும்.
09:01 இப்போது article உருவாக்கப்பட்ட தேதி 16 January 2016.
09:07 இங்கே உங்களுக்கான இரண்டு சிறிய பயிற்சிகள் உள்ளன.
09:10 Assignment 1 Start Publishing தேதியின் calendar ஐ திறக்கவும்.
09:15 Date ஐ future date ஆக தேர்வு செய்யவும். மாற்றங்களை சேமிக்கவும்.
09:20 Homepage க்கு சென்று refresh செய்யவும்.
09:23 article பட்டியலை சரிபார்த்து என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
09:28 Assignment 2. இப்போது திரும்பி வந்து, Creation Date க்கு முன்பே தேதியை மாற்றவும்.
09:35 மீண்டும், மாற்றங்களை சேமிக்கவும் மற்றும் Homepage ல் மாற்றங்களை கவனிக்கவும்.
09:40 என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
09:43 மேலும் ஆராயும் முன், article தொடர்பாக இன்னும் சில விவரங்களை அறியலாம்.
09:50 homepage க்கு சென்று அதை refresh செய்யவும்.
09:54 எல்லா article களும் header ல் தங்கள் விவரங்களை சேர்த்து இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
09:58 சரியாக என்ன காட்டப்பட்டுள்ளது?
10:01 article ன் தலைப்பை click செய்ய முடியும் என்பதை கவனிக்கவும்.
10:05 நான் Vitamin A ஐ click செய்கிறேன்.
10:08 இப்போது article Vitamin A முழு பக்கத்தில் திறந்துள்ளது என்பதை கவனிக்கவும்.
10:13 கீழே , Next article க்கான இணைப்பு உள்ளது.
10:17 இந்த article ன் category Uncategorised ஆகும் . மேலும் அது ஒரு hyperlink.
10:24 Uncategorised ஐ click செய்கிறேன்.
10:27 இப்போது Uncategorised categoryக்கு உட்பட்ட அனைத்து article களையும் கொண்ட பக்கத்திற்கு re-directe செய்யப்படுகிறோம்.
10:34 முன்னிருப்பாக இங்கே நமது article கள் உள்ளன மற்றும் அவை இரண்டும் Uncategorised ஆக உள்ளன.
10:39 எல்லா article களில் இருந்தும் header information ஐ எப்படி நீக்குவது என்பதை நாம் பார்க்கலாம் .
10:45 Article Manager page க்கு திரும்பி வரவும்.
10:48 இங்கே toolbar ல் வலது பக்கம் கடைசியில் உள்ள Options button ஐ click செய்யவும்.
10:54 அது “Article Manager Options” என்ற தலைப்பை கொண்ட மற்றொரு பக்கத்தை திறக்கும்.
11:00 மேலே வலதுபுறத்தில் இந்த window ல் மேற்கொண்ட மாற்றங்களை Save, Save & Close மற்றும் Cancel செய்வதற்கான option கள் உள்ளன.
11:08 இந்த setting கள் மாற்றப்படாமலிருந்தால் அவை,global option கள் மற்றும் அவை அனைத்து article களுக்கும் apply செய்யப்படும்.
11:15 Show Title article ன் தலைப்பை காட்டுகின்றன.
11:18, முன்னிருப்பாக , அது Show க்கு set செய்யப்பட்டிருக்கும்.
11:21 Hide க்கு அதை set செய்து பிறகு Save ஐ click செய்யலாம்.
11:25 Digital India web page க்கு சென்று page ஐ refresh செய்யவும்.
11:29 Title இனி தெரியாது என்பதை கவனிக்கவும்.
11:33 Article Manager page க்கு திரும்பவும்.
11:36 Show TitleShow க்கு set செய்யவும்.
11:39 அடுத்து Linked TitlesNo க்கு set செய்யலாம்.
11:43 இது Title hyperlink ஐ நீக்கும்.
11:46 இப்போதைக்கு Show Intro text option ஐ நாம் skip செய்யலாம்.
11:50 Show Category மற்றும் Link Category header ல் category ஐ காட்டவும் மேலும் அது ஒரு hyperlink.
11:58 Linked Category க்கு No option ஐ click செய்யலாம் .Show Category க்கு Hide option ஐ click செய்யலாம்
12:05 இந்த மாற்றங்களை சேமிக்கவும்.
12:07 Digital India webpage க்கு சென்று page ஐ refresh செய்யவும்.
12:11 category தகவல் இனி தெரியாது என்பதை கவனிக்கவும். பிறகு Title hyperlink காகவும் இருக்காது .
12:19 article manager page க்கு திரும்பவும் .
12:22 settings ல் உள்ள மற்ற option களை நீங்களே ஆராய்ந்து என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவும்.
12:28 settings window ன் கடைசி பகுதியை பார்க்க scroll down செய்யவும்.
12:32 இந்த option கள் print மற்றும் email icon களை காட்ட அல்லது மறைக்க உதவும்.
12:38 Digital India web page க்கு செல்லலாம்.
12:42 articleன் வலது பக்கத்தில் , ஒரு சிறிய சக்கரம் மற்றும் down arrow உடன் உள்ள ஒரு button ஐ கவனிக்கவும.
12:49 அந்த button ஐ click செய்யவும்.
12:51 நாம் Print, Email என இரண்டு option களை காணலாம்.
12:55 print icon ஐ click செய்க.
12:57 வலதுபுறம் article மற்றும் print button ஐ கொண்ட ஒரு புதிய window ஐ அது திறக்கும்.
13:03 print button ஐ click செய்கையில் முன்னிருப்பான print dialog box திறக்கும் .
13:08 எந்த print வேளை க்கும் , இனிவரும் செயல்முறை ஒன்றுதான்.
13:12 இப்போது printing ஐ cancel செய்யலாம்.
13:15 நாம் மற்றொரு tutorial ல் email option ஐ பற்றி அறிந்து கொள்வோம்.
13:20 control panel க்கு திரும்பவும்.
13:24 முன்னிருப்பாக , Show Icon களான Show Print Icon மற்றும் Show Email Icon Showக்கு set செய்யப்பட்டிருக்கும்.
13:29 உங்கள் தேவைக்கேற்ப உங்கள் setting களை மாற்றலாம்.
13:33 Hits ன் எண்ணிக்கை ஐ காட்டும் ஒரு option இங்கு உள்ளதை கவனிக்கவும்.
13:37 இது article எத்தனை முறை பார்க்கப்பட்டது என்பதை குறிக்கிறது.
13:41 Show Unauthorised Links மற்றும் Positioning of the Links பற்றி மற்றொரு tutorial ல். நாம் விவாதிக்கலாம்
13:47 Save & Close ஐ click செய்வதன் மூலம் அனைத்து setting களையும் நாம் சேமிக்கலாம்.
13:52 அனைத்து மாற்றங்களையும் பார்க்க, web page க்கு சென்று refresh செய்யவும்.
13:58 கற்றதை நினைவுகூருவோம் . இந்த tutorial ல் நாம் கற்றது :

article ன் status, article க்கான Publishing option கள் மற்றும் article களுக்கான Global options .

14:11 இங்கே உங்களுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
14:13 Article Manager ல் Options ஐ click செய்யவும்.
14:16 Create Date மற்றும் Modify Date ஐ காட்ட மாற்றங்களை செய்யவும் .
14:21 இந்த setting களை Save & Close செய்யவும்.
14:23 Benefits of Sodium article ஐ click செய்யவும்.
14:26 இந்த tutorial ல், article ன் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள assignment-text file ல் இருந்து text ன் block ஐ சேர்க்கவும்.
14:33 Article ஐ சேமிக்கவும் .
14:35 homepage ல் article ன் header information ல் நீங்கள் ஏதேனும் மாற்றத்தை உணர்கிறீர்களா.
14:40 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.அதை தரவிறக்கி காணவும்.
14:48 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.

மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

14:58 Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, Government of India நிதியுதவி அளிக்கிறது.
15:05 மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும்.
15:10 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Venuspriya